Sunday, July 19, 2009

தமிழ் அக்ரகேட்டர்களுக்கு எச்சரிக்கை

வலையுலகம் விசித்திரமானது. பத்திரிக்கையுலகத்திலாவது மூடி மறைக்கலாம். சில்லாயிரத்தை , பல்லாயிரமாகவும் காட்டி பந்தா பண்ணலாம். ஆனால் வலையுலகத்தில் அந்த பருப்பு வேகாது. எத்தனையோ வலை தளங்கள் இதர வலை தளங்களின் ஜாதகத்தை கணித்து கூறவே உள்ளனர். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் சின்னஞ்சிறு பதிவர் கூட்டம் உங்கள் வலை தளங்களுக்கு பார்வையாளர்களை வசீகரித்து கொடுக்கிறது என்பது மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மை.

உண்மை நிலை இப்படியிருக்க அந்த காலத்து பத்திரிக்காசிரியர்களை போல் தங்கள் வலை தளத்தை சங்கப்பலகை என்று எண்ணி இடம் தர மறுத்தால் நஷ்டம் பதிவர்களுக்கல்ல. வாசகர்களுக்கே. லாங் ரன்னில் இந்த போக்கு வலை தளத்தின் ரெப்புட்டேஷன் நிச்சயம் பாதிக்கும். வலைப்பூவை பிரபல படுத்திக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு ஜோதிடனாக எனக்கு பரிச்சயமானவர்களிம் மெயில் ஐடிக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை என் போல் தங்கள் பாகு பாட்டிற்கு ஆளான பதிவர்களுக்கு கொடுப்பேன்.
உங்கள் வலை தளங்களுக்கு இணைப்பு கொடுத்து பிரபலப்படுத்தியது என் போன்ற பதிவர்களே. ஆனால் தாங்கள் நன்றி மறந்து இருட்டடிப்பு செய்வது கண்டிக்கத் தக்கது. தேனீக்கள் பறந்து பறந்து தேனை எடுத்து வந்தாலல்லவா தேன் கூடொத்த இணையதளம் உருவாவது. (ஆமாம் தேன் கூடு என்னாச்சு ?)


இந்த பதிவை கண்ட 7 நாட்களில் நான் இணைப்பு கொடுத்துள்ள அனைத்து இணைய தளங்களும் என் பதிவை காட்ட வேண்டும். இல்லையேல் இணைப்புகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கிறேன்.


காசுபணம் குறித்த சிந்தனை கூட இல்லாது வெறுமனே கருத்து பகிர்வுக்காய் ஆத்ம திருப்திக்காய் செய்யும் பணி இது. இதிலும் இவ்வாறான பாகு பாடுகள் கொடுமை. திருந்துங்கள். இல்லாவிடில் காலாவதியாகும் பத்திர்க்கைகளின் கதி தான் உங்களுக்கும்.

(ஆமா ராணி வார‌ இத‌ழ்ல‌ என்ன‌ தொட‌ர்ச்சியா ப‌டைப்புக‌ள் கேட்டு விள‌ம்ப‌ர‌ம் வ‌ருது ? தமிழகத்து எழுத்தாள‌ர்களை எல்லாம் காக்கா தூக்கிகிட்டு போயிருச்சா இல்லே மேற்சொன்ன‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் போல‌ அல‌ட்ட‌ல் காட்டிய‌தால் ஆர்வ‌ல‌ர்க‌ள் வில‌கிட்டாங்க‌ளா ?)