துலாம்:
துலா லக்னம் ராசிச்சக்கரத்தில் 7 ஆவது என்பதால் இவர்கள் வாழ்வில் முக்கியத் திருப்பங்கள் நண்பர்,காதலி,பங்குதாரர்,மனைவி மூலமாகவே ஏற்படும். இவர்கள் வாழ்வு அதீத ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். பிறரின் திறமைகளை,அடையாளம் கண்டு கொள்ளும் இவர்கள் தங்கள் நிறை,குறைகளை அறிந்து கொள்ள முடியாது தவிப்பர். மன சஞ்சலமும் அதிகம். யார் பக்கம் சாய்வதென்பதில் குழப்பம் தொடரும். விரோதிகள் குடும்பத்தில் பெண்ணெடுப்பதோ, அல்லது பெண்ணெடுத்த வீட்டில் விரோதம் ஏற்படுவது சிலர் வாழ்வில் நடை பெறலாம்.
கடகம்:
ராசிகளில் சுவாரஸ்யமான ராசி கடகம் தான். இவர்கள் பிறருக்கு புரியாத புதிராக இருப்பர். எளிதில் கோபம்,விரைவில் சமாதானம் (தண்ணீரைப் போல்),சீதள சம்பந்த தொல்லைகள்,மேலுக்கு ஆரவாரம்,அமைதியின்மையிருந்தாலும் உள்ளூர ஒரு வித அமைதி இருக்கும்.(கடலைப் போல), வாழ்வில் தொடர்பில்லாத சம்பவங்கள் நடந்தாலும் இறுதி லட்சியத்தை அடைந்தே தீருவர்.(ஆற்றைப் போல), எதிராளியின் உற்சாகமோ,கவலையோ,விரோத பாவமோ விரைவில் இவர்களுக்கு தொற்றிக் கொள்ளும்.(கண்ணாடியைப் போல). எப்போதும் ஒரு வித அபத்திரபாவத்துடனிருப்பர்,. அதே நேரம் பிரச்சினை என்று வந்துவிட்டால் அதிரடி மோதல் தான். மோதும் தருணம் வரும் வரை சின்ன விஷயமாக இருந்தாலும் கப்பல் கவிழ்ந்ததைப் போல் கவலைப் படுவர். இரண்டே நாட்களில் 20 வருடங்களுக்கும் தீராத பிரச்சினையை உண்டு பண்ணிக் கொள்ளும் இவர்கள், 20 வருட பிரச்சினையை 2 நாட்களில் தீர்த்துவிடும் சக்தியையும் பெற்றிருப்பர். அதிபதியான சந்திரன் வளர் பிறை,தேய்பிறை என்று இருப்பது போல் இவர்களும் 15 நாட்கள் உற்சாகம்,15 நாட்கள் உற்சாக குறைவோடு இருப்பார்கள். சந்திரன் சூரியன் ஒளியைப் பெற்று பிரகாசிப்பது போல் ஒரு ஆதர்ஸ புருஷர்,ஒரு ரோல் மாடலை நிதம் நினத்து தம்மைத் தாம் வளர்த்துக் கொள்வர்.