2007 ஆகஸ்ட் 5ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்மத்திற்கு சனி மாறினார். அதற்கு 6 மாதங்கள் முன்பே சிம்ம சனி பலன் கள் ஆரம்பமாகிவிட்டிருக்கும். உ.ம் மகரத்துக்கு கடகம் 7 ஆமிடம் தான். ஆனால் 8 ஆமிடத்தில் என்ன பலன் கள் தரவேண்டுமோ அது ஃபிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியே துவங்கி விட்டிருக்கும்.
2007,அக்டோபர் 28 ஆம் தேதி(தெலுங்கு ஆந்திர பூமி பஞ்சாங்கப்படி) குரு விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு ராசி மாறுகிறார். ஆனால் 2 மாதங்கள் முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 28 முதலே தனுசு ராசியில் தான் இருந்தால் தர வேண்டிய பலன் களை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.
உம் சிம்மத்துக்கு விருச்சிகம் 4 ஆமிடம். இதனால் அக்டோபர் 28 வரை தாய்,வீடு,வாகனம்,கல்வி தொடர்பான தொல்லைகளை அனுபவிக்க வேண்டும்.ஆனால் இவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதலே ஓரளவு ரிலீஃப் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருக்கும். குரு 5 க்கு வந்தால் தரவேண்டிய பெயர்,புகழ்,பிள்ளைகளால் நன்மை போன்ற பலன் கள் ஆரம்பித்து விட்டிருக்கும்.
குரு பலம்:
குரு பலம் வந்துவிட்டதா என்று கேட்காத நபர்கள் இல்லை. குரு பலம் என்றால் என்ன? குரு உங்கள் ராசிக்கு 2,5,7,9,11 ராசிகளில் வருவதையே குரு பலம் வந்து விட்டது என்று சொல்கிறோம்.
குரு பலத்தால் என்ன நன்மை:
குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. குரு அனுகூல நிலையில் இருந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதயம் நன்றாக வேலை செய்யும். இதனால் உடலின் எல்லா பாகத்துக்கும் நல்ல ரத்தம் கிடைக்கும்.(ஆக்ஸிஜன்). இதனால் உடல் நலம் ,மன நலம் பெருகும். நினவாற்றல் பெருகும். பாஸிடிவ் திங்கிங் வரும். தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை,பெரியவர்களை மதித்தல் போன்ற குணங்கள் வளரும்.
குரு கோல்ட்,ஃபைனான்ஸ்,பாலிடிக்ஸ்,மஞ்சள் நிற பொருட்கள்,உயர் குலத்தவர், முக்கியமாக பிராமணர்கள்,திட்டமிடுதல்,தொலை நோக்கு இவற்றுக்கெல்லாம் அதிபதி. இவர் ஸ்வர்ண்காரகர்(தங்கம்),கங்கணகாரகர் (மனைவி,திருமணம்),புத்திர,பவுத்திர காரகர்(பேரன் கள்), எனவே இந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
(பின்னொரு நாள் தொடரும்)
(பின்னொரு நாள் தொடரும்)