ஆம். உலகத்தில் இரண்டே மதம் ,இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. அவ்வையார் காலத்தில் இட்டார் பெரியோர் ,இடாதோர் இழிகுலத்தோர் என்று சொல்லி முடித்து விட்டார்.
ஆனால் இன்று இடுபவரில் அதிக சதவீதம் ஹிட்டென் அஜெண்டாவுடன் தான் இடுகிறார்கள். இது வேறு கதை.
இன்று இருப்பது இரண்டே ஜாதி,இரண்டே மதம் . ஒன்று சுரண்டுவோர், இரண்டு சுரண்டப்படுவோர். எவனொருவன் ஜாதி,மதம் என்று மக்களை பிரிக்கிறானோ அவன் சுரண்டலை மக்கள் கண்ணிலிருந்து மறைக்கும் அகில உலக சதிக்கு துணை போகிறான் என்றே சொல்லலாம்.
உலக மகா சுரண்டல் நிறுவனம் அமெரிக்கா:
நான் புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. நம் நாடு விவசாயத்தை சார்ந்து இருப்பது போல் அமெரிக்கா ஆயுத உற்பத்தி, கட்டுமானப் பணிகளை சார்ந்து இருக்கிறது. ஆயுத விற்பனை கூட வேண்டும். அதற்கு உலகில் யுத்த நிலவரம் தொடர வேண்டும்.
சூடு குறைவது போலிருந்தால் அன்று ஆப்கானிஸ்தான், நேற்று ஈராக், இன்று ஈரான் போன்று எதையோ ஒன்றை கிளப்பி ஆயுதம் விற்க வேண்டும், விற்ற ஆயுதங்கள்,குண்டுகள் செலவழிய வேண்டும், ஆர்டர் குவிய வேண்டும்,யுத்தத்தால் நாசமான நாட்டில் புனர் நிர்மாண பணிகளுக்கான காண்ட்ராக்டுகள் கிடைக்க வேண்டும்.
மேலும் யுத்தம் என்பது ஒரு டெமோ தான். வார் ரீல்(?) போட்டு விளம்பரம் செய்வது போல் இவர்கள் வார் நடத்தி தம் உற்பத்திகளுக்கு விளம்பரம் தேடுகிறார்கள்.
பன்னாட்டு கம்பெனிகள்,உள் நாட்டு கம்பெனிகள்,கோலா,கலர் டி.வி,ஜீன்ஸ்,செல் போன், எஃப்.எம் ரேடியோ, முதல் மீடியா வரை எல்லாமே சுரண்டலைத்தான் செய்கின்றன.
ஒருகாலத்தில் செய்தி,தொழில் நுட்பம் என்று நுணலாய் அரற்றிய எங்கள் சந்திரபாபுவே ஏழை ஒரு நாளைக்கு 20 ரூ சம்பாதிப்பது கூட கஷ்டமாகிவிட்டது என்று கூறுகிறார்.
ஏழ்மை எத்தனை கொடூரமானது என்பது அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். இந்தியாவில் உள்ள 99.99 சதவீத பிரச்சினைகளுக்கு காரணம் ஏழ்மைதான். ஏழ்மைக்கு காரணம் சுரண்டல். சுரண்டலுக்கெதிராக மக்களை பொங்கி எழாது தடுக்கும் முயற்சி தான் ஜாதி,மத வேறுபாடுகளை வளர்ப்பது.
எங்கே உரக்க ஒரு தரம் சொல்லுங்கள்..இருப்பது இரண்டே ஜாதி,இரண்டே மதம்.
சுரண்டுவோர்,சுரண்டப்படுவோர்.
ஜாதி என்றும் மதம் என்றும் மக்களை பிரிக்கப் பார்ப்பவர்கள் சதிகாரர்கள். சதி(மனைவி) சமேதமாய், பிள்ளை குட்டிகளுடன்,பந்து மித்திரர்களுடன் நாசமாகி வருவது கண் முன் நடந்து கொண்டுதானிருக்கிறது.
காரணம்:
சுரண்டப் பட்டவன் அதை நினைத்து நினைத்து "ஹூம்" என்று பெருமூச்சு விடுகிறான். அது மூலாதாரத்தில் உள்ள குண்டலியை எழுப்புகிறது. இதனால் அவனுக்கு வாக்கு பலிதம் ஏற்படுகிறது. ஹூம் என்பது சண்டி பீஜம். சண்டி மாதா இந்த சோதாக்களை ஒழித்துக் கட்டுவது நடந்து கொண்டேதானிருக்கிறது.