எத்தனை பெரிய மனிதருக்கு..எத்தனை சிறிய மனமிருக்கு என்பது பாடல் வரி மட்டுமல்ல என் அனுபவம் கூட . எங்கள் ஊரில் எவர் எப்படி என்பதே தெரியாது கருவூல அதிகாரியான என் தந்தையின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டவன் நான். (1967 முதல் 1987 வரை)
அதற்கு பிறகுதான் என் எதிர்நீச்சலே ஆரம்பமானது. எங்கள் தொகுதியில் பலமான 2 வர்கங்கள் உள்ளன இதில் ஒன்று சி.கே.பாபு தலைமயிலான காங்கிரஸ் வர்கம். இவர்களோடு எனக்கு எவ்வித தொடர்பும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை.
அங்கிருந்து விலகி வந்தவர்களுடன் பழகியிருக்கிறேனே தவிர அங்கு இருப்பவர்களுடன் பழகியதில்லை.
அடுத்த வர்கம் தெலுகு தேசத்தை சேர்ந்த நாயுடுக்களின் வர்கம். (இதில் 2 உப ஜாதி ஒன்று கம்மா அடுத்தது பலிஜா.) இந்த வர்கத்திற்கு ஒரே தலைவன் என்றெல்லாம் கிடையாது. ஆதிகேசவுலு லட்சுமி புத்திரர். வாரியிறைப்பார். அவர் நேரில் ஆஜராகி விட்டால் அவர்தான் தலைவர். சந்திரபாபு வந்து விட்டால் பாபு தலைவர்.
பப்ளிக்கில் இமேஜ் என்னவென்றால் சி.கே. அதிரடியான ஆள், நாயுடுக்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்பதே. உண்மையில் நெருங்கிப் பழகியதில் நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால், சி.கே.பாபு மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு மிஞ்சிய குண்டாஸ் கிடையாது.
அதிலும் தெலுகு தேசத்தில் ஒரு திடீர் தலைவர் ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி சொன்னால் நீங்கள் வாயால் சிரிக்க மாட்டீர்கள்.