2008 ஏப்ரலில் வரும் உகாதிக்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்துவிடவேண்டும் என்பது காலஞான சாரம்.
இன்று முதல் ..உலக மக்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து காலை 6 மணிக்கு விழித்து, மாலை 6 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விட்டாலே பிரளயம் 5 வருடங்களுக்கு தள்ளிப்போய்விடும்.(முக்கியமாக நோ கேபிள் டிவி அண்ட் ஆல் தட்)
இதனால் 12 மணி நேர சுரண்டல் குறையும், விபத்துக்கள் குறையும், என் கவுண்டர்கள் குறையும், லாக்கப் மரணங்கள் குறையும், ஊழல் குறையும் புகை கக்கும் வாகனங்கள் வண்டிகள் ஓடாது,பொல்யூஷன் குறையும்,குடும்ப உறுப்பினர்களிடை உறவு பலப்படும். முக்கியமாக மனிதர்கள் மனங்களில் இன்னும் சில காலம் வாழலாம் என்ற எண்ணம் பலப்படும். இது ஒன்றே போதும் பிரளயத்தை தள்ளிப்போட
இன்று மனிதன் வாழும் வாழ்க்கை, இதை காட்டிலும் மரணமே மேல் என்ற எண்ணத்தை அவன் அடிமனதில் ஏற்படுத்தி வருகிறது. எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு. மக்களின் எண்ணங்களுக்கு விபரீதமான சக்தி உண்டு.
அதிலும் அல் குரானில் இறைவன் " உங்களில் இருவர் எது கோரினாலும் உடனே நிறைவேறித் தருகிறோம் " என்று கூறியதில் எத்தனையோ ஆழ்ந்த ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன.
குறிப்பு:ஒரு காலத்தில் இவ்வுலகை ஆண்டவன் ஆண்டவனாக இருக்கலாம். இப்பொழுது வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.
ஓஷோ சொல்லுவார் " ஒருவனுக்கு துன்பங்கள் நேரும்போது அவனில் கேள்விகள் எழுவதில்லை. இதமானவை நடக்கும்போது மட்டும் எண்ணற்ற கேள்விகள் எழுமாம்.
என் நிலைமயும் இப்படித்தானிருக்கிறது. என்னிடம் இல்லாதது பணம் மட்டும் தான். இந்த நாட்டையே, விட்டால் உலகத்தையே நிர்வகிக்கும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல,சக்தியும் எனக்குண்டு என்பது தான் ஆரம்பம் முதலே என் நம்பிக்கை.
ஜோதிடம்,ஆரூடமெல்லாம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதால் தான்ஜோதிட உலகத்தில் தொடர்ந்தேன்.
நாளை நடப்பதை ஆரே அறிவார் என்று கைகளை பிசையாது ஒருவாறு குண்ட்ஸாகவேனும் அறியும் வாய்ப்பு, ஜாதகத்தில் அடிப்படை பலம்,தர்கம்,சம்பிரதாயமான கல்வி,இவற்றோடு அளவற்ற சக்தியை தரும் நம்பிக்கை,
எல்லாவற்றுக்கும் மேலாக ராம நாம ஜபம், அது தந்த சாக்தேயம் எல்லாமாக சேர்ந்து நாளைய என் கனவுகளுக்கு ஒரு அடித்தளம் அமைந்து வருகிறது.
இது இதமாகவே இருந்தாலும் ஓஷோ சொன்னது போல் இந்த இதமே எண்ணற்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.
இன்றைய நிலைப்படி பைப் லைனில் உள்ள ஆஃபர்ஸ் மட்டும் மெட்டீரியலைஸ் ஆனால் போதும் .. தாய் நாடு குறித்த என் கனவு நனவாகிறதோ இல்லையோ பிரபஞ்சத்தின் செவிகளுக்கு அஞ்சலாகிவிடும்.
இந்த பிறவிக்கு இது நடந்தாலே யதேஷ்டம். பார்ப்போம்..
வெல்லுவது பிரபஞ்சத்தின் விதியோ ?அல்லது பிரபஞ்ச நலன் கருதி நான் செஇது வரும் சதியோ?