ஒரு அன்பான கணவன்,மனைவி. அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை .கணவன் தன் ட்யூட்டி முடிந்த பிறகும் வேறு ஒருவன் ட்யூட்டிக்கு வராததால் அவனுக்கு பதில் அங்கு தொடர்கிறான். அப்போது குண்டு வெடித்து கணவன் சாகிறான். அவன் மனைவி விதவையாகிறாள். குழந்தை அனாதையாகிறது. விபத்தில் சிக்கியிருக்க வேண்டியவன் தன் காதலியுடன் சரசத்தில் இருக்கிறான். குற்ற உணர்ச்சியால் தவிக்கிறான்.
மனவியாதிக்குள்ளாகி,காதலியால் திரஸ்கரிக்கப் படுகிறான். உடல் ரீதியான விபத்திலிருந்து தப்பி,மன ரீதியில் நோய்வாய்ப் படும் இளைஞனுக்கும், அந்த விதவைக்கு காதல் ஏற்படுகிறது. அவள் கிறிஸ்தவ மதம். இவன் இந்து மதம். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது எந்த மதம் ? என்று கேள்வி எழுப்ப படுகிறது. இறுதியில் இளைஞன் காயடித்துக் கொள்கிறான். சுபம்.
பாலாவின் எழுத்துக்களில் நளினம்,பெண்மை மிளிரும். இதற்கு காரணம் பாலாவின் மனமே. அவர் மனம் ஹென் பெக்ட் மனம். அவர் அடிப்படையிலேயே ஹிப்பாக்ரட்,(தன் இருதார மணத்தை டிஃபெண்ட் செய்தல்) எஸ்கேப்பிஸ்ட் (குழந்தை பிறந்தால் என்ன மதம் என்பது பிரச்சினை ஆகும் என்பதால் ஹீரோவுக்கு காயடித்தல்),பூர்ஜுவா தனம் (பாலாவின் கதைகளில் எவனோ ஒரு வி.ஐ.பி குறித்த பிரஸ்தாபம் நிச்சயம் உண்டு. மேலும் பாலாவின் பாத்திரங்கல் எல்லாமே வி.ஐ.பி.க்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குபவர்களே. இதற்கும் பாலாவின் மனோதத்துவமே காரணம்.
உண்மையான காதல் பொக்லைன் மாதிரி அது தனக்கு நேரும் தடைகளை தகர்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கும். பாலா மாதிரி வெள்ளை சாம்பார்கள் தான் விதவை,வேறு மதத்தவள் என்றெல்லாம் யோசித்து காயடித்துக் கொள்ளும்.