கலைஞரின் நாக்கை வெட்டு,தலையை வெட்டு என்று கொக்கரித்த வேதாந்தியின் பேட்டி ஜூ.வி.யில் வெளிவந்துள்ளது. இன்னும் தமது வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டுள்ளதாக வேதாந்தி கூறுகிறார்.
பேட்டி கொடுத்த வேதாந்திக்கு கலைஞர் யார்?,பெரியார் யார்? கலைஞர் தமிழுக்கு என்ன செய்தார் என்பதெல்லாம் தெரியாதிருக்கலாம். ஜூ.வி.க்கு தெரியாதா? வேதாந்தியை குற்றம் சாட்ட நான் விரும்பவில்லை.(அது நாய் வால்) .
இந்த பேட்டியை வெளியிட்டு தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி , இந்துத்வா சக்திகளுக்கு பட்டம் கட்ட ஜூ.வி. துடிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். என்னதான் விகடன் லோகோவுக்கு டீ ஷர்ட் போட்டாலும் அதற்குள் ஒரு பூணூல் ஒளிந்தே இருக்கிறது.
பாபர் மசூதியை உடைத்தார்கள், ராமர் கோவில் கட்டுவோம் என்று கொக்கரித்தார்கள். அந்த இடம் திறந்த வெளி கழிவறையாக மாறிவிடாது காப்பது இந்துத்வா சக்திகள் அல்ல. மத்திய,மாநில அரசுகளின் போலீஸ் படைகள் தான்.
ராமன் காவியமோ, கற்பனையோ என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமல்ல ..கோவிலோ,பாலமோ கூட முக்கியமல்ல பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும். மத்திய மாநில செயலகங்களின் பார்ப்பன அரசு செயலர்களின் கொடி பறக்க வேண்டும். இந்தியாவின் மானம் கப்பல் ஏற வேண்டும்..அவ்வளவுதான்.
ஜூ.வி.ஆ.வி.களின் மாய்மாலங்களை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை. அதே நேரம் இவர்களின் சுய இன்பத்தனமான வெற்று,வெட்டி முயற்சிகளை கண்டு சிரிப்பதா? கொதிப்பதா? புரியவில்லை. உங்களுக்கு?
பச்சையாக சொன்னால் தங்களால் சொல்ல முடியாத வார்த்தைகளை வேதாந்தியின் வாயிலிருந்து பிடுங்கியிருக்கிறார்கள். ஆண்மை இழந்த ஆண்கள் நீலப்படம் பார்த்து திருப்தியடைவதை போன்ற மன வக்கிரம் இது.