Showing posts with label 10 கேள்விகள். Show all posts
Showing posts with label 10 கேள்விகள். Show all posts

Saturday, June 28, 2014

வலையுலக லேட்டஸ்ட் ட்ரென்ட்: 10 கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே !

வலை உலகத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்றதுதான். இதும் பின்னாடி இருக்கிற மனோதத்துவம் ரெம்ப சிம்பிள். உங்க ஈகோவை திருப்தி படுத்தறது.

உங்களை பத்தி சொல்லிக்க உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. ம்..எல்லாம் தெரிஞ்சும் ட்ரென்ட்ல இருக்கனுமேன்னு நானும் பதில் கொடுத்து தொலைச்சிருக்கன்,

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறாவது பிறந்த நாளா? ஹ.. இப்பமே ரெம்ப போரடிக்குது.கடுப்படிக்குது. ஒரு வாய்ப்புகிடைச்சா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமல் படுத்திட்டு உலகத்தோட பார்வையிலருந்தே மறைஞ்சுருவன்.

(மினிமம் கியாரண்டியா நம்ம படைப்புகளை 4 மொழியிலயும் -ஆ.இ.200 ஐ 22 மொழிகள்ளயும் மொழி பெயர்த்து வெளியிட்டுட்டாலே போதும் கழண்டுக்க தயார்)

லோட் லோடா ஐரன் ஸ்க்ராப் வரவழைச்சுக்கிட்டு ஜி.டி நாயுடு வேலைகளை செய்யவச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்வேன்

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நாடு கிடக்கிற கிடப்புக்கு எதை பத்தியும் கவலைப்படாம அடுத்தவன் பாக்கெட்லருந்து நாலணாவை எப்படி சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது எப்படின்னு 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பொலி,ஆதித்யா மற்றும் சில சானல்களின் காமெடிக்களின் உபயத்தில் முக்கியமா வடிவேலு உபயத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கன்.

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
லேப்டாப்ல பேட்டரி பேக் அப் இருக்கிற வரை வேலை .அது முடிஞ்சு போனா ஊர்பஞ்சாயத்துதேன்.

 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
சொல்லியாச்சு. லைஃப்ல சக்ஸஸ் ஃபார்முலா ஒன்னுதான் "மானம் ,ஈனம்,சூடு,சுரணை எல்லாத்தையும் விட்டுரனும்" ஆனால் பர்மனென்டா விட்டுட்டா நம்மை படைச்ச கடவுளுக்கே அவமானம். எல்லா கதவும் மூடிக்கிட்டப்போ எமர்ஜென்சி கேட்டா இதை யூஸ் பண்ணுங்க.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவுக்கு யுத்த தளவாடங்கள் தவிர்த்து வேற எதாச்சும் சோர்ஸ் ஆஃப் ரெவின்யூ உருவாக்குவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கடந்த காலத்திடம் . கடந்த காலத்தில் இந்த சிச்சுவேஷன் வந்தப்போ என்ன செய்தனோ அதுக்கு நேர் எதிரிடையா ஒர்க் அவுட் பண்ணுவன். புத்தம் புதுசா பிரச்சினை வந்துட்டா? லாஜிக்கை வச்சு நானே பைசல் பண்ணிருவன்.
தொழில் நுட்பம்னா மட்டும் எனக்கு ஆரு மேல நம்பிக்கை இருக்கே அவிக கேட்பேன்.

 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பரப்பினாருங்களே.. அப்பம் இலவச ஜோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பின பார்ட்டி பலன் அனுப்ப கொஞ்சம் போல தாமதமாயிருச்சுங்கற கடுப்புல செமர்த்தியா பரப்பினாரு. ஃபேக் ஐடில்லாம் கிரியேட் பண்ணி சாக்கடை கமெண்ட் எல்லாம் போட்டு நாறடிச்சாரு. இன்னைக்கு நாம இருக்கம். அந்த பார்ட்டி இருக்கா இல்லையான்னு தெரியல. மொதல்ல நமக்குள்ள இருந்த ரஜோ குணம் சிலும்ப கொஞ்ச நாள் மல்லு கட்டி பார்த்துட்டு தூ போ அம்பாளே பார்த்துப்பான்னு விட்டுட்டன். இனியும் இதையே செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதோட வாழ்க்கை முடிஞ்சுரல. இன்னம் எவ்வளவோ இருக்கு. சீக்கிரமா மனச தேத்திக்க. நிறைய சவால்கள் காத்திருக்கு.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
டிஃப்ரன்டா ஒன்னும் கிடையாது. என் வேலைய நான் தொடர்வேன்.

Monday, January 3, 2011

ஹலோ எடிட்டருங்களா? உங்களுக்கு தான் இந்த 10 கேள்விகள்

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? விளம்பரம் தந்தா எந்த பிக்காலி,முடிச்சவிக்கய பத்தி வேணம்னாலும் செய்தி போடுவிங்களா?

சமீபத்துல கல்கில பால் தினகரன் & கோவை பத்தி வரிஞ்சு வரிஞ்சு எழுதியிருந்தாய்ங்க. இதன் பின்னணில கூட இதே ஒப்பந்தம்தான் இருக்கும் போல.

ஆனந்த விகடன்ல ஒரு காலத்துல இந்த சாதி விளம்பரம் வெளியிட சங்கராச்சாரி வருத்தம் தெரிவிச்சதும் வாசன் நிறுத்திட்டாராம்..

இப்ப இருக்கிற கேடு கெட்ட நிலைல ஆதிசங்கரரே வந்து சொன்னாலும் நிறுத்தமுடியாது.


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?

உ.ம் : ஆட்டுக்காரன், காய் கறிகாரன், 24% வட்டி ஆஃபர் பண்ணி போர்டை திருப்பிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிங்க


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை ( சாணி பேப்பர்)  சலுகை விலையில் தருகிறது. ஆனால் எந்த மேஜர்  பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. சலுகை விலையில்  அரசு தந்த பேப்பரை ப்ளாக்ல  வித்துர்ரிங்களா?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு  எஸ்.எம்.எஸ் அனுப்ப எத்தனை செலவாகும்? ( ஒரு ரூபாயா? நாலஞ்சு ரூபாயா? அப்படி  செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை கூட திருப்பி அனுப்பினதா தகவலே இல்லையே.. நீங்க அரசோட சிகப்பு நாடாத்தனத்தை பத்தியும், மனுக்கள் குறித்த பாராமுகத்தையும் கிழிக்கிறிங்க இது எந்த அளவுக்கு நியாயம்?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே.( உ.ம் விசு, எஸ்.வி.சேகர், சுப்பிரமணியம் சுவாமி) .பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசை  வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் அச்சுப்பதிப்பிலும்  வலை தளத்திலும் சந்தேகாஸ்பதமான விளம்பரங்கள் எல்லாம் வெளி வருகின்றன. உ.ம் ஆண்மை பெருக்கம், குறி வளர்ச்சி,எய்ட்ஸ், இதெல்லாம் சட்டப்படியே குற்றம்னு தெரியாதா?

Tuesday, November 13, 2007

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

நான் ஏற்கெனவே என் பதிவுகளில் கூறியுள்ளேன்.பேசுபவன்/எழுதுபவன் எல்லாம் ஒன்று தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவனாக இருப்பான் அல்ல்து செக்ஸில் செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை படைப்பாற்றல் மிக்கவனாக இருப்பான். வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. காரியத்தில் செய்ய முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்வான்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை.

நாடு இருக்கும் இழி நிலையில் தேவை செய‌ல் வீர‌ர்க‌ள்
வாய் பேச்சு வீர‌ர்க‌ள் அல்ல‌

Monday, November 12, 2007

பாக்கிஸ்தானில் நெருக்கடி நிலை இந்தியாவில் 1947 கலவர சூழல் திரும்புமா?


கீழ்காணும் வலைப்பூவை ஒரு தடவை படித்து பாருங்கள். புதிதாக எழுத என்ன இருக்கிறது.

Thursday, November 1, 2007

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருது

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருதுஆம் பிரம்மங்காரு எழுதிய காலஞானப்படி யானாலும்.தற்போதுள்ள கிரக நிலைப்படிட்யானாலும் நல்லகாலம் பிறக்குது என்று சொல்ல முடியாது.
சிம்மம் சூரியனின் வீடு,சூரியனுக்கு பகை கிரகமான சனி சிம்மத்தில் உள்ளது.( 2005 ,ஆகஸ்ட் 5 முதல்), மேலும் 45 நாட்களில் ராசியை விட்டு ஓட வேண்டிய செவ்வாய் வரும் வருடம் ஏப்ரல் வரை மிதுனத்திலேயே இருக்கப் போகிறார்.
தம்பதிகள்,பங்குதாரர்கள்,கூட்டணி கட்சிகள் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பது மிதுன ராசியாகும் . இங்கு யுத்தகாரகனான் செவ்வாய் ஸ்தம்பித்துள்ளார். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கதை கந்தல்தான்.
மேலும் சுதந்திரம் வந்து 60 வருடம் பூர்த்தியாகி மற்றொரு சுற்றில் உள்ளோம். அடையை பிடிடா பரதப்பட்டா கதைதான். மீண்டும் யுத்தம்,பிரிவினை,மத கலவரம், மக்கள் நாடு விட்டு செல்லுதல் எது நடந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

Posted by chittoor.S.Murugeshan at 7:12 AM

நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ?

மனசாட்சி: என்னா நைனா. நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ? பழசயெல்லாம் மறந்துட்டயா?

முருகேஷன்: இல்ல மனசாட்சி..பழச மறந்தா கதி மோட்சமே கிடையாது


மனசாட்சி: பின்னே..ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தின பேச்சே காணோமே!

முருகேஷன்: அதெல்லாம் ஒன்னுமில்லே இந்த‌ மாச‌ம் த‌ந்தில‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கின‌ உட‌னே முத‌ல் வேலை இய‌ர் பேன‌ல் விள‌ம்ப‌ர‌ம் கொடுத்து என் வ‌லைப்பூக்க‌ளுக்கு ஹிட்ஸை அதிக‌ரிக்க‌ போறேன்

மனசாட்சி: பார்த்த‌யா..ச‌த்யா ல‌ட்சுமி பூஜை ப‌ண்ற‌துக்கும் நீ விள‌ம்ப‌ர‌ம் த‌ர்ர‌துக்கும் வித்யாச‌மே இல்லையே

முருகேஷன்:பின்னே ஒவ்வொரு ஆசாமிக்கும் மெயில்,ஸ்க்ராப் அனுப்ப‌ சொல்றியா

மனசாட்சி: அதுலதான் க‌ண்ணா த்ரில். ஒவ்வொரு மெயில்,ஸ்க்ராப்போடயும் உன் ஆத்ம சக்தி சேர்ந்து போகும்பா ..விளம்பரம்லாம் ஈஸ்வர்ராவ் பண்ற வேலை

முருகேஷன்: ச‌ரி அப்ப‌டியே செய்தா போச்சு

மனசாட்சி: ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா ப‌த்தி சுப்ரீம் கோர்ட்டுல‌ ரிட் போட‌ற‌தா சொன்னாப்ல‌ ஞாப‌க‌ம்.

முருகேஷன்:அட‌ ஆமாம் ம‌ன‌சாட்சி அதுக்கு இன்க‌ம் ச‌ர்ட்டிஃபிகேட் வேற‌ வாங்க‌னும். என்ன‌த்தை ப‌ண்ணி என்ன‌ புண்ணிய‌ம் எல்லாம் கிண‌த்துல‌ போட்ட‌ க‌ல்லுதான். ச‌மீப‌த்துல‌ கூட‌ எல்லா ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளுக்கும் ஆ.இ ப‌த்தி டைப்ட் மேட்ட‌ரே அனுப்பி வ‌ச்சேன். ஒரு வி.ம‌. ம‌க‌ன் கூட‌ போட‌லே

மனசாட்சி: த‌ பார்..இந்த‌ கெட்ட‌ வார்த்தையெல்லாம் சுஜாதா நாவ‌ல்ல‌தான் ஒத்துக்குவாங்க‌, நீ உப‌யோகிச்சா உன் வலைப் பூவை த‌டை ப‌ண்ணிருவாங்க‌

முருகேஷன்: அம்பேல்! அம்பேல்! வாப‌ஸ் வாங்கிக்கிற‌ம்பா ஏதோ என் வ‌யித்தெரிச்ச‌லை தேன் கூடு,த‌மிழ் ம‌ண‌ம் உப‌ய‌த்துல‌ 10 பேராவ‌து ப‌டிக்கிறாங்க‌ அதுக்கும் ஆப்பு வ‌ந்துர‌ப் போவுது

மனசாட்சி: ஜோதிட‌ பூமி, நிலாச்சார‌லுக்கெல்லாம் அடுத்த‌ப‌டியா என்ன‌ த‌ர்ர‌தா உத்தேச‌ம்

முருகேஷன்:"மாறி வ‌ரும் அர‌சிய‌ல் சூழ‌லில் ராஜ‌ யோக‌ம்"

மனசாட்சி: கிழிஞ்ச‌து ல‌ம்பாடி லுங்கி ..பெருவாரியான ஜன‌த்துக்கு உப‌யோக‌மான‌ விஷ‌ய‌த்தை எழுதுப்பா

முருகேஷன்: அப்போ எல்லோருக்கும் த‌ன‌ யோக‌ம் எழுதிர்ர‌ன்

மனசாட்சி: வெரி குட்.. கீப் இட் அப்

முருகேஷன்: இன்னொரு விஷ‌ய‌ம் தெரியுமா ..பெண்டாட்டிய‌ ஒரு 3 மாச‌த்துக்கு பேர‌ணாம்ப‌ட்டுக்கு பார்ச‌ல் ப‌ண்ணிட்டு முழு மூச்சா எழுத்துல‌ இற‌ங்க‌ போறேன்

மனசாட்சி: த‌ பார்ரா..எழுத்து எழுத்துன்னுட்டு ப‌ட‌க்குனு எதாச்சும் குட்டியை தொட்டுட‌ப்போற‌பா

முருகேஷன்: பாரு ம‌ன‌சாட்சி நான் த‌ப்பு ப‌ண்ண‌வ‌ன் தான்/ இனியும் ப‌ண்ண‌ப்போற‌வ‌ன் தான் ஆனால் புதுசு புதுசா தான் த‌ப்பு ப‌ண்ணுவேன்

Sunday, November 11, 2007

செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை

எனக்கு சாதி மத பேதங்கள் ஏதுமில்லை. ஆனால் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு வித தனிப்பட்ட கல்யாண குணங்கள் இருப்பதை பார்க்கிறேன்.
மைனஸ் பாயிண்ட்ஸை டிஸ்கஸ் செய்யுமத்தனை தைரியம் எனக்கில்லை. அந்தந்த சாதியினர் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. நரி நண்டின் வளைக்குள் முதலில் தன் வாலை விடுமாம் அது போல் செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை என்ற பழமொழியை முன்வைக்கிறேன். பதிவர்கள் தம் அனுபவத்தை கருத்தை தெரிவிக்கலாம்.

நான் யார் ?

பெயர்: எஸ்.முருகன்

புனைப்பெயர்: சித்தூர்.எஸ்.முருகேஷன்

ஊர்: ஆந்திர‌பிர‌தேச‌ம்,சித்தூர்.(வேலூரை அடுத்துள்ள‌)

த‌ந்தை:

மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியாய் வேலை பார்த்தும் க‌டைசி வ‌ரை சைக்கிளில் ஆஃபீஸ் போன‌ லேட். எம்.சுந்த‌ரேச‌ன்

அம்மா:

ம‌ணியாக்கார‌ர் பெண்ணாய் பிற‌ந்தும் அட்டெண்ட‌ருக்கு வாழ்க்கை ப‌ட்டு அவ‌ர் ஆஃபீஸ‌ரான‌ ச‌ம‌ய‌ம் கேன்ஸ்ர் வ‌ந்து செத்த‌ லேட்.என்.சுசீலாதேவி


ஜீவ‌ன‌ம்: ஜோதிட‌ம் & எழுத்து

முழு நேர‌த்தொழில்: இந்தியாவை ப‌ண‌க்கார‌ நாடாக்குவ‌து

சமீபத்திய சாதனைகள்:

தினத்தந்தியில் நிருபராய் குப்பை கொட்டுவது

ஜோதிட பூமி மற்றும் நிலாச்சாரல் டாட் காமில் தொடர் கட்டுரை எழுதியது

தமிழ் வாசம், கவிதை07,அனுபவஜோதிடம் பெயர்களில் வலைப்பூ எழுதுவது


எழுத்தாளனாய் அரங்கேற்றம்: பாக்யாவில் 1987

வ‌ருத்த‌ம்:

ஆன்மீக‌ம் இத‌ழ் 2000 ல் என் இர‌ண்டு தொட‌ர்க‌ளை பாதியில் நிறுத்திய‌து

உண்மையை சொன்ன‌ பாவ‌த்துக்கு ஓர்குட் பாலா க்ரூப்பிலிருந்து வெளியேற்றிய‌து

காசினி டாக்டர் (?)அக்பர் கவுசர் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

பல வருடங்களுக்கு முன் தேவி வார இதழில் தங்கள் தெய்வீக மருத்துவம் மாத இதழுக்கு உதவி ஆசிரியர் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தீர்கள். நான் உள்ளூர் தபாலில் அப்ளை செய்திருந்தேன். தாங்கள் பெருந்தன்மையுடன்(?) நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பியிருந்தீர்கள். நானும் வாணியம்பாடி வந்தேன். பணியில் சேர்ந்தேன். ஆமை நுழைந்த வீடும் நான் கால் வைத்த இடமும் உருப்படாது என்பது அனுபவம். ஆனால் சற்றே ஆன்மீக ஈடுபாடு வந்த பிறகு உணர்கிறேன். நான் தர்மத்தின் பிரதிநிதி. நான் அடி வைக்கும் இடத்தில் அதர்மம் இருந்தால் அது தூள் தூளாகும். நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு தேவியில் தங்கள் விளம்பர/கட்டுரை கண்டேன். கலைஞரின் வாழ்க்கை வரலாறை வாங்க ஆளில்லை என்பதால் இலவசமாய் தருவதான தங்கள் அறிவிப்பை கண்டேன். நான் வாணியம்பாடியில் இருக்கும்போது நான் கண்ணால் கண்ட காட்சிகளை இந்த வலைப் பூவில் வைத்தால் தனி மனித தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் என் வலைப்பூவே தடைக்குள்ளாகலாம் என்பதால் ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

"போதும் சார்..!

லிங்கன் சொன்னதை நினைச்சு பாருங்க

"பலரை சிலகாலம்..சிலரை பல காலம்..ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது"

Saturday, November 10, 2007

திமுக அரசு மைனாரிட்டி அரசி என்பது முட்டாள் தனம்

திமுக அரசு மைனாரிட்டி அரசி என்பது முட்டாள் தனம்

தமிழகத்தில் அமைந்திருப்பது திமுக தலைமையிலான கூட்டணி அரசு. திமுக அரசல்ல. திமுக தலைமையிலான கூட்டணி அரசுக்கு கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ்,பாம கட்சியினர் ஆதரவளிப்பதால் திமுக தலைமையிலான அரசு மெஜாரிட்டி அரசு தான். திமுக அரசு மைனாரிட்டி அரசு என்று சொல்வது முட்டாள் தனம். இந்த விஷயத்தில் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியை மட்டும் சுட்டிக்காட்டி டாடா..(பிர்லா?) சொல்கிறேன்.

நாம் எல்லோருமே பைத்தியங்களாகத்தானிருக்கிறோம்

நாம் எல்லோருமே பைத்தியங்களாகத்தானிருக்கிறோம், பெர்ஸன்டேஜில் தான் வித்யாசம். இதற்கு காரணம் செக்ஸ். மனித வாழ்விலான சிறு பாகமாக இருக்கவேண்டிய செக்ஸ் அது மனிதனுக்கு நியாயமாக கிடைக்காத காரணத்தால் மனித வாழ்வையே ஆக்கிரமித்து விடுகிறது.

உண்மையான உலகம் வேறு. மனிதன் தன்னைச் சுற்றி ஊகித்துக்கொள்ளும் உலகம் வேறு. அவனை தன் உலகத்திலிருந்து பார்வையை திருப்பி,உண்மையான உலகத்தை பார்க்காதிருக்கச் செய்வது அவன் மனதின் காம விகாரங்களே. இயற்கையின வரபிரசாதமான பத நீர் புளித்து கள்ளாவதை போல இயற்கையான உடலுறவு ஆர்வம் காம விகாரமாக மாறி மனிதனின் அந்தரங்க,குடும்ப,சமூக வாழ்வை பாதிக்கிறது.

இத‌ற்கு தீர்வு செக்ஸ் க‌ல்வியா? இல்ல‌வே இல்லை . த‌ற்போதைய‌ அர‌சு இய‌ந்திர‌த்தை கொண்டு செக்ஸ் க‌ல்வி வ‌ழ‌ங்குவ‌து ஆப‌த்தில் தான் முடியும். இதைவிட‌ உல‌க‌ செக்ஸ் மேதைகள், மனோதத்துவ மேதைக‌ளை க‌ல‌ந்தாலோசித்து செக்ஸ் கல்வியை வ‌டிவ‌மைத்து ந‌ம் க‌லாச்சார‌ம்,ப‌ண்பாட்டுக்கு உட‌ன்பாடான‌ வ‌கையில் க‌தைக‌ள், காவிய‌ங்க‌ள், அல்ல‌து கார்ட்டூன் ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் அவ‌ர‌வ்ர் வீட்டு ஹாலில் தொலைக்காட்சி மூல‌ம் செக்ஸ் க‌ல்வியை பெறும்ப‌டி செய்வ‌தே புத்திசாலித் த‌ன‌ம்.
மனிதர்களின்,அந்தரங்க ,குடும்ப, சமூக வாழ்வில் பிரச்சினைகள் பின்னிப் பிணைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இவற்றிற்கான தீர்வுகளை யோசிக்கும்போது தான் எனக்கும் இந்த சமுதாயத்துக்கும் தகராறு ஏற்படுகிறது. சமுதாயம் தொழுநோய்க்கு அவில் மாத்திரையை பரிந்துரைக்கிறது. முதற்கண் நோய் இருப்பதை கண் கொண்டு பார்க்க மறுக்கிறது. என் செய்வேன் ?

மனிதர்களை மனிதர்களாக கருத்தில் கொண்டு இயற்றியதால் தான் சட்டங்கள் தோற்றுவிடுகின்றன. என்னதான் ஆடை அணிய கற்றுக் கொண்டாலும் மனிதன் மிருகம் தான். மிருகத்திற்கு தேவை பசிக்கு உணவு, தினவுக்கு தேவை உடலுறவு, உயிர் பாதுகாப்பு. ஒரு அரசாங்கத்தின் முழு முதல் கடமை மக்களுக்கு உணவளித்தல்,அடுத்து அவர்களிலான மிருகத்தை வெளிக்கொணரும் சக்தி படைத்த காமம்,உயிர் பயத்திலிருந்து பாதுகாப்பளித்தல்.

விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தாலே என் போன்ற தினத் தந்தி நிருபர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். கள்ளக்காதல்,கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி இத்யாதிக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விடும். செக்ஸ் எண்ணங்கள் அழுத்தப்பட்டு அவை வன்முறையாக கிளர்ந்தெழும் நிலை மாறும். உடலுறவுக்கு மாற்றாக பணம்,பதவி,அதிகாரம் இவற்றைக் கொண்டு மக்களை கொன்று, இறுதியில் மக்களால் கொல்லப்படும் (பதவி தானே உயிராய் இருக்கிறது/மக்கள் ஓட்டை மாற்றிப்போட்டால் பதவி கோவிந்தா../பதவி போன அரசியல் வாதி பிணம் தானே) நிலை மாறும்.

Friday, November 9, 2007

இந்திய பொருளாதார சீரழிவுக்கு காரணமா செக்ஸ் காரணங்கள்

பொருளாதாரத்துக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகவே உள்ளது. ஒரு தந்தை தன் மகளுக்கு மணம் முடிக்கிறார். இதற்கு தன் சேமிப்பையெல்லாம் துடைத்து ஆங்காங்கே கடன்,உடன் வாங்கி திருமணம் செய்கிறார். இங்கே அவர் மகளின் திருமண வாழ்வு சுமுகமாக நடக்க ஆரம்பித்து விட்டால் பிரச்சினை இல்லை. குடும்ப வாழ்வென்ன இழவு.. அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.

தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள்.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான். ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான். இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..


இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.

ச‌ரி திரும‌ண‌த்துக்கு அவ‌ள் த‌ந்தை வாங்கிய‌ க‌ட‌ன் என்னாகும்? வ‌ட்டி கூட‌ க‌ட்ட‌முடியாத‌ நிலை , கேட்க‌வும் முடியாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிடுகிற‌து. ப‌ண‌ம் என்ப‌து ர‌த்த‌ம் மாதிரி சுற்றி வ‌ர‌வேண்டும். அது தேங்கினால் என்னாகும்? பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி ம‌ண்ணாகும்.

Thursday, November 8, 2007

கடன் வாங்குவோர்/கொடுப்போர் மனோதத்துவம்

முதலில் கடன் வாங்குவோர் மனோதத்துவம்:

மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காமம். காமத்தின் நோக்கம் படைத்தல், விரிவாக்கம் செய்தல்,பரவுதல். இதெல்லாம் பணமிருந்தால் சாத்தியப்படும் செயல்களாகும். காம சக்திக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது . அது கொல்லுதல் அல்லது கொல்லப்படுதல். இது இரண்டுமே செக்ஸில் சாத்தியமாகிறது. ஆண் விஷயத்தில் எடுத்துக் கொண்டால் விந்து வெளியாகும் வரை கொல்லும் இச்சை நிறைவேறுகிறது. விந்து வெளியான‌ பிற‌கு சாகும் இச்சை நிறைவேறுகிற‌து.

பெண் விஷ‌ய‌த்தில் ஆணுக்கு விந்து வெளியாகும் வ‌ரை இவ‌ளின் கொல்ல‌ப்ப‌டும் இச்சையும், அவ‌னுக்கு விந்து வெளியான‌ பிற‌கு இவ‌ள‌து கொல்லும் இச்சையும் நிறைவேறுகின்ற‌ன‌. இத‌னால் தான் ம‌னித‌னில் உள்ள‌ ஒரே ச‌க்தியான‌ காம‌ச‌க்தி அவ‌னை உட‌லுற‌வுக்கு ஈர்க்கிற‌து. மேலும் காம‌த்தின் மூல‌ம் ப‌டைப்புக்கும் வ‌ழி ஏற்ப‌டுகிற‌து. (இப்போதும் கூட‌ காலை பிடித்த‌ல், கை தூக்கி ச‌ர‌ண‌டைத‌ல், இத்யாதி காரிய‌ங்க‌ளின் பின் இருப்ப‌து பாலுற‌வு சார்ந்த‌ கார‌ண‌ங்க‌ளே. நாம் உப‌யோகிக்கும் ப‌ல‌ பொருட்க‌ள் ஆண்,பெண் உறுப்புக‌ளின் சாய‌லில் இருப்ப‌து த‌ற்செய‌லான‌ ஒன்ற‌ல்ல‌. ம‌னித‌னின் நினைவிலி ம‌ன‌தை ஆளும் செக்ஸின் பிர‌திப‌லிப்பே).

ம‌னித‌ன் நாக‌ரீக‌ம‌டைந்த‌ பிற‌கு உட‌லுற‌வுக்கு மாற்று வ‌டிகால் தேட‌வேண்டிய‌தாகிவிட்ட‌து. அதுதான் ப‌ண‌ம். எவ‌னொருவ‌ன் த‌ன் ஒரே ச‌க்தியான‌ காம‌ ச‌க்தியை உட‌லுற‌வில் முழுவ‌துமாக‌ செல‌வ‌ழிக்க‌ முடியாதிருக்கிறானோ அவ‌னுக்கு தான் ப‌ண‌த்தின் மீது அதீத‌ வெறி இருக்கும். அவ‌னை பொருத்த‌வ‌ரை ப‌ண‌ம் என்ப‌து உட‌லுற‌வுக்கு ஒரு மாற்று தான். (சுய‌ இன்ப‌ம் போல‌)

யார் உட‌லுற‌விலேயே த‌ம் காம‌ ச‌க்தியை செல‌வ‌ழித்து விடும் வாய்ப்பை பெற்றுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. யார் உட‌லுற‌விலேயே முழுதாக‌ செல‌வ‌ழிந்துவிடும‌த்தைனை கு.ப‌. காம‌ச‌க்தியை கொண்டுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கும் ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. இவர்கள் தான் கடன் வாங்குகிறார்கள். ஒளித்து,அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறைக்கு தூண்டுகின்றன. பணம் சம்பாதிக்க வன்முறை அவசியம். வன்முறைக்கு காரணமான நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் இல்லாததால் இவர்களுக்கு பொருளீட்டும் ஆர்வம் இருப்பதில்லை. முக்கியமாய் கொல்லும் இச்சை நிறைவேறி , கொல்லப்படும் இச்சையே மிஞ்சி இருப்பதால் கடன் வாங்குவதன் மூலம் காலனுக்கு அழைப்பு விடுகிறார்கள்.


கடன் கொடுப்போர் மனோதத்துவம்:
இத‌ற்கு மாறாக‌ எவ‌ர் அதீத‌ காம‌ ச‌க்தியை கொண்டிருந்தும், அதை செல்வ‌ழிக்க‌ உட‌லுற‌வுக்கு வாய்ப்பின்றி இருக்கின்ற‌ன‌ரோ அல்லது செக்ஸில் செல‌வழிந்து போகாத அளவுக்கு அமித செக்ஸ் பவர் கொண்டுள்ளனரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது அதீத‌ ஆர்வ‌ம் ஏற்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை (அதாவ‌து த‌ம் ஈகோவை) கொன்று தான் அந்த‌ ப‌ண‌த்தை ஈட்டுகின்றன‌ர். என‌வே சாகும் இச்சை நிறைவேறி, சாக‌டிக்கும் இச்சை மிச்ச‌மிருக்க‌ மேற்சொன்ன‌ பார்ட்டிக‌ளுக்கு க‌ட‌ன் கொடுத்து அவ‌ர்க‌ளை கொல்லுகின்ற‌ன‌ர்.

"கட‌ன் பட்டார் நெஞ்சம் போல் கல‌ங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். "ஆன முதலில் அதிகம் செலவானால்.." ,"வரவு எட்டணா செலவு பத்தணா" இதெல்லாம் நீங்கள் அறிந்தவையே.. The things given above are which U don’t know..

Wednesday, November 7, 2007

தையல் சொல் கேளேல் !


எத்தனை எத்தனை தீபாவளியோ ? நரகாசுரன் ஒழிந்தது மட்டும் ஒரு முறைதான். கண்ணன் சோர்ந்த போது சத்யபாமா ரதம் செலுத்தினாளாம். இன்றைய சத்யபாமாக்கள் கணவன் சம்பளமும்,கிம்பளமுமாய் வாரி கொட்டினால் அனுபவிக்கத் தயாரே தவிர சஸ்பெண்ட் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டாலோ, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி வேலை போனாலோ வேலை கொடுத்துவிடுகிறார்கள். (துரோகம் என்பதற்கு தெலுங்கு பிரயோகத்தின் மொழி பெயர்ப்பு இது)

தையல் (பெண்)சொல் கேளேல் என்று சொன்ன அவ்வையாரே தையல் தான் எனும்போது இதை சற்று யோசிக்க வேண்டியதாகிறது. பெண்ணின் உடல் பலவீனமானது. //strong mind in strong body// என்பது தெரிந்ததே..

இயற்கை ஒரு பலவீனத்தை மற்றொரு பலத்தின் மூலம் சமன் செய்கிறது. பெண்ணுக்கு அது ஸ்தூலமான பலவீனத்தையும், தற்காப்பு உணர்வையும்,எதிர்காலம் குறித்த பயத்தையும் தந்துள்ளது. //Too much is always bad// என்பதும் தெரிந்ததே.. மேற்சொன்னவை அதிகரிக்க அதிகரிக்க தந்திரங்கள், சுய நல எண்ணங்கள் பெருகுகின்றன. சற்றே பெண் தன்மை மிகுந்த கணவன் மார்கள் மனைவி மார்களின் பேச்சுக்கு தாளம் போட்டு சமுதாயத்தை சுரண்டி, தம் குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலகி பெண்டாட்டி பிள்ளைகளுடனேயே வாழ்ந்துவிட முயன்று அதே பெண்டாட்டி,பிள்ளைகளால் திரஸ்கரிக்கப் பட்டு நாயடி படுகிறார்கள். இவர்களுக்கு ரியலைசேஷன் வருவதற்குள் சூழ்நிலை கைமீறி போய்விடுகிறது.

எனவே தையல் சொல் கேளீர்

Tuesday, November 6, 2007

நான் ஒரு கட்டியங்காரன் ..

இது ஒன்றும் புதிதல்ல
யாவும் எனக்கு எதிராகி
காரணம் புதிராகி
நான் மலைப்பது புதிதல்ல ..

வெறுமனே உண்டு கழிக்கும்
மாமிசங்கள் இதை உணராதிருக்கலாம்.
அனுதினம் இறையருளின் ஜெட் கேட்டகிரி பாதுகாப்பில்
வாழும் என் மனம் இதை உணர முடிகிறது.

எனக்கு இவர்களோடு எவ்வித பந்தமும் இல்லை.

இங்கு எதுவும் எனக்கு சொந்தமுமில்லை.

நான் ஒரு கட்டியங்காரன் ..
அழிவின் வருகையை கூறவந்தேன்
என் அக‌ங்கார‌ம் திருப்தியுறுவ‌தற்காக
புதிய இந்தியாவுக்காக ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா என்று
க‌தை பண்ண‌ வைத்திருக்கும்
இறைய‌ருளின் வியூக‌த்தை
அறியாத‌ முட்டாளில்லை நான்..

என‌க்கு எதுவுமே முக்கிய‌மில்லை.
என் இறையோடு முறை கேடான
உற‌வேனும் தொட‌ர‌ வேண்டும்.
இது ஒன்றுதான் முக்கிய‌ம்.

இது கைவ‌ருமோ என்றுதான்
இந்த‌ நாத்திக‌ர்க‌ளின் ந‌ல‌ம் நாடி
உழைத்து வ‌ருகிறேன்.
இவ‌ர்க‌ளுக்காக‌ தெய்வீக‌த்தையும்
எதிர்த்து போராடுவ‌தாக‌
பிலிம் காட்டி வ‌ருகிறேன்
எது கைவ‌ரின் ம‌ற்றேதும் தேவையில்லையோ
அதையே பெற்றுவிட்டேன்..
இனி எதை இழ‌க்க‌வும் நான் த‌யார்.


ம‌ர‌ண‌ம் என்ன‌ க‌ஸ்ட‌ம்ஸ் அதிகாரியா கடத்தல் பொருளை
ஆச‌ன‌த்தில் செருகிக் கொண்டால் ஏமாந்து போக‌..

இங்கிருந்து என்னுட‌ன் வ‌ர‌விருப்ப‌து நின‌வுக‌ள் ஒன்றே..
அது போதும் என்னை வ‌ழி ந‌ட‌த்த‌..

ஐ யாம் வெரி க்ளிய‌ர் அப‌வுட் மை கான்ஷ‌ஸ்..
என்னில் எவ்வித‌ குற்ற‌ம‌ன‌ப்பான்மையுமில்லை..

என் நாட்டில் அடுத்த‌ வேளை
சோற்றுக்கு க‌தியில்லாது கிட‌க்கும்
த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளுக்காக‌
ஞான‌வில்லை நாணேற்றி யுத்த‌ க‌ள‌த்தில்
நிற்கும் தற்கொலை ப‌டை வீர‌ன் நான்.

நானே என‌து சைன்ய‌ம்.
வெறும‌னே என் ச‌ங்க‌ல்ப‌ ப‌ல‌த்தால்
நான் சாதித்த‌வை எத்த‌னையோ
என் இறைவ‌னை மிர‌ட்டியும் கூட‌
பார்க்கும‌த்த‌னை நெருக்க‌ம் வ‌ள‌ர்த்த‌வ‌ன் நான்.
என் "வில் " உச்ச‌த்தில் இருக்கும்போது நானே
இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌த்தை கூட‌
எதிர்கொண்ட‌வ‌ன் நான்.

இந்த‌ இடைவெளிக‌ள் யாவும் என்னை என‌க்கு
புரிய‌ வைக்க‌த்தான் என்ப‌து என‌க்கு தெரியும்..

வேலும் ம‌யிலும் துணை ..ஆம் த‌ணிகை முருக‌ன்
துணை நிற்கிறானோ இல்லையோ
என் த‌ந்தையின் ஆசி க‌டைசி புக‌லாக‌ என்னை காக்கிற‌து.

முப்ப‌து முக்கோடி தெய்வ‌ங்க‌ள், ராம‌ன்,அனும‌ன்,
க‌ண‌ப‌தி,அல்லா (முஸ்லீம்க‌ள்),ச‌த்திய‌ம்,
(என்.எஸ்.ச‌த்யா)/பௌத்த‌ம் (அஷோக்)
எல்லாமே கைவிட்ட‌ பிற‌கும் என்னை காத்த‌து
வேலும் ம‌யிலுமே/அத‌ற்கு கார‌ண‌ம்
என் த‌ந்தையின் தார்மீக‌ வாழ்வு , அவ‌ருடைய‌ ஆன்மாவின் ஆசி

Monday, November 5, 2007

நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள்

நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகளே வன்முறை,வஞ்சம்,சுரண்டல்,அதிகார வெறியாக வெளிப்படுகின்றன. ஒரு தாய் தன் குழந்தையை துன்புறுத்துவதற்கும் அவளது செக்ஸ் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது.

இதையே ஒரு கட்சித் தலைவி, பெண் அதிகாரி,ஆசிரியை விசயத்துக்கும் பொருத்தி பார்க்கலாம். ஒரு ஆண் தனது நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகளை பலவிதத்தில் திருப்தி செய்து கொள்கிறான். இந்த மேல் ஷேவனிஸ்டு சொஸைட்டி அதை அனுமதிக்கிறது.

ஆனால் பெண்ணுக்கு உள்ள இரண்டே வழி ஒன்று வழுக்கி விழ வேண்டும் அல்லது தன்னுள் வன்முறை இச்சையாக மாறிவிட்ட செக்ஸ் இச்சையை வன்முறையாகவே வெளிப்படுத்தியாக வேண்டும்.


பெருகி வரும் ஆண்மையின்மை:

லாட்ஜு வைத்தியர்கள் கூறும் கரப்பழக்கத்தால் இல்லா விட்டாலும் வரவு எட்டணா செலவு பத்தணா வாழ்வுக்கு முதல் பலி ஆண்மை சக்தி தான். பின் இருக்கவே இருக்கின்றன சத்தில்லாத,தவறான உணவு பழக்கங்கள், உறக்கமின்மை,செக்ஸ் குறித்த தெளிவின்மை, நித்திய வாழ்விலான டென்ஷன்,ட்ராஃபிக் ஜாம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்களால் ஆண்மையின்மை பெருகிவருகிறது. 12 வயதில் ஆண்மை பெற்று விடும் ஆணுக்கு 36 வயதில் திருமணமானால் அவன் நிலை என்ன? பெண்ணுக்கு மெனோஃபாஸ் சமயத்தில் தான் திருமணம் நடக்கிறது. பெண்களுக்கு செக்ஸ் அறிவின்மை கூட பல நேரங்களில் ஆணின் ஆண்மைக்கு உலை வைத்து விடுகிறது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு ?

கால‌ம் தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்.

Sunday, November 4, 2007

நான் ஒரு அராஜகவாதி.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்பது நம் கொள்கை. தமிழில் அராஜகம் என்பது நெகட்டிவ் மீனிங்குடன் உபயோகிக்கப் படுகிறது. அராஜகம் என்றால் பஸ்ஸை,பிரஸ்ஸை கொளுத்துவது அல்ல. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா என்று வாழ்வதே அராஜகம். அந்த அர்த்தத்தில் நான் ஒரு அராஜகவாதி.

என்னைப் பொருத்தவரை ஜெயா/கலைஞர்/ரஜினி/விஜயகாந்த் எல்லோரும் ஒன்றுதான். என்ன ஒரு சிக்கல் என்றால் நான் எரிச்சலில் இருக்கும்போது அவர்கள் மக்களுக்கு செய்த துரோகங்கல் எல்லாம் சரமாரியாய் நினைவுக்கு வந்து திட்டி தீர்த்துவிடுவேன். நவதுவாரங்களும் குளிர்ந்திருக்கும்போது அவங்க மட்டும் என்ன செய்வாங்கய்யா சிஸ்டம் மாறனும் என்று சொல்வேன். சரி கமிங்க் டு தி பாயிண்ட்..

கலைஞர் தமிழ் செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது ஜெயலலிதாவின் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதை கேள்வி கேட்காவிட்டால் இந்த பூ(மி)கிரகத்தில் மனிதம் மண் மூடி போகும். தமிழ் செல்வன் யார்? விடுதலை புலிகளின் அரசியல் தலைவர். விடுதலைபுலிகள் யார்? இலங்கை தமிழர்களின் உரிமையை காக்க ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள். ‌

புலிகள் செய்த பாவம் என்ன? ராஜீவை கொன்றது. ராஜீவின் சாவில் நேரடியாய் பாதிக்கப்பட்ட சோனியாவே கொலையாளிகளில் ஒரு பெண்ணை மன்னிக்கச்சொல்லியாகிவிட்டது. புலிகள் விஷயத்தில் ராஜீவை வழிநடத்திய பிராமணோத்தமர்களின் தயவால் பிரபாகரன் இல்லாமலே இலங்கைபிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி நடந்தது. வரதராஜ பெருமாள் முதல்வரானார். அவருக்கு மயிலாப்பூரை சேர்ந்த பிராமணோத்தமர் பெண் கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணம் நடக்குமோ?

கிழ‌க்கு வ‌ங்காள‌த்தில் ம‌க்க‌ள் பாக் அர‌சுக்கு எதிராக‌ திர‌ண்ட‌போது இந்தியா அவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ க‌ள‌த்தில் இற‌ங்கிய‌து உண்டா இல்லையா? (அத‌ன் விளைவாக‌ ம‌த்த‌ள‌த்துக்கு ரெண்டு ப‌க்க‌மும் அடி என்ப‌து போல் பாக்கிஸ்தானும் கிழக்கு வங்காளமும் இந்தியாவுக்கு விஸ்வாசமாக இல்லாது போனது வேறு விஷயம்).

அட‌ த‌மிழ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்துக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌த‌ற்கும் இல‌ங்கை பிர‌ச்சினைக்கும் என்ன‌ங்க‌ ச‌ம்ப‌ந்த‌ம்? இதுக்கு என்ன‌ங்க‌ க‌ண்ட‌ன‌ம்.

"காக்கா கூட்ட‌த்தை பாருங்க‌ அதுக்கு க‌த்து குடுத்த‌து யாருங்க‌?" பாட்டை ஒரு த‌ட‌வை கேளுங்க‌ மேட‌ம்!

இல்லான்னா இந்த க‌விதைய படிங்க‌:

செத்து விழுந்த‌து ஒற்றை காக‌ம்.
முட்டி மோதும் காக்கை கூட்ட‌ம்
ரோட்டோர‌ம் அநாதைப் பிண‌ம்

Saturday, November 3, 2007

செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி

மனைவி என்றதும் உங்கள் மூளையில் பல்வேறு பிம்பங்கள் மின்னலாம். அவற்றையெல்லாம் முதற் கண் துடைத்து விடுங்கள்.(மெட்றாஸ் ஐ என்றால் வேண்டாம்)

உலக அழகி ஐஸ்வர்யாராயே என்றாலும் சரி மனைவி என்ற ஸ்தானத்திற்கு (ஸ்தனம் அல்ல)வந்து விட்டால் அவர்களின் சகலமும் மாறிவிடுகிறது. சாலையோர ரோமியோக்கள் கண்ணுக்கு வேண்டுமானால் ப்யூட்டிஃபுல் ஆண்டி யாக தோன்றலாம்.

ஆனால் தன்னை ஆண்டியாக்கி விட்டபடியால் கணவன் கண்ணுக்கு மட்டும் அவள் ட்ராகுலாவாகவோ,அட்டையாகவோத் தான் தோன்றுவாள். பெண் என்பவள் வேறு எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் சோபிக்கிறாளே தவிர மனைவி பாத்திரத்தில் மட்டும்,சோகிக்கத் தான் வைக்கிறாள். இது நற்குடியில் பிறந்த‌ (காஸ்ட்லி மது இல்லிங்க) ஆதர்ஸ குணங்கள் நிறைந்த பெண்களுக்கும் பொருந்தும்.

ஏதோ என் கடுப்பை பதித்து வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொள்ளலாம் (அது என்ன நாயர் கடை டீயா) என்று ஆரம்பித்து சுஜாதா சொன்னது போல ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன் சாரி.(புடவை யில்லிங்க)

விஷயத்துக்கு வரேன். பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

1.நிறைய பெண்களிடம்,மனைவிகளிடம் நான் கண்டது:
செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது. ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள்,ஃபோர்வீலர்கள்,
கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம்
் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது. ஒன்றொ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது.

5.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

6.விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

7.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்

கிராஃபிக் III


குடிக்க கூழில்லை கொப்பளிக்க பன்னீர் என்ற பழமொழிக்கு எங்கள் பரசு ராமனைத்தான் உதாரணமாக சொல்ல வேண்டும். தங்கை கணவர் இவன் காலுக்கும்,கண்ணுக்கும் வைத்தியம் பார்த்து,இவன் பெண்குழந்தைகளுக்கு காது,மூக்குக்கு நகை வாங்கி கொடுத்து ,இவன் அம்மாவின் கேன்ஸருக்கு வைத்தியம் பார்த்து,பிணமெடுத்து,காரியம் செய்து,சித்தூர் வீட்டை ரிப்பேர் செய்து பூக்காரியை குடிவைத்து வாடகைக்கு வழி செய்த பிறகு காலுக்கு கட்டுப் போட என்று தங்கை கணவரிடம் பணம் வாங்கிக் கொண்டு காட்பாடி காவல் நிலயத்தில் புகார் கொடுத்துவிட்டு ஷாட் கட் செய்தால் சித்தூர் ,கிராஃபிக் ஆர்ட்ஸ். அப்போது நான் ஆந்திரபிரபாவில் ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் என்பது பிறகு அதற்கு முன்பே கூட மனிதாபிமான அடிப்படையில் இது போன்ற கேஸ்களை நான் டேக் அப் செய்வது வழக்கம். அந்த ஆயிரம் கேஸ்களில் பரசு ஒரு கேஸ்.

ச‌த்யா பாஷையில் சொன்னால் துட்டு ,துக்காணிவ‌ராத‌ கேஸ். ந‌ம் மொழியில் சொன்னால் தேங்காய் மூடி கேஸ். விவ‌ர‌ம் அறிந்து ஆணித்த‌ர‌மாக(துருப்பிடித்து விடாதோ) சொன்னேன். த‌ர்ம‌ப்ப‌டி பார்த்தா சித்தூர் வீடு ராம‌லிங்க‌த்துக்கு தான் சொந்த‌ம். ஆனால் ச‌ட்ட‌ப்ப‌டி பார்த்தால் உன‌க்கு மூணில் ஒரு பாக‌ம் வ‌ர‌லாம். ம‌யிரைக் க‌ட்டி ம‌லையை இழுப்போம் வ‌ந்தால் ம‌லை போனால் ம‌யிர் என்று ராம‌லிங்க‌த்துக்கு போன் போட்டேன். ப‌ந்தாவாய் ஆந்திர‌ ப்ர‌பா ரிப்போர்ட்ட‌ர் என்று அறிமுக‌ம் செய்து கொண்டேன்.ம‌னித‌ர் பாவ‌ம் ப‌ய‌த்தில் வேட்டியை ஈர‌மாக்கிக் கொண்டிருக்க‌வேண்டும். நேரில் வ‌ந்தால் விவ‌ர‌ம் சொல்வ‌தாக‌வும்,பிர‌ச்சினையை சுமுக‌மாக‌ முடித்துக் கொள்வ‌தாக‌வும் கூறினார். நானும் சென்றேன்.

பார்ட்டி ப‌ஞ்சாய‌த்து துறையில் நிர்வாக‌ அலுவல‌ர். கிம்ப‌ள‌ம் வாங்கியே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு உல‌க‌மே கிம்ப‌ள‌ ம‌ய‌மாக‌ காட்சிய‌ளிக்கும் ம‌ன‌நிலையில் இருந்தார். என் ஜாத‌க‌ராசி இர‌ண்டு க‌ட்சியில் எவ‌ன் சோப்ளாங்கியோ அவ‌ன் தான் என‌க்கு மாட்டுவான். நான் அந்த‌ சோப்ளாங்கிக்காக‌ சில‌ ச‌ம‌ய‌ம் த‌ர்ம‌ம் த‌வ‌றியும் செய‌ல்ப‌ட்டு அந்த‌ சோப்ளாங்கியிட‌மே மொக்கையாவ‌து தொட‌ர்க‌தை. ரா.லி. என் வாயை மூட‌ எத்த‌னை வேண்டுமானாலும் த‌ர‌த்த‌யாராக‌ இருந்தார். ஆனால் நான் பில்/குல் ப‌ர‌சுவுக்கு பாக‌ம் வாங்கியே தீருவ‌தாய் இருந்தேன்.என்றாலும் அவ‌ர் என்னை வெறுங்கையுட‌ன் அனுப்ப‌வில்லை.

Astro Scientist

Friday, November 2, 2007

சிரிப்பா சிரிச்சி

நான் 1987 ல் பாக்யாவில் என் சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாகி கொண்டிருந்த நேரம் அப்போது என் அண்ணன் செல்வராஜின் நண்பர் திரு.வளையாபதி திரு.கே.சி.முனி எனும் ஜோதிடரிடம் அழைத்துச் சென்றார். * சரித்திரத்தில் உங்களுக்கு ஒரு இடம் கர்சீஃப் போட்டு வச்சிருக்கு என்றதால் அவரை மன்னித்தேன். கோபத்துக்கு காரணம் உங்க எழுத்துல சோகச்சுவையை கொண்டுவாங்க என்ற அவர் ஆலோசனை தான்.

1989க்கெல்லாம் " நோவும் என்னை விரும்பவில்லே/சாவும் என்னை நெருங்கவில்லே என்று கவிதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது நினைத்தால் அந்த சிச்சுவேஷனுக்கு அந்த வரிகள் ஓவர் ஆக்ஷன் என்று தோன்றுகிறது. அதன் பிறகு எத்தனையோ முறை என் மானம் ஆக்ஷனில் போனதை பார்த்து பார்த்து பார்ப்பதையே விட்டு விட்டேன். நிற்க..

ஒரு காலத்தில் சோகச்சுவை நிரம்பிய திரைக்காவியங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. காரணம் அப்போது மக்களின் தேவை குறைவு, தேவைகள் நிறைவேறுவதற்கான மார்கங்களில் சிக்கலிருந்தது. எனவே ,மக்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாது பசுமை நிறைந்த நினைவுகளில் மூழ்கியிருந்தனர்.

இப்போது அகன்ற திரையில் தாத்தாவுக்கு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை ஓப்பனிங்க் ஷாட்டிலிருந்து சுபம் போடும்வரை அலம்பல் செய்தால் தான் ரசிக்கிறார்கள்.

காரணம் மக்களின் வாழ்வு சோகமயமாகிவிட்டது. மனித மனம் விசித்திரமானது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவது தானே நம் பாணி. சுக ஜீவனத்தில் சோகம் வெல்கிறது. சோகவாழ்வின் போது சுகஜீவனத்தை கனவு காண்கிறது.

உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம்,மேற்க‌த்திய‌ க‌லாச்சார‌ம்,க‌ன்ஸியூம‌ரிச‌ம்,பெருகிவிட்ட‌ தேவைக‌ள்,போட்டிக‌ள் என்று ம‌னித‌ வாழ்வு புலிவாலை பிடித்துவிட்ட‌ நாய‌ர் க‌தையாகிவிட்ட‌து.

அதை விட‌வும் முடியாது. இந்த‌ நிலையில் மேற்சொன்ன‌ சுக‌ஜீவ‌ன,ஃப்ளாஷ் பேக் கதைகள் (உ.ம்;ஆட்டோகிராஃப் ) கிருபான‌ந்த‌ வாரியார் சொன்ன‌ தேன் துளிக‌ள் ஆகிவிடுகின்ற‌ன‌.

என‌வே என் ப‌ங்குக்கு சிரிக்க‌ வைக்க‌ முடியாவிட்டாலும் முய‌ன்று பார்க்கிறேனே !

என் ந‌ண்ப‌ர் ச‌த்யா. (இவ‌ரும் ஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌ வ‌ளையாப‌தி மாதிரி என் அண்ண‌ன் செல்வ‌ராஜின் ந‌ண்ப‌ரான‌ கிராஃபிக் ர‌வி மூல‌ம் அறிமுக‌மான‌வ‌ர்தான்) வ‌ய‌து 50. குடிகார‌ன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்க‌ள். ச‌த்யா விஷ‌ய‌த்தில் செட்டியார் ஒழுக்க‌ம் இர‌வு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்ல‌வேண்டும்.

தினசரி காலை எழுந்து துள‌சி வாங்குவ‌தென்ன‌,பூ வாங்குவ‌தென்ன‌ ம‌ணிக்க‌ண‌க்கில் பூஜை போடுவ‌தென்ன‌..க‌ராறாய் வியாபார‌ம் செய்வ‌தென்ன‌..ஏழும‌லையானே சும்மா பார்த்துட்டு போக‌லாம்னு வ‌ந்தேன் என்று வ‌ந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.

இரவு 9 ஆனால் போதும் கழுதை கெட்டால் குட்டிசுவர் கணக்காய் வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.

இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).

அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.

சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரிய‌ர் டெக்க‌ரேஷ‌ன் செய்ய‌ப்ப‌ட்ட‌ முத‌ல் க‌டை ச‌த்யாவின் க‌டைதான். செட்டியார்க‌ளில் முத‌லில் ச‌ட்டையை இன்செர்ட் செய்த‌து ச‌த்யாதான். க‌டையை திற‌ந்து வைத்த‌து எஸ்.பி. இடையில் சில‌ கால‌ம் கிருஷ்ண‌கிரியில் அக்காவின் ப‌ல‌ச‌ர‌க்கு க‌டையில் பொட்ட‌ல‌ம் க‌ட்டிய‌ அனுப‌வ‌மும் உண்டு என்றாலும் இப்போது க‌டை மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து கொண்டிருக்கிற‌து .

ஆறு மாத‌ங்க‌ளாய் அட‌கில் மூழ்கிய‌ வ‌ண்டியை ஓட்டி அலுத்து விட்ட‌ ச‌த்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ண‌ம் வ‌ந்து விட்ட‌து. வாங்கியாயிற்று. தீர்த்த‌ம் முடிந்த‌து.

தீனிக்கு விஷ்ணுப‌வ‌ன் சென்றோம். ச‌ர்வ‌ர் இறுதியில் கிடைக்க‌ப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக‌ ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.

ச‌த்யாவின் மூளை ப‌டுவேக‌த்தில் வேலை செய்யும். இத‌ற்கு சாட்சி ப‌ட‌ப‌ட‌த்துக் கொண்டே இருக்கும் கை விர‌ல்க‌ள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உத‌டுக‌ள்.

இத‌னால் ச‌த்யாவின் பேச்சு ஜெட் வேக‌த்தில் வெளிப்ப‌டும் .சில‌ நேர‌ம் எதிராளிக்கு புரிவ‌து க‌ஷ்ட‌மாகிவிடும்.

ச‌த்யா ச‌ர்வ‌ரை கிட்டே அழைத்து நிற்த்து நிதான‌மாக‌ வார்த்தை வார்த்தையாக‌ "கொஞ்ச‌ம் மோர், கொஞ்ச‌ம் ர‌ச‌ம் கொண்டு வா" என்றார். அப்போது ச‌த்யாவின் பாடி லேங்குவேஜில் ஏதோ த‌வ‌று இருந்திருக்க‌ வேண்டும் .

ச‌ர்வ‌ர் ஒரே த‌ம்ள‌ரில் மோரையும்,ர‌ச‌த்தையும் ஊற்றி ,ஆற்றிய‌ப‌டியே கொண்டு வ‌ந்த‌தை பார்த்து திருவிளையாட‌ல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இய‌ங்க‌ ஆர‌ம்பித்த‌தை சொல்லித் தானாக‌ வேண்டும்.