Sunday, October 7, 2007

ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி


ஓம் கம் கணபதே நமக ஜனனீ ஜன்ம சொந்க்யானாம் வர்த்தனீ குலசம்பதாம்பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
ஜாதக பலன் கள் கணித்தவர்:


பெயர்:

இமெயில் முகவரி:



*ஒரு வேண்டுகோள் *


இது கூடுமானவரை பழைய சம்பிரதாயஙளை விட்டு விடாது,அதே சமயம் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஜாதகப் பலன் களை தர உதவும் மாதிரி படிவமாகும். இதனை எல்லா ஜோதிடர்களும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
முன்னுரை:
பொதுவாக ஜாதகபலன் கள் எழுதும் ஜோதிடர்கள் நட்சத்திரபலன் ராசி பலன்,லக்ன பலன் என்று பொது பலன் எழுதுவர். இவையெல்லாம் இந்த கணிணி யுகத்தில் சின்ன தேடலிலே கிடைத்து விட கூடியனவாகும்.மேலும் எல்லா பஞ்சாங்கங்க‌ளிலும் கிடைக்கக் கூடியவையே. மேலும் இவை பொதுப் பலன் களாகும். ஒவ்வொரு ஜாதகருக்கும் நடந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.
எனவே தேவையான இடத்தில் தேவையான அளவு ஆங்காங்கே கொடுக்கப் படும்.


ஜாதகம் என்றால்:


ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 லக்னங்க‌ள் உள்ளன. 9 கிரகஙள் உள்ளன. ஒவ்வொரு லக்னத்துக்கும் நல்லதை செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன ,கெட்டது செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன.


க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:


ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான்.


12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.


முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.