Sunday, October 28, 2007

ப‌.ப‌ர‌சுராம‌ன்.

வேலூர்,28/10/2007.
விடுநர்
ப‌.பரசுராமன்,
எஃப்.51,ப்ரம்மானந்த மடம் தெரு,
4 ஆவது மெயின் ரோடு,
ஆர்.சி.புரம்,பெங்களூர் 21
பெருமதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு,
ஐயா! உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் சர்க்கரை வியாதியால் கண் போய்,கால் போய் மூன்று வயது வந்த பெண்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் வாழும் என்னை ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எல்லாவிதத்திலும் துன்புறுத்தி வருகிறார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாத ஏழ்மை நிலையில் நான் இருப்பதால் என் பிரச்சினையை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் அப்பா ப‌ச்சைய‌ப்ப‌ன். என் அம்மா த‌ஞ்ச‌ம்மாள் . என் அப்பா த‌ன் சொந்த‌ முய‌ற்சியில் ஆந்திர‌ மாநில‌ம்,சித்தூரி ஒரு வீடு வாங்கி என் அம்மாவின் பெய‌ரில் ப‌திவு செய்தார். நான் மேற்சொன்ன‌ அர‌சு அதிகாரி என் அம்மாவுக்கு சொந்த‌ த‌ம்பி. பெய‌ர் ராம‌ லிங்க‌ம். இவ‌ர் ஆற்காடு வ‌ட்ட‌ம்,திமிரிய‌ருகில் உள்ள‌ விளாப்பாக்க‌த்தில் ப‌ஞ்சாய்த்து துறையில் நிர்வாக‌ அதிகாரியாக‌ வேலை பார்த்து ச‌மீப‌த்தில் ஓய்வு பெற்றார்.
த‌ற்போது காட்பாடி,நியூ திருவ‌ல‌ம் ரோட்டில், க‌த‌வு எண் 3 ல் வ‌சிக்கிறார். இவ‌ர் என் அம்மா த‌ஞ்ச‌ம்மாளிட‌ம் என்னை ப‌ற்றி இல்லாத‌தும் பொல்லாத‌தும் கூறி,அவ‌ர் கேன்ஸ‌ரால் அவ‌தி ப‌ட்டுக் கொண்டு எதையும் சிந்திக்க‌க்கூட‌ முடியாத‌ நிலையில் இருந்த‌ போது த‌ன் ம‌னைவியின் பெய‌ருக்கு உயில் எழுதுவித்து ப‌திவும் செய்து கொண்டார்.வெறும் மூன்று மாதங்களில் என் அம்மா இறந்துவிட்டார். அவர் சாவில் கூட பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
இது குறித்து நானும்,உற‌வின‌ர்க‌ளும்,என் ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல‌ம் விரும்பிக‌ளும் எவ்வள‌வோ எடுத்துச் சொல்லியும் த‌ன் த‌வ‌றை திருத்திக் கொள்ள‌வில்லை. இந்த‌ நிலையில் 2005 மே மாத‌த்தில் ராம‌லிங்க‌த்தின் மேல் எண்ண‌ற்ற‌ புகார்கள் அவரது உய‌ர‌திகாரிக‌ளுக்கு சென்ற‌தில் நான் தான் அந்த‌ புகார்க‌ளை அனுப்பினேன் என்று த‌வ‌றாக‌ எண்ணி ப‌ய‌ந்து மேற்ப‌டி சித்தூர் வீட்டின் மூல‌ ப‌த்திர‌த்தையும் , இருப‌து ரூபாய் ஸ்டாம்பு தாளில் ஒரு ஹ‌க்கு விடுத‌லை ப‌த்திர‌த்தையும் கொடுத்துவிட்டார்.(அதுவும் ஜிராக்ஸ் பிர‌தி).
நானும் வீட்டை கைய‌க‌ப் ப‌டுத்திக் கொண்டு சித்தூர் டவுன் ,ச‌ர்ச் பின்னால் டீக்க‌டை ந‌ட‌த்தும் முத்து என்ப‌வ‌ருக்கு வாட‌கைக்கு விட்டேன். அந்த வாடகையில் தான் எனக்கு ஜீவனம் நடக்கிறது. இந்நிலையில் ராமலிங்கம் காட்பாடியிலிருந்து குவாலீஸ் காரில் சித்தூருக்கு அடியாட்க‌ளுட‌ன் வ‌ந்து அந்த‌ வீட்டை தான் விற்று விட்ட‌தாக‌வும், குடியிருக்கும் முத்து 10 நாட்க‌ளில் காலி செய்ய‌வேண்டும் என்றும் மிர‌ட்டியிருக்கிறார்.
இது குறித்து போலீஸில் புகார் செய்வ‌து வீண் என்றும், ஏற்கென‌வே சித்தூர்,காட்பாடி காவ‌ல் நிலை‌ய‌ங்க‌ளுக்கு ல‌ஞ்ச‌ம் கொடுத்து வைத்திருப்ப‌தாக‌வும் மிர‌ட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தாங்க‌ள் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கையெடுக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,
ப‌.ப‌ர‌சுராம‌ன்.