பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவுக்கு எதிர்வினை இந்த பதிவு என்று சொல்ல முடியா விட்டாலும் இதற்கான உந்துதல் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவு தான் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.
அரசியல்,சமூகம், வாழ்க்கை,மனிதர்கள் குறித்த மாறுபட்ட பார்வை,விமரிசனம்,கருத்து , கனவு கொண்டவர்களுக்குத் தான் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
பாலகுமாரன் போன்றவர்கள் பத்திர எழுத்தர்கள் மாதிரி எழுத கற்றுக் கொண்டிருக்கலாம். என் போன்றவர்கள் எழுதும் நேக் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் பாலா போன்ற போலிகளுக்கு அரசியல் குறித்த விமரிசனமே கிடையாது.
கலைஞர் சிக்னலில் இவருக்கு கையசைத்தது தான் செய்தி. ஜெயலலிதா காவிரி தண்ணீர் கேட்டு காலை 10 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதமிருந்தால் இவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தி மாதிரி பழம் எடுத்துக் கொண்டு போய் பார்த்து வருவார்.(பாலாவுக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் வைத்தி தான்).
திராவிட பராம்பரியத்தை அவர் எழுத்துக்கள் தொட்டும் தொடாமலும் தான் சைடு வாங்கிக் கொண்டு பயணிக்கும். திராவிடம் தமிழுக்கு தலை வாழையிலை போட்டு இதர பார்ப்பனர்களை போன்ற ஆங்கில புலமை இல்லாத பாலாவின் பிழைப்புக்கு வழி செய்ததாலோ என்னவோ கடவுள் மறுப்புக்கு கூட வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க தயங்குவார்.
இனி பொருளாதாரம் என் கிறீர்களா? பாலாவுக்கு தெரிந்த பொருளாதாரத்தில் அவர் மனைவி மார்களுக்கான அட்டிகைகள்,புடவைகள் வீட்டு சமாச்சாரங்களை தவிர வேறு எதற்கும் இடம் கிடையாது.
உலக மயமாக்கம், தனியார் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,கன்ஸ்யூமரிசம்,மேற்கத்திய கலாச்சார படையெடுப்பு, புற்றீசலாய் பெருகி வரும் பன்னாட்டு கம்பெனிகள், தகவல் தொழில் நுட்ப புரட்சி,கல்வி,மருத்துவ வணிக மயமாக்கம் இவற்றின் காரணமாக சிறு தொழிலதிபர்கள்,குடிசைத் தொழில்கள், அரசு ,தனியார் ஊழியர்கள், தொழிலாளிகள் முக்கியமாய் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும் சுரண்டல்,இழி நிலைகள் பற்றி அவர் எழுத்துக்களில் எவ்வித பதிவும் இருக்காது.
பாலா என்பவர் அந்த காலத்து ஜோதிலட்சுமி மாதிரி ஒரு கவர்ச்சி பிம்பம். அந்த காலத்தில் ஜோதிலட்சுமியை பார்த்து மயங்காத இளைஞனே கிடையாது. அதற்காக வெட்கப்படவேண்டிய அவசியமும் கிடையாது.
பாலா போன்ற புல்லுருவிகளை அடையாளம் கண்டு தவிர்க்குமத்தனை ஞானம் தமிழ் படைப்புகளில் கொட்டிக் கிடந்தாலும் அவை தேடிப் போக வேண்டிய புதையல்களாகவே உள்ளன. பார்ப்போம் !
இதைப்படித்து சிரிக்கவும் ஒரு வெட்கம் கெட்ட வழி தவறச் செய்யப்பட்ட கூட்டம் இருக்கிறது
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியுமப்போது