.நானும் ஜோதிட ஆலோசனை வழங்குபவன் தான் /ஆனால் நான் ஒரு ஜோதிடன் என்று நினைப்பதில்லை. ஜோதிடத்தில் எழுதப்படாத ஒரு விதி என்னவென்றால் எந்த ஜாதகத்துக்கும் ஆயுர்தாயம் செய்யக் கூடாது என்பதாகும். ஜோதிடம் என்பது சாய்ஸுடன் (இது அல்லது அது/மரணம் அல்லது சிறை/ அறுவை சிகிச்சை அல்லது விபத்து) சொல்லப் பட்டால் அதை நம்பலாம். இது போலன்றி எந்த அளவுக்கு டீட்டெயில்டாக சொல்லப் படுகிறதோ அது அந்த அளவுக்கு டுபாகூர் என்று அர்த்தம். காரணம் ஜோதிட சாஸ்திர விதிகளில் இப்போது நம்மிடம் உள்ள விதிகளை அப்ளை செய்து பலன் சொல்லவே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் தேவை. ரகசியம் ரகசியம் என்று மூடி மறைத்ததால் பல அற்புத கிரந்தங்கள் பார்ப்பனர் வீட்டு பரண்களில் செல்லரித்து போய்விட்டன. கடைசியாக ஒரு வார்த்தை: ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை ஜோதிடம் பொய்த்தால், ஜோதிடர் கோட்டை விட்டு விட்டார் என்று பொருள். |