ஒரு காலத்தில் கையால் கூட தொட அருவறுப்பு தந்த அந்த பிரபல தமிழ் நாளிதழ் நிருபனாக பணிபுரிய நான் ஒப்புக்கொள்ள காரணம் ஓஷோ தான். அவர் தான் கூறுவார் ..ரிவர்ஸ் எஃபெக்ட் என்று. எத நீ வெறுக்கறயோ அதுக்கு காரணம் உன் ஈகோ உன் டெஸ்டினேஷன் அதுதான்..
எப்படியோ உரலில் தலையை கொடுத்துவிட்டேன். முதல் மூன்று மாதங்கள் லைன் அக்கவுண்ட் என்று ரூ.1000 க்குள்ளான தொகையை கொடுத்தனர். நான் என்.டி.ஆர் சிஷ்யன். சுயகவுரம் தான் முக்கியம்னு வாழறவன். ஸோ ..த பாருங்கப்பு ஒரு ரூபாய் அடையாள சம்பளத்துக்கு வேணம்னா வேலை செய்றேன். இப்படி எல்லாம் அசிங்கப்படுத்திராதிங்க என்று கடிதம் அனுப்பி விட்டேன். அரண்டு பொய் சென்னை அலுவலகத்துக்கு பேசி அடுத்த மாதம் முதல் மூவாயிரம் கன்வேயன்ஸ் ப்ளஸ் லைன் அக்கவுண் ப்ளஸ் எக்ஸ்பென்ஸஸ் என்று கூறினர். சரி ஒழியட்டும் என்று தொடர்ந்தேன்.
சம்பளம் வாங்கும்போது (சாரி அதை ஹானரோரியம் என்பர்.. நிருபர்களை எழுத்தர் என்பர். எந்த பஞ்ச கச்ச ஆடிட்டன் கொடுத்த பாடாவதி ஐடியாவோ இன்னம் அதையேஃபாலோபண்றாங்க. நிருபர்னா சம்பளம் தரனும். சம்பளம்னா அதுக்கு லேபர் லா ,லேபர் கமிஷன் இப்படி சில லொள்ளு உண்டு. எழுத்தர்னா அதுலயும் ஆங்கிலத்துல ரைட்டர்னு போடுவாங்க. ரைட்டருக்கு சன்மானம் தானே அது நிர்வாக விருப்பத்தை பொறுத்த விசயம் தானே ..மேலும் எப்ப வேணா கழட்டி விட்டுரலாமே ) வெறும் கன்வேயன்ஸும், எக்ஸ்பென்ஸஸும் தான் கொடுத்தாங்க.. சரி ஒழியட்டும்னு விட்டேன்.
இதுக்குதான் என் நண்பர் திப்பு சொல்வாரு பக்கத்து வீட்டுக்காரன் தன் வீட்டை இடிக்கும்போது தூசு விழும்போதே உதை கொடுக்கனும் இல்லன்னா தூண் விழத்தான் செய்யும்னு. இப்படி ஒழியட்டும்னு விட்டதால இவனுங்களுக்கு வர வேண்டிய அட்வர்டைஸ்மென்ட் பில் வாங்க என் மனைவியின் தாலியை அடகு வைத்து லஞ்சம் கொடுத்து , அந்த ரசீதையும் நிர்வாகம் பின் பக்கத்துக்கு கீழே வச்சுக்கிட நாளிது வரை என் மனைவி தாலியில்லாமதான் இருக்கா..
என்ன தலை கால் புரியலயா .. முதலுக்கும், இறுதிக்கும் இடையில் கேப் இருக்கில்ல இதை அடுத்த பதிவுல ஃபில் அப் பண்றேன்
தொடரும்