Monday, October 1, 2007

கலைஞர் விஷயத்தில் நீதி தேவன் மயக்கம்

மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அரசியல்வாதிகளின் பலவீனத்தை அறிந்து நீதிமன்றங்கள் தங்கள் எல்லையை தண்டுகின்றனவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
நாக்கை அறுப்போம்,தலையை எடுப்போம்,தலைக்கு தங்கம் தருவோம் என்று மதவாத சக்திகள் கொக்கரித்தபோது " மயக்கம் எனது தாயகம் மவுனம் எனது தாய்மொழி "என்று சோம்பிக் கிடந்தது நீதி. பாதிக்கப்பட்டோர் ஜனநாயகரீதியில் தம்து எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கடையடைப்பை கடை பிடிக்க முடிவு செய்தபோதுமட்டும் துள்ளி குதித்து தடை விதிப்பது என் போன்ற மர மண்டைகளுக்கு புரிய மறுக்கிறது.

ஒரு நீதிப‌திக்கும், ஒரு முத‌ல்வ‌ருக்கும் எத்த‌னையோ வித்யாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. அர‌சிய‌ல் சாச‌ன‌ம் நீதிப‌திக‌ளுக்கு வான‌ளாவிய‌ அதிகார‌ங்க‌ளை கொடுத்திருக்க‌லாம். ஆனால் அந்த‌ அர‌சிய‌ல் சாச‌ன‌த்தை இய‌ற்றிய‌தே சாமானிய‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைப் பெற்ற‌ இன்றைய‌ முத‌ல்வ‌ரை போன்ற அர‌சிய‌ல் வாதிக‌ள் தான்.
நீதிப‌தி ஒரு க‌மிட்டியால் நிய‌மிக்க‌ப்ப‌டுகிறார். முத‌ல்வ‌ர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுகிறார். ஒரு நீதிப‌திக்கு ம‌க்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தை விட‌ ஒரு அர‌சிய‌ல‌வாதிக்கு உள்ள‌ க‌ட்டாய‌ம் அதிக‌ம்.

நீதிப‌திக‌ள் ஆட்சியில் த‌வ‌றுக‌ள் ந‌ட‌க்கும் போது அவை த‌ம் பார்வைக்கு முறைப்ப‌டி வ‌ந்தால் உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌லாம். ஆட்சியில் த‌வ‌றுக‌ள் ந‌ட‌ந்துவிட்டாலும் இதுவே முறை. அதை விடுத்து தாமே ஆட்சி செய்ய‌ நினைத்துவிட்டால் ஜ‌ன‌நாய‌க‌ம்,அர‌சிய‌ல் சாச‌ன‌ம் எல்லாமே கேலிக்கூத்தாகிவிடும்.

அதிகார‌ வ‌ர்க‌த்தில் சேஷ‌ன், எங்க‌ள் ஊர் விஜிலென்ஸ் க‌மிஷ‌ன் சீஃப் ராம‌ச்ச‌ந்திர‌ ச‌லாம் போன்ற‌ காரிய‌ப்பைத்திய‌ங்க‌ளிட‌ம் மாட்டிக் கொண்டு விழிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு நீதிப‌திக‌ளும் குடைச்ச‌ல் கொடுக்க‌ ஆர‌ம்பித்திருப்ப‌து ந‌ல்ல‌தே..

பூனைக்கு என்றோ ஒரு நாள் ம‌ணி க‌ட்டித் தானே ஆக‌வேண்டும். அந்த‌ நாள் இத்த‌னை விரைவில் வ‌ந்த‌து ந‌ல்ல‌து தானே?

இதே உய‌ர்,உச்ச‌ நீதிம‌ன்ற‌ நீதிப‌திக‌ளுக்கு நான் எழுதிய‌ ப‌திவு த‌பால்க‌ளின் அக்னால‌ட்ஜுமென்டுக‌ள் இன்றும் என்னிட‌ம் ப‌த்திர‌மாக‌ உள்ளன. இதுவரை ஒரு இழவு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதி ப‌ராப‌ட்ச‌ம் பார்க்க‌, துவ‌ங்கி விட்டால் அந்த‌ தேச‌த்தை யாரும் காப்பாற்ற‌ முடியாது.