என்னங்கடா இது நம்ம முருகேசு எப்ப பேரை மாத்திக்கினாரு. ஆராண்டை "பேரை மாத்தி வச்சிக்கிறேன்"னு பந்தயம் போட்டு பேரை மாத்திக்கினாருன்னு கன்ஃப்யூஸ் ஆயிராதிங்க. இனி இந்த தலைப்புல எழுதப்போறவரு சாட்சாத் சுகுமார்ஜி தான் .அவரோட ஓப்பனிங்கை படிக்க பரபரக்கிறவுக கவிதை07 ல் அண்ணாத்தையோட முதல் பதிவான இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? - ஐ படிக்க இங்கன
அழுத்துங்க .
கணையாழில சுஜாதா பக்கங்கள் மாதிரி கவிதை07 ல் சுகுமார்ஜி பக்கங்கள் சக்சஸ் ஆக வாழ்த்துக்களுடன் ( க னாவுக்கு க னா, சு னாவுக்கு சு னா அடி தூள் !
பொறுமையானவுகளுக்கு அவரைப்பற்றி சின்ன அறிமுகம்:
பெயர் - சுகுமாரன்
தகப்பனார் பெயர் - ஜெகநாதன் -தாயார் பெயர் - நாகரத்தினம்
பிறந்த நாள் - ஆகஸ்ட் 21ம் நாள் - 1970 ( ஆவணி 5ம் நாள்)
திருமணமானவர்
கல்வி - முதுகலை - பத்திரிக்கை மற்றும் தகவல்தொடர்பு
கைபேசி எண் - +91 9442783450
மின்னஞ்சல் - sugumarje@gmail.com
வலைப்பூ – http://sugumarje.blogspot.com
மேலும் கொஞ்சம்.. சுகுமார்ஜி வார்த்தைகளிலேயே..
என் முன்னோர்கள் சோதிட ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். என் தந்தைக்கு நானறிந்தவரையில் அத்தகைய ஆர்வமில்லை... ஆனால் நான் பெற்றுக்கொண்டேன்... வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' நூலை படித்தறிந்ததை அடுத்து, தமிழகத்தில், திருவருள் சோதிட பயிற்சி மூலமாக (ஆசிரியர் திரு. சாந்தலிங்கனார்) பட்டயச்சான்று கல்வி (1996ல்) பெற்றேன். ஆனாலும் 1991ல், வேதாத்திரி மகரிஷியின் குண்டலி தியான பயிற்சி பெற்று (அருள்நிதி) இரண்டு வருட பயிற்சியாளராக பணியாற்றி உள்ளேன்... இதன் பயனாக சோதிடம், கிரகங்கள் பற்றிய அறிவு எளிதாக புரிய ஆரம்பித்தன...
ஷாட் கட் ! ஓவர் டு முருகேசன் ( ஹி ஹி நான் தான் அண்ணாத்தை ) :
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அல்லாரையும் அண்ணா வா அக்கா வா நம்ம ப்ளாக்ல ஏதாச்சும் எயுதுனு கேட்டுக்கினே இருந்தனா பாவம் சுகுமார்ஜி தான் இப்பத்துக்கு மாட்னாரு.
தமிழ் நடிகைகள் அக்கட பூமிக்கு போய் கொழிக்கிறாப்ல இங்கிலீபீஸ்ல ஒரு ப்ளாக் வைக்கனும்னு ரெம்ப நாளா ஒரு ஜொள்ளு. ஆனால் நம்ம இங்கிலீபீசு கவர்ச்சி நடிகை உடை மாறி பத்தாக்குறையா இருந்ததால "ஆராச்சும் சகாயம் பண்ணுங்கப்பு"ன்னு சொல்லியிர்ந்தேனா அப்பத்தான் நம சுகுமார் சாரு லிங்க் ஆனாரு.