ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி ராமாயண நாயகன் ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பொருத்தவரை அவர் ஒரு காவிய நாயகன் மட்டுமே. இந்நிலையில் ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழும்?
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
பஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள். சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.
பீஜம் என்பது என்ன?
மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போலவும் வேலை செய்கின்றன. (உ.ம்) சரஸ்வதி /இதில் முதல் எழுத்து ச/இதோடு "ம்" சேரும்போது அது சம் எனும் சரஸ்வதி பீஜமாகிறது.
மற்ற தேவதைகளின் பெயர்கள் வேறாகவும், பீஜாக்ஷரங்கள் வேறாகவும் இருக்கும். ஆனால் ராமனை பொருத்தவரைஅவர் பெயரே பீஜாக்ஷரமாக இருக்கிறது.
எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன நடக்கிறது?
வாயும்,ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவாக உள்ளன. ஆசனத்துக்கு சற்று மேல் பாகத்தில் மூலாதார சக்கரம் இருக்கிறது. "ம்" என்று உச்சரிக்கும் போது குழாயின் ஆரம்பமான வாய் மூடுகிறது,இந்த வினைக்கு எதிர்வினை அந்த குழாயின் முடிவான ஆசன பகுதியில் நிகழ்கிறது. அந்த செயலின் விளைவாக ஏற்படும் அதிர்வுகள் மூலாதார சக்கரத்தை அடைகின்றன. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அது போல் குண்டலி சக்கரம் விழிப்படைகிறது. பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் உள்ளதாய் யோக நூல்கள் குறிப்பிடும் யோக சக்தி மேல் நோக்கி சீறிப் பாயும்.
குண்டலி விழிப்படைந்தால் என்ன நடக்கும்?
(இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கி,முக்கி தட்டச்ச வேண்டிய நிலை. விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது )
சுய நலம் எரிந்து போகும். பஞ்ச பூதங்களுக்கு நாம் கட்டுப் பட்டிருப்பது காலாவதியாகி அவை நமக்கு கட்டுப்பட்டிருக்கும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை தொட்டால்:
செக்ஸ் மீது கட்டுப்பாடு ஏற்படும். நாமாக போதும் என்று நினைத்தாலன்றி வீரியம் நழுவாது.
குண்டலி மணிபூரகத்தை அடைந்தால்:
எல்லையில்லாத சஞ்சலம் ஏற்படும்
அணாஹத சக்கரத்தை அடைந்தால்:
அவர் இவர் என்ற வேறுபாடு மறைந்து எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு ஏற்படும்.
விஸுத்தி:
வாக் பலிதம் ஏற்படும். பேச்சில் காந்தம் வரும்.அனைவரையும் கவரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்படிவர்.
ஆக்னா:
பேச்சுக்கு அவசியமின்றி வெறும் பார்வையாலேயே நம் மனதில் உள்ள எண்ணங்களை ஆணையாக்கி எதிராளியை கீழ்படிய வைக்கலாம்.
சஹஸ்ராரம்:
இறைவனுடன் இரண்டற கலக்கலாம்.
(இது மட்டும் அனுபவமாகவில்லை/இடையில் தான் மேற்சொன்ன தடை)
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை.