இன்றைய ஆட்சியாளர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று முடிவு கட்டிவிடுமத்தனை முட்டாள்தனம் என்னில் இல்லை. அவரவர் உலகத்தில் அவரவர் இருக்கிறார்கள். உண்மையான உலகத்தில் என்ன நடக்கிறது, தம் நடவடிக்கையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை இல்லை பாவம்!
என்னைப் பொறுத்தவரை உயிர் என்பது முக்கியம்.
எயிட்ஸ்,எண்கவுண்டர்கள்,லாக்கப் மரணங்கள்,சாலை விபத்துக்கள்,கொலைகள்,தற்கொலைகள்.. ஷிட்! இதைப் பற்றி பேசுங்கப்பா என்றால் ராமர்பாலம், ராமர் கட்டிலறை,ராமர் கழிவறை என்று கதை பண்ணுகிறார்கள்.
ஒரு 5 வருடங்களுக்கு மேற்படி உதவாக்கரை விஷயங்களுக்கு தடா விதித்து மக்கள் உயிருக்கு மினிமம் கியாரண்டிக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்தால் என்ன? பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து, செக்ஸ் குறித்த குற்ற உணர்வை போக்கினாலே எயிட்ஸும் கட்டுப்படும், க்ரைமும் கட்டுப்படும்.
அரசு விதிக்கும் மரண தண்டனையையே காட்டுமிராண்டித்தனம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கும் போது எண்கவுண்டர் என்பது தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. இதை ஒழிக்க சட்டங்கள் எளிமை படுத்தப் பட்டு, தப்பு செய்தவர்களுக்கு உடனடி தண்டனைகள் தரப்படவேண்டும்.(தண்டனை காலம் என்பது குற்றவாளியின் மனதில் உள்ள குற்றத்துக்கு தூண்டும் உணர்வுகளை துடைத்தெரியவேண்டுமே தவிர உணர்வுகளையே துடைத்தெரிந்துவிட கூடாது.