அண்ணே வணக்கம்ணே,
இலவச ஜோதிட ஆலோசனையா ? அட்றா சக்கை அட்றா சக்கைனு ஸ்க்ரால் பண்ணிராதிங்க..
இன்று முதல் நம்ம கவிதை 07 ல சுகுமார்ஜி பக்கங்கள் துவங்குது. அட யாரு இந்த சுகுமார்ஜி ? வசிஷ்டர் கையால பிரம்மரிஷியான்னெல்லாம் மேம்போக்கா கமெண்ட் போடாம நோண்டி நுங்கெடுங்க. நான் தான் மறுமொழிக்கு மறுமொழி போடறதில்லையே தவிர ( ஆனால் படிச்சுர்ரேங்கண்ணா. இதானே சீக்ரட் ஆஃப் நம்ம எனர்ஜி) சுகுமார்ஜி நிச்சயமா பதில் கொடுப்பார். புது பார்ட்டிங்கண்ணா பார்த்துப்போட்டுக்கங்க
என்னடா முருகேசன் ஜோதிட மார்க்கெட் சரிஞ்சு போச்சா ..இலவசத்துக்கு இறங்கிட்டாருனு நினைச்சுராதிங்கண்ணா. ஜில்லாக்கொருத்தரு " இந்த பிக்காலிக்கு ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி 15 நாளாகுது இன்னம் ஒரு .......ரு பதிலும் காணோம்னு கருவிக்கிட்டிருக்காய்ங்க.
இந்த இலவச அறிவிப்புக்கு என்னடா காரணம்னா ஜோதிஷத்துக்கு காரகரான புதன் தான் நம்ம வீக்கஸ்ட் ப்ளானட். மேலும் நமக்கு அன்னதாதாவா இருக்கிற எல்லா மோட்ஸுக்கும் ( சொந்த பத்திரிக்கை, ப்ளாகு, ஜோதிஷம், ஊர் பஞ்சாயத்து) இவர் தான் காரகர். இவரை ஓவரா எக்ஸ்ப்ளாயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். மேற்படி புத காரகத்வ மேட்டர்ஸ்ல காசா கொட்டுதுன்னு சொல்ல முடியாட்டாலும் ஃப்ளோ தொடருது.
புதன் எங்கனா கோவிச்சுக்கிட்டு சொல்ல முடியாத இடத்துல எங்கனா பிரச்சினையை ஏற்படுத்திட்டா என்ன பண்றதுன்னும் ஒரு உதறல். இதுவல்லாது புதனுக்குரிய கடவுளான கிருஷ்ணரை வேற கலாய்ச்சிக்கிட்டிருக்கன் . ஒன்னு கிடக்க ஒன்னாயிருச்சுன்னா வேட்டிதான் கட்டவேண்டி வரும்.
நம்ம ராசியான சிம்மத்துக்கு வாக்குஸ்தானத்துல சனி வேற இருக்காரு. சனி ஏழைகளுக்கு காரகத்வம் வகிக்கிறவரு. அல்லாருக்கும் ரூ.250 செலவழிச்சு
சோசியம் பார்த்துக்கற வசதி இருக்காது.
ஒரு வேளை அவிகளுக்கு வேண்டப்பட்டவுக யாருக்காவது சிவியர் ப்ராப்ளம்ஸ் இருக்கலாம். அவிகளுக்காக இவிக செலவழிக்கிற சக்தி இல்லாம இருக்கலாம்.
மேலும் பெண்களை 9 வகையா பிரிச்சு தொடர்பதிவெல்லாம் வேற போட்டு உசுப்பேத்தி விட்டிருக்கேன். லவர்/உட்பி/மனைவி விஷயத்துல லீடிங் ப்ளேனட் எதுன்னு தெரிஞ்சாதான் அந்த பதிவு உபயோகப்படும். என்னதான் 1008 ரூல்ஸ் கொடுத்திருந்தாலும் ஜட்ஜ் பண்ணனுமே.
சந்தோஷத்துல உள்ள போதுதான் அடுத்தவுகளை சந்தோஷப்படுத்தனும்ங்கற எண்ணம் வரும். நான் சந்தோஷமா இருக்கேன். அதனால அடுத்தவுகளை சந்தோஷப்படுத்தனும் ஒரு எண்ணம்.
இலவச ஜோதிட ஆலோசனை பெற நீங்க என்ன பண்ணனும்னா :
உங்க கம்ப்யூட்டர் ஜாதக நகலை ஜெராக்ஸ் எடுத்து உங்க எதிர்காலம் பத்தின ஒரே ஒரு கேள்வியை ( துணைக்கேள்விகளுக்கு அனுமதி உண்டு - உம்: வேலை மேட்டர் கேட்கறிங்கன் வைங்க எப்போ,எங்கே,என்ன மாதிரி வேலைன்னும் கேட்கலாம்) எழுதி ரிப்ளை கவரோட என் விலாசத்துக்கு அனுப்புங்க.
கவருக்கு அஞ்சு ரூபா ஸ்டாம்ப் ஒட்டனும்ங்கண்ணா . ( கூரியர்ல அனுப்பாதிங்க. தாளி அவனுங்க நோகாம ஃபோனை போட்டு. பொறுக்கினு போடான்னிர்ரானுவ - இந்த ம .....த்துக்கு அவிகளுக்கு ஏன் செலவழிக்கிறிங்க) கம்ப்யூட்டர் ஜாதகம்னு புஸ்தவம்லாம் அனுப்பாதிங்க. நமக்கு தேவை முதம் 3 பக்கம் தான்.
கவருக்குள்ளாற வைக்கிற ரிப்ளை கவருக்கும் அஞ்சு ரூ ஸ்டாம்ப் ஒட்டுங்க. அந்த கவர் மேல உங்க விலாசத்தை விவரமா எழுதுங்க. ( பலான பஸ் ஏறி பலான இடத்துல இறங்கி விவரம்லாம் வேணாம் - சொம்மா ஜோக்கு)
இந்த மேட்டர்ல தயவு செய்து ஃபோன் எல்லாம் பேசாதிங்க. இன்னைய தேதிக்கே நம்ம ஃபோன் காலை 9 டு ஃபைவ் ஈவ்னிங் 6 டு 9 தான் ஆன்ல இருக்கும். நீங்க லொள்ளு பண்ணா நெம்பர் மாத்திருவன் சொல்ட்டேன் (இப்பல்லாம் டீ கொடுத்து சிம் கொடுக்கறாய்ங்க தெரியுமில்லை.
உங்க கேள்வி எனக்கு கிடைச்ச 7 நாளைக்குள்ள நிச்சயமா பதில் தரேன்.
என் விலாசம்:
சித்தூர்.எஸ்.முருகேசன்
17-201, கும்மர வீதி,
சித்தூர் (ஆ.பி) 517001
கட்டணத்துடன் கூடிய ஜோதிட ஆலோசனை குறித்த விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க
ஆமாங்கண்ணா சந்தோஷத்துல இருக்கேன்னேன். அது என்ன சந்தோசம்னு நாலு வரி சொல்லவா?
15 மாசத்துல ரெண்டு லட்சத்து 15 ஆயிரம் ஹிட்ஸ் நிச்சயமா வெற்றிதான் . இன்டர் நெட்ல லட்சத்து பதினாறு கவர்ச்சிகள் இருக்கிறச்ச வெறுமனே சத்தியத்தை நம்பி, பை.காரத்தனமா , சில நேரங்கள்ள ஒப்பனை கூட இல்லாம எழுதற விஷயங்களை இத்தனை பேரு ( தாட்டி) படிச்சிர்க்காய்ங்கண்ணா வெற்றியில்லாம வேறென்ன?
பலான ஜோக்ஸ், கில்மா, அஜால் குஜால், ஆப்பரேஷன் இந்தியா 2000,பார்ப்பனீயம்,ஜோதிஷம்,ஆன்மீகம்னு ஒன்னுக்கொன்னுதொடர்பே இல்லாத சமாசாரங்களை எழுதியும், இன்றைய சமுதாயம் அங்கீகரிச்சிருக்கிற ஜூரிங்களை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்தும் 15 மாசத்துல ரெண்டு லட்சத்து 15 ஆயிரம் ஹிட்ஸ் நிச்சயமா வெற்றிதான் .
என் ( ? ) வெற்றியின் ரகசியம்:
"என்" பக்கத்துல கொக்கி ( கேள்விக்குறி) போட்டேனே தவிர வெற்றி பக்கத்துல கொக்கி போடல. அம்மா கைக்கு பக்கத்துலதான் கொக்கி போடறாய்ங்களாம். என்னை கேட்டா தாளி தாத்தா,அம்மா ரெண்டு பேரும் காங்கிரஸுக்கு கை கொடுத்து தமிழக எல்லைலருந்து விரட்டி விட்டுரனும்.
இந்த மேட்டர் போன தேர்தல்ல நடந்திருந்தா இலங்கை மேட்டர்ல இந்தளவு அ நியாயம் நடந்திருக்காது.
சரி வெற்றிக்கு வருவம்.
வெறுமனே ஹிட்ஸ் மேட்டர்ல மட்டுமில்லிங்கண்ணா நம்ம எழுத்தை படிச்சவுக இன்ஸ்பைர் ஆகி வள்ளீசா ரூ.250 மேனிக்கு ஃபீஸ் கொடுத்து பலன் தெரிஞ்சுக்கறாய்ங்க. ரஜினி காந்த் என்னதான் தன் படங்கள்ள " பணம் பணம் ..பணம் என்னடா பணம்"னு வசனம் விட்டாலும் பணம்ங்கறது வேல்யுபிள். இந்த க்ளோபலைசேஷன்ல ஒரு மனுஷன் பைசா சம்பாதிக்கனும்னா மானம்,ஈனம்,சூடு ,சுரணை, தாய்,தாய் நாடு,தாய் மொழி ,பெண்டாட்டி,பிள்ளைங்கள மறந்து மாடா உழைச்சாதான் காசு கிடைக்குது. ஒரு வகையில சொன்னா உடலை உருக்கி, உயிரை கொடுத்து தான் காசு பார்க்கறோம். ( சில பேரு உசுரை எடுத்து பார்க்கிறாய்ங்க.அது வேற கதை ) காசுங்கறது மனிதனின் நீட்சி ( எக்ஸ்டென்ஷன்) .
பல முறை சொன்னாப்ல உயிர் வாழ்தலின் அடையாளம் செக்ஸ். பணம்ங்கறது செக்ஸுக்கு மாற்று. இந்த கணக்குல பார்த்தா நம்ம எழுத்து உயிர் வரை பயணம் செய்திருக்கு.
இன்னொரு நல்ல செய்தி என்னன்னா இப்படி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற்றவங்க எல்லாருமே சேட்டிஸ்ஃபைட். ஒரே ஒரு பார்ட்டி மட்டும் " ஜெனரலைஸ்டா இருக்கு" ன்னு சொல்லியிருக்கு. அதையும் விடறதாயில்லை.
வருஷத்துக்கு ஒரு கேஸ் இந்த மாதிரி வரும் . ஜோதிடருக்கும், ஜாதகருக்கும் உரையாடலை பாருங்க.
ஜோதிடர் : " கடந்த 6 மாசத்துல வீடு ஏதாவது வாங்கியிருக்கனுமே?
ஜாதகர் : இல்லிங்க வித்திருக்கேன்.
ஜோதிடர் : இப்போ நல்லதா புதுசா ஏதோ செய்ய நினைச்சிருக்கிங்க
ஜாதகர் : இல்லிங்க நம்ம ஃபேக்டரி ஏலத்துக்கு வந்திருக்கு அதைப்பத்தி கேட்கலாம்னு
இப்படி வருஷத்துக்கு ஒரு பார்ட்டி கூட மாட்டலைன்னா ஜோசியர் நான் கடவுள்னிருவாரு. இதெல்லாம் கடவுளின் திருவிளையாடல்.
கடந்த 15 மாசமா ஒரு நாள் தவறாம ( வேளைகள் தவறியிருக்கலாம் - குவார்ட்டர்ல ஒரு நாள் தவறியிருக்கலாம்) அதை ஈடுகட்ட சில நாட்கள்ள அரை டஜன் பதிவுகள் போட போட்டிருக்கேன்.
நம்முது கடகலக்னம். லக்னாதிபதியான சந்திரன் ரெண்டேகால் நாளைக்கு ஒரு தாட்டி ராசி மாறிருவாரு. அவர் பலம் மாறிடும். ரிஷபத்துல உச்சம் விருச்சிகத்துல நீசம். இதுல அவரு ராகு, கேது,சனிக்களோட சேர்ரப்ப அந்த ரெண்டேகால் நாள் கடி.
இத்தனையையும் மீறி 15 மாசம் ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னா இதெல்லாம் சொல்லப்படனும்னு ஒரு விதி இருந்திருக்கு. ( நாட்டுல 40% மக்கள் அடுத்த வேளை சோத்துக்கு அலையனும்னு மட்டும் விதி இல்லிங்கண்ணா. உணவு,உடை ,இருப்பிடம்,செக்ஸ் இத்யாதிய தர்ர சுக்கிரன் எல்லா ராசிக்கும் வருசத்துல 8 மாசம் அனுகூலமா இருக்காருங்கோ. )
மேலும் என் எழுத்துக்களை பார்த்து என்னருந்தாலும் முருகேசன் ஃபார்மே தூள்பா . என்னமா கலக்குறாருனு நினைக்கிறவுகளுக்கு ஒரு வார்த்தை . என் கம்ப்யூட்டர்ல "ரா"ங்கற பேர்ல ஒரு ஃபோல்டர் இருக்கு. 378 கேபி அளவுக்கு ஃபைல்ஸ் இருக்கு. இதெல்லாம் என்னங்கறிங்க ? மேல் திருப்பதி நாவிதர் மாதிரி முடிக்கத்தெரியாம பாதில விட்ட ஐட்டம்ஸுங்கண்ணா.
ஓஷோ சொல்வாரு " நான் பேசறதை நீங்க கேட்கிறாப்ல.. நானும் கேட்கறேன்" னு நம்ம நிலையும் அதுவேதான். நீங்க என்னெல்லாம் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் என் எழுத்துல வர்ரதை பார்த்திருப்பிங்க.
இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா.. எதை எழுதினா ஹிட்ஸ் கூடும், எதை எழுதினா ஆன்லைன் க்ளையண்ட்ஸ் அதிகரிப்பாய்ங்கனு கணக்கு போட்டெல்லாம் எழுதறதில்லிங்கண்ணா.
அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் சொரியும் போதெல்லாம் மண்டைய திறந்து வாங்கி மொண்டு கொடுத்துரான்.
இதை படிக்கிற நீங்க ஒவ்வொருத்தரும் லௌகீகத்துல மட்டுமில்லாம ஆன்மீகத்துலயும் சக்ஸஸ் ஆகனும்னு வேண்டிக்கறேன். நீங்களும் என் மேட்டர்ல் அப்படியே செய்விங்க தானே. ம்யூச்சுவல் பாஸு.
கடவுள் சுய நலம் கலந்த வேண்டுதலை எல்லாம் கண்டுக்கறதில்லை. அதான் இந்த சதி.
ஓகே .எங்க போறிங்க.. போஸ்ட் ஆஃபீஸுக்கா ? அடி பின்னுங்க. (இப்படியாச்சும் கடித கலாசாரத்தை காப்பாத்துவம்)