குடி குடியை கெடுக்குமா?குடியே அல்ல எந்த (நல்ல, கெட்ட) பழக்கமானாலும் குடியை நிச்சயமாக கெடுக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அப்படியிருக்க விஷமான மது குடியை கெடுக்காதா .. நிச்சயம் கெடுக்கும். கடந்த 8 மாதங்களாக நான் தினத்தந்தி நிருபராக வேலை செய்வதால் மதுவால் ஏற்பட்ட விபரீதங்கள் பலவற்றை செய்தியாக்கியுள்ளேன். மதுப் பழக்கம் ஒன்றே குடியை கெடுத்துவிடாது. அடிப்படைஒரு மனிதனின் அடிப்படை குணநலன் களே மதுப் பழக்கத்திற்கு பின்னும் தொடர்கின்றன. என் நண்பன் சத்தியாவும் லாலா பார்ட்டி தான் . ஆனால் இரவு 9.30 மணிக்கு மேல் அதுவும் ஒரு குவார்ட்டர் மட்டும் கடையில் ஊற்றிக்கொண்டு அடுத்ததை ஸ்டாக் வைத்துக் கொண்டு வீட்டுக்கு போய்விடுவான். இரவு 9.30க்கு முன் எக்காரணம் கொண்டும் லாலா ஜோலிக்கு போக மாட்டான். ஷங்கர் என் மற்றொரு நண்பன். இவன் அடிப்படையிலேயே டுபாக்கூர் பார்ட்டி. அந்த டுபாகூர் தனம் தான் குடிப் பழக்கத்திலும் வெளிப்படுகிறது. சம்பளப் பணத்தை முதல் நாளே வேட்டு விட்டு அடுத்த நாள் முதலே சத்தியாவிடம் எதை அடகு வைத்து பணம் வாங்கலாம் என்று திட்டமிடுவதே வேலையாக இருப்பான்.
அடிப்படையில் ஷங்கர் கஞ்சன். குடிப்பழக்கத்திலும் அந்த கஞ்சத்தனம் இருக்கவே இருக்கும். என்ன..ஒரு குவார்ட்டர் உள்ளே போய் விட்டால் அது தொடர்கதையாகி கஞ்சத்தனம் எல்லாம் காணாமல் போய்விடும்.கிராஃபிக் ரவி, என் சின்ன அண்ணனின் நண்பன். இன்று இரவாகி விட்டால் ஒரு குவார்ட்டர் உள்ளே போகாவிட்டால் வண்டி ஓடாது.
இரவு குவார்ட்டருக்கு ஸ்கெட்ச் போடும் முனைப்பில் 3 மாத வீட்டு வாடகை பாக்கி, வாடகை கட்ட முடியாது பூட்டிய கடையில் கிடக்கும் தன் சாமான் கள், நண்பர்கள் பரிதாப பட்டு கொடுத்த கடன் கள் எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. மற்றபடி இதர சமூக உணர்வுகள் எல்லாம் பத்திரமாகவே உள்ளன.
என் வயிற்றெரிச்சல் ஒன்றே..மதுவை அரசு விற்பது..அதிலும் இரசாயணத்தால் தயாரான மது..பால் சேகரிப்பு மையங்கள் போல் கள்ளச்சாராய சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்து பாக்கெட்டு போட்டு விற்றால் என்ன? வேண்டுமானால் சேர்க்கைகளுக்கு குவாலிட்டி கண்ட்ரோல் ஏற்பாடு செய்யலாமே..