வர வர கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் குறைஞ்சிகிட்டே வருது. லக்னத்துக்கு 2 ஆவது இடத்துல இருக்கிற சனி,கேது எஃபெக்டா? அல்லது ஓரளவு தன வரவு வந்துட்டதால இந்த நிலமையா? புரியலை.(தனம் ,வாக்கு இரண்டையும் காட்டுவது ஜாதகத்தில் உள்ள 2 ஆவது பாவம் தான்)
எது எப்படி இருந்தாலும் லட்சியத்தை கைவிடறதா இல்லை. இந்த அளவுக்கு பொருளாதார பலம் வர்ரதுக்கு கூட என் லட்சியந்தான் காரணங்கறது என் கருத்து.மனிதப் பிறவி ஈனப்பிறவி. இன்னொரு பிறவிங்கறது ஏற்படக்கூடாது. சுய நலத்தோட எந்த வேலை செய்தாலும் கர்மம் வரும். கர்மத்தை தொலைக்க ஜன்மம் எடுக்கனும் . அதனால தான் சுய நலத்தை புறந்தள்ளி வறுமைக்கோட்டுக்கு கீழ வாழும் 40 சில்லறை கோடி மக்களுக்காக வேலை செய்துகிட்டிருக்கேன்.
என் வாழ்க்கையில எத்தனையோ அரை குறை வேலைகள் செய்திருக்கேன். தொடர்ந்து செய்துகிட்டு வர்ரது இந்தியாவை பணக்கார நாடாக்குறதுக்கு நான் போட்ட திட்டத்தை பிரச்சாரம் பண்ற வேலையை தான்.
இதனால் நிறையவே பணம் செலவாகியிருக்கலாம். டைம் வேஸ்ட் ஆகியிருக்கலாம். ஆனல் இந்த திட்டம் தொடர்பான வேலைகளால் எனக்குள் ஒருவித டிவைன் பவர் ஏற்பட்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஜனாதிபதி ஜன நாயகத்தை அமல் செய்தல்,10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்தல்,கூட்டுறவு பண்ணை விவசாயம்,தற்போதைய கரன்ஸியை ரத்து செய்து புதிய கரன்ஸியை அறிமுகம் செஇதல் ,விளை நிலங்களை விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல்,நதிகளை இணைத்தல் இதெல்லாம் நடக்குமோ ,நடக்காதோ ? எப்போ நடக்குமோ டோன்ட் கேர்!ஸ்ரீ பிரம்மங்காரு சொன்னாப்பல 2008 யுகாதிக்குள் உலகில் 7ல் 6 பாகம் அழிந்து 1 பாகம் மட்டுமே மிச்சமாகுமோஅல்லது அவர் சொன்ன எதிர்கால கணிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் தவறிருந்து பிரளயமே தள்ளிப் போகுமோ அதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்.
என் நாடு நானிருக்கையில்,அதுவும் உயிரோடு, சிந்திக்கும் நிலையில் இருக்கும்போது வறுமையில் வாடக் கூடாது. என் முன் அரங்கேறிவரும் பசி,சுரண்டல் தொடரக் கூடாது. இதற்கு நான் ஏதேனும் செய்தாக வேண்டும். என்னதான் என்னில் பெண்மை மிளிர்ந்தாலும்,மென்மை உணர்வுகள் இருந்தாலும் நான் அலியல்லன். என ஆதர்ஸ புருஷர் என்.டி. ஆர். சொன்ன " சமுதாயமே தேவாலயம், ஏழை மக்களே என தெய்வங்கள் " என்ற கோஷத்தை முழுமையாக ஏற்றுதான் செயல்பட்டு வருகிறேன்.
என் வரையில் நான் சுகித்திருக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. அந்த சுகம் நிலைக்காது. பசியாலோ,சுரண்டலாலோ பாதிக்கப் பட்ட எவனோ ஒரு கோபக்கார பையன் என் வீட்டில் கொள்ளையடிக்க வரலாம். என்னையும், என் குடும்பத்தையும் கோடரியால் வெட்டிப் போடலாம்.
என் வறுமை ஒழிய வேண்டுமானால், நான் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இந்த நாட்டிலிருந்தே, இந்த உலகத்திலிருந்தே வறுமை,பசி,சுரண்டல் விரட்டப்பட வேண்டும். அதை செய்யாத வரை செல்வம் சுகத்தை தராது. இப்போதைய செல்வந்தருக்கும் நான் கூறுவது இதைத்தான்.அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் ,சமுதாய சீரழிவுகள்,ஏற்றத்தாழ்வுகள்,யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் பாதிக்கலாம்.
மு.க.முத்து,சஞய்தத் இப்படி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்.
நான் சொல்லும் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அமல் படுத்தி இந்தியா பணக்கார நாடாகிவிட்டால் போதாது. பக்கத்து நாடான பாக்கிஸ்தானும் மாற வேண்டும். பாக் மட்டும் மாறினால் போதாது ,அதை தூண்டி விடும் அமெரிக்காவும் மாறவேண்டும். உலகின் எந்த மூலையிலும் வறுமை இருக்க கூடாது. ஒரே ஒரு நாட்டில் வறுமை விடுபட்டுப் போனாலும் அது உலகெங்கும் பரவுவதற்கு ரொம்ப காலம் பிடிக்காது.1984 இண்டர் பரீட்சை முடிந்து லீவு விடப்பட்ட நாட்கள் முதல் 1985 வருடம் முழுக்க என் மூளையை ஆக்கிரமித்திருந்தது செக்ஸ் ..செக்ஸ்..செக்ஸ். அதை வெல்ல நான் செய்த முயற்சி தான் ஆஞனேயர் வழிபாடு. அவரை குஷிப் படுத்த ஆரம்பித்தது தான் ராம நாம ஜபம். அந்த ஜபம் தான் ராம ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க ஒரு திட்டம் தீட்ட வைத்தது என்று நம்புகிறேன்.
ஒரு பிறவி முழுக்க நமசிவாய என்று ஜபித்திருந்தால் மட்டுமே ராம நாமம் சொல்லும் வாய்ப்பு/தகுதி ஏற்படுமாம். மறுபடி ஒரு பிறவி முழுக்க ராம நாமம் ஜபித்தாலன்றி அம்மனை வழிபட வழி பிறக்காதாம்.
1986ல் ராம நாமம் ஜபிக்க ஆரம்பித்தேன். 1989 வரை செக்ஸை கட்டுப் படுத்தி விட முடியும் என்று முட்டாள்தனமாக நம்பினேன்,முயன்றேன்.ஆனால் ஓஷோவின் நூல்களை படிக்கும் முன்பே செக்ஸ் மீதான தர்காதீதமான நாட்டத்தை அளவான இடைவெளியுடன் கூடிய சம்போகத்தால் தான் கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்த முடியும் என்று முடிவு செய்து "சம்" பூர்ணா என்ற ஏழைப் பெண்ணை காதலித்தேன். ("சம்" என்பது சரஸ்வதி பீஜம் சரஸ்வதி குரு கிரகத்துக்குரிய தேவதை, குரு என் ஜாதகத்தில் உச்சம்.)அவள் காதலால் செக்ஸ் என்பது வெல்ல முடியாத ஒன்றல்ல என்று தெரிந்து,புரிந்து,தெளிந்து கடிமணம் புரிந்தேன்.
ஊழ்வினயாலும்,பெரியவர்கள் சதியாலும் காதல் பிரிக்கப்பட்டது. 1989 ஜனவரியில் ருக்கலாம் . ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்தேன். அவர் பெயர் ராமசாமி. அவர் எஙள் பெயரை வைத்தே சொல்லிவிட்டார். ஒரு நாள்,ஒரு வாரம் மிஞ்சிப் போனால் ஒரு வருடம் தான் சேர்ந்து வாழ்வீர்கள் என்று.அதற்குப் பிறகுதான் எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் பிறந்தது. என் ஜாதகத்தில் சூரிய,சந்திரர்கள் பக்கத்து,பக்கத்து ராசிகளில் இருப்பதையும்,அது சிவசக்தி யோகம் என்பதையும் அறிந்து நமசிவாய ஜபிக்க ஆரம்பித்தேன். சிவ,பார்வதி டாலரை அணிந்தேன், அதையே என் லோகோவாகவும் சில காலம் உபயோகித்தேன்.(முதலில் ராம நாமம்,பிறகு நமசிவாய ) 2000 வருடம் டிசம்பர் மாதம் தான் புவனேஸ்வரி அம்மனின் பீஜம் உபதேசமாயிற்று.
இதையெல்லாம் சொல்வது என் வாழ்வை திரும்பி பார்த்து ,சரி பார்த்துக் கொள்ளவே. இதே பீஜத்தை 2000க்கு முன்பிலிருந்தே ஜபித்து வரும் நண்பர்கள் பலர் அப்படியேதானிருக்கிறார்கள். லட்சியம், மந்திரம்,பூஜை,ஜபம் எதுவுமே பூரண பலன் தர வேண்டுமானால் ஸின்ஸியாரிட்டி தான் முக்கியம். அது என்னில் இருக்கிறது.
அதுவே என்னை ஒரு ம்க்கள் தலைவனாக,பசி சுரண்டலுக்கு எதிரான புரட்சிக்கு வித்தாக மாற்றியிருக்கிறது என்று நம்புகிறேன். இதை ஒரு நாளும் கை விடேன். இந்தியாவிலிருந்து வறுமை,பசி,சுரண்டலை விரட்டுவேன். கு.ப. அதற்காக போராடுவேன். இதுவே என் மந்திரம், இதுவே என் பலம்.
இந்த பலம் தான் எஙள் மானில முதல்வருடனேயே மோத வைத்தது. இப்போதை முதல்வருடனும் மோதும் உத்தேசமிருக்கிறது. ஆனால் இம்முறை 90 களிலான சத்திய ஆவேசத்துடன் மட்டுமல்லாது கிரிமினல் தனமாக ப்ளான் செய்து வெடிக்க செய்து வேடிக்கைப் பார்க்க உள்ளேன். குறைந்த பட்சம் ஒரு புக்லெட் ,அதை தலைமை செயலகத்திலேயே டிஸ்ட் ரிப்யூட் செய்ய வேண்டும். அல்லது ஹைகோர்ட்டில் ஒரு ரிட். பார்ப்போம்!
வாக்கு ஸ்தானத்தில் உள்ள சனி,கேதுவை மீறி இந்த வலைப்பூவை பதிவு செய்ய முடிந்ததே என் லட்சியம் தந்த பலத்தால்தான். இதில் எனக்கு சந்தேகமில்லை