Saturday, May 22, 2010
என் எதிரிகளும் லதா ரஜினி காந்தும்
இன்னாபா தத்துவமெல்லாம் சொல்றே. மனித குலம், மனிதம்னு பினாத்தரே. அப்பாறம் பார்த்தா எதிரிகளோட பட்டியலையே ரிலீஸ் பண்றேனு நீங்க கேக்கலாம். இவிகளை நான் அடையாளம் காட்டறதே மன்சங்க இவிகளை நம்பி என்னாட்டம் நொந்து போயிரகூடாதுன்னுதான். எதிரிங்களுக்கு என்னோட ட்ரீட் மெண்டை சொன்னா சிரிப்பிங்க.
நம்ம ஃபிலாசஃபி ஒன்னுதா:
கெட்டவனை கடவுளுக்கு கெட்டவனாக்கனும்னா அவனுக்கு நல்லதை செய்து விட்டுரனும். இன்னைக்கும் இந்த பதிவை போட காரணம் அது தான். எதிரிகளை அப்புறம் பார்க்கலாம். முதல்ல லதா ரஜினிகாந்த்
கடக லக்னத்துக்கு எமன் உமன் தான் இதை கலைஞருக்கு எடுத்துச் சொல்லி ஒரு தனி பதிவே போட்டிருக்கேன். என்னுதும் கடக லக்னம் தான் . இருந்தாலும் ஒரு தாய்குலத்தோட அதுலயும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லதா ரஜினி காந்த் அவர்களுடன் இந்த பதிவில் மோத இருக்கிறேன்.
இதுக்காக ஏற்கெனவே அனுபவ ஜோதிடம் வலைப்பூவில் நான் எழுதியுள்ள எந்த நவீன பரிகாரத்தையும் செய்துக்க போறதில்லை . நவகிரகங்களில் இருந்து விடுதலைக்கு நான் உபதேசிச்ச எந்த மார்கத்தையும் பின்பற்ற போறதில்லை. இருந்தாலும் மோதப்போறேன்.
இதெல்லாம் ஜஸ்ட் கடவுளை டீஸ் பண்றதுதான். பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவே போட்டேன்." அவாள்" எதிர்ப்பார்ப்பின் படி , கணக்குப்படி கண்ணன் சக்கரம் விட்டு என் கழுத்தை சீவியிருக்கனும். சீவலை. என்ன காரணம்னா என் எழுத்துல சத்தியம் இருக்கு. அண்டைவெளியில் இன்றைக்கும் மிதக்கும் எண்ண அலைகளை ரேடியோ ரிசீவர் போல என் மூளை ஈர்க்கிறது. அது எப்படி பொய்யாக முடியும்.
நிற்க லதா ரஜினி காந்த் யார் ?ஒய்.ஜி. மகேந்திர அய்யரின் மைத்துனி. ரஜினி காந்தை சூப்பர் ஸ்டார் ஆக்கினது யாரு? சேரிப்பசங்க,சூத்திர பசங்க. இட்லி ,சாம்பார் எல்லாம் சின்ன சாம்பாருக்கு சேவை பண்ணிக்கிட்டிருந்தப்போ ரஜினிக்கு காவடி எடுத்தது மேற்படி பசங்கதான். ஆனால் ரஜினி சார் கைப்பிடிச்சது ( இதுக்கு பின்னாடி கூட பிராமண சதி இருக்கலாம். நம்மாளா ஜெயிக்கனும், ஜெயிக்கிறவன் எல்லாம் நம்மாளா இருக்கனும், அதும் முடியலியா ஜெயிச்சவனுக்கு பெண்ணை கொடுத்துரனும், தத் ஏற்கெனவே கல்யாணமாயிருச்சா அவனை அய்யராக்கிரனும் (இளைய ராசா மாதிரி) இதானே அவிக சித்தாந்தம்.
சரி விட்டுத்தொலைங்க .ராஜு மெச்சிந்தி ரம்பா. திருமணங்கள் சொர்கத்தில் சாரி அவாள் வீட்டு ரீடிங் ரூமுகள்ள நிச்சயமாகுது நமக்கென்ன. விஷயத்துக்கு வந்துர்ரன். நானும் ரஜினி ரசிகன் தான். எதுவரை ,மிஸ்டர் பாரத் வரை. அதுல என்னாச்சுன்னா தலைவர் ராஜீவ், காமராஜர் கெட் அப்ல யெல்லாம் வந்தாரா.. டீப்பாய்க்கெல்லாம் காங்கிரஸ் பார்டர் கொடுத்திருந்தாய்ங்களா முழிச்சிக்கிட்டேன்.
சரி ஓஞ்சு போவட்டும். அவிக பிரச்சினைக நமக்கு புரியறதில்லை. சாமானியன் எண்ண ஓட்டம் அவிகளுக்கு புரியறதில்லை.
ரஜினி காந்தோட மனைவி லதா ரஜினிகாந்த்:
பாபா ரிலீசான நேரம். படம் பயங்கர இழுவை,அறுவை. நாமதான் ஐடியா ஐயா சாமியாச்சே. ரெண்டு மூணு தடவை படத்தை பார்த்து எந்தெந்த சீனை கட் பண்ணிட்டா படத்துல கொஞ்சமாச்சும் டெம்போ வரும்னு ரோசிச்சு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி ரஜினிகாந்துக்கு கொரியர்ல அனுப்பினேன். பழக்க தோஷத்துல பழைய விலாசத்துக்கு அனுப்பிட்டேன். நெம்பர்:18,ராகவவீரா அவென்யூ, போயஸ் கார்டன். அங்கன இப்போ ஆஷ்ரம் ஸ்கூல் நடக்கிறதா கேள்வி, கொரியர் வாங்கின மகராசி யாரோ ஃபோன் நெம்பரையும் போட்டு வாங்கியிருக்காய்ங்க.
அப்பல்லாம் ரஜினிய நக்கலடிச்சு தாளி பிட் நியூஸ் கூட போட முடியாது அது ரேஞ்சு. எல்லா பத்திரிக்கையும் ரஜினி அவ்ளோ சிம்பிள், ரசிகர்களுக்கு அவ்ளோ மரியாதை அதுஇதுன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
நமக்கு ஒரு நப்பாசை ஃபோன் நெம்பர் போட்டு வாங்கினா ஃபோன் பண்ணச்சொல்லி அர்த்தமோனு ஒரு ஜொள்ளு. அதே நேரம் ஃபோன் நெம்பர் போட்டு வாங்கறது வழக்கமோன்னும் ஒரு சம்சயம். இந்த இழுபறில ஃபோனும் பண்ணலை ஒரு ..ரும் பண்ணலை.
கொஞ்ச நாள் கழிச்சு தேவி வார இதழ்ல பாபா படத்தோட நீளத்தை குறைக்க சில சீனையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி தியேட்டருங்களுக்கு அனுப்பினாய்ங்க. தியேட்டர்ல அந்த சீனையெல்லாம் கட் பண்ணிட்டு ஓட்டறாங்கனு ஒரு செய்தி வந்தது. கொஞ்சமா நம்பிக்கை வந்து ஃபோனை போட்டேன்.
அந்த காலத்துல எஸ்.டி.டிங்கண்ணா. மினிமம் ரூ 3.50 . அது நாம சோத்துக்கு லாட்டரி அடிச்ச நேரங்கண்ணா. நான் போட்ட நெம்பர் ஆஷ்ரம் ஸ்கூல் ரிசப்ஷன் நெம்பர் போல. அம்மாவோட பி.ஏவை ஃபோன்ல பிடிக்க பத்து நாள் ஆச்சு. ஃபோனை போட வேண்டியது பாபா படத்தோட - இழுவைய குறைக்க - கட் பண்ண வேண்டிய சீன்ஸ லிஸ்ட் அவுட் பண்ணி லெட்டர் போட்டேன். பி.ஓ.டி.ல இந்த நெம்பர் இருந்ததுன்னு தேஞ்சுபோன ரிக்கார்டை போட வேண்டியது .அவிக ஒரு நிமிஷம்னு சொல்ல பாடாவதி மியூசிக் ஒலிக்கும். நாம கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
இந்த ரேஞ்சுல லதா அம்மாவ ஃபோன்ல பிடிக்க பத்து நாளாச்சு. அவிகளோட நடந்த உரையாடல்.. அட அட அடடடடடடடடடடடடடடடடடடட வாழ் நாள்ள மறக்கவே முடியாதுங்கண்ணா.
விஷயம் மொத்தத்தையும் சொன்னேன். இடை இடையில அவிங்க ரியாக்சன் . "அப்படியா" " நல்லது" கடைசில கேட்டாங்களே ஒரு கேள்வி "இப்ப நீங்க என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? "
படக்குனு சொன்னேன். என்னத்த எதிர்ப்பார்க்கப்போறேங்க ஜஸ்ட் தேங்க் பண்ணி ஒரு போஸ்ட் கார்ட் அவ்ளதான்.
அதுக்கு அந்தம்மா சொன்ன பதிலிருக்கே அதையே எல்லாரும் ஃபாலோபண்ணாங்கன்னா உலகத்துல எந்த பிரச்சினையும் வராது. கீதாசாரமது.
"லெட்டர் தானே ..போட்டதா நினைச்சுக்கங்க"
இதுக்கு என் பதில் என்னனு ஆவலா எதிர்பார்ப்பிங்களே.. அப்போ நேரம் மதியம் 1.45.
"சாப்டிங்களா?" -இது நான்.
"இன்னும் இல்லை" - இது லதாம்மா
"சாப்டாதிங்க. சாப்டோம்னு நினைச்சுக்கங்க" - இது நான்.
இதான்யா வி.ஐ.பிங்களோட லட்சணம். அச்சுல வர்ரத நம்பாதிங்க. டிவில காட்டறதை நம்பாதிங்க. எல்லாமே பொய்.
கே.பாக்யராஜ்:
என்ங்கடா இது என் முதல் கதைய பிரசுரிச்ச பாக்யராஜ்னு பந்தாவா படம் கிடம்லாம் வச்சுட்டு எதிரிகள் பட்டியல்ல் முதல் பேரா கொண்டுவரான் மனுஷன்னு சிண்டை பிச்சுக்காதிங்க.
1984லயே என் சிறுகதை பிரசுரமாகிட்டதா பீலா விட்ட பார்ட்டி நானு. அப்போ எந்த வருஷத்துல/எந்த வயசுல எழுத ஆரம்பிச்சிருக்கனும்னு சின்னதா கணக்கு போடுங்க.
இந்த நிலைல என் முதல் சிறுகதைய பிரசுரிச்ச பாக்யாராஜ் அண்ட் கோவோட ரசனைக்கும் என் வயசுக்கும் ஜஸ்ட் 6 வருஷம் வரைதான் ஒத்துப்போச்சு. 1990 மார்ச்சுக்கெல்லாம் நம்ம ரசனை கல்கி ரேஞ்சுக்கு போயிருச்சு.
முதல் கதை முளைச்சு மூணு இலை விடலை அடுத்த கதை அருணாகவுரி அதையடுத்து கனகாவை காணவில்லை, அதையடுத்து அழைத்தேன் வந்தாய்
(பாக்யாவுல கதை பிரசுரமாகனும்னா நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னுதான். ஒரு ஆம்பளை பொம்பளை ஏதோ கெட்ட காரியம் பண்ணப்போறாங்கங்கற மாதிரி கதைய கொண்டு போகனும் லாஸ்ட்ல உப்பு கேட்க வந்தாள், மிளகா கேட்க வந்தாள்னு முடிச்சுரனும் தட்ஸால்)
கல்கில புதியவள் னு ஒரு கதை வெளி வந்தது. ஷாட் கட் பண்ணா கவிதாசரண்ல படைத்தவன் கிடைத்தான்.
இப்ப சொல்லுங்க என் ஆரம்ப கால சிறுகதைகளை உற்சாகமாக பிரசுரித்து தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத பாக்யராஜ் அண்ட் கோவை எதிரியா அறிவிக்கிறதுல என்ன தப்பு.
என் கதைகளை பற்றிய/ எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ பிரசுரிப்பது குறித்த முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர். நான் காட்டமா போஸ்ட் கார்ட் எழுதினபிறகு ஜே.வி. நாதன்னு ஒரு ரிப்போர்ட்டரை என் கிட்டே அனுப்பி வச்சாரு. அவரும் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த மாதிரி என்னென்னமோ ஃபிலிம் எல்லாம் காட்டிட்டு போனார். போனவர் போனவர்தான். இவிகளை எதிரியா அறிவிக்கிறதுல என்ன தப்பு.
அவாளோட பிழைப்பு கெட்டுருங்கற ஒரே காரணத்துக்காக , தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை, ஸ்ரீ பிரம்மங்காரு தொடரை பாதியில் நிறுத்திய ஆன்மீகம் மாத இதழின் ஆசிரியர்.
என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர். (மறு தபால்ல கூட அனுப்பியிருக்காய்ங்க, புரட்ட கூட நேரம் இருந்திருக்காது தாளி.)
ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்:
இவர் ஏதோ ஒரு பார்ப்பன பத்திரிக்கைல ஏதோ சுயமுன்னேற்ற தொடர் எழுதினதா ஞா. ஆ.இ 2000 ஐ பொருத்தவரை பாதிரியார் மாதிரி. எதிராளிக்கு அவசரமா ஒன்னுக்கு வருதா, வயித்தை கலக்குதான்னெல்லாம் ரோசிக்க மாட்டேன்சுருக்கமாவாச்சும் சொல்லிட்டுதான் மறு வேலை பார்ப்பேன். ஒரு சமயம் யாஹூ சாட்ல கிராஸ் ஆனாரு.
வழக்கம் போல ஆ.இ. பத்தி நாலு வரி சொன்னேன். உடனே நானேதோ மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை சொல்லிட்டாப்ல அசூயையா ஃபீலாகி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. இவிங்களையெல்லாம் ஒரு நாளில்லை ஒரு நாள் சாமானிய வாசகனுக்கு அடையாளம் காட்டலைன்னா நான் வாழ்ந்ததே வேஸ்டு.
எண்டமூரி வீரேந்திர நாத்:
இந்தாளு தெலுங்குல ஒரு காலத்துல பிரபல நாவலாசிரியர். தெரியாத்தனமா இவர் கதைகளை சிரஞ்சீவிய போட்டு எடுக்க ஃபோர் ,சிக்ஸர் எல்லாம் அடிச்சுருச்சு. ஒரு மாஸ் ஹீரோவை போட்டு எடுத்தும் ஒரு கதை க்ளிக் ஆகுதுன்னா அது எப்படியாப்பட்ட கரம் மசாலாவா இருக்கனும்னு ரோசிங்க.
இந்தாளு எசன்ட்ரிக். உடனே இவிக எடுக்கிறதெல்லாம் படமே இல்லை. நான் எடுக்கறேன் பாருன்னு கோதாவுல இறங்கினார் .படம் பப்படம். (அந்த படத்தோட பேரு பாரதம்லோ சீதாவோ என்ன இழவோ)
இந்த பார்ட்டிக்கு ஆ.இ.2000 பத்தியும் , அது தொடர்பா ஏற்பட்ட டெவலப் மெண்ட் ஸையும் மெயில் மூலமா அனுப்பினேன்.
இந்த பார்ட்டி என்ன பண்ணாரு தெரியுமா மெயில் அனுப்பறத நிறுத்து இல்லன்னா கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன். அடங்கோத்தா.. உனக்கு வர்ர மெயில பிடிக்கலன்னா ஸ்பம்னு மார்க் பண்ணிட்டு அடுத்த வேலைய பார்ப்பயா.. கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவயா.
இத்தனைக்கும் இந்தாளோட கதைகளை தமிழ்ல டப் பண்ணிக்கிட்டிருந்த சுசீலா கனகதுர்கா யுத்தன்ன பூடி சுலோச்சனாராணிங்கற தெலுங்கு எழுத்தாளரோட கதைகளை எண்டமூரி லேபிள் போட்டு தமிழ்ல டப் பண்ணி காசு பண்ணப்ப முத முதலா உஷார் பண்ண பார்ட்டி நான் தான். அப்போ இந்தாளு அதை கண்டுக்கலை. இந்த மேட்டர் சுலோச்சனாராணிக்கு தெரிஞ்சு போய் அந்தம்மா எண்டமூரிக்கும் சேர்த்து லீகல் நோட்டீஸ் விட்டுட்டா. தெலுங்கு தினசரிலல்லாம் நாறிப்போச்சு.
இந்த லிஸ்ட் அனுமார் வால் மாதிரி ரொம்ப நீளங்கண்ணா. சமயம் கிடைக்கிறப்போ தொடரலாம்.
ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகி, ,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா, சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள், தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள், பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா, அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,
மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!) இப்படி மஸ்தா கீதுங்கண்ணா..
சோதிடத்தில் ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொருவிதமான பிழைப்பு கூறப்பட்டுள்ளது ஆனல் என்னோட கடக லக்னத்துக்கு மட்டும் சத்ருக்களால் ஜீவனம் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான் போலும். நண்பர்களுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தாலும் சத்ருக்களை அதிலும் சமூக சத்ருக்களை விட்டு வைப்பதாயில்லை.
பாசிடிவ் திங்கிங்க் பற்றி நான் அறியாதவனில்லை. ஆனால் அல்ஜீப்ராவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சத்ருக்களை அடையாளம் காட்டினால் என் பின்னாடி அவிகளை காண்டாக் பண்ண விரும்பற பசங்களுக்கு நன்மை ஆட்டோமேடிக்காக நடந்து விடும் என்பது என் அனுபவம். ஓகே உடு ஜூட்.