Tuesday, October 2, 2007

த‌லைவி,பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்.


இந்த 40 வயதுக்கே வறுமைக்கு பயந்து,லட்சியத்துக்கு குட் பை சொல்லிவிட்டு, ஒரு வெகுஜன நாளிதழில் காலணா ரிப்போர்ட்டனாக வயிற்றைக் கழுவும் நிலைக்கு வந்துவிட்ட என்னை ஒரு இளம்பெண் எதற்கு சந்திக்க வந்தாள் என்று புரிய மறுத்தாலும் வந்தவளை வரவேற்றேன். தன் விஸிட்டிங்க் கார்டை எடுத்து கொடுத்தாள்.


மிஸ்.ப்ரஸ்னா,

த‌லைவி,பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்.


என்ன‌ங்க‌டா இது உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு என் வ‌லைப்பூ எதிலாவ‌து பாலிய‌ல் தொழிலாள‌ர்களை அவ‌ம‌தித்து எதையேனும் எழுதி தொலைத்துவிட்டேனா என்று மூளையை க‌ச‌க்க‌ ஆர‌ம்பித்தேன்.


உண்மையில் நீதிப‌திக‌ளை விட‌ இவ‌ர்கள்தான் குற்றங்களை குறைப்பதாக எனக்கு ஒரு கருத்து உண்டு.(உள்ளடக்கி வைக்கப்பட்ட‌ பாலிய‌ல் வேட்கையே வ‌ன்முறையாக‌ வெளிப்ப‌டுகிற‌து). இந்நிலையில் நான் ஏன் இவ‌ர்க‌ளை வ‌ம்புக்கிழுக்க‌ப் போகிறேன்.


அவ‌ளே மௌன‌த்தை க‌லைத்தாள். பாலிய‌ல் தொழிலாள‌ர்கள் ந‌ல‌னுக்காக‌ ஒரு வார‌ இத‌ழ் ஆர‌ம்பிக்க‌ ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.


ஒரு அரை ம‌ணி நேர‌ம் போல‌ வாரி வ‌ழ‌ங்கினேன்.


த‌லை குறுக்கே ஆட்டிக் கொண்டே ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அவ‌ள் "இதை விட‌ எங்க‌ள் தொழிலே மேல்" என்றாள். சென்றாள்.