Wednesday, October 31, 2007

பயணிகள் கவனிக்கவும்


ஒரு அன்பான கணவன்,மனைவி. அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை .கணவன் தன் ட்யூட்டி முடிந்த பிறகும் வேறு ஒருவன் ட்யூட்டிக்கு வராததால் அவனுக்கு பதில் அங்கு தொடர்கிறான். அப்போது குண்டு வெடித்து கணவன் சாகிறான். அவன் மனைவி விதவையாகிறாள். குழந்தை அனாதையாகிறது. விபத்தில் சிக்கியிருக்க வேண்டியவன் தன் காதலியுடன் சரசத்தில் இருக்கிறான். குற்ற உணர்ச்சியால் தவிக்கிறான்.


மனவியாதிக்குள்ளாகி,காதலியால் திரஸ்கரிக்கப் படுகிறான். உடல் ரீதியான விபத்திலிருந்து தப்பி,மன ரீதியில் நோய்வாய்ப் படும் இளைஞனுக்கும், அந்த விதவைக்கு காதல் ஏற்படுகிறது. அவள் கிறிஸ்தவ மதம். இவன் இந்து மதம். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது எந்த மதம் ? என்று கேள்வி எழுப்ப படுகிறது. இறுதியில் இளைஞன் காயடித்துக் கொள்கிறான். சுபம்.


பாலாவின் எழுத்துக்களில் நளினம்,பெண்மை மிளிரும். இதற்கு காரணம் பாலாவின் மனமே. அவர் மனம் ஹென் பெக்ட் மனம். அவர் அடிப்படையிலேயே ஹிப்பாக்ரட்,(தன் இருதார மணத்தை டிஃபெண்ட் செய்தல்) எஸ்கேப்பிஸ்ட் (குழந்தை பிறந்தால் என்ன மதம் என்பது பிரச்சினை ஆகும் என்பதால் ஹீரோவுக்கு காயடித்தல்),பூர்ஜுவா தனம் (பாலாவின் கதைகளில் எவனோ ஒரு வி.ஐ.பி குறித்த பிரஸ்தாபம் நிச்சயம் உண்டு. மேலும் பாலாவின் பாத்திரங்கல் எல்லாமே வி.ஐ.பி.க்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குபவர்களே. இதற்கும் பாலாவின் மனோதத்துவமே காரணம்.


உண்மையான காதல் பொக்லைன் மாதிரி அது தன‌க்கு நேரும் தடைகளை தகர்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கும். பாலா மாதிரி வெள்ளை சாம்பார்கள் தான் விதவை,வேறு மதத்தவள் என்றெல்லாம் யோசித்து காயடித்துக் கொள்ளும்.

ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்


என் வாழ்வில் மட்டுமா எல்லோர் வாழ்விலும் இப்படியா தெரியவில்லை. சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன.


1997 ல் லட்சத்து இரண்டாயிரம் வந்த போது 2 ரோல் படம் எடுத்தேன். அப்போதும் கேமரா இருந்தது. இப்போதும். ஆனால் அப்போது நான் பிரபல நடிகர்களின் நகலாக படமெடுத்துக் கொண்டேன்.


இப்போது எனக்கென்று இறைவன் அளித்த தகுதிகளை வெளிப்படுத்தும் வண்ணம் எடுத்து கொண்டேன். ஒரு ஜோதிடனாக,ஒரு நிருபனாக அடையாளம் காணும் வண்ணம் எடுத்து கொண்டேன். இது வளர்ச்சிதான் என்பது என் நம்பிக்கை


மேலும் இம்முறை நோ ப்ரிண்ட்ஸ். சி.டி.யில் பெற்றுக்கொண்டேன். அப்போதும் படங்களில் சுமாரானவற்றை பொறுக்கி லே அவுட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இப்போது கணிணி இருப்பதால் அது ஜுஜுபி.


நிறக நான் சொல்ல வந்தது வேறு.. ஒரிஜினலாக உள்ள பிரச்சினைகளை விட்டு மனைவி,மகளிடம் மாரடிப்பதிலேயே என் நல்ல நேரம் எல்லாம் காலியாவது வழக்கம். இம்முறை அதை தவிர்க்க வேண்டும்.தினத்தந்தியில் இருந்த படியே :


1.ஐ.பி.சி பதிவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.


2.ஜோதிடனாக பிரபலமாக வேண்டும்.(ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்)

3.டிஜிட்டல் போர்டு4.டிஜிட்டல் பேனர்5.வெப் சைட்டுக்கு விளம்பரம் (முடிந்தால் என்ன கட்டாய பேனல் விளம்பரம்)6.ஸ்டார்,டேக்ஸி,தனஞ்சயன்,பரசு பிரச்சினைகளை முடிக்க வேண்டும்.

Tuesday, October 30, 2007

பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும்


பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவுக்கு எதிர்வினை இந்த பதிவு என்று சொல்ல முடியா விட்டாலும் இதற்கான உந்துதல் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவு தான் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.


அரசியல்,சமூகம், வாழ்க்கை,மனிதர்கள் குறித்த மாறுபட்ட பார்வை,விமரிசனம்,கருத்து , கனவு கொண்டவர்களுக்குத் தான் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.


பாலகுமாரன் போன்றவர்கள் பத்திர எழுத்தர்கள் மாதிரி எழுத கற்றுக் கொண்டிருக்கலாம். என் போன்றவர்கள் எழுதும் நேக் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் பாலா போன்ற போலிகளுக்கு அரசியல் குறித்த விமரிசனமே கிடையாது.


கலைஞர் சிக்னலில் இவருக்கு கையசைத்தது தான் செய்தி. ஜெயலலிதா காவிரி தண்ணீர் கேட்டு காலை 10 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதமிருந்தால் இவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தி மாதிரி பழம் எடுத்துக் கொண்டு போய் பார்த்து வருவார்.(பாலாவுக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் வைத்தி தான்).


திராவிட பராம்பரியத்தை அவர் எழுத்துக்கள் தொட்டும் தொடாமலும் தான் சைடு வாங்கிக் கொண்டு பயணிக்கும். திராவிடம் தமிழுக்கு தலை வாழையிலை போட்டு இதர பார்ப்பனர்களை போன்ற ஆங்கில புலமை இல்லாத பாலாவின் பிழைப்புக்கு வழி செய்ததாலோ என்னவோ கடவுள் மறுப்புக்கு கூட வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க தயங்குவார்.


இனி பொருளாதாரம் என் கிறீர்களா? பாலாவுக்கு தெரிந்த பொருளாதாரத்தில் அவர் மனைவி மார்களுக்கான அட்டிகைகள்,புடவைகள் வீட்டு சமாச்சாரங்களை தவிர வேறு எதற்கும் இடம் கிடையாது.


உலக மயமாக்கம், தனியார் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,கன்ஸ்யூமரிசம்,மேற்கத்திய கலாச்சார படையெடுப்பு, புற்றீசலாய் பெருகி வரும் பன்னாட்டு கம்பெனிகள், தகவல் தொழில் நுட்ப புரட்சி,கல்வி,மருத்துவ வணிக மயமாக்கம் இவற்றின் காரணமாக சிறு தொழிலதிபர்கள்,குடிசைத் தொழில்கள், அரசு ,தனியார் ஊழியர்கள், தொழிலாளிகள் முக்கியமாய் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும் சுரண்டல்,இழி நிலைகள் பற்றி அவர் எழுத்துக்களில் எவ்வித பதிவும் இருக்காது.


பாலா என்பவர் அந்த காலத்து ஜோதிலட்சுமி மாதிரி ஒரு கவர்ச்சி பிம்பம். அந்த காலத்தில் ஜோதிலட்சுமியை பார்த்து மயங்காத இளைஞனே கிடையாது. அதற்காக வெட்கப்படவேண்டிய அவசியமும் கிடையாது.


பாலா போன்ற‌ புல்லுருவிக‌ளை அடையாள‌ம் க‌ண்டு த‌விர்க்கும‌த்த‌னை ஞான‌ம் தமிழ் படைப்புகளில் கொட்டிக் கிட‌ந்தாலும் அவை தேடிப் போக‌ வேண்டிய‌ புதைய‌ல்க‌ளாக‌வே உள்ள‌ன‌. பார்ப்போம் !


இதைப்ப‌டித்து சிரிக்க‌வும் ஒரு வெட்க‌ம் கெட்ட வழி தவறச் செய்யப்பட்ட கூட்ட‌ம் இருக்கிற‌து


அங்கே சிரிப்ப‌வ‌ர்க‌ள் சிரிக்க‌ட்டும் அது ஆண‌வ‌ச் சிரிப்பு


ந‌ல்ல‌ தீர்ப்பை உல‌க‌ம் கூறும் நாள் வ‌ரும்போது அன்று சிரிப்ப‌து யார் அழுவ‌து யார் தெரியும‌ப்போது









Monday, October 29, 2007

முன் கூட்டி பலன் தரும் கிரகங்கள்


2007 ஆகஸ்ட் 5ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்மத்திற்கு சனி மாறினார். அதற்கு 6 மாதங்கள் முன்பே சிம்ம சனி பலன் கள் ஆரம்பமாகிவிட்டிருக்கும். உ.ம் மகரத்துக்கு கடகம் 7 ஆமிடம் தான். ஆனால் 8 ஆமிடத்தில் என்ன பலன் கள் தரவேண்டுமோ அது ஃபிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியே துவங்கி விட்டிருக்கும்.


2007,அக்டோபர் 28 ஆம் தேதி(தெலுங்கு ஆந்திர பூமி பஞ்சாங்கப்படி) குரு விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு ராசி மாறுகிறார். ஆனால் 2 மாதங்கள் முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 28 முதலே தனுசு ராசியில் தான் இருந்தால் தர வேண்டிய பலன் களை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.


உம் சிம்மத்துக்கு விருச்சிகம் 4 ஆமிடம். இதனால் அக்டோபர் 28 வரை தாய்,வீடு,வாகனம்,கல்வி தொடர்பான தொல்லைகளை அனுபவிக்க வேண்டும்.ஆனால் இவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதலே ஓரளவு ரிலீஃப் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருக்கும். குரு 5 க்கு வந்தால் தரவேண்டிய பெயர்,புகழ்,பிள்ளைகளால் நன்மை போன்ற பலன் கள் ஆரம்பித்து விட்டிருக்கும்.


குரு பலம்:


குரு ப‌ல‌ம் வ‌ந்துவிட்ட‌தா என்று கேட்காத‌ ந‌ப‌ர்க‌ள் இல்லை. குரு ப‌ல‌ம் என்றால் என்ன‌? குரு உங்க‌ள் ராசிக்கு 2,5,7,9,11 ராசிக‌ளில் வ‌ருவ‌தையே குரு ப‌ல‌ம் வ‌ந்து விட்ட‌து என்று சொல்கிறோம்.


குரு ப‌ல‌த்தால் என்ன‌ ந‌ன்மை:


குரு வ‌யிறு,இத‌ய‌த்துக்கு அதிப‌தி. குரு அனுகூல‌ நிலையில் இருந்தால் ஜீர‌ண‌ ச‌க்தி அதிக‌ரிக்கும். இத‌ய‌ம் ந‌ன்றாக‌ வேலை செய்யும். இத‌னால் உட‌லின் எல்லா பாக‌த்துக்கும் ந‌ல்ல‌ ர‌த்த‌ம் கிடைக்கும்.(ஆக்ஸிஜ‌ன்). இத‌னால் உட‌ல் ந‌ல‌ம் ,ம‌ன‌ ந‌ல‌ம் பெருகும். நின‌வாற்ற‌ல் பெருகும். பாஸிடிவ் திங்கிங் வ‌ரும். தெய்வ‌ ந‌ம்பிக்கை,சாஸ்திர‌ ந‌ம்பிக்கை,பெரிய‌வ‌ர்க‌ளை ம‌தித்த‌ல் போன்ற‌ குண‌ங்க‌ள் வ‌ள‌ரும்.


குரு கோல்ட்,ஃபைனான்ஸ்,பாலிடிக்ஸ்,ம‌ஞ்ச‌ள் நிற‌ பொருட்க‌ள்,உய‌ர் குல‌த்த‌வ‌ர், முக்கிய‌மாக‌ பிராம‌ண‌ர்க‌ள்,திட்ட‌மிடுத‌ல்,தொலை நோக்கு இவ‌ற்றுக்கெல்லாம் அதிப‌தி. இவ‌ர் ஸ்வ‌ர்ண்காரகர்(தங்கம்),கங்கணகாரகர் (மனைவி,திருமணம்),புத்திர‌,ப‌வுத்திர‌ கார‌க‌ர்(பேர‌ன் க‌ள்), என‌வே இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் எல்லாம் உங்க‌ளுக்கு ந‌ன்மை ஏற்ப‌டும்.
(பின்னொரு நாள் தொட‌ரும்)









Sunday, October 28, 2007

"கிராஃபிக்" கதைகள்

இந்த கதைகள் 100 சதவீதம் கற்பனையே என்று சொல்ல மாட்டேன். ஆனால் சற்றே முன் பின்னாக நகர்த்தி சொன்னால் கற்பனை மாதிரி தான் இருக்கும். இந்த தொகுப்புக்கு கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்ட காரணம் ரவி. இவர் என் சின்ன அண்ணன் செல்வராஜின் நண்பர். ரவியின் அண்ணன் ப்ளாக் மேக்கர். ரவி கம்ப்யூட்டர் வந்த புதிதில் ஸ்க்ரீன் ப்ரிண்டிங்குக்கு மாறி கிராஃபிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கடை வைத்தார்.இதனால் ரவி பெயருடன் கிராஃபிக் ஒட்டிக் கொண்டது. ரவியால்,ரவிக்கு,ரவி நண்பர்களுக்கு நடந்த கதைகள் என்பதால் கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
முதல் கதை பரசுராமன் கதை:

ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர்,ஏஜ் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை சில சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன்.சம்பவங்கள் ஒரு சாக்கு மட்டுமே என்ன நீங்க ரெடியா?

பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல‌ .
சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன்.
சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேண்டுமானாலும் விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன்.
மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்து சாப்பிடுகின்றனர். பரசுவின் தாய்க்கு இரண்டு மகள்கள். ஒருவர் சாந்தி,மற்றவர் வஸந்தா. சாந்தியை காட்பாடியில் பஞ்சாயத்து துறை ஊழியரான‌ ராமலிங்கத்துக்கு கட்டி வைத்தார்.ராம லிங்கம் சம்பளம்,கிம்பளம் என்று விரைவிலேயே வசதியாகி விட்டார்.
பரசு கதையை மீண்டும் சொல்லத் தேவையில்லை.இருந்தும் இல்லாதது போலத்தான்.இந்நிலயில் பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார்.
பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ?
பேத்திகளை குழந்தையில்லாத ரா.லி கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ?சித்தூர் வீட்டை ரா.லிங்கத்தின் மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார்.பரசு ரா.லி. கஸ்டடியில் செட்டிலாகிவிட்டான்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒன் ஃபைன் மார்னிங்க தன் கால் புண்ணுக்கு கட்டுப் போட வேண்டும் என்று சொல்லி ரா.லி யிடம் பணம் வாங்கினான். நேராக தாலுக்காஃபீஸுக்கு போனான், பணம் கொடுத்தான். ரா.லி.யின் மேல் ஒரு புகார் எழுதி காட்பாடி காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டான் சித்தூர் வந்து விட்டான்.
வந்து கிராஃபிக் ரவியை சந்தித்தான்.கிராஃபிக் என்னை பரசுவுக்கு அறிமுகம் செய்தான்.

ப‌.ப‌ர‌சுராம‌ன்.

வேலூர்,28/10/2007.
விடுநர்
ப‌.பரசுராமன்,
எஃப்.51,ப்ரம்மானந்த மடம் தெரு,
4 ஆவது மெயின் ரோடு,
ஆர்.சி.புரம்,பெங்களூர் 21
பெருமதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு,
ஐயா! உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் சர்க்கரை வியாதியால் கண் போய்,கால் போய் மூன்று வயது வந்த பெண்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் வாழும் என்னை ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எல்லாவிதத்திலும் துன்புறுத்தி வருகிறார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாத ஏழ்மை நிலையில் நான் இருப்பதால் என் பிரச்சினையை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் அப்பா ப‌ச்சைய‌ப்ப‌ன். என் அம்மா த‌ஞ்ச‌ம்மாள் . என் அப்பா த‌ன் சொந்த‌ முய‌ற்சியில் ஆந்திர‌ மாநில‌ம்,சித்தூரி ஒரு வீடு வாங்கி என் அம்மாவின் பெய‌ரில் ப‌திவு செய்தார். நான் மேற்சொன்ன‌ அர‌சு அதிகாரி என் அம்மாவுக்கு சொந்த‌ த‌ம்பி. பெய‌ர் ராம‌ லிங்க‌ம். இவ‌ர் ஆற்காடு வ‌ட்ட‌ம்,திமிரிய‌ருகில் உள்ள‌ விளாப்பாக்க‌த்தில் ப‌ஞ்சாய்த்து துறையில் நிர்வாக‌ அதிகாரியாக‌ வேலை பார்த்து ச‌மீப‌த்தில் ஓய்வு பெற்றார்.
த‌ற்போது காட்பாடி,நியூ திருவ‌ல‌ம் ரோட்டில், க‌த‌வு எண் 3 ல் வ‌சிக்கிறார். இவ‌ர் என் அம்மா த‌ஞ்ச‌ம்மாளிட‌ம் என்னை ப‌ற்றி இல்லாத‌தும் பொல்லாத‌தும் கூறி,அவ‌ர் கேன்ஸ‌ரால் அவ‌தி ப‌ட்டுக் கொண்டு எதையும் சிந்திக்க‌க்கூட‌ முடியாத‌ நிலையில் இருந்த‌ போது த‌ன் ம‌னைவியின் பெய‌ருக்கு உயில் எழுதுவித்து ப‌திவும் செய்து கொண்டார்.வெறும் மூன்று மாதங்களில் என் அம்மா இறந்துவிட்டார். அவர் சாவில் கூட பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
இது குறித்து நானும்,உற‌வின‌ர்க‌ளும்,என் ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல‌ம் விரும்பிக‌ளும் எவ்வள‌வோ எடுத்துச் சொல்லியும் த‌ன் த‌வ‌றை திருத்திக் கொள்ள‌வில்லை. இந்த‌ நிலையில் 2005 மே மாத‌த்தில் ராம‌லிங்க‌த்தின் மேல் எண்ண‌ற்ற‌ புகார்கள் அவரது உய‌ர‌திகாரிக‌ளுக்கு சென்ற‌தில் நான் தான் அந்த‌ புகார்க‌ளை அனுப்பினேன் என்று த‌வ‌றாக‌ எண்ணி ப‌ய‌ந்து மேற்ப‌டி சித்தூர் வீட்டின் மூல‌ ப‌த்திர‌த்தையும் , இருப‌து ரூபாய் ஸ்டாம்பு தாளில் ஒரு ஹ‌க்கு விடுத‌லை ப‌த்திர‌த்தையும் கொடுத்துவிட்டார்.(அதுவும் ஜிராக்ஸ் பிர‌தி).
நானும் வீட்டை கைய‌க‌ப் ப‌டுத்திக் கொண்டு சித்தூர் டவுன் ,ச‌ர்ச் பின்னால் டீக்க‌டை ந‌ட‌த்தும் முத்து என்ப‌வ‌ருக்கு வாட‌கைக்கு விட்டேன். அந்த வாடகையில் தான் எனக்கு ஜீவனம் நடக்கிறது. இந்நிலையில் ராமலிங்கம் காட்பாடியிலிருந்து குவாலீஸ் காரில் சித்தூருக்கு அடியாட்க‌ளுட‌ன் வ‌ந்து அந்த‌ வீட்டை தான் விற்று விட்ட‌தாக‌வும், குடியிருக்கும் முத்து 10 நாட்க‌ளில் காலி செய்ய‌வேண்டும் என்றும் மிர‌ட்டியிருக்கிறார்.
இது குறித்து போலீஸில் புகார் செய்வ‌து வீண் என்றும், ஏற்கென‌வே சித்தூர்,காட்பாடி காவ‌ல் நிலை‌ய‌ங்க‌ளுக்கு ல‌ஞ்ச‌ம் கொடுத்து வைத்திருப்ப‌தாக‌வும் மிர‌ட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தாங்க‌ள் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கையெடுக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,
ப‌.ப‌ர‌சுராம‌ன்.

Saturday, October 27, 2007

வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

2008 ஏப்ரலில் வரும் உகாதிக்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்துவிடவேண்டும் என்பது காலஞான சாரம்.
இன்று முதல் ..உலக மக்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து காலை 6 மணிக்கு விழித்து, மாலை 6 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விட்டாலே பிரளயம் 5 வருடங்களுக்கு தள்ளிப்போய்விடும்.(முக்கியமாக நோ கேபிள் டிவி அண்ட் ஆல் தட்)
இதனால் 12 மணி நேர சுரண்டல் குறையும், விபத்துக்கள் குறையும், என் கவுண்டர்கள் குறையும், லாக்கப் மரணங்கள் குறையும், ஊழல் குறையும் புகை கக்கும் வாகனங்கள் வண்டிகள் ஓடாது,பொல்யூஷன் குறையும்,குடும்ப உறுப்பினர்களிடை உறவு பலப்படும். முக்கியமாக மனிதர்கள் மனங்களில் இன்னும் சில காலம் வாழலாம் என்ற எண்ணம் பலப்படும். இது ஒன்றே போதும் பிரளயத்தை தள்ளிப்போட‌

இன்று மனிதன் வாழும் வாழ்க்கை, இதை காட்டிலும் மரணமே மேல் என்ற எண்ணத்தை அவன் அடிமனதில் ஏற்படுத்தி வருகிறது. எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு. மக்களின் எண்ணங்க‌ளுக்கு விபரீதமான‌ சக்தி உண்டு.

அதிலும் அல் குரானில் இறைவன் " உங்களில் இருவர் எது கோரினாலும் உடனே நிறைவேறித் தருகிறோம் " என்று கூறியதில் எத்தனையோ ஆழ்ந்த ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன.

குறிப்பு:ஒரு காலத்தில் இவ்வுலகை ஆண்டவன் ஆண்டவனாக இருக்கலாம். இப்பொழுது வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

ஓஷோ சொல்லுவார் " ஒருவனுக்கு துன்பங்கள் நேரும்போது அவனில் கேள்விகள் எழுவதில்லை. இதமானவை நடக்கும்போது மட்டும் எண்ணற்ற கேள்விகள் எழுமாம்.
என் நிலைமயும் இப்படித்தானிருக்கிறது. என்னிடம் இல்லாதது பணம் மட்டும் தான். இந்த நாட்டையே, விட்டால் உலகத்தையே நிர்வகிக்கும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல,சக்தியும் எனக்குண்டு என்பது தான் ஆரம்பம் முதலே என் நம்பிக்கை.
ஜோதிடம்,ஆரூடமெல்லாம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதால் தான்ஜோதிட உலக‌த்தில் தொடர்ந்தேன்.
நாளை நடப்பதை ஆரே அறிவார் என்று கைகளை பிசையாது ஒருவாறு குண்ட்ஸாகவேனும் அறியும் வாய்ப்பு, ஜாதகத்தில் அடிப்படை பலம்,தர்கம்,சம்பிரதாய‌மான கல்வி,இவற்றோடு அளவற்ற சக்தியை தரும் நம்பிக்கை,
எல்லாவற்றுக்கும் மேலாக ராம நாம ஜபம், அது தந்த சாக்தேயம் எல்லாமாக சேர்ந்து நாளைய என் கனவுகளுக்கு ஒரு அடித்தளம் அமைந்து வருகிறது.
இது இதமாகவே இருந்தாலும் ஓஷோ சொன்னது போல் இந்த இதமே எண்ணற்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

இன்றைய நிலைப்படி பைப் லைனில் உள்ள ஆஃபர்ஸ் மட்டும் மெட்டீரியலைஸ் ஆனால் போதும் .. தாய் நாடு குறித்த என் கனவு நனவாகிறதோ இல்லையோ பிரபஞ்சத்தின் செவிகளுக்கு அஞ்சலாகிவிடும்.
இந்த பிறவிக்கு இது நடந்தாலே ய‌தேஷ்டம். பார்ப்போம்..

வெல்லுவது பிரபஞ்சத்தின் விதியோ ?அல்லது பிரபஞ்ச நலன் கருதி நான் செஇது வரும் சதியோ?
























ஜாதி இரண்டொழிய வேறில்லை

ஆம். உலகத்தில் இரண்டே மதம் ,இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. அவ்வையார் காலத்தில் இட்டார் பெரியோர் ,இடாதோர் இழிகுலத்தோர் என்று சொல்லி முடித்து விட்டார்.
ஆனால் இன்று இடுபவரில் அதிக சதவீதம் ஹிட்டென் அஜெண்டாவுடன் தான் இடுகிறார்கள். இது வேறு கதை.
இன்று இருப்பது இரண்டே ஜாதி,இரண்டே மதம் . ஒன்று சுரண்டுவோர், இரண்டு சுரண்டப்படுவோர். எவனொருவன் ஜாதி,மதம் என்று மக்களை பிரிக்கிறானோ அவன் சுரண்டலை மக்கள் கண்ணிலிருந்து மறைக்கும் அகில உலக சதிக்கு துணை போகிறான் என்றே சொல்லலாம்.

உலக மகா சுரண்டல் நிறுவனம் அமெரிக்கா:

நான் புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. நம் நாடு விவசாயத்தை சார்ந்து இருப்பது போல் அமெரிக்கா ஆயுத உற்பத்தி, கட்டுமானப் பணிகளை சார்ந்து இருக்கிற‌து. ஆயுத‌ விற்ப‌னை கூட‌ வேண்டும். அத‌ற்கு உல‌கில் யுத்த‌ நில‌வ‌ர‌ம் தொட‌ர‌ வேண்டும்.
சூடு குறைவ‌து போலிருந்தால் அன்று ஆப்கானிஸ்தான், நேற்று ஈராக், இன்று ஈரான் போன்று எதையோ ஒன்றை கிள‌ப்பி ஆயுத‌ம் விற்க‌ வேண்டும், விற்ற‌ ஆயுத‌ங்க‌ள்,குண்டுக‌ள் செல‌வ‌ழிய‌ வேண்டும், ஆர்ட‌ர் குவிய‌ வேண்டும்,யுத்த‌த்தால் நாச‌மான‌ நாட்டில் புன‌ர் நிர்மாண‌ ப‌ணிக‌ளுக்கான‌ காண்ட்ராக்டுக‌ள் கிடைக்க‌ வேண்டும்.
மேலும் யுத்த‌ம் என்ப‌து ஒரு டெமோ தான். வார் ரீல்(?) போட்டு விள‌ம்ப‌ர‌ம் செய்வ‌து போல் இவ‌ர்க‌ள் வார் ந‌ட‌த்தி த‌ம் உற்ப‌த்திக‌ளுக்கு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள்.

ப‌ன்னாட்டு க‌ம்பெனிக‌ள்,உள் நாட்டு க‌ம்பெனிக‌ள்,கோலா,க‌ல‌ர் டி.வி,ஜீன்ஸ்,செல் போன், எஃப்.எம் ரேடியோ, முத‌ல் மீடியா வ‌ரை எல்லாமே சுர‌ண்ட‌லைத்தான் செய்கின்ற‌ன‌.

ஒருகால‌த்தில் செய்தி,தொழில் நுட்ப‌ம் என்று நுண‌லாய் அர‌ற்றிய‌ எங்க‌ள் ச‌ந்திர‌பாபுவே ஏழை ஒரு நாளைக்கு 20 ரூ ச‌ம்பாதிப்ப‌து கூட‌ க‌ஷ்ட‌மாகிவிட்ட‌து என்று கூறுகிறார்.

ஏழ்மை எத்த‌னை கொடூர‌மான‌து என்ப‌து அதை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்குத்தான் தெரியும். இந்தியாவில் உள்ள‌ 99.99 ச‌த‌வீத‌ பிர‌ச்சினைக‌ளுக்கு கார‌ண‌ம் ஏழ்மைதான். ஏழ்மைக்கு கார‌ண‌ம் சுர‌ண்ட‌ல். சுர‌ண்ட‌லுக்கெதிராக‌ ம‌க்க‌ளை பொங்கி எழாது த‌டுக்கும் முய‌ற்சி தான் ஜாதி,ம‌த‌ வேறுபாடுக‌ளை வ‌ள‌ர்ப்ப‌து.

எங்கே உர‌க்க‌ ஒரு த‌ர‌ம் சொல்லுங்க‌ள்..இருப்ப‌து இர‌ண்டே ஜாதி,இர‌ண்டே ம‌த‌ம்.

சுர‌ண்டுவோர்,சுர‌ண்ட‌ப்ப‌டுவோர்.

ஜாதி என்றும் ம‌த‌ம் என்றும் ம‌க்க‌ளை பிரிக்க‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ச‌திகார‌ர்க‌ள். ச‌தி(ம‌னைவி) ச‌மேத‌மாய், பிள்ளை குட்டிக‌ளுட‌ன்,ப‌ந்து மித்திர‌ர்க‌ளுட‌ன் நாச‌மாகி வ‌ருவ‌து க‌ண் முன் ந‌ட‌ந்து கொண்டுதானிருக்கிற‌து.

கார‌ண‌ம்:
சுர‌ண்ட‌ப் ப‌ட்ட‌வ‌ன் அதை நினைத்து நினைத்து "ஹூம்" என்று பெருமூச்சு விடுகிறான். அது மூலாதார‌த்தில் உள்ள‌ குண்ட‌லியை எழுப்புகிற‌து. இத‌னால் அவ‌னுக்கு வாக்கு ப‌லித‌ம் ஏற்ப‌டுகிற‌து. ஹூம் என்ப‌து ச‌ண்டி பீஜ‌ம். ச‌ண்டி மாதா இந்த‌ சோதாக்க‌ளை ஒழித்துக் க‌ட்டுவ‌து ந‌ட‌ந்து கொண்டேதானிருக்கிற‌து.
































Friday, October 26, 2007

எத்தனை பெரிய மனிதருக்கு..

எத்தனை பெரிய மனிதருக்கு..எத்தனை சிறிய மனமிருக்கு என்பது பாடல் வரி மட்டுமல்ல என் அனுபவம் கூட . எங்கள் ஊரில் எவர் எப்படி என்பதே தெரியாது கருவூல அதிகாரியான என் தந்தையின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டவன் நான். (1967 முதல் 1987 வரை)

அதற்கு பிறகுதான் என் எதிர்நீச்சலே ஆரம்பமானது. எங்கள் தொகுதியில் பலமான 2 வர்கங்கள் உள்ளன இதில் ஒன்று சி.கே.பாபு தலைமயிலான காங்கிரஸ் வர்கம். இவர்களோடு எனக்கு எவ்வித தொடர்பும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை.
அங்கிருந்து விலகி வந்தவர்களுடன் பழகியிருக்கிறேனே தவிர அங்கு இருப்பவர்களுடன் பழகியதில்லை.
அடுத்த வர்கம் தெலுகு தேசத்தை சேர்ந்த நாயுடுக்களின் வர்கம். (இதில் 2 உப ஜாதி ஒன்று கம்மா அடுத்தது பலிஜா.) இந்த வர்கத்திற்கு ஒரே தலைவன் என்றெல்லாம் கிடையாது. ஆதிகேசவுலு லட்சுமி புத்திரர். வாரியிறைப்பார். அவர் நேரில் ஆஜராகி விட்டால் அவர்தான் தலைவர். சந்திரபாபு வந்து விட்டால் பாபு தலைவர்.

பப்ளிக்கில் இமேஜ் என்னவென்றால் சி.கே. அதிரடியான ஆள், நாயுடுக்கள் பயந்த‌ சுபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தே. உண்மையில் நெருங்கிப் ப‌ழ‌கிய‌தில் நான் உண‌ர்ந்து கொண்ட‌து என்ன‌வென்றால், சி.கே.பாபு ம‌ட்டும் இல்லையென்றால் இவ‌ர்க‌ளுக்கு மிஞ்சிய‌ குண்டாஸ் கிடையாது.

அதிலும் தெலுகு தேச‌த்தில் ஒரு திடீர் த‌லைவ‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சொன்னால் நீங்க‌ள் வாயால் சிரிக்க‌ மாட்டீர்க‌ள்.








Wednesday, October 24, 2007

மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை

ஸ்ரீ ராமா !

உன் கருணை எல்லையற்றது என்பதற்கு என்னைக் காட்டிலும் வேறு ஆதாரம் தேவையா?

என்னை பார்த்ததும் 50 வயது பெண் கூட மாராப்பு சரி செய்து கொள்ளும் ஹீன நிலையில் இருந்த என்னை 14 வயது பெண் கூட ஒரு தந்தையிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நம்பி சொல்லும் நிலைக்கு கொண்டு வந்தது உன் கருணைதானே..

அந்த‌ நாட்க‌ளை நின‌த்தால் இன்றும் உன் மீதான என் ப‌க்தி இரு ம‌ட‌ங்காகிற‌து. ய‌த் பாவ‌ம் த‌த் ப‌வ‌தி என்ப‌து போல் என்னையே ஒரு ராம‌னாக‌ மாற்றிய‌து உன் நாம‌ம் தானே..

ஒரு நாலணா இனிப்பு கிடைத்தாலும் க‌ழிவ‌றையிலேனும் ர‌க‌சியமாக‌ நானே உண்ண‌ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வ‌ந்த‌ சுய‌ ந‌ல‌ பிசாசு நான். வ‌ருட‌ம் இரு முறை ர‌த்த‌ தான‌ம் செய்தாலும் வேறென்னென்ன‌ தான‌ம் செய்ய‌ முடியும் என்று ப‌ர‌ப‌ர‌க்க‌ வைத்த‌து உன் நாம‌ம் தானே..

யான் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம் என்று உன் நாம‌ ம‌கிமையை சொல்ல‌ப் போன‌ போதெல்லாம் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சினைக‌ளை முன்னிலைப் ப‌டுத்தி பேச‌ , அட‌டே இவ்வுல‌க‌ வாழ்வின் பிர‌ச்சினைக‌ளை ஓரளவேனும் தீர்த்தால‌ன்றி இவ‌ர்க‌ளுக்கு ஆன்மீக‌ம் போதிக்க‌ முடியாது என்ற‌ சிந்த‌னையை த‌ந்த‌தும் உன் நாம‌ம் தானே

என் நாட்டில் மீண்டும் உன் ராஜ்ஜிய‌த்தை ஸ்தாபிக்க‌ ஒரு திட்ட‌ம் தீட்ட‌ வைத்த‌தும் உன் நாம‌ம் தானே.. அதை அல‌ட்சிய‌ப்ப‌டுத்திய‌ அதிகாரிக‌ளுட‌னும்,அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌னும் மோதும் தெம்பை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

பிற‌ப்பாலும்,வ‌ள‌ர்ப்பாலும், வ‌டிக‌ட்டிய‌ கோழையான‌ என்னை நாடே..உல‌க‌மே போற்றிப் புக‌ழ்ந்த‌ ஒரு மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

ராமா..ஸ்ரீ ராமா.. இதோ இன்று அவரை மிக நெருக்கத்தில் சந்திக்கப் போகிறேன்..ஒரு நிருபனாக..

உன் நாமம் ஜபித்ததால் உன் பெயர் கொண்ட கயவரும்,கசடரும்,கழிசடைகளும் கூட எனக்கு துணை நின்ற சந்தர்ப்பங்கள் ஆயிரம்..

இதோ இவர் பெயரிலும் உன் பெயர் இருக்கிறது.. நீ ராம "சந்திர" மூர்த்தி.இவர் "சந்திர" பாபு. எப்படியாவது ஆட்சிக் கட்டிலிலேற வேண்டும் என்பது இவர் கோரிக்கை. எப்படியாவது இந்தியாவின் வறுமையை விரட்டி , ராம ராஜ்ஜியத்தை அதாவது உன் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்பது என் கோரிக்கை.

பார்ப்போம் ..உன் மனமெப்படியோ? இந்த தினமெப்படியோ?
























தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:www.higopi.com


இவர் பெயர் கோபி.நான் வலதளம் மூலமாக , தமிழில் எதையேனும் சாதிக்க முடிந்தால் இவருக்கு எங்கள் பேட்டையில் சின்னதாக சிலை வைக்க உத்தேசம். இவர்தான் கீழ்காணும் வலை தளத்தில் ஃபோனட்டிக் டமில் தட்டச்ச வகை செய்துள்ளார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:

செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு



ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி ராமாயண நாயகன் ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பொருத்தவரை அவர் ஒரு காவிய நாயகன் மட்டுமே. இந்நிலையில் ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழும்?
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.


*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள். சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.


பீஜம் என்பது என்ன?


மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.


ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.


எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் குண்ட‌லி ச‌க்க‌ர‌ம் விழிப்ப‌டைகிற‌து. பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் யோக‌ ச‌க்தி மேல் நோக்கி சீறிப் பாயும்.

குண்ட‌லி விழிப்ப‌டைந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்?
(இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கி,முக்கி தட்டச்ச வேண்டிய நிலை. விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது )


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.


குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும்
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(இது மட்டும் அனுபவமாகவில்லை/இடையில் தான் மேற்சொன்ன தடை)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.























எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்


கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் 16 ப‌டியுங்க‌ள்.

எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்

கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் ப‌டியுங்க‌ள்.

Tuesday, October 23, 2007

9. சுக்கிரன்

9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

8. கேது

8. கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். (தொடரும்)

7. புதன்

7. புதன்
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.(தொடரும்)

5. குரு

5. குரு
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே! உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.(தொடரும்)

6. சனி

6. சனி
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
(தொடரும்)

4. ராகு

4. ராகு
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும். சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள். இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.பரிகாரங்கள் :1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
(தொடரும்)

3. செவ்வாய்

3. செவ்வாய்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். பரிகாரங்கள்1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.(தொடரும்)

2.சந்திரன்

2. சந்திரன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே அதிபதி.நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.(தொடரும்)

1. சூரியன்

1. சூரியன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க2. காயத்ரி மந்திரம் படிக்கவும்3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும். 6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

(தொடரும்)

nilacharal 0

நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம். ஒன்று, எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது. இரண்டு, குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது. மூன்று, தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).1. தேவதைகளுக்கு யாகங்கள்யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி. லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்! செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.
2. கிரகத்தலங்களைத் தரிசிப்பதுமனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?
3. தானம் வழங்குதல்நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்! விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன. இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது. நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும். நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும். ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து "நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.
(தொடரும்)

Monday, October 22, 2007

"அம்ருதா" சங்கர்

இந்த வலைப்பூவில் உபயோகித்துள்ள ஓவியங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த
"அம்ருதா" சங்கர்

அவர்கள் வரைந்தவையாகும். தமிழ்நாடு,குடியாத்தத்தை விட்டு சித்தூர் வந்து என் போன்ற ரசிகர்களின் வெகுநாளைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய சங்கர் அவர்களை அறிமுகம் செய்யச் சொல்லி நான் கேட்காத நண்பர்களே இல்லை.

பின் ஒரு நாள் என் ஓவியனும், நண்பனுமான புஷ்பா அறிமுகம் செய்வித்தான். இன்று அவர் ஓவியங்களை என் வலைப்பூவில் அவர் அனுமதியுடன் உபயோகிக்க முடிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.


அவர் ஓவியங்களைப் பற்றி என் கருத்து..அது எதுக்கு விடுங்க ! நீங்களே பார்க்கப் போறீங்கல்ல !






இறக்கை முளைக்கிறது

ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது தேகம் பறக்கிறது
இது வைரமுத்துவின் பாடல் வரி.இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு இதமாகத்தான் இருக்கிறது. நான் எதையும் சாதிக்க முடியாது போனதற்கு காரணம் தொடர்ந்த மணி ஃப்ளோ இல்லாதது தான். யானை வாங்கிவிடுமத்தனை பணம் வரும், அங்குசம் வாங்குவதற்குள் யானையை அடகு வைத்திருப்பேன்.
இந்த முறை நவராத்திரிகளும் நவமாய்(புதிதாய்) இருந்தன. அவ்வப்போது என் மனமலர் கருகி தீயும் சம்பவங்களுக்கு குறைவில்லை என்றாலும் இதம் தான். காரணம் தொடர்ந்த மணி ஃப்ளோ. இது ஆத்தாளின் கருணைதான் என்று நான் நம்புகிறேன். ஜாதகம்,ராசிப் படி பார்த்தால் இந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக வாய்ப்பே இல்லை.
ஆன்மீகத்தில் ஒரு விதி உள்ளது. முதலிரண்டு பிறவிகள் சிவ‌னாரையும்,ராமனையும் தியானித்து வந்தாலன்றி சக்தியை உபாசிக்கும் தகுதி வராதாம். அதென்னவோ என்வாழ்வில் எல்லாமே டைம் டேபுள் போட்டு நடக்கின்றன. முதலில் சிவனார்,பின் ராமன் ஜஸ்ட் 7 வருடங்களுக்கு முன்புதான் சக்தி.
நிற்க இந்த நினைவுகள் உக்கிரமாய் வர காரணம் மேற்சொன்ன மணி ஃப்ளோதான்.
விஜய தசமி. கி.பி.2000 டிசம்பர் 23 ஆம் தேதி ஹ்ரீங்கார பீஜ ஜபம் முதலான முதல் விஜயதசமிக்கே கண்டதையும் கற்பனை செய்து கனவு கண்டு நிராசைக்குள்ளானேன் என்பது உண்மைதான்.
ஆனால்ஒரு மந்திரத்தையோ,பீஜத்தையோ லட்சம் முறை ஜபித்தாலன்றி சித்தி ஏற்படாதாம். சித்தி என்றால் அதை உச்சரிக்கும் தகுதி. மேலும் மனம் ஒன்றி சொன்னது மட்டுமே கணக்கிலாயி. இப்படியாக அட்சர லட்சம் பூர்த்தியாக 7 வருடங்களானது போலும். ஆனால் ட்ரெயினிங்க் எஸ்.ஐ க்கும் சில அதிகாரங்கள் இருப்பது போல் அந்த காலகட்டத்திலேயே பல அற்புதங்கள் நிகழ்ந்ததை மறுக்க முடியாது. இந்த விஜய தசமி வருவதற்குள் சித்திரை முதல் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய திருப்புமுனைகள்.
1.ஏப்ரலில் தினத் தந்தி நிருபனாக வாய்ப்பு.
2.சேர்ந்த 3 மாதங்களுக்கு பிறகு ரூ.3000 பேசிக் ப்ளஸ் லைன் அக்கவுண்டு
3.நிலாசாரலில் பரிகாரம் தொடர்
4.ஜோதிட பூமியில் தொடர்
5.ரூ.5,000 வரை ரோலிங்க்
6.நூறு,இரு நூறு கேட்டால் (கடனாக) கிடைக்கும் நிலை.
7.யு.எஸ்.ஏ வில் இருந்து க்ளையண்டு ரூ.3000 டி.டி.
8.மும்பை க்ளையண்டு ரூ.200/-
9.பைப் லைனில் இன்னொரு க்ளையண்டு/ ப்ளஸ் 15 ப‌வுண்டு செக்
10.சைக்கிள்,டெஸ்க்,பல சரக்கு,கடனில்லாத நிலை

இது எல்லாமே ஆத்தாளின் பீஜ ஜபத்தால் கிடைத்த அருள் என்றே நம்புகிறேன்.

Thursday, October 18, 2007

உள்ளதை சொல்லுகிறேன்


இந்தியா சுதந்திரம் பெற்று 60 வருடங்களை எட்டியிருப்பதை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். இந்த 60 ல் ஒரு பகீர் உண்மை பொதிந்திருக்கிறது.


நம் முன்னோர்கள் காலசக்கரத்தின் ஓட்டத்தை உன்னிப்பாக கவனித்து 60 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வட்டம் பூர்த்தியாகி மீண்டும் ஒரு சுற்று ஆரம்பமாவதை கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் தமிழில் 60 தமிழ் வருடங்களின் பலன் களை பாடல்களாக இயற்றி வைத்துள்ளனர். 60 வருடங்கள் முடிந்து 61 ஆவது வருடம் வ‌ரும்போது மீண்டும் முத‌ல் வ‌ருட‌ ப‌ல‌னே ந‌ட‌க்கும் என்ப‌து அனுப‌வ‌ம்.


ஆக‌ இந்தியா சுத‌ந்திர‌ம் பெற்ற‌போது இருந்த‌ அதே நிலை மீண்டும் தோன்ற‌லாம். அதாவ‌து அண்டை தேச‌த்துட‌ன் ச‌ண்டை,ம‌த‌க் க‌ல‌வ‌ர‌ம் முத‌லான‌வை ந‌ட‌க்க‌லாம் என்ப‌து என் ஊக‌ம்.













Monday, October 15, 2007

ஹைகோர்ட்டில் ஒரு ரிட்.

வர வர கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் குறைஞ்சிகிட்டே வருது. லக்னத்துக்கு 2 ஆவது இடத்துல இருக்கிற சனி,கேது எஃபெக்டா? அல்லது ஓரளவு தன வரவு வந்துட்டதால இந்த நிலமையா? புரியலை.(தனம் ,வாக்கு இரண்டையும் காட்டுவது ஜாதகத்தில் உள்ள 2 ஆவது பாவம் தான்)
எது எப்படி இருந்தாலும் லட்சியத்தை கைவிடறதா இல்லை. இந்த அளவுக்கு பொருளாதார பலம் வர்ரதுக்கு கூட என் லட்சியந்தான் காரணங்க‌றது என் கருத்து.மனிதப் பிறவி ஈனப்பிறவி. இன்னொரு பிறவிங்க‌றது ஏற்படக்கூடாது. சுய நலத்தோட எந்த வேலை செய்தாலும் கர்மம் வரும். கர்மத்தை தொலைக்க ஜன்மம் எடுக்கனும் . அதனால தான் சுய நலத்தை புறந்தள்ளி வறுமைக்கோட்டுக்கு கீழ வாழும் 40 சில்லறை கோடி மக்களுக்காக வேலை செய்துகிட்டிருக்கேன்.
என் வாழ்க்கையில எத்தனையோ அரை குறை வேலைகள் செய்திருக்கேன். தொடர்ந்து செய்துகிட்டு வர்ரது இந்தியாவை பணக்கார நாடாக்குறதுக்கு நான் போட்ட திட்டத்தை பிரச்சாரம் பண்ற வேலையை தான்.
இதனால் நிறையவே பணம் செலவாகியிருக்கலாம். டைம் வேஸ்ட் ஆகியிருக்கலாம். ஆனல் இந்த திட்டம் தொடர்பான வேலைகளால் எனக்குள் ஒருவித டிவைன் பவர் ஏற்பட்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஜனாதிபதி ஜன நாயகத்தை அமல் செய்தல்,10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்தல்,கூட்டுறவு பண்ணை விவசாயம்,தற்போதைய கரன்ஸியை ரத்து செய்து புதிய கரன்ஸியை அறிமுகம் செஇதல் ,விளை நிலங்க‌ளை விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்க‌ளுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல்,ந‌திகளை இணைத்தல் இதெல்லாம் நடக்குமோ ,ந‌டக்காதோ ? எப்போ நடக்குமோ டோன்ட் கேர்!ஸ்ரீ பிரம்மங்காரு சொன்னாப்பல 2008 யுகாதிக்குள் உலகில் 7ல் 6 பாகம் அழிந்து 1 பாகம் மட்டுமே மிச்சமாகுமோஅல்லது அவர் சொன்ன எதிர்கால கணிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் தவறிருந்து பிரளயமே தள்ளிப் போகுமோ அதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்.
என் நாடு நானிருக்கையில்,அதுவும் உயிரோடு, சிந்திக்கும் நிலையில் இருக்கும்போது வறுமையில் வாடக் கூடாது. என் முன் அரங்கேறிவரும் பசி,சுரண்டல் தொடரக் கூடாது. இதற்கு நான் ஏதேனும் செய்தாக வேண்டும். என்னதான் என்னில் பெண்மை மிளிர்ந்தாலும்,மென்மை உணர்வுகள் இருந்தாலும் நான் அலியல்லன். என ஆதர்ஸ புருஷர் என்.டி. ஆர். சொன்ன " சமுதாயமே தேவாலயம், ஏழை மக்களே என தெய்வங்கள் " என்ற கோஷத்தை முழுமையாக ஏற்றுதான் செயல்பட்டு வருகிறேன்.
என் வரையில் நான் சுகித்திருக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. அந்த சுகம் நிலைக்காது. பசியாலோ,சுரண்டலாலோ பாதிக்கப் பட்ட எவனோ ஒரு கோபக்கார பையன் என் வீட்டில் கொள்ளையடிக்க வரலாம். என்னையும், என் குடும்பத்தையும் கோடரியால் வெட்டிப் போடலாம்.
என் வறுமை ஒழிய வேண்டுமானால், நான் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இந்த நாட்டிலிருந்தே, இந்த உலகத்திலிருந்தே வறுமை,பசி,சுரண்டல் விரட்டப்பட வேண்டும். அதை செய்யாத வரை செல்வம் சுகத்தை தராது. இப்போதைய செல்வந்தருக்கும் நான் கூறுவது இதைத்தான்.அரசாங்க‌த்தின் நிர்வாக சீர்கேடுகள் ,சமுதாய‌ சீரழிவுகள்,ஏற்றத்தாழ்வுகள்,யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் பாதிக்கலாம்.
மு.க.முத்து,சஞய்தத் இப்படி எத்தனையோ உதாரணங்க‌ள் சொல்லலாம்.
நான் சொல்லும் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அமல் படுத்தி இந்தியா பணக்கார நாடாகிவிட்டால் போதாது. பக்கத்து நாடான பாக்கிஸ்தானும் மாற வேண்டும். பாக் மட்டும் மாறினால் போதாது ,அதை தூண்டி விடும் அமெரிக்காவும் மாறவேண்டும். உலகின் எந்த மூலையிலும் வறுமை இருக்க கூடாது. ஒரே ஒரு நாட்டில் வறுமை விடுபட்டுப் போனாலும் அது உலகெங்கும் பரவுவதற்கு ரொம்ப காலம் பிடிக்காது.1984 இண்டர் பரீட்சை முடிந்து லீவு விடப்பட்ட நாட்கள் முதல் 1985 வருடம் முழுக்க என் மூளையை ஆக்கிரமித்திருந்தது செக்ஸ் ..செக்ஸ்..செக்ஸ். அதை வெல்ல நான் செய்த முயற்சி தான் ஆஞனேயர் வழிபாடு. அவரை குஷிப் படுத்த ஆரம்பித்தது தான் ராம நாம ஜபம். அந்த ஜபம் தான் ராம ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க ஒரு திட்டம் தீட்ட வைத்தது என்று நம்புகிறேன்.
ஒரு பிறவி முழுக்க நமசிவாய என்று ஜபித்திருந்தால் மட்டுமே ராம நாமம் சொல்லும் வாய்ப்பு/தகுதி ஏற்படுமாம். மறுபடி ஒரு பிறவி முழுக்க ராம நாமம் ஜபித்தாலன்றி அம்மனை வழிபட வழி பிறக்காதாம்.
1986ல் ராம நாமம் ஜபிக்க ஆரம்பித்தேன். 1989 வரை செக்ஸை கட்டுப் படுத்தி விட முடியும் என்று முட்டாள்தனமாக நம்பினேன்,முயன்றேன்.ஆனால் ஓஷோவின் நூல்களை படிக்கும் முன்பே செக்ஸ் மீதான தர்காதீதமான நாட்டத்தை அளவான இடைவெளியுடன் கூடிய சம்போகத்தால் தான் கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்த முடியும் என்று முடிவு செய்து "சம்" பூர்ணா என்ற ஏழைப் பெண்ணை காதலித்தேன். ("சம்" என்பது சரஸ்வதி பீஜம் சரஸ்வதி குரு கிரகத்துக்குரிய தேவதை, குரு என் ஜாதகத்தில் உச்சம்.)அவள் காதலால் செக்ஸ் என்பது வெல்ல முடியாத ஒன்றல்ல என்று தெரிந்து,புரிந்து,தெளிந்து கடிமணம் புரிந்தேன்.
ஊழ்வினயாலும்,பெரியவர்கள் சதியாலும் காதல் பிரிக்கப்பட்டது. 1989 ஜனவரியில் ருக்கலாம் . ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்தேன். அவர் பெயர் ராமசாமி. அவர் எஙள் பெயரை வைத்தே சொல்லிவிட்டார். ஒரு நாள்,ஒரு வாரம் மிஞ்சிப் போனால் ஒரு வருடம் தான் சேர்ந்து வாழ்வீர்கள் என்று.அதற்குப் பிறகுதான் எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் பிறந்தது. என் ஜாதகத்தில் சூரிய,சந்திரர்கள் பக்கத்து,பக்கத்து ராசிகளில் இருப்பதையும்,அது சிவசக்தி யோகம் என்பதையும் அறிந்து நமசிவாய ஜபிக்க ஆரம்பித்தேன். சிவ,பார்வதி டாலரை அணிந்தேன், அதையே என் லோகோவாகவும் சில காலம் உபயோகித்தேன்.(முதலில் ராம நாமம்,பிறகு நமசிவாய ) 2000 வருடம் டிசம்பர் மாதம் தான் புவனேஸ்வரி அம்மனின் பீஜம் உபதேசமாயிற்று.
இதையெல்லாம் சொல்வது என் வாழ்வை திரும்பி பார்த்து ,சரி பார்த்துக் கொள்ளவே. இதே பீஜத்தை 2000க்கு முன்பிலிருந்தே ஜபித்து வரும் நண்பர்கள் பலர் அப்படியேதானிருக்கிறார்கள். லட்சியம், மந்திரம்,பூஜை,ஜபம் எதுவுமே பூரண பலன் தர வேண்டுமானால் ஸின்ஸியாரிட்டி தான் முக்கியம். அது என்னில் இருக்கிறது.
அதுவே என்னை ஒரு ம்க்கள் தலைவனாக,பசி சுரண்டலுக்கு எதிரான புரட்சிக்கு வித்தாக மாற்றியிருக்கிறது என்று நம்புகிறேன். இதை ஒரு நாளும் கை விடேன். இந்தியாவிலிருந்து வறுமை,பசி,சுரண்டலை விரட்டுவேன். கு.ப. அதற்காக போராடுவேன். இதுவே என் மந்திரம், இதுவே என் பலம்.
இந்த பலம் தான் எஙள் மானில முதல்வருடனேயே மோத வைத்தது. இப்போதை முதல்வருடனும் மோதும் உத்தேசமிருக்கிறது. ஆனால் இம்முறை 90 களிலான சத்திய ஆவேசத்துடன் மட்டுமல்லாது கிரிமினல் தனமாக ப்ளான் செய்து வெடிக்க செய்து வேடிக்கைப் பார்க்க உள்ளேன். குறைந்த பட்சம் ஒரு புக்லெட் ,அதை தலைமை செயலகத்திலேயே டிஸ்ட் ரிப்யூட் செய்ய வேண்டும். அல்லது ஹைகோர்ட்டில் ஒரு ரிட். பார்ப்போம்!
வாக்கு ஸ்தானத்தில் உள்ள சனி,கேதுவை மீறி இந்த வலைப்பூவை பதிவு செய்ய முடிந்ததே என் லட்சியம் தந்த பலத்தால்தான். இதில் எனக்கு சந்தேகமில்லை

Sunday, October 14, 2007

க‌ள்ள‌ச்சாராய‌ சேக‌ரிப்பு மைய‌ங்க‌ள் ஏற்பாடு செய்து

குடி குடியை கெடுக்குமா?குடியே அல்ல எந்த (நல்ல, கெட்ட) பழக்கமானாலும் குடியை நிச்சயமாக கெடுக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அப்படியிருக்க விஷமான மது குடியை கெடுக்காதா .. நிச்சயம் கெடுக்கும். கடந்த 8 மாதங்களாக நான் தினத்தந்தி நிருபராக வேலை செய்வதால் மதுவால் ஏற்பட்ட விபரீதங்கள் பலவற்றை செய்தியாக்கியுள்ளேன். மதுப் பழக்கம் ஒன்றே குடியை கெடுத்துவிடாது. அடிப்படைஒரு மனிதனின் அடிப்படை குணநலன் களே மதுப் பழக்கத்திற்கு பின்னும் தொடர்கின்றன. என் நண்பன் சத்தியாவும் லாலா பார்ட்டி தான் . ஆனால் இர‌வு 9.30 ம‌ணிக்கு மேல் அதுவும் ஒரு குவார்ட்ட‌ர் ம‌ட்டும் க‌டையில் ஊற்றிக்கொண்டு அடுத்த‌தை ஸ்டாக் வைத்துக் கொண்டு வீட்டுக்கு போய்விடுவான். இர‌வு 9.30க்கு முன் எக்கார‌ண‌ம் கொண்டும் லாலா ஜோலிக்கு போக‌ மாட்டான். ஷ‌ங்க‌ர் என் ம‌ற்றொரு ந‌ண்ப‌ன். இவ‌ன் அடிப்ப‌டையிலேயே டுபாக்கூர் பார்ட்டி. அந்த‌ டுபாகூர் த‌ன‌ம் தான் குடிப் ப‌ழ‌க்க‌த்திலும் வெளிப்ப‌டுகிற‌து. ச‌ம்ப‌ள‌ப் ப‌ண‌த்தை முத‌ல் நாளே வேட்டு விட்டு அடுத்த‌ நாள் முத‌லே ச‌த்தியாவிட‌ம் எதை அட‌கு வைத்து ப‌ண‌ம் வாங்க‌லாம் என்று திட்ட‌மிடுவ‌தே வேலையாக‌ இருப்பான்.
அடிப்ப‌டையில் ஷ‌ங்க‌ர் க‌ஞ்ச‌ன். குடிப்ப‌ழ‌க்க‌த்திலும் அந்த‌ க‌ஞ்ச‌த்த‌ன‌ம் இருக்க‌வே இருக்கும். என்ன‌..ஒரு குவார்ட்ட‌ர் உள்ளே போய் விட்டால் அது தொட‌ர்க‌தையாகி க‌ஞ்ச‌த்த‌ன‌ம் எல்லாம் காணாம‌ல் போய்விடும்.கிராஃபிக் ர‌வி, என் சின்ன‌ அண்ண‌னின் ந‌ண்ப‌ன். இன்று இரவாகி விட்டால் ஒரு குவார்ட்ட‌ர் உள்ளே போகாவிட்டால் வ‌ண்டி ஓடாது.
இர‌வு குவார்ட்ட‌ருக்கு ஸ்கெட்ச் போடும் முனைப்பில் 3 மாத‌ வீட்டு வாட‌கை பாக்கி, வாட‌கை க‌ட்ட‌ முடியாது பூட்டிய‌ க‌டையில் கிட‌க்கும் த‌ன் சாமான் க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ரிதாப‌ ப‌ட்டு கொடுத்த‌ க‌ட‌ன் க‌ள் எதுவுமே நினைவுக்கு வ‌ருவ‌தில்லை. ம‌ற்ற‌ப‌டி இத‌ர‌ ச‌மூக‌ உண‌ர்வுக‌ள் எல்லாம் ப‌த்திர‌மாக‌வே உள்ள‌ன‌.
என் வ‌யிற்றெரிச்ச‌ல் ஒன்றே..ம‌துவை அர‌சு விற்ப‌து..அதிலும் இர‌சாய‌ண‌த்தால் த‌யாரான‌ ம‌து..பால் சேக‌ரிப்பு மைய‌ங்க‌ள் போல் க‌ள்ள‌ச்சாராய‌ சேக‌ரிப்பு மைய‌ங்க‌ள் ஏற்பாடு செய்து பாக்கெட்டு போட்டு விற்றால் என்ன‌? வேண்டுமானால் சேர்க்கைக‌ளுக்கு குவாலிட்டி க‌ண்ட்ரோல் ஏற்பாடு செய்ய‌லாமே..























Tuesday, October 9, 2007

ஆசிரிய‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள்:

சமுதாயத்தில் சிலர் சில காரணத்தால் பொருளாதார ரீதியில் நாசமாகிறார்கள். நான் நாசமானதற்கு காரணம் மட்டும் தமிழ் பத்திரிக்கை ஆசிரியன் கள் தான். அதிலும் பாக்யா பத்திரிக்கை தான் என்றால் அது மிகையில்லை. வெறுமனே பாக்யராஜின் சினிமா புகழை முதலீடாக வைத்து நடந்த பாக்யா இதழில் என் கதைகள் வரிசையாக 5 வரை பிரசுரமானதும் என் சிந்தனைப் போக்கே மாறிவிட்டது. நான் எழுதியவை மேம்போக்கான கதைகள் என்று அறிவேன். எனவே தவறுதலாக கிடைத்துவிட்ட அங்கீகாரத்துக்கு உண்மையாக உழைக்க முடிவு செய்து உழைத்தது தான் தவறாகி விட்டது.

இந்த உழைப்பு கவிதாசரணில் படைத்தவன் கிடைத்தான் என்ற சிறுகதை எழுதும் அளவுக்கு போய்விட்டது. மாவட்ட கருவூல அதிகாரியான என் தந்தை நிழலிலேயே வாழ்ந்து விட்டிருந்தால் இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டேன். சமுதாயத்தை திருத்துவது என் வேலையில்லை என்று சுஜாதாவைப் போல் எழுதியிருந்தால் பையும்,வயிறுமாவது நிரம்பியிருக்கும்.
கலை மக்களுக்காக. மக்கள் பணத்தில் வளரும் கலை மக்கள் நலம் நாடவேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டதால் என் எழுத்துக்கள் பிரசுரத்துக்கான தகுதியை இழந்துவிட்டன. மேலும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு இலக்கிய கர்த்தாக்கள் தம் கதைகளில் சித்தரித்த காதல்கள்,காதலியர் எல்லாம் அவரவர் சித்த பிரமைகள் என்ற தெளிவு ஏற்பட என் மனைவி அயராது உழைத்ததில் எப்படியோ போயிருக்க வேண்டிய என் வாழ்வு * ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 த்தில் வ‌ந்து நின்ற‌து. அத‌ற்காக‌ உத‌வாக்க‌ரை முத‌ல்வ‌ர்க‌ள்,பிர‌த‌ம‌ர்க‌ள்,நீதிப‌திக‌ளுக்கு கூரிய‌ர் மூல‌ம் அந்த‌ திட்ட‌த்தை அனுப்பியே முழுக்க‌ முழுக்க‌ திவாலானேன். ஜோதிட‌த்தொழில் மூல‌ம் வ‌ரும் வ‌ருமான‌த்தை ஏழை ம‌க்க‌ள் என் திட்ட‌ம் நிறைவேற‌ கொடுக்கும் நிதியாக‌ க‌ருதி செல‌வ‌ழித்தேன். இன்றும் செல‌வ‌ழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல் ம‌ற்றொருவ‌ர் இந்த‌ பாவிக‌ளால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வ‌ந்து விட‌க் கூடாது என்று தான் இந்த‌ வ‌லைப் பூவை எழுதுகிறேன்.

ஆசிரிய‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள்:

பீடிக் க‌ட்டுக‌ள் மேல் ம‌ண்டையோடு சிம்ப‌ல் போடாவிட்டால் குடி முழுகி விடாது. த‌ய‌வு செய்து உங்க‌ள் லோகோ மீது இதில் உள்ளவை எங்குமில்லை , இது எங்க‌ள் பிழைப்பு. இதில் உள்ளவற்றை நம்பிவிடாதீர்கள், ப‌டித்ததும் ம‌ற‌ந்து விடுங்க‌ள் என்று ஒரு வ‌ரி பிர‌சுரியுங்க‌ள். புண்ணிய‌மாக‌ப் போகும்.














Monday, October 8, 2007

பெண்ணுடைய டச்

ஓரு ஆணோ பெண்ணோ அவங்கள் குறைபட்டவங்க தான்(ஆணில் பெண்மை குறைவு,பெண்ணில் ஆண்மை குறைவு) இதை இட்டு நிரப்பத்தான் காதலிக்கிறாங்க..அம்மா ஒரு பெண், மகன் ஆண். ஆண் பிறந்த உடனே பெண்ணுடைய டச் கிடைக்குது, எனவே எல்லா சுரப்பிகளும் தூண்டப்பட்டு பலசாலி ஆயிடறான், பெண்ணுக்கு இந்த அவகாசம் இல்லே..எனவே அவள் பலவீனமாவே வளர்ரா, உடல் ரீதியான பலவீனம் மூளை ரீதியான பலத்தை கொடுத்துருது. அதனால ரொம்பவே உஷாரா இருப்பாங்க..அதே சமயம் இதுக்கு பலவீனம் தர்ர பயமும் ஒரு காரணம். காதல்ல முதிர்ச்சியுள்ள ஆண் தந்தையாகிறான்,பெண் மகளாகிறாள். முதிர்ச்சியில்லாத ஆண் மகனாகிறான், காதலி தாயாகிறாள். உங்க விஷயத்துல என் அட்வைசு தாய் சொல்லை தட்டாதீர்கள்..

துலாம், கடகம் புரியாத‌ புதிரா?

துலாம்:
துலா லக்னம் ராசிச்சக்கரத்தில் 7 ஆவது என்பதால் இவர்கள் வாழ்வில் முக்கியத் திருப்பங்கள் நண்பர்,காதலி,பங்குதாரர்,மனைவி மூலமாகவே ஏற்படும். இவர்கள் வாழ்வு அதீத ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். பிறரின் திறமைகளை,அடையாளம் கண்டு கொள்ளும் இவர்கள் தங்கள் நிறை,குறைகளை அறிந்து கொள்ள முடியாது தவிப்பர். மன சஞ்சலமும் அதிகம். யார் பக்கம் சாய்வதென்பதில் குழப்பம் தொடரும். விரோதிகள் குடும்பத்தில் பெண்ணெடுப்பதோ, அல்லது பெண்ணெடுத்த வீட்டில் விரோதம் ஏற்படுவது சிலர் வாழ்வில் நடை பெறலாம்.

கடகம்:
ராசிக‌ளில் சுவார‌ஸ்ய‌மான‌ ராசி க‌ட‌க‌ம் தான். இவ‌ர்க‌ள் பிறருக்கு புரியாத‌ புதிராக‌ இருப்ப‌ர். எளிதில் கோப‌ம்,விரைவில் ச‌மாதானம் (தண்ணீரைப் போல்),சீத‌ள‌ ச‌ம்ப‌ந்த‌ தொல்லைக‌ள்,மேலுக்கு ஆர‌வார‌ம்,அமைதியின்மையிருந்தாலும் உள்ளூர‌ ஒரு வித‌ அமைதி இருக்கும்.(க‌ட‌லைப் போல‌), வாழ்வில் தொட‌ர்பில்லாத‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்தாலும் இறுதி ல‌ட்சிய‌த்தை அடைந்தே தீருவ‌ர்.(ஆற்றைப் போல‌), எதிராளியின் உற்சாக‌மோ,க‌வ‌லையோ,விரோத‌ பாவ‌மோ விரைவில் இவ‌ர்க‌ளுக்கு தொற்றிக் கொள்ளும்.(க‌ண்ணாடியைப் போல‌). எப்போதும் ஒரு வித‌ அப‌த்திர‌பாவ‌த்துட‌னிருப்ப‌ர்,. அதே நேர‌ம் பிர‌ச்சினை என்று வ‌ந்துவிட்டால் அதிர‌டி மோத‌ல் தான். மோதும் த‌ருண‌ம் வ‌ரும் வ‌ரை சின்ன‌ விஷ‌ய‌மாக‌ இருந்தாலும் க‌ப்ப‌ல் க‌விழ்ந்த‌தைப் போல் க‌வ‌லைப் ப‌டுவ‌ர். இர‌ண்டே நாட்க‌ளில் 20 வ‌ருட‌ங்க‌ளுக்கும் தீராத‌ பிர‌ச்சினையை உண்டு ப‌ண்ணிக் கொள்ளும் இவ‌ர்க‌ள், 20 வ‌ருட‌ பிர‌ச்சினையை 2 நாட்க‌ளில் தீர்த்துவிடும் ச‌க்தியையும் பெற்றிருப்ப‌ர். அதிப‌தியான‌ ச‌ந்திர‌ன் வ‌ள‌ர் பிறை,தேய்பிறை என்று இருப்ப‌து போல் இவ‌ர்க‌ளும் 15 நாட்க‌ள் உற்சாக‌ம்,15 நாட்க‌ள் உற்சாக‌ குறைவோடு இருப்பார்க‌ள். ச‌ந்திர‌ன் சூரிய‌ன் ஒளியைப் பெற்று பிர‌காசிப்ப‌து போல் ஒரு ஆத‌ர்ஸ‌ புருஷ‌ர்,ஒரு ரோல் மாட‌லை நித‌ம் நின‌த்து த‌ம்மைத் தாம் வ‌ள‌ர்த்துக் கொள்வ‌ர்.






ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?




ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?ஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவில் சுண்டல் மாதிரி ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.

நான் கூரியரில் சொன்ன ஜோதிடம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர " பால ஜோதிஷ்ய,வ்ருத்த வைத்ய்" என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.

சந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை. இன்று என் கணிப்பு நிஜமாகிவிட்டதை யார் மறுக்க முடியும்.

ஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்ப‌ண‌ம் செல‌வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அழுத‌ பிள்ளைக்கு வா.ப‌ழ‌ம் (கெட்ட‌ வார்த்தை இல்லிங்க‌) கொடுத்த‌து போல் பேசினார்க‌ள். எல்லாத்த‌யும் எழுதி கொடுங்க‌ அம்மா கூப்பிடுவாங்க‌..சால்வை போடுவாங்க‌,ப‌ண‌ம் கொடுப்ப‌ங்க‌ என்றெல்லாம் சொன்னார்க‌ள். அம்மா த‌லையில் துண்டு தான் போட்டார்க‌ள். ச‌ரி ஒழிய‌ட்டும்..

இனி அம்மா எதிர்கால‌ம் எப்ப‌டி? :

அம்மா ஜாத‌க‌ம்:மிதுன‌ ல‌க்கினம் , மக நட்சத்திரம்,சிம்ம ராசி,இர‌ண்டில் ச‌னி,மூன்றில் ச‌ந்திர‌ன்,செவ்வாய்,5ல் கேது, 7ல்குரு,9ல்சூரியன்,புதன், பத்தில் சுக்கிர‌ன்,பதினொன்றில் ராகு.

முத‌லில் ந‌ட‌ந்த‌ க‌தை

த‌ன‌,வாக்கு,குடும்ப‌ நேத்திர‌ ஸ்தான‌த்தில் ல‌க்ன‌த்துக்கு 8,9க்கு அதிப‌தியான‌ ச‌னி இருப்ப‌தால் குடும்ப‌ம் என்ப‌து ப‌ணால் ஆகிவிட்டது அதே நேரம் விபரீத தன யோகமும் ஏற்பட்டது. வேலைக்கார‌ ப‌ட்டாள‌ம் ஒன்றும் உட‌னிருக்கிற‌து.(வேலைக்கார‌ர்க‌ளுக்கு ச‌னி கார‌க‌ன்).வாக்கும் அவ்வ‌ப்போது எல்லை மீறிவிடுகிற‌து..(நான் பாப்ப்பாத்தி தான் )

சோத‌ர‌,தைரிய‌ ஸ்தான‌மான‌ மூன்றில், வாக்கு ஸ்தானாதிபதியான ச‌ந்திர‌ன் இருந்து கொண்டு அவ்வ‌ப்போது தைரிய‌ம், அவ்வ‌ப்போது கோழைத்த‌ன‌த்தை கொடுக்கிறார். உட‌ன் பிற‌வா ச‌கோதிரியான‌ ச‌சிக‌லாவுட‌னான‌ தொட‌ர்பும் ஏற்ற‌ இறக்க‌த்துட‌ன் தான் தொட‌ர்கிற‌து.செவ்வாய் 6,11 க்கு அதிப‌தி ,ச‌ந்திர‌ன் 2க்கு அதிப‌தி. இவ‌ர்க‌ளின் சேர்க்கை கார‌ண‌மாக‌வே அம்மையார் நுண‌லும் த‌ன் வாயால் கெடும் என்று பேசிவிடுகிறார். எதிரிகளை வலிய தேடிக் கொள்கிறார்.

5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது. தனித்து நின்ற குருவால் தான் குருவின் வாகனமான யானைகள் விஷயத்திலும் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது

லக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.

ஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் கேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.

ஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்?11ல் உள்ள‌ ராகு ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌வ‌ர்க‌ளின் உற‌வை த‌ருகிறார். லாபத்தையும், 5ல் உள்ள கேதுவை தான் பார்ப்பதால் அவப்பெயர் அவமானங்களையும் தருகிறார்.

ராகு தசையில் சுக்கிர புக்தி

அம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. 1994/8/21 அன்று துவ‌ங்கிய‌. ராகு தசையி‌ன் முத‌ல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்ட‌து. 6,11 க்கு அதிப‌தியான‌ செவ்வாயின் வீட்டில் ராகு (11ல்) நின்றுள்ளார். முத‌ல் 9 வ‌ருட‌ங்க‌ள் ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுத்துவிட்ட‌ ராகு த‌ன் இர‌ண்டாம் பாதியில் எந்த‌ அள‌வு ப‌ல‌ன் கொடுப்பார் என்ப‌து ஆராய்ச்சிக்குரிய‌ கேள்வியாகும்.. சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது. அம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,
மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. எனவேதான் அடித்து சொல்கிறேன்.

2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும். கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனிந்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.

கோச்சார‌ப்ப‌டி

சிம்ம‌த்துக்கு 4ல் உள்ள‌ குரு கொடைக்கான‌ல் குடைச்ச‌லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜ‌ன்ம‌த்தில் வ‌ந்த‌ ச‌னி அங்குள்ள‌ கேதுவுட‌ன் சேர்ந்து மூன்றாவ‌து அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 ந‌வ‌ம்ப‌ர் 11 க்கு 5ல் வ‌ர‌விருக்கும் குரு ஜ‌ன்ம‌ ச‌னி,ஜ‌ன்ம‌ கேதுவை மீறி என்ன‌ செய்துவிட‌ முடியும்.அம்மையாருக்கு இப்போதுள்ள‌ ஒரே ஆறுத‌ல் மிதுன‌த்தில் ஸ்த‌ம்பித்துள்ள‌ செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிட‌ம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ர‌ல் வ‌ரை த‌ங்குகிறார்) ராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான்.

எது எப்ப‌டியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கும் என‌து ஆய்வு தொட‌ரை ப‌டித்து உரிய‌ ப‌ரிகார‌ங்க‌ள் செய்து கொண்டால், என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 அம‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்தால் நாட்டில் உள்ள‌ 40 கோடி ஏழைம‌க்க‌ள், 10 கோடி வேலை‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள், 70 கோடி விவ‌சாயிக‌ள் அம்மையாரை பிர‌த‌ம‌ராக‌வே ஆக்கிவிடுவார்க‌ள் என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை. ஜோதிட‌ப்ப‌டி ச‌னி எந்த‌ ராசியில் இருந்தாலும் 4 ராசியின‌ருக்கு அனுகூல‌ ப‌ல‌ன் க‌ளை த‌ருவார். அம்மையார் என் திட்ட‌த்துக்கு குர‌ல் கொடுத்தால் ஜ‌ன‌த்தொகையில் 12ல் 4 பாக‌ம் ம‌க்க‌ளின் கிர‌க‌ப‌ல‌ன் க‌ள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி

Sunday, October 7, 2007

வைரமுத்து கவியரசா? கவி சிப்பாயா?

அழுது கொண்டும்,மூக்கை சிந்திக் கொண்டும் சாதாரண வரிகளை எழுதி அந்த சந்தர்ப்பங்களை போட்ட கோலம் என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுக் கொள்ளும் வைரமுத்துவை கவியரசு என்று விமர்ஸ‌கர்கள் ஒப்புக்கொண்டு விட்டதாகவே தெரிகிறது.

தயிர் வடை சாப்பிட்ட படி தெலுங்கு திரைப் பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி எழுதிய இரண்டே வரிகளை கீழே தருகிறேன் (பொருளையும் தான்) இதையும் படித்து விட்டு முடிவு செய்யுங்கள். வைரமுத்து கவியரசா? கவி சிப்பாயா? என்று.

"மாட்டலகே அந்தனி மனஸு
சூப்புலதோ தெலுசுகோ
ரெப்பவலே காஸுகோ"

தந்தை தன் கண்ணில்லாத மகளுக்கு திருமணம் நடத்தி மாப்பிள்ளையுடன் வழியனுப்பும்போது மாப்பிள்ளைக்கு கூறுவது போல் வரும் வரிகள் இவை.

இதற்கான பொருள்:

வார்த்தைகளுக்கே எட்டாத மனதை பார்வைகளால் புரிந்துக்கொள்
இமை போல் காத்திரு
இப்போது முடிவு செய்யுங்கள் ..வைரமுத்து அரசா? சிப்பாயா?

இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு

இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு அதன் கீழே இரண்டுவரி தான் எழுத வேண்டுமாம் .அறிவுஜீவி சுஜாதா சொல்லி விட்டார். கதை,கட்டுரை எழுதுபவர்கள் எல்லாம் புறக்கணிக்கப் படுவார்களாம். இன்னாடா தமாஸுன்னா அதே குங்குமத்துல சுஜாதா சாரும் ஒரு கதை எழுதியிருக்கார்.

இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு


இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு அதன் கீழே இரண்டுவரி தான் எழுத வேண்டுமாம் .அறிவுஜீவி சுஜாதா சொல்லி விட்டார். கதை,கட்டுரை எழுதுபவர்கள் எல்லாம் புறக்கணிக்கப் படுவார்களாம். இன்னாடா தமாஸுன்னா அதே குங்குமத்துல சுஜாதா சாரும் ஒரு கதை எழுதியிருக்கார்.

என் திட்டம் என் முயற்சிகள் (ஆங்கில வடிவம்)


I am working hard to make India rich and to free it from the hunger and exploitation. For this . I had drafted a fine plan to link Indian rivers with a special army formed with 10 core unemployed youth in India. And I am struggling with the state and central governments for the communication and implementation of the plan.

In my struggle I was to face lot of bitter experiences. With my own experience , I strongly allege that all the mail ids of the present MPs are bogus/null and void. Why because I had personally derived their ids from the Government of .India portal (www.nic.in) and sent mail to every body. But no mail was properly delivered. Every mail was returned with a note *Unknown user
my plan:
I had named my plan operation India 2000. In 11th of June 1998 itself I had sent 200 printed copies of the plan to the Loksabha speaker and requested him to arrange for the distribution of the same to MPs.

In beginning there was no response from Delhi. After the initiation taken by our MP Sri.N.Ramakrishna Reddy they wrote me a letter denying the delivery of plan copies.

Even though our MP was interested office of the Loksabha had denied the receipt of the plan. I had sent them the proof of delivery. Then they wrote me that they couldn't trace the parcel in their office. They had requested me to send a fresh copy and they would make many copies and disburse them to the MPs. I had sent on the same day. But they hadn't done it even on this day.

I had communicated this plan to our chief ministers office also. (From November of 97). But no response in spite of 1000s of reminders. According to the information act I had approached the District Information officer, State information officer with in the prescribed interval . But there was no information. On 10th of July I had approached the information commission. Then I was to knock the doors of central information commission . But they have wrote me that as the jurisdiction of the state and central governments are the same ,they couldn’t do any thing.

The main points of above said plan:

1. Implementing presidential form of govt.

2. Appointing a special army with 10 core unemployed youth.

3. Handing over the project of linking Indian rivers to them.

4. Abolishing present currency and introducing new one.

5. Undertaking all the agricultural lands after paying compensation in shape of bonds payable in double after five years.

6. Implementing co-operative farming.

1. Implementing presidential form of govt.

By this chief executive of the country will behaving power to implement the next coming points. There will be stability.

2. Appointing a special army with 10 cores unemployed youth.

By this all the unemployed will be given chance to contribute to the national income and have a share(precipitate income)

3. Handing over the project of linking Indian rivers to them.

The north part of the nation is suffering with floods and south part of the nation is suffering with drought. Linking all Indian rivers is the only solution. Anyhow the Indian economy is depended on agriculture. Irrigation is a fundamental need for successful agriculture.

If this project is handed to any pvt construction company it will take minimum 100 years. If it is handed to the special military formed with the 10crore unemployed youth it can be completed with in 5years.

4. Abolishing present currency and introducing new one

The black money prevailing in the Indian market is the only cause for hike in prices, falling govts etc. there is no other measure to root out the black money.

5. Undertaking all the agricultural lands for lease to the co-operative society of the farmers (National wide)

Factors of productions are four. Land, labor, capital, and organization. In India there are two classes one is ruling and another is ruled. The 3factors of production ( land, capital and organization are in the hands of ruled class. only the labor is in the hands of ruled class. In this condition at least the land can be plucked by the government from the hands of ruling class. To avoid violence the government can give it for lease to the co-operative society of the farmers.

6. Implementing co-operative farming

.By this the returns from the lands will go to the members and every member will work hard for the good result. Large scale production will be possible.

My trails to communicate this to the Indian government:

On 11-6-98 I had sent 200 copies of the plan to the loksabha speaker and requested to distribute the MPs.First they denied the receipt then asked for fresh copy. I had sent but in vain. Finally I had sentRs.50/- through a postal order towards postage to return the plan copies. It was delivered. But still the plan copies are pending in the office of the speaker, Loksabha.

Bitter experience with the office of the CM of Andhra Pradesh:

From November of 1997 I am sending the copies of my plan. On 22nd of April 2002 I had sent mo for Rs.10towards postage to respond on my plan. It was delivered. I had complained to the CLP leader DR.YS (he is the present cm).

I think he had influenced the pahee. On 3rd ofAugest 2002 the Deputy Secretary to cm had sent me a note to send my proposals to place the same before thecm. I had sent. But no response in spite of many reminders. I had field a petition before the district consumer's forum in chittoor. By knowing this through dailies the deputy secretary of cm had wrote me and promised for the appropriate usage of my plan. When my mo was delivered and cm office hadn't responded I had wrote to the clip leader (Present cm) the office of the clip leader had responded in favour.Even though the regime of chandrababu was over the same officials are continuing in pahee. They are plan fully doing their best to hide my letters from the eyes of the cm.

Hunger strike for 10 days:

Only to communicate the problem to the cm I had sat on hunger strike from 2nd of October 2004. Media had covered well the issue. Revenue report gone. Police report gone. Intelligence report gone .The sp had conveyed regrets on the negligence of the cm pashee and promised me that he will take this to the notice of the cm. But invain. Responding to my emails the cm pashee sent a mail and instructed me to contact the collector. I had contacted. But in spite of many reminders there was no response.

Padhayathra to the capital:

Due to this I had announced a padhayathra to the state capital to meet the cm on 8th of April 2005.. But the leaders of BC, SC, Vaddara, Madhiga sangams had rendered unconditional support to my plan operation India 2000 and requested me to go by bus if I do so they will also accompany me. So that I had dropped and planning for a bus yathra to the state capital. If my plan comes out. India will be prosperous and will come out from the worldwide trap of USA.

Information Act:
I had tried with the help of Information Act also. But to my surprise all the district, state information officer hadn’t responded. I had complained to the state information commission also. But no response.I had appealed to the Central information commission also. But they told that the jurisdiction of the state and central commissions are the same and they cannot do justice.

Writ in Supreme court:

I am planning to file a writ at supreme court to order the speaker to distribute the copies of my plan to the MPs. For this I have to enclose an income certificate. I am struggling to get it from the local Tahasildar.