Thursday, October 4, 2007

புட்டப்பர்த்தி சாயிபாபாவும் என்.டி.ஆரும்

திராவிட பராம்பரியத்தில் வந்த கலைஞர் கூட சத்ய சாயிக்கு அதிதி பூஜை செய்துவிட்டார். ஆனால் பரம ஆஸ்திகரான என்.டி.ஆரோ சத்ய சாயியை ஏறெடுத்து கூட பார்த்ததில்லை.

என்.டி.ஆர். தென்னிந்திய நேஸ்ட்ரோ டாமஸ் பிரம்மங்காருவைப் பற்றி ஒரு படம் எடுத்தார். (பிரம்மங்காரு உலக எதிர்காலத்தை காலஞானம் என்ற நூலாய் பல நூறு வருடங்களுக்கு முன் எழுதிவைத்த யோகி. மேலும் விவரங்களுக்கு கவிதை07 எனும் என் வலைப்பூவை பாருங்கள்). அதில் ஒரு பாடல் (பிரம்மங்காருவின் காலஞானத்தை தழுவி எழுதப்பட்டது)

ஸ்வாமுலனி எந்தரோ லோகான வெலிசேரு
தேவுடே தாமனி செப்புகுனி திரிகேரு
காலிலோ வீபூதி உங்கரால் தீஸேரு
சிட்டிகலோ நா ஜனுல பூஜலந்தேரு

இதன் பொருள்:

ஸ்வாமிகள் என்று எத்தனையோ பேர் இந்த உலகில் தோன்றுவர்
தாமே தெய்வம் என்று சொல்லித் திரிவர்.
காற்றிலிருந்து விபூதிகள்,மோதிரங்கள் வரவழைப்பர்
சிட்டிகை போடும் நேரத்தில் மக்களின் பூஜையை பெறுவர்

வ‌ய‌தாகிவிட்ட‌ கார‌ண‌த்தால் உள‌றிக்கொட்டும் அறிவு ஜீவிக‌ள், சூப்ப‌ர்‌ ஸ்டார்க‌ளை பார்த்து ச‌லித்த‌ த‌மிழ் ம‌க்க‌ள் என்.டி.ஆர். குறித்த‌ உண்மைக‌ளை அறிந்தால் ச‌ற்றே ஆறுத‌ல் அடைவார்க‌ள் என்றே இந்த‌ வ‌லைப்பூவை ச‌ம‌ர்ப்பிக்கிறேன்.
த‌ங்க‌ள் ஆத‌ர‌வு கிடைத்தால் என்.டி.ஆரின் காய‌க‌ல்ப‌த்த‌ன‌மான‌ சிந்த‌னைக‌ள், அட‌லேறு போன்ற‌ ந்ட‌வ‌டிக்கைக‌ள், அதிர‌டிக‌ளை வ‌லைப்பூக்க‌ள் மூல‌ம் ச‌ம‌ர்ப்பிக்க‌ காத்திருக்கிறேன்.