இந்தியா சுதந்திரம் பெற்று 60 வருடங்களை எட்டியிருப்பதை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். இந்த 60 ல் ஒரு பகீர் உண்மை பொதிந்திருக்கிறது.
நம் முன்னோர்கள் காலசக்கரத்தின் ஓட்டத்தை உன்னிப்பாக கவனித்து 60 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வட்டம் பூர்த்தியாகி மீண்டும் ஒரு சுற்று ஆரம்பமாவதை கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் தமிழில் 60 தமிழ் வருடங்களின் பலன் களை பாடல்களாக இயற்றி வைத்துள்ளனர். 60 வருடங்கள் முடிந்து 61 ஆவது வருடம் வரும்போது மீண்டும் முதல் வருட பலனே நடக்கும் என்பது அனுபவம்.
ஆக இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த அதே நிலை மீண்டும் தோன்றலாம். அதாவது அண்டை தேசத்துடன் சண்டை,மதக் கலவரம் முதலானவை நடக்கலாம் என்பது என் ஊகம்.