கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஒரு தொடர் பதிவு போட்டது ஞா இருக்கலாம். அதுல சந்திரனுக்கு, கடல் நீர் மேல இருக்கிற கவர்ச்சியை பத்தி சொல்லியிருந்தேன். தாயின் கருப்பையில் சிசு நீந்தி விளையாடும் பனிக்குடத்திலான நீரும், மனித உடலில் உள்ள 70 சதவீத நீர் சத்தும் ஒரே விதமான கெமிக்கல் காம்பினேசன் கொண்டுள்ளதாகவும் , கடல் நீரும் இதே கெமிக்கல் காம்பினேஷனை கொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.
அந்த நீர் சத்து எந்தளவுக்கு அடர்த்தியானதாக உள்ளதோ அந்த அளவுக்கு சந்திரன் அதை கவர ஏதுவான கெமிக்கல் காம்பினேஷனை கொண்டதாக இருக்கும். அந்த நீர் சத்தில் மனித உடலுக்கு மிக தேவையான, இன்றியமையாத உப்புகள், தாதுக்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இந்த உப்பு, தாதுக்களின் அளவு குறைந்தால் /இதன் மூலம் மனித உடலிலான நீர் சத்தின் அடர்த்தி குறையும். இந்த அடர்த்தி குறையுமேயானால் இதன் மீதான சந்திரனின் கவர்ச்சி பெருமளவு குறையும்.
நல்லா கவனிங்க தலை நான் அடர்த்திய குறைக்க சொல்றேன். தாதுக்களையோ ,உப்புக்களையோ அல்ல. இதுக்கு என்ன பண்ணலாம்? சுத்தமான தண்ணீரை மானாவாரியா குடிக்கனும்.
இந்த வழக்கம் எனக்கு வர காரணம் கான்சிட்டிபேஷன். கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பார்ட்டிங்கறதால அவுட் கோயிங்க் போற வரை இன் கமிங்குக்கு இறங்கறதில்லை. அதுவரை மானாவாரியா தண்ணி சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்.
இதுல ஒரு விசித்திரம் என்னடான்னா தாய்குலம் ஆஃபீஸ்கள்ள சாப்பிட்டுட்டு தண்ணி சாப்பிடறப்ப பார்த்திருக்கிங்களா? ஒன்னு ரெண்டுனு விழுங்கு கணக்குல குடிப்பாய்ங்க. இருந்தாலும் அவிகளுக்கு எப்படி அது சஃபிஷியன்டா இருக்கு.
நானும் வாட்டர் தெரஃபி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வெறும் வயித்துல குடிக்க முயற்சி பண்ணுவேன் அப்படியே எதுக்களிச்சுக்கிட்டு வரும். என்னங்கடா இதுன்னு சில நாள் வலுக்கட்டாயமா குடிக்க ஆரம்பிச்ச பிறவு பாருங்களேன்.
ஒரு தம் போட்டா தாகம். ஒரு தடவை பாஸ் போயி வந்தா தாகம். அதுவும் செம்பு கணக்கா சாப்பிட்டாதான் தாகமடங்கும். இதையெல்லாம் நான் டேலி பண்ணிக்கிறது.
இந்த மனித உடல் அற்புதமான கருவி. இது எத்தனை குறைஞ்ச பட்ச நீர் சத்தோடவும் வித்ஸ்டாண்ட் ஆகும், அப்படியே நீர் சத்து அதிகரிச்சாலும் எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. அதே மாதிரி தான் மேற்படி நீர் சத்துல இருக்கிற உப்புக்கள்/ தாதுக்களோட அளவும்.
இந்த உப்புக்கள்/தாதுக்கள் சடனா டவுனானா டீலாயிருவிங்க. சுஸ்தாயிருவிங்க. கை,கால் எல்லாம் அப்படியே பார்ட் பார்ட்டா வலிக்கும். ஆனால் போக போக, கொஞ்சம் கொஞ்சமா இந்த அளவு குறைஞ்சிக்கிட்டு வந்தா உடம்பு அட்ஜஸ் பண்ணிக்குது.
சாண்டில்யன் கதைல விஷகன்யா பத்தி படிச்சிருக்கிங்களா? குழந்தைல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா பாம்பு விஷத்தை ஊட்டி வளர்ப்பாய்ங்க. அது பெரிசானதும் அவள் யாருக்காச்சு முத்தம் கொடுத்தா அந்த ஆண் ஃபணால். இதெல்லாம் ஃபேண்டசிதான் இல்லேங்கலை,
(சில ஆண்களோட விந்துலயும் கேன்சரை உண்டாக்கற சமாசாரம் இருக்காம். மனைவி கருப்பை புற்று நோயால இறந்திருந்தா அந்த பார்ட்டி கண்ணால கட்டிக்காம இருந்துர்ரதே பெட்டராம். இவர் எத்தனை குட்டிகளை கட்டிக்கிட்டாலும் அவிகளுக்கும் யூட்ரஸ் கேன்சர் வந்தே தீருமாம்.) - இது சைன்ஸ். இன்னைக்கு பேப்பர் நியூஸ்
இப்போ ஆணி விழுங்கிறவன், எலி ,தவளை சாப்பிடறவன் எப்படி சாப்பிடறான்? எல்லாம் வழக்கம் தானே. நான் 1997ல இருந்து டிஃபன் சாப்பிடறதையே விட்டுட்டவன். செத்தா போயிட்டன் இல்லை.
ஒரு வேளை சாப்பிடறவன் யோகி. ரெண்டு வேளை சாப்பிடறவன் போகி. மூணு வேளை சாப்பிடறவன் ரோகி. மார்னிங்க் டிஃபனை கட் பண்ணதால ராத்தூக்கம் முழிக்கிறது, தம்மு இத்யாதியால ரத்தத்துல,குடல்ல சேர்ர மஷ்டு எல்லாம் க்ளீன் ஆயிர்ரது.
இந்த ஒரு வேளை தீனியை கட் பண்ணதாலயும், மானாவாரியா தண்ணி குடிச்சிக்கிட்டிருந்ததாலயும் வாட்டர் கன்டென்டோட டென்சிட்டி ஏகத்துக்கு குறைஞ்சிட்டாப்பல இருக்கு.
12 நாள் உண்ணாவிரதம் இருந்தேன். முதல் ரெண்டு நாள் தான் பசி.அப்புறம் பசியுமில்லே ,ஒரு மயிருமில்லை. இதுலருந்து என்ன தெரியுது உடம்பு நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வரக்கூடைய ஃப்ளெக்ஸிபிள் மேட்டர்.
இதனால எனக்கு கிடைச்ச பலன் என்னன்னா என் மேல சந்திரனோட எஃபெக்ட் ரொம்பவே குறைஞ்சு போச்சு. இவர் மனோகாரகன். ( நம்மது கடகலக்னம் அதிபதியே இவர்தான். சாதாரணமா கடக லக்ன காரங்க எதுலயும் ஸ்டெடி மைண்டடா இருக்கமாட்டாய்ங்க. அப்படியே இருந்தாலும் ரெண்டேகால் நாளுதான். ) உணர்வு பூர்வமான முடிவுகள், உணர்ச்சி வசப்பட்ட பேச்சு இதெல்லாம் சந்திரனோட பிரபாவம்தான்.
ஆனால் நம்மை பொருத்தவரை தாளி .. கிருஷ்ணரே சக்கரம் எடுத்துக்கிட்டு வந்துட்டாலும் ஐ.டி கேட்கிற ரேஞ்சுக்கு வந்துட்டம்ல.
பி.கு:
இத்தனை விஸ்தாரமா இதை எழுத காரணம் நேத்து ஜஸ்ட் பகல் 12 மணிக்கு பஜாருக்கு ஒரு ரவுண்ட் போய்வந்த பாவத்துக்கு சன் ஸ்ட்ரோக். நாலு தடவை வயித்தால போக உடம்பு அப்படியே வெங்காய தோல் மாதிரி ஆயிருச்சு. (காத்துல படபடக்கிறத சொல்றேன்) ஆனால் ஒன்னு தலைவா ப்ரெய்ன் மட்டும் அப்படியே பளிங்கு மாதிரி ஆயிருச்சு.
எச்சரிக்கை:
வெயிலில் அலையாதீர்கள். குடை தொப்பி உபயோகிப்பதானால் லைட் கலர் கொண்டவற்றை உபயோகிக்கவும். நிறைய தண்ணீர் குடிங்க. கம்பெனி ட்ரிங்க்ஸ் வேணா.அதுக்கு பதில் மோர், ஃப்ரெஷ் ஜூஸ் ,இள நீர் குடிங்க.வெயில்ல அலைஞ்சுட்டு வந்ததும் பாத்ரூமுக்கு பறந்து போய் குளிக்காதிங்க. உடனே ரிவர்ஸ் எஃபெக்ட் ஆகி அத்தனைக்கத்தனை சூடாயிரும். சப்போஸ் சன் ஸ்ட் ரோக் வந்து வயித்தால போனா டென்சன் ஆகாதிங்க. ஒரு செம்பு தண்ணில நிறைய சர்க்கரை/கொஞ்சமா உப்பு சேர்த்து ஒரு லெமன் பிழிஞ்சு அடிங்க. போறது பாட்டுக்கு போகட்டும். நீங்க பாட்டுக்கு மேலருந்து ஊத்திக்கிட்டே இருங்க. கடைல எலக்ட் ரால் பாக்கெட் கிடைக்கும் அதையும் வாங்கி கரைச்சு குடிக்கலாம்.