Friday, October 5, 2007

சமூக விழிப்புணர்வுக்கு பொருள் முருகேஷன்


(2002 ஆம் வருடம் வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப் பற்றி அரைப் பக்க அளவில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம் இது)


நான்,என்னவர்,என் குடும்பம் என்ற உணர்வு பெருகிவரும் இந்த நாட்களில்சமூகத்துக்காக பாடுபடுபவர்கள் அரிதாகத்தான் தென்படுகின்றனர்.மனிதன் சமூக பிராணி, சமூகமில்லாது மனித வாழ்வு அசாத்தியம் என்ற சத்தியத்தை நிறைய பேர் மறந்துவிடுகிறார்கள்.தனி மனித, சுயநலத்துக்கு சுருங்கி விடுகிறார்கள். நாகரீக இயந்திரத்தனமான வாழ்வுக்கு பழக்கப் பட்டு விடுகிறார்கள்.இது போன்ற சூழலில் என் ஊர்,என் மாவட்டம்,என் தேசம் என்று தவிப்பவர்கள் இருப்பது ஆச்சர்ய்ப்படுத்தத்தான் செய்யும்.இந்த வகையை சேர்ந்த முருகேஷனின் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு ஆதர்ஸமாக இருக்கிறது.
சித்தூரை சேர்ந்த முருகேஷன் அனைவரையும் போல் தன்னை, தன் குடும்பத்தைப் பற்றி மட்டும் யோசிப்பதில்லை.பிரச்சினைகளின் வலையில் சிக்கித் தவிக்கும் தன் தேசத்தை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று ஒரு சமூக ஆராய்ச்சியாளரைப் போல் நித்தியம் ஆராய்ச்சி செய்துவருகிறார்.உற்சாகப்படுத்துவோர் இல்லாத காரணத்தால் இவரின் ஆராய்ச்சிமுடிவுகள் வெளிச்சத்துக்கு வராது உள்ளன.எத்தனையோ முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து அறிக்கைகள் தயாரித்து மாவட்ட அதிகாரிகள் முதல் ஜனாதிபதிவரை,லோக்சபை முதல் ஐ.நா.சபை வரை தம் சொந்த செலவில் அனுப்பிவருகிறார்.கடந்த 10 வருடங்களாக உலக அளவிலான பல பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்து தீர்வுகள் கண்டு முருகேஷன் அளித்த ஆலோசனைகளை ஐ.நா.சபை போன்ற அகில உலக நிறுவனங்கள் கூட பாராட்டியுள்ளன.
ஆனால் ந‌ம் நாட்டில் மாவ‌ட்ட‌ அதிகாரிக‌ள் கூட‌ முருகேஷ‌னின் ஆலோச‌னைக‌ளை கிட‌ப்பில் போட்டு வ‌ருவ‌து முருகேஷனை பெரும் ம‌னோ வேத‌னைக்குள்ளாக்குகின்ற‌து.இருந்தாலும் முருகேஷ‌ன் ஒரு நாளில்லை ஒரு நாள் த‌ன் ஆலோச‌னைக‌ள் நாட்டின் த‌சை,திசைக‌ளை நிர்ண‌யிக்கும் என்ற ந‌ம்பிக்கையுட‌ன் த‌ம் முய‌ற்சிக‌ளை தொட‌ர்ந்து வ‌ருகிறார்.
ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ பெய‌ரில் தான் தீட்டியுள்ள‌ திட்ட‌த்தில் இந்தியாவின் ப‌ல்வேறு பிர‌ச்சினைக‌ளுக்கு முருகேஷ‌ன் புர‌ட்சிக‌ர‌மான‌ தீர்வுக‌ளை சொல்லியிருக்கிறார்.
(தொட‌ரும்)