ஆந்திரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதா என்று குழம்பும் (ரசம்..இல்லிங்க) வகையில் தந்திரபாபுவும்,ராஜசேகர் ரெட்டியும் பேசி வருகிறார்கள்.
மாநிலத்தை 9 ஆண்டுகாலம் ஆட்சி செய்த தந்திரபாபு தான் போட்ட ஆட்டங்களை மக்கள் மன்னித்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார். நான் மேற்சொன்ன இருவரில் எவருக்கும் ஆதரவானவனல்ல.
10 கோடி வேலையற்ற வாலிபர்களைக் கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைக்க எவர் முன் வருகின்றனரோ அவருக்கு மட்டுமே ஆதரவு. நம் ஜனநாயகமே எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று முடிவெடுக்கும் நிலையில் தான் நம்மை வைத்துள்ளது.
சந்திரபாபுவும் கடன் வாங்கினார். ரெட்டியும் கடன் வாங்குகிறார். பாபு கடன் வாங்கிய பணத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டார். ரெட்டி அணைகள் கட்டி வருகிறார். பாபு சாலைகளை அகலப்படுத்தினார். அதற்கும் கமிஷன் 10 சதவீதம் தான். ரெட்டி அணை கட்டுகிறார் இதற்கும் கமிஷன் 10 சதவீதம் தான்.சாலைகளை 9 ஆண்டுகளில் 4 முறை மீண்டும் போட வேண்டி வந்துவிட்டது. ரெட்டி கட்டும் அணை கு.பட்சம் ஒரு தலைமுறைக்காவது பயன்படும்.
பாபு தேர்தலுக்கு 6 மாதம் முன்பு பட்டா கொடுத்தார். ரெட்டி பதவிக்கு வந்த நாள் முதல் கொடுக்கிறார்.அவர் விவசாயிக்கு இலவச மின்சாரம் கொடுத்தால் அரசு திவால் ஆகும் என்றார்.
(ரெட்டி இலவச மின்சாரம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அரசு திவாலாகிவிட வில்லையே..மனமிருந்தால் மார்கம் உண்டு, பாபுவுக்கு இல்லாதது அது ஒன்றுதானே..நாராவாரி பல்லியில் பிறந்து காங்கிரஸ் இளைஞரணியில் அடிபட்டு,உதை பட்டு, கதை பாடி மி.மீ. மி.மீட்டராய் உயர்ந்த பாபுவுக்கு பெண்ணையும் கொடுத்து பதவியையும் கொடுத்த என்.டி.ஆரை கொல்லாமல் கொல்ல மனம் என்று ஒன்று இல்லாததால் தானே முடிந்தது)
இன்று 9 மணி நேரம் கொடுப்போம் என்கிறார்.2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தையும்,மதுவிலக்கையும் அறிவித்து ஆட்சிக்கு வந்த என்.டி,ஆரின் முதுகில் குத்தி ஆட்சியை பிடித்த பாபுமின் கட்டணத்தை இரட்டிப்பாக்கினார். கல்வி,மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படக் கூடாது என்று கொள்கை முடிவெடுத்தார். என்.டி.ஆரின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்தார். உலகவங்கி ஏஜெண்டாக மாறினார். இன்று கலர் டி.வி கொடுப்பது குறித்து யோசிப்போம் என்று சொல்கிறார்.அன்று கைத்தறி எல்லாம் அவுட் டேட்டட் என்றார். இன்று சலுகை அறிவிக்கிறார்.
இந்த இழவெல்லாம் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு தெரியாது. என்.டி.ஆர் என்றால் அவர் ஆந்திரத்து எம்.ஜி.ஆர். பாபு என்றால் என்.டி.ஆர்.மருமகன் . ஐதராபாதில் எவனோ குண்டு வெடித்தால் ,ஏதோ பாலம் சரிந்தால் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும். புரிஞ்சிகிட்டு எழுதுங்கய்யா..
இந்த வருடம் மட்டும் ஒரு லட்சம் ஏழைகளுக்கு வீடு தர முட்டி மோதிஇதோ 60 ஆயிரம் பேருக்கு கொடுத்தே உட்டார்கள். என்.டி.ஆர்.காலம் முதல் நிரப்பப்படாத அரசுவேலைகளை எல்லாம் நிரப்ப நோட்டிஃபிகேஷன் வெளிவந்துவிட்டது.
குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றில் அணை கட்டினால் தமிழகமே பாலைவனமாகிவிடும் என்று ஒப்பாரி. அதில் சேமிக்கப்பட உள்ள நீரின் அளவு என்ன தெரியுமா? 0.01 டி.எம்.சி. கர்நாடகத்தில் டஜன் கணக்காய் கட்டின போது தமிழகத்தில் எவர் கட்கம் ரொம்ப நாற்றம் என்று அரசியல் செய்து கொண்டிருந்துவிட்டு இப்போது மாய்மாலம் பண்ணுகிறார்கள்.
குப்பம் பகுதியில் மாதத்துக்கு எத்தனை கிரைம் நடக்கிறது தெரியுமா? காரணம் வறுமை. அவர்களுக்கு தேவை 9 ஆண்டுகளாக அமலாகாத் பாபுவின் இஸ்ரேல் நாட்டு (?) பாசனமுறை அல்ல ..உடனடி பாசன நீர். அவனுக்கு பிழைப்பு நடக்காவிட்டால் கிருஷ்ணகிரி பக்கம் வந்து கொள்ளையடிப்பான். இன்று பிடிபடும் கொள்ளைக்காரனெல்லாம் கொள்ளைக் காரனாக மாறிய விவசாயிதான் என்று தெரியுமா?