Showing posts with label kalaingar. Show all posts
Showing posts with label kalaingar. Show all posts

Tuesday, October 11, 2011

இரட்டை வெடி


இந்த 2011 ,அக்டோபர் மாதம் 11 ,12 தேதிகளில் அனுபவஜோதிடம் வலைப்பூ/தளத்தில் வெளியான பதிவுகளுக்கான தொடுப்பு இது.

நிர்வாண உண்மைகளை மட்டும் படிப்பவர்களின் வசதிக்காக இந்த தொடுப்பு சமாசாரம்.

கலைஞர் ஐயா போதும் விட்டுருங்க!

ஓ பக்கங்களும் ஞானியின் உளறல்களும்

Tuesday, July 26, 2011

கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?


ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.

சட்டமன்ற தேர்தல்ல தாத்தாவுக்கு ஓய்வு கிடைக்கப்போவுதுன்னு சொன்ன இந்த வாய்தேன் இதையும் சொல்லுது. நாம ஏடிஎம் கவுண்டர் மாதிரி செருகின அட்டையில பேலன்ஸ் சொல்றோம். அம்புட்டுதேன். நமக்கு அவிக இவிகனு வித்யாசம்லாம் கிடையாது.

ஜா.ராவுதும் நம்முதும் ஒரே கேரக்டரு. இரட்டைதன்மை. ஒரு மன நிலையில ஜெ தான் ஆதிபராசக்தின்னு தோனும். இன்னொரு மன நிலையில ச்சே தாத்தா பாவம்யான்னு தோனும்.

ஆனால் நாம டுபுக் ப்ளாக் வச்சி - அனானி பதிவு -அனானி கமெண்டெல்லாம் போடறதில்லை.அப்பப்போ என்ன தோனுதோ அதை அப்படியே போட்டு உடைச்சுர்ரம்.

என்ன? மொக்கை போதுமா? பதிவுக்கு போயிரலாமா/

இந்த பதிவுக்கு நான் ரோசிச்ச இன்ன பிற தலைப்புகள்: (ரூம் போட்டெல்லாம் ரொசிக்கிலிங்கண்ணா-ஜஸ்ட் ஸ்பார்க் ஆனதுதேன்)

1.கலைஞர் தாத்தாவுக்கு நல்ல நேரம் பொறந்துருச்சுடோய்

2.அம்மா வெற்றி ச்சும்மா போகப்போகுதா?

3." கனி " மொழி சென்னையில ஒலிக்கப்போவுது

4. அம்மா கண்ணும் தாத்தா விரலும்

இதெல்லாம் கோசார கணக்கை அடிப்படையா கொண்டதுதேன். நான் நம்பி உபயோகிக்கும் தெலுங்கு பஞ்சாங்கப்படி 2011 நவம்பர் 17 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க போகிறது. தாத்தாவுது ரிஷபராசி.

கடந்த கன்னி சனி:
இது 2011 நவம்பர் 17 வரை நடக்கனும். 9/10க்கு அதிபதி அஞ்சுல இருந்த காலம் வரை நெல்லாவே "தொழில்" நடத்தி நெல்லாவே சொத்து சேர்த்தாரு. ஆனால் அஞ்சுல சனிங்கற கான்செப்ட்ல அவமானமும் நடந்தது (அஞ்சு பேர் புகழை காட்டும் இடம்) கனிமொழியும் திகார் (அஞ்சு புத்ர ஸ்தானம்) தயா நிதி மாறனும் அதே ரூட்ல ( புத்ர பவுத்ரர்கள் -பேரன் கள் எல்லாம் ஒரே கேட்டகிரிங்கோ) புத்தி மந்தமா போய் (அஞ்சு புத்தி ஸ்தானம்) 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்தாச்சு.

ஆனா சனி ராசி மாறுவதற்கு 6 மாசம் முன்னாடியே அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி இருக்கு. அதாவது அஞ்சுல சனியே 6 ல சனியா வேலை செய்வாரு.

இந்த எஃபெக்டு மே 17 ஆம் தேதியே ஆரம்பிச்சிருச்சு. சனி இவிகளுக்கு 9 -10 க்கு அதிபதி. 9 ஆம் பாவம் தொலைதூர கார்டியனை காட்டும் (சோனியா) அதனால தேன் சோனியா அம்மா பிள்ளைய பயங்கரமா கிள்ளி விட ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாவும் நான் மாத்தேன் அழ மாத்தேன்னுட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தாரு புரச்சி தலைவி எப்பம் சமச்சீர் கல்வி மேட்டர்ல வாய வச்சாய்ங்களோ அங்கனயே தாத்தாவுக்கு அடுத்துவரும் துலா சனி:எஃபெக்ட் ஆரம்பமாயிருச்சு போல.

9 ங்கறது சொத்துக்கள்,சேமிப்பு,முதலீடுகளை காட்டுமிடம் இதுங்க மேலல்லாம் வம்பு வழக்கு வரனும். வந்துக்கிட்டே இருக்கு.

பத்தாம் பாவம் செய்தொழிலை காட்டுமிடம். இவர் 6 ஐ பார்க்கிறதால "விவகாரம் பண்றதும் -எதிராளி கண்ல விரலை விட்டு ஆட்டறதும்தேன் வேலை. வல்லடி பண்ணனும். எதிராளிக்கு தூக்கமில்லாம பண்ணனும். ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா இதெல்லாம் முதல்ல ரிவர்ஸ்ல நடக்கும். அப்பறமாத்தேன் இருக்கு மெயின் பிலிம்..

6 ல சனி வந்தா சத்ரு நாசம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி நடக்கனும். இதனோட எஃபெக்டா தான் சினியுக் கடனா(?) கொடுத்த 214 கோடியை செட்டில் பண்ணாப்ல இருக்கு. ரோகம் இனி வராது போல (சின்னதா) அம்மா கதி என்ன ஆகப்போகுதோ? கர்னாடக கோர்ட்டு விவகாரம் வேற இதோ அதோங்குது. தாத்தாவோட ராசிக்கு 6 ல வந்த சனி அம்மா வெற்றிய ச்சொம்மா ஆக்கிருவாரா என்னனு பொறுத்திருந்துதேன் பார்க்கனும்.

எச்சரிக்கை:1
ஆனால் இதுல இன்னொரு பயங்கரமும் இருக்குங்ணா அம்மாவுக்கு 3 ல சனி /தாத்தாவுக்கு 6 ல சனி. அம்மா பயப்படமாட்டாய்ங்க. தாத்தா விடமாட்டாரு. தமிழகம் ரண களமாகப்போகுது.

எச்சரிக்கை;2

எங்க ஊர்ல என்.டி.ஆருக்கு அவரோட ராசிக்கு 5 ல சனி வந்தப்பதேன் பிள்ளை கணக்கா இருக்கவேண்டிய சந்திரபாபு ஆப்படிச்சிட்டாரு. அப்பம் நான் உணர்ச்சி வசப்பட்டு சனி 6 ஐ பார்க்கிற தேதிய குறிப்பிட்டு
" இன்ன தேதிக்கு அப்பாறம் உங்களுக்கு எதிரியே கிடையாது தலை"னுட்டு டெலிகிராம் கொடுத்தேன்.

ஆனால் அன்ன தேதிக்கு அப்பாறம் தலீவரு டிக்கெட் வாங்கிட்டாரு. அவரை ஈஸ்ட்மென் கலர்ல திட்டிக்கிட்டிருந்த தலைங்க எல்லாம் என்.டி.ஆர் மரணத்துக்கு அப்பாறம் அவதார புருசனு புகழ்ந்து தள்ளினாய்ங்க.

இந்த மாதிரி தாத்தா மேட்டர்ல நடக்காதுன்னு எப்படி உறுதி தரமுடியும்?

விவகார ஜெயம்:

சமச்சீர் கல்வி மேட்டரை ஏற்கெனவே சொல்ட்டன். அடுத்த மேட்டர் ராசா . நேத்து ராசா போட்ட குண்டுக்கு சோனியா - சிதம்பரத்தார் மற்றும் மன்மோகனார் அரண்டு கிடக்காய்ங்க. தாத்தா பார்கெயினிங் பொசிஷன்ல இருந்து டிமாண்டிங் பொசிஷனுக்கு வன்ட்டாருங்கோ.

ஆனால் நல்லதுல ஒரு கெட்டது மாதிரி குரு அஷ்டமாதிபதியா மறைஞ்சு நன்மை செய்ய பார்த்தாலும் -அவர் புத்ர காரகன் என்பதால் கனி திகாருக்கு போக பிரிவு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி குரு வக்கிரமாறதால -முந்தா நாள் ராசா விட்ட அலப்பறைக்கு சோனியா கும்பல் அரண்டு கிடக்கிறதால கனி ஆகஸ்ட் 30 க்கு அப்பாறம் வெளிய வந்துரலாமுங்கோ.

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Thursday, February 24, 2011

கலைஞர் ஒரு விதவை


இன்னாடா இது அக்குறும்பா கீது. ஆம்பளை போய் விதவையாக முடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.மனைவியை இழந்த ஆணை விதவன் என்று சொல்லும் சம்பிரதாயம் இங்கில்லே.(மேல் சேவனிஸ்ட் சொசைட்டிப்பா). ஆனால் மனைவியை இழந்தவர்களை குறிப்பிட ஒரு வார்த்தை இல்லேன்னாலும் இழந்தது இழந்ததுதானே.

"அவர் ஏங்க கல்யாணம் கட்டிக்கலை?"
"அவர் தன் லட்சியத்தை கண்ணாலம் கட்டிக்கிட்டாருப்பா"

"ஹும்.. உங்களுக்கு மொதல் பெண்டாட்டி உங்க ஆஃபீஸ் - நான் ரெண்டாவதுதான்"

இந்த வசனம்லாம் கேட்டிருப்பிக. கலைஞரும் அப்படித்தான் லட்சியத்தை மணந்து அரசியல் வாழ்க்கைய துவக்கினாரு. ஆனால் அவரோட ஜாதக மகிமை லட்சியம் செத்துப்போச்சு. ஆமாங்கண்ணா அவர் ஜாதகம் கீழே:

கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் -இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை)

தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை - இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. ரெண்டு எட்டுல ராகு கேது ( இதைத்தான் மாங்கலிய தோஷம்ங்கறாய்ங்க- இந்த அமைப்பாலதான் கலைஞரோட லட்சியம் செத்துப்போயி அவரு விதவையாயிட்டாரு)

7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் - 4ங்கறது "வீட் மற்றும் தன்னவரை" காட்டற இடம் . கணக்கு டாலி ஆயிருச்சா. ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால சிறைக்குள் பூத்த சின்ன சின்ன மலர்கள் பார்ட் டூ எழுத வச்சிர்ராப்ல இருக்கு. ( சிறைப்படலுக்கு சனியே காரகன்)

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா "இந்திராவுக்கு பென்ஷன் தரோம்" பாணில வார்த்தைய விட்டு ஆப்பு. அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதித்து ப்ரூக்ளின்ல இருந்தா உருக்கமா உடன் பிறப்புக்கு கடிதம்.

ஒரு சமயம் டாப்பு. ஒரு சமயம் பயங்கர ஆப்பு.ரெண்டுத்துக்குமே தலைவரோட புத்தி தான் காரணமாகுது. குருன்னா அவாள். அவிக மேல பாசம்,துவேசம் மாறி மாறி வரவும் இதான் காரணம்.

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா " எந்த பேப்பரு"ன்னு சீறவு இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. இவர் தான் ஒன்னும் கொடுக்கமாட்டேங்கறாரு.

4/11 க்கு அதிபதி விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை "தானம்" பண்ணிட்டாரு போல.

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு................( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.

கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்க வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி).
அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.


அது சரிங்கண்ணா ஏன் சோனியா அம்மா இப்படி இம்சை பண்றாய்ங்கனு கேப்பிக.சொல்றேன். கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா கதை ஆச்சு.இப்ப சோனியா ) ராகுன்னா விதவைய காட்டற கிரகம்.

நம்ம தலீவருக்கு ராகு கேது பாப கத்திரி யோகத்தை தந்திருக்காய்ங்க. அதாவது ஒரு விதவையால தனம்,சொல் வாக்கு,செல்வாக்கு, குடும்பம் எல்லாமே பறிபோகனும். ராகு எட்டை பார்க்கிறதால (வேணாங்கண்ணா ஓவரா போயிரும்) அதுவும் போகனும்.

ஆடு ஆரை நம்புது? கசாப்புக்காரனைத்தானே நம்புது. சரி இந்த கேது தசையில தாத்தாவுக்கு ஆப்புதானான்னு கேப்பிக சொல்றேன்.

இன் ஜெனரல் கேது தசை/புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , தியானம், சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது கொஞ்சமேனும் தீய பலனை தராது விட மாட்டார். தினசரி ஒரு மணி நேரமேனும் காவி வேட்டி அணியவும். மாதம் ஒரு கோவிலில் ரா தங்கவும்னு சொல்லலாம். ஆனால் தலீவர் கோச்சுக்குவார்.

வேணம்னா ஒன்னு பண்ணலாம் கேது ராகு சமசப்தகத்துல இருக்கிறதால மஞ்ச சால்வைய தூக்கிப்போட்டுட்டு மேற்சொன்ன ஒரு மணி நேரம் கருப்பு சால்வை அணியலாம். பெரியார் சம்பந்தப்பட்ட இடத்துல ராத்தங்கலாம்..

என்னைக்கேட்டா அல்டிமேட் பரிகாரம்:

அந்த காலத்து வானப்ரஸ்தம் மாதிரி தாளி என் சொச்ச வாழ்க்கைய பெரியார் கொள்கைய பரப்ப உபயோகிக்கப்போறேன்னுட்டு கருப்பு சால்வையோட ரோட்ல இறங்கிர்ரதான். அழகிரியா ஸ்டாலினாங்கறதை தொண்டர்கள் முடிவு செய்யட்டுமே.

ஜாதக உதவி: வகுப்பறை

Thursday, December 30, 2010

கலைஞருக்கு நித்யானந்தா கடும் எச்சரிக்கை

ஒரு தாட்டி ஒரு  ஆனைக்கு  காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சாம். அப்போ ஒரு எலி வந்து "ஒரே தாட்டி ப்ளீஸ்" னு தக்ஜம் பண்ண பார்த்துச்சாம். நம்ம தாத்தாவோட (கலைஞர்) நிலைமையும் அப்படி ஆயிருச்சு.  கில்மா வீடியோ புகழ்  நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்துல பேட்டி கொடுத்தாராம்:

கலைஞர் கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு லெட்டர் எழுதினதாவும் தான் நிரபராதினு நிரூபிக்க உதவனும்னு கேட்டு கடிதாசு போட்டதா சொன்னாராம்

அதுக்கு தாத்தா கிட்டேருந்து பதில்வரலேன்னும் சொல்லி  கீறாரு.அதோட விட்டாலும் பரவால்லை.

பக்தர்கள் கொதிச்சுப்போயிருக்காய்ங்களாம். நித்யாதான் "ஓம் சாந்தி"ன்னுட்டுஅடக்கி வச்சிருக்காராம்.

கலைஞர் தன் கடிதம் மேல  நடவடிக்கை எடுக்கலைன்னா கன்னியாகுமாரிலருந்து லட்சக்கணக்கான பக்தர்களோட பாதயாத்திரை செய்வாராம்.

கலைஞர் அவர்களே,

எப்படியும் ராஜா ராஜினாமா, சிபிஐ ரெய்டு விவகாரங்களால இனமானம், மானிலத்தில் சுயாட்சி, வடவர் ஆதிக்கம் இத்யாதிக்கெல்லாம் உசுரு கொடுத்திட்டிங்க. வேலையோட வேலையா மஞ்ச சால்வையை தூக்கிப்போட்டுருங்க. ஒரு கருப்பு சால்வைய போர்த்திக்கிட்டு  நித்யானந்தா மாதிரி டுபாகூர் சாமியார்ங்களை கிழிக்க புயல் வேக சுற்றுப் பயணம் ஒன்னு துவங்கிருங்க..


இப்படியே விட்டா   நித்யானந்தா "விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்னு"  கூட  அறிவிப்பார் போல..


பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:


* நான் நிரபராதி ( அடங்கொய்யால)

* வீடியோ எல்லாமே மார்ஃபிங் ( தோ..டா)

*ஆசிரமத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நான் தான் கேமரா வச்சேன் ( தான் திருடி பிறனை நம்பாங்கறது சரியா போச்சு)

* சி.டியை வெளியிடாம இருக்க கோடிக்கணக்குல டிமாண்ட் பண்ணாங்க அவிக ஆருன்னு நேரம் வரப்போ சொல்வேன் (தேர்தலுக்கப்பாறமாவா?)


எச்சரிக்கை:
அண்ணே .. நேத்து நள்ளிரவு ஒரு கில்மா சிறுகதை போஸ்ட் பண்ணியிருந்தேன் படிச்சிங்களா? இல்லைன்னா இங்கன அழுத்தி படிச்சுருங்க

Monday, September 20, 2010

போலி டாக்டருக்கு உதவிய கலைஞர்

ரெண்டு டாக்டர்களை வம்பிழுக்கிற இந்த பதிவோடயே வெளியாகியுள்ள இன்றைய விறு விறு சுறு சுறு பதிவுகள்
1.மசூதி -மந்திர் பிரச்சினைக்கு தீர்வு பதிவுக்கு வந்த ஒரு மறுமொழிக்கு என் விளக்கம்

2.அய்யர் தி கிரேட்டுங்கற பேர்ல ஒரு அராத்து போட்ட பதிவுக்கான எதிர் வினை

3. சித்தூரை வட்டமடித்த ஹெலிகாப்டர்


இனி கலைஞர் கவுசர் மேட்டருக்கு போயிரலாமா..

வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதான் பணத்தை அள்ளி வீசி தனியார் சேனல்ஸ்ல ஸ்பான்சர்ட் ப்ரோக்ராம்ஸ்ல யானை மேல ஏறிவந்து தரிசனம் கொடுத்து சுய தம்பட்டம் அடிக்கிறாரே. தேவி மாதிரி வார இதழ்கள்ள இரண்டு பக்கம் ஆப்ளிகேஷன் ஐட்டம் , ஒரு பக்கம் விளம்பரம்னு அசத்தறாரே.  புதுசா கட்டிப்பிடி வைத்தியம்னு ஒன்னை ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. அதாவது மரத்தை கட்டிப்பிடிச்சா போதும் பலன் கிடைச்சுருமாம்.

இவர் தெய்வீக மருத்துவம்ங்கற பேர்ல ஒரு பத்திரிக்கையும் நடத்தறாரு.  பத்து வருசத்துக்கு முன்னாடி தேவி வார இதழ்ல உதவி ஆசிரியர்கள் தேவைனு ஒரு விளம்பரம் வந்தது. கல்யாணமாகி 9 வருசம் ஆகி புது (?)  பெண்டாட்டி மோகமெல்லாம் தீர்ந்து போய் "தாளி பைசால தான்  பரமாத்மா  இருக்காருங்கற மன நிலைல இருந்த நானும் அப்ளை பண்ணேன்.

(இந்த மன நிலை 2 வருஷத்துக்கு ஒரு தாட்டி வரும். பணம் வரவும் புது பிரச்சினைகள் வரவும் கரீட்டா இருக்க .அய்யய்யோ இந்த பணமும் வேணாம் இந்த லொள்ளும் வேணாங்கற முடிவுக்கு வந்துருவன்)

அவரோட மார்க்கெட்டிங்க் டெக்னிக் வெரி சிம்பிள். ரெண்டு கட்டு காசினி கீரைய எடுத்துக்கிட்டு காரை போட்டுக்கிட்டு சென்னை போயிருவாரு. அது சென்னை போ சேர்ரதுக்குள்ள வெயில்+  டீசல் சூட்டுக்கு கலைஞர் .........முகம்  மாதிரி தொங்கி போயிரும். இருந்தாலும் அதை கலைஞருக்கு கொடுத்துட்டு ஒரு கலர் படம் எடுத்துக்கிட்டு வந்துருவார். மீடியால கலைஞரோட சிரிப்பார். உபரியா அப்பப்போ மூப்பனார் எட்ஸெட்ரா. அண்ணா திமுக ஆட்சி காலமாயிருந்தா இந்திர குமாரி. மறுபடி கலைஞர்  ஆட்சி வந்துட்டா இ.கு படம் கார் ஷெட்டுக்கு போயிரும்.
இவரோட இன்னொரு ப்ரமோட்டர் ஞான சேகரன். அப்பப்போ சட்டமன்றத்துல காசினியை பத்தியும் ,காசினி டாக்டரை பத்தியும் கேள்வி எழுப்புவாரு.


தெய்வீக மருத்துவத்துல 9 மாதம் வரை குப்பை கொட்டினேன். அப்போ ஏதோ தோல் தொழிற்சாலைல வேலை பார்த்த கவுசர் எப்படி தெய்வீக மருத்துவரானார். கவுசரோட மூலிகை அறிவென்ன? அவர் வெற்றிக்கு பின்னாடி இருக்கிற சதி என்ன? அவருக்கு அரசாங்கம்  கன் மேன் கொடுக்க காரணம் என்ன? (இப்பவும் இருக்காரா?)  ஒரு கன்மேன் எப்படி தன்னை தானே சுட்டுக்கிட்டு செத்தாரு.  ஊருக்கெல்லாம் மூலிகை  வைத்தியம் பண்ற கவுசர் தனக்கு நோய் வந்தா மட்டும் எங்கே போவார்.


இவரோட படாடோபமான விளம்பரங்களை பார்த்து வந்த நோயாளிகள் எப்படியெல்லாம் ஏமாத்தப்பட்டாங்க.  நக்கீரன்ல இவரோட வண்டவாளம் ஏன் தண்டவாளம் ஏறுச்சு. இதுக்கு பின்னாடி இருக்கிற கதைஎன்ன? அப்புறம் நக்கீரன் ஏன் கவுசர் கதைய ஃபாலோ அப் பண்ணல?

கவுசர் ஆஸ்பத்திரில ஏன் எல்லா எம்ப்ளாயிசும் பெண்களாவே இருக்காங்க. இதையெல்லாம் நேர்ல பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இதையெல்லாம் ஒரு தொடர்பதிவா போட்டா எப்படியிருக்கும்? 

இவரோட பிசினஸ் ப்ரமோட்டிங் ஃபார்முலாவை மொக்கை பண்ணது சந்திரபாபுதான். தமிழ் நாடு போலவே ஆந்திராவுலயும் கடைவிரிக்கத்தான், தன்னோட பிரதாபங்களை தெலுங்குல டப் பண்ணத்தான் என்னை கட்டி அழுதுக்கிட்டிருந்தாரு.

ஆனால் இவர் போய் அரசு மூலிகை பண்ணையில பத்து நாள் போல தங்கியிருந்தும் சி.எம் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காம,  வாந்தி பேதியாகி வாணியம்பாடிக்கு  குப்பையா வந்து சேர்ந்தாரு.

அப்பாறம் இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணி ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டு வந்தாரு. இருந்தாலும் பாவம் கவுசருக்கு கதிகலங்கி போய் அந்த பாபத்தே வேணாம்னு விட்டுட்டாரு.

கவுசர் கெட்டு நொந்து போயிருக்கிற இந்த கால கட்டத்துல இந்த இழவையெல்லாம் தொடர்பதிவா போடறதை  சமூக அக்கறை உள்ளவுக கேள்விகளா போட்டு தாக்கினா பதில் கொடுத்துட்டு சுட்டியா கழண்டுக்குவேன்.

உடு ஜூட்.

Tuesday, August 17, 2010

மிஸ்டர் கலைஞர்! டேக் கேர் ! !




அண்ணா ஏ தாழ்ந்த தமிழகமேன்னு தலைப்பு வச்சாப்ல ஏ (கருணையில்லாத) கருணா நிதியே! ன்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ஏ. கருணா நிதின்னு ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இருக்காரேனு ஞா வந்தது. விட்டுட்டன். மிஸ்டர் கருணா நிதின்னு வைக்கலாம்னு பார்த்தேன். வேலூர் - சித்தூர் பயண நேரம் ரெம்ப குறைவா இருக்கவே விட்டுட்டன்.

நம்ம உத்தேசம் யாரையும் வெறுமனே கிழிக்கறதோ அவமானப்படுத்தறதோ இல்லிங்கண்ணா. நம்முது கைப்புள்ள கேரக்டர். "என்னங்க முருகேசன் ! வடிவேலுவை பி.எம் ஆக்க எதுன ஸ்கெட்ச் இருக்கானு கேட்டா அதுக்கும் மாஞ்சி மாஞ்சி ஐடியா கொடுக்கிற பார்ட்டி. தாத்தா மேல இன்னம் நமக்கு கவுரதை ,மரியாதையெல்லாம் மிச்சமிருக்குங்கோ.அதனாலதான் கலைஞர் தன்னோட வாழ்க்கை வரலாறை திருத்திக்க சஜஷன் தரேன்.

குரங்குக்கு கூடு கட்டிக்க சஜஷன் கொடுத்த குருவி கதையாயிர போவுதுன்னு உதறல் இருந்தாலும். தாத்தாவே தான் சொல்லி வச்சிருக்காரே. " கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை" அப்போ "மாவீரன்" (ரஜினி) கதி கூட அவ்ளதானா?

தாத்தா மேல இன்னமும் கொஞ்சூண்டு நம்பிக்கை ஒட்டிக்கிட்டிருக்க முக்கிய காரணங்கள் ரெண்டு ஒன்னு எமர்ஜென்சியை எதிர்த்தது. ரெண்டு எதிர்கட்சில இருந்தப்பயாச்சும் இலங்கை மேட்டர்ல ஆக்டிவா இன்டராக்ட் ஆனது.அதுக்காக ஆட்சியை இழந்தது. உபரியா மாறன் ப்ரதர்ஸ் உள்ளடி வேலையில இறங்கினப்ப

குருக்ஷேத்து அர்ஜுனன் மாதிரி பந்தம்,பாசம் எல்லாத்தயும் தூக்கி கூவத்துல போட்டுட்டு பதறடிச்சது.

காலேஜ்ல பசங்க கல்லூரி ஆரம்பமான நாள்ள இருந்து கடலை போடறது,ராக் பண்றது, பேட்ச் மெயின்டெயினென்ஸ் , பீடி,சிகரட்,பான்,பீடா, பப்,பார்ட்டினு காலத்தை கழிச்சுட்டாலும் காலேஜ் டே ,ஃபேர் வெல் ஃபங்க்ஷன் வந்துட்டா ஒரு மாதிரி ஒரு டீலாயிருவாய்ங்க. அதுலயும் ஃபைனல் இயர்னா கேட்கவே தேவையில்லை. காலேஜ் பக்கம் ஒதுங்காத பசங்க கூட அட்லீஸ்ட் பிட் பிரிப்பரேஷன்லயாவது இறங்கிருவாங்க

தாத்தா ஆட்சியோட இறுதிகட்டத்துல மட்டுமில்லை ஆயுளோட இறுதி கட்டத்துலயும் இருக்காரு. "சாகறப்ப சங்கரா சங்கராங்கறான்" ஒரு சொலவடை உண்டு. அதாவது வாழ் நாள் எல்லாம் பஞ்சமாபாதகங்கள் பண்ணிட்டிருந்தவன் கூட சாகற சமயத்துல கடவுளை நினைச்சு ஸ்வர்கத்துல கர்சீஃப் போட்டு வைக்க பார்க்கிறானு அர்த்தம்.

கீதைல கிஷ்டர் மரண தருவாயில் என்னை நினைத்தவன் என்னையே அடைகிறான்னு ஷார்ட் கட் ரூட்டெல்லாம் போட்டுவச்சிருக்காருன்னா. அதுமாதிரி கலைஞர் ஒரு நூறு தாட்டி டபுள் ப்ரமோஷன் அடிச்சு பெரியார், அண்ணா க்ரூப்ல சேர்ந்துர்ரதுக்கு ரூட் போடறேண்ணே.

திருக்குவளை சீர்த்திருத்த சிறுவர் சங்கம், நாடகம், முரசொலியை கையில எழுதி கைல கொண்டு வித்தது, காப்பரேஷன் எலக்சன்ல தி.மு. க வை செயிக்க வச்சு அண்ணா கையால கணையாழி வாங்கினது, அண்ணாவுக்கு இரங்கல் கவிதை "உன் இதயத்தை இரவலாக கொடுத்து செல் அண்ணா" - பி.ஜு பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்பு ட்ரை பண்ணப்ப போட்ட நியாயமான நிபந்தனைகள் - 13 வருஷம் கட்சியை கட்டிக்காத்தது - பூமாலைங்கற வீடியோ கேசட்லருந்து சன் டிவியை வளர்த்தெடுத்தது இப்படி எத்தனையோ பொன்னேடுகள் தாத்தா லைஃப்ல இருக்கு.

நீண்ட ஆயுள் படைச்ச ட்ரெண்ட் செட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் அவுட் டேட்டடாயிருவாய்ங்களாம். நான் தாத்தாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னேதான். சரித்திரம் படைச்ச நீங்க இப்படி உங்க புகழையெல்லாம் இழந்து தரித்திரனா போய் சேரனுமான்னுதான்.

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்னு அண்ணா,காமராஜர் சமாதில ஏத்திவச்சுட்டா போதாது பாஸு.ஏழை சனங்க வாழ்க்கையிலயும் ஒரு சிம்னி விளக்காவது ஏத்துவைங்க

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உங்க ஸ்டைல்ல சொன்னா நடந்தவை நடந்தவையா இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நீங்களும் எங்க ஊர் திட்டத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு காப்பியடிச்சிங்க. சந்திரபாபு கிட்டருந்து உழவர் சந்தை, நமக்கு நாமே, ஒய்.எஸ்.ஆர் கிட்டருந்து 108 சேவை, காப்பீடு திட்டம்.

ஊர் பிள்ளை கிணத்துல இறங்கி வந்த பிறவாவது அழம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்ளை பண்ணியிருக்கலாம். ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கிறிங்க. நிர்வாகத்துல புலின்னு ஒரு பட்டம் வேற இருக்கு.

ராமதாசு காங்கிரஸு தலைமைல கூட்டணி வரணுங்கறாரு. யானை இளைச்சதும் எலி பும்ஸவனத்துக்கு ( ஃபர்ஸ்ட் நைட்) முகூர்த்தம் கேட்ட கதையா இருக்கு.

காங்கிரசுக்கு 100 சீட்டு வேணமாம். டெப்புட்டி சி.எம் வேணமாம். பார்த்திங்களா தாத்தா நீங்க என்னவோ வயசான காலத்துல எதுக்கு ரிஸ்குன்னு தமிழினத்தையே பலி கொடுத்திங்க. வடவர் ஆணவப்போக்கை பார்த்திங்களா?

கல்கில தலையங்கம் எழுதறாய்ங்க.ராமதாஸு சொன்னது கரீட்டாம்.அதிமுக,திமுக நிழல் படியாத கட்சிகள் ஒன்னு சேரனுமாம். ஆக ஆமா நான் பாப்பாத்திதானு அறைகூவினாலும் ஜெயலலிதா அம்மா கூட அவாளுக்கு எங்கனயோ சரிய்யா ஆப்பு வச்சாப்ல தான் இருக்கு.

ஆனா பாருங்க அடுத்த பாராலயே விஜயகாந்த விட்டுர கூடாதாம். என்ன ரகசியம்னா விஜயகாந்த் பா.ஜ.கவோட போராட்டத்தை கையிலெடுத்துட்டாரு.

கலைஞரய்யா உங்களுக்கென்னா பாராட்டு விழா தானே வேணம் ( வயசாயிட்டா கிழவாடிங்க சின்னப்புள்ளத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களாம்) நல திட்டம் ,இலவசம்லாம் நிறுத்திருங்கனு சொல்லமாட்டேன். தில்லில காங்கிரசுக்கு சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்கனு சொல்லமாட்டேன்.

அழகிரியை கட்சிக்கு தலைவராக்கி,ஸ்டாலினை சி.எம்மாக்கிட்டு - உங்க நிலைக்கு நடைபயணம் கூட தேவையில்லை. அதான் வீல் சேர் இருக்கே . இங்கன இருக்கிற மானமுள்ள தமிழனையெல்லாம் திரட்டிக்கிட்டு தில்லிக்கு புறப்படுங்க வீல் சேர் பயணம். உங்க பயணம் தில்லி எல்லைய தொடறதுக்குள்ள சோனியாம்மா இத்தாலி நோக்கி பறக்கலைன்னா அப்பாறம் வந்து என்னடா நாயேனு கேளுங்க.

அய்யா! அரசியல் சாணக்கியரே மந்தைல நுழைஞ்ச நரி மாதிரி காங்கிரஸ் தமிழ அரசியல்ல நுழைய பார்க்குது. சிங்கமும் 4 எருமைகளும் கதை தெரியும்ல. போயஸ் கார்டனுக்கு ஒரு கால் போடுங்க . காங்கிரஸ் களவாணிகளை சேர்த்துக்காதம்மா நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை அப்பாறம் பார்த்துப்போம்னு ஒரு பேச்சு சொல்லுங்க
எப்படியும் அடுத்த தேர்தல்ல திமுக காலி. இந்த கடைசிகட்டத்துலயாவது ஒய்.எஸ்.ஆர் தன் ரெண்டாவது ரெஜிம்ல செய்ய நினைச்ச அரசோட டெலிவரி மெக்கானிசத்தை சரி பண்ணிருங்க. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கொடுங்க, அதிகாரம் கொடுங்க. எங்க ஸ்டேட்ல முதியோர் உதவித்தொகைய நகராட்சி காரவுக வீடு தேடி கொடுத்துட்டு போறாய்ங்க. உங்க ஸ்டேட்ல அன்புடன் தமிழக முதல்வர்னு சீல் பொட்டு எம்.ஓ பண்ணிக்கிட்டிருந்திங்க. மாத்துங்கய்யா.

வீடு போ போங்குது. காடு வா வாங்குது. இப்பயாச்சு மாறுங்க மாத்துங்க. உங்க வாழ்க்கை வரலாற்று பொன்னேடெல்லாம் செதிலடிச்சு போச்சு .கட்டக்கடைசியா ஒரே ஒரு வரியாச்சும் உங்க வாழ்க்கை வரலாறுல நல்லதா இடம் பெறட்டும்.

நீங்க இத்தனை தாட்டி சி.எம் ஆகி பரிபாலனம் பண்ணிங்களே இந்த அரசு இயந்திரத்தை கட்டி எழுப்பினது ப்ரிட்டீஷ் காரன். அந்த காலத்து லெட்டர் ப்ரஸ் மாதிரி, கக்கூஸு மாதிரி நாறுது. இதை தூக்கி போட்டு புது இயந்திரத்தை இன்ஸ்டால் பண்ணிட்டு போங்க.

பல காலத்துக்கு மிந்தி ஏதோ தீபாவளி மலர்ல மிட்டாய்னு ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் . திவால் பார்ட்டி. செலவை சுருக்க மட்ட சரக்கு, மட்ட சோறுன்னு விழுங்கி வைக்கும். உள்ளாற போனது வெளிய வந்துராம படக்குனு ஒரு மிட்டாயை வாயில திணிச்சுக்கும். அந்த பார்ட்டிக்கு ஒரு பட்லி.

மிட்டாய்ய் பார்ட்டியோட மனைவி தன்னை தேடிவந்து கதறிட்டு தற்கொலைக்கு ரயிலை தேடி ஓட அவளை விலக்கிட்டு தான் செத்து போகுது அந்த பட்லி. நாற வாழ்க்கைய வாழ்ந்த அவள் மிட்டாய் மாதிரி ஒரு வேலைய செய்துட்டான்னு கதாசிரியர் கதைய முடிக்கிறார்.

தாத்தா .. உதவாக்கரை தமிழ் படங்களுக்கு வசனம் எழுதினது போதும், வசன மழை பொழிஞ்சது போதும். ஒரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி சரித்திரத்துல இடம் பிடிக்க ஒரு கர்சீஃபை கொடுத்திருக்கேன். இதை உங்க தலைல போட்டுக்கிட்டு பாய்ங்களை ஏமாத்துவிங்களோ? இல்லை சனம் தலை மேல போட்டு ஒழிச்சு கட்டிருவிங்களோ ? உங்க சவுரியம்.

பி.கு:
வேலூர்லருந்து டாக்ஸி மட்டும் அனுப்பிராதிங்க தலைவா! (அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த வித்யாசமெல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது) இந்தியாவை பணக்கார நாடாக்க ( சன் க்ரூப் ரேஞ்சுக்குஇல்லைனாலும்) ஆப்பரேஷன் இந்தியா2000 ன்னிட்டு ஒரு ப்ளான் வச்சிருக்கேன். இதை பத்தி கழுகுங்கற வலைச்சரத்துல பதிவு போடனும். நம்ம கச்சேரிய அப்பாறம் வச்சிக்கலாம். நான் வடிவேலு மாதிரி. எங்க போகபோறேன்.

Thursday, April 1, 2010

அடுத்த விக்கட் நாராயணி பீடம் ?


இது ஜாதகபலனில்லே. வெறுமனே குட்டிசைத்தானை வச்சிக்கிட்டு ஃபிலிம் காட்டற பார்ட்டி இதுனு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டதால பக்காவா சொல்றேன்.


இன்னைக்கு இந்த பதிவுல திருமலைக்கோடி சாமியாரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரு அக்பரு கவுசருன்னு கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. சந்தர்ப்பம் வரப்போ எடுத்துவிடறேன்.

பை தி பை "உனக்கு 22 எனக்கு 32" தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் தனியா போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. உங்க கருத்த தவறாம தெரியப்படுத்துங்க. பெரிசா ஒன்னும் எழுதவேணாம். தூள் ! பரவால்ல கண்ணா ! மொக்கை பண்ணிட்டயேனு ரத்தின சுருக்கமா போட்டா கூட ஒரு ஐடியா வந்துரும்


ஸ்வாமி நித்யானந்தா ( நைட் கிளப்புல ஜீனும்,டீ ஷர்ட்டுமா குட்டிகளோட கெட்ட ஆட்டம் போட்டாரே அதே பார்ட்டிதான்.. கரெக்ட் நடிகை ரஞ்சிதா கூட அஜால் குஜால் வேலை பண்ணி வசமா மாட்டிக்கிட்டு சுஜாதாவோட ஓடாதே நாவல் மாதிரி ஓடிக்கிட்டே இருக்காரே அதே நித்யாங்க - இன்னுமென்ன ஆனந்தா கீனந்தான்னிக்கிட்டு)
சமாச்சாரம் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டிருந்தப்ப ஆமாங்க நீங்கதான் தில்லு துரையாச்சே திருமலைக்கோடி நாராயணி பீடம் ஓம்சக்தி அம்மாவை பத்தி எழுதக்கூடாதானு நிறைய பேர் உசுப்பி விட்டாய்ங்க.. ஆனாலும் வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோனு எழுத முடியாதே. ஓம்சக்தி அம்மாவோட டேட் ஆஃப் பர்த் இருக்கு. வெறுமனே நியூமராலஜிலயே தாளிச்சுரலாமா? இல்லே பக்த கோடிகள் யாராவது அம்மாவோட டைம் ஆஃப் பர்த் குடுக்கிறாங்களா பார்ப்போம்.

ஜூவில சில வருஷங்களுக்கு முன்னாடி விடுதலைப்புலிகளோட பணமெல்லாம் ஆயுத கம்பெனிகளூக்கு இங்கிருந்துதான் ட்ரான்ஸ்ஃபர் ஆறதா ஒரு ஐட்டம் போட்டாங்க .உங்களுக்கும் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த சாமியார் படங்க பண்றதெல்லாம் ஜஸ்ட் அஞ்சு வேலைதான் போல.

1.ஆரூடம் சொல்றது:
இதை எப்படி பக்காவா சொல்றேன்னா. சவுண்ட் பார்ட்டியா இருக்கிற ஓம் சக்தி பக்தர்கள் எல்லாம் தங்கள் வீட்டு கல்யாணத்துக்கு பங்காரு அடிகளார் கிட்டே உத்தரவு (?) வாங்கறது சகஜம் .அப்பா அம்மால யாரோ ஒருத்தரு நம்ம க்ளையண்டா இருந்தா ஜாதகத்தை தூக்கிக்கிட்டு முகூர்த்தம் வச்சிக்க நம்ம கிட்டயும் வருவாங்க. நானெல்லாம் சொந்தமா முகூர்த்தம் வைக்கிற அளவுக்கெல்லாம் புலி கிடையாது. ஏதோ தாராபலம் . கல்யாணமாற மாசத்துலயாவது குரு,சுக்கிரபலம் இருக்கிற மாதிரி ரெடி மேட் முகூர்த்தம் பார்த்து வச்சி தர்ரது வழக்கம். நாம வைக்கிற முகூர்த்தமும் பங்காரு அடிகளார் வச்ச முகூர்த்தமும் அப்படியே பச்சக்குனு டேலி ஆகும். இது எப்படி பாசிபிளாகுது. ஒன்னு நானும் ஓம்சக்தி அருள் பெற்றவனா இருக்கனும். இல்லன்னா பங்காரு அடிகளார் வீட்லருந்து வரும்போதே பஞ்சாங்கம் பார்த்து முகூர்த்தத்தை ஞா வச்சிக்கிட்டு வந்திருக்கனும். முன்னதுக்கு சாத்தியமே இல்லை. ஓம் சக்தியோட அருள் மட்டும் சம்பூர்ணமா இருந்திருந்தா தாளி .. நித்யானந்தா மாதிரி ஆளுக்கெல்லாம் பப்ளிக்ல அறுந்து விழறாப்ல செய்திருப்பேன். ஸோ பின்னதுக்குதான் சான்சு அதிகம்

2. சவுண்ட் பார்ட்டிங்களுக்கு குட்டிகளை ஏற்பாடு பண்றது

3.பதவி வெறியர்களுக்கு யாகங்கள் நடத்தி கொடுக்கறது
4. தன் பக்தர்களான தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகளுக்கிடையே புரோக்கர் வேலை. பைரவி மூலமா அரசாங்க வேலைகளை முடிச்சு தர்ரது
5.சட்ட விரோத க்ரூப்ஸுக்கு ஷெல்டர், போதை மருந்து கடத்தல், சப்ளை,வருமான வரி ஏய்ப்புக்கு பண்ண உதவுறது.

இதுல நாராயணி பீடத்துக்கு ஏதும் விதிவிலக்கு இருக்கும்னு நான் நினைக்கல.
உண்மையான சாமிக்கு மீடியா வெளிச்சம் தேவையில்லை. அதுவும் லட்சம் லட்சமா கொட்டி வண்ண விளம்பரங்கள் தேவையில்லை.

ஆன்மீகத்தை வியாபாரமாக்கி முதல் வச்ச பார்ட்டி லாபம் ஈட்டாதுனு கியாரண்டியே இல்லை. தங்க கோவில் கான்செப்ட் வடிகட்டின சேடிசம். தலா வெறும் 5 சவரன் நகையிருந்தா போதும் கு.ப மக்கள் தொகைல பாதியா இருக்கிற பெண்கள்ள பாதி பேருக்கு கல்யாணமாகி ஒழுங்கா குப்பை கொட்டுவாங்க. இது நாட்டு நிலைமை. இந்த நாட்டுல தங்க கோவில் கட்டறவனை சேடிஸ்டுன்னு சொல்லாம வேற என்னான்னு சொல்றது.

ஆசிரமத்துல மூத்திரம் பெய்யறதுக்கு முதற்கொண்டு கட்டணம் ( உபரி தகவல்: மேல் மருவத்தூருக்கு லேட்டஸ்டா உகாதிக்கு போய் வந்தவங்க சொன்னபடி உச்சா போறதுக்கு ரூ.3 கட்டணம்) உண்மையான ஆன்மீகத்தை வளர்க்க ஆசிரமம் நடத்த தேவையில்லே. கண்டதுக்கும் டோக்கன்,டிக்கட் தேவையில்லே. முக்கியமா அரசியல் தலைவர்களோட அறிமுகம் தேவையே இல்லை. மனைவிய மேயராக்க தேவையில்லை.

( பங்காரு அடிகளாரோட மனைவி மேயரானதால பர்சன்டேஜ் இல்லாம காண்ட் ராக்ட் கிடைக்குதா? சம் திங்க் இல்லாம பில் பாஸ் ஆகுதா?)

திருமலைக்கோடில இன்னும் ஒரு படி முன்னால போய் சாமியார் படம் ப்ரிண்ட் பண்ணி டீ ஷர்ட்டெல்லாம் விக்கிறாய்ங்களாம்.. பிரபு தேவா பாட்டு ஒன்னு வருமே" குண்டு மல்லி ஒத்தரூபா.. உன் தலைல வச்சா நூறு ரூபா"ங்கற மாதிரி சாமியார் படம் ப்ரிண்ட் ஆனதுமே டீஷர்ட் விலை எகிறிக்கும்.

பார்ட்டி ஆஃபீஸ் முன்னாடி தலைவர்/தலைவி படம் போட்ட பேட்ஜ் விக்கிறவனுக்கும் இவிகளுக்கும் என்ன ராசா வித்யாசம்?

இந்த உகாதி தொடர்பா மேல் மருவத்தூர் போன சனம் சொன்ன ஒரு தகவல். தொண்டு செய்யறவங்க போறதுக்கு (ஃப்ரீ சர்வீஸ்) தனி வழி இருக்காம். ஒரு பக்தர் விசயம் தெரியாம அந்த வழில பூந்துட்டாராம். ஒடனே அங்கே இருந்த செக்யூரிட்டி அந்த பக்தரை பிடிச்சு அடிச்சி கிழிச்சிருக்காங்க.

பதிவோட ஆரம்பத்துல திருமலைக்கோடி சாமியார் குட்டிசைத்தானை வச்சி வித்தை காட்டறாருனு சொன்னேன். அது மை ஓன் எக்ஸ்பீரியன்ஸுன்னும் சொன்னேன். அதை சொல்லிரலாம்.

நான் ஒரு லோக்கல் ஃபோர்ட் நைட்லி நடத்தறது தெரிஞ்ச விசயம். அதனோட ப்ரிண்டிங் வேலூர்லதான் நடக்கும். ஏதோ அசந்தர்ப்பமாகி வேலூர் போக லேட்டாயிருச்சு. எப்படியோ ப்ரஸ் காரரை ஃபோன்ல பிடிச்சு சி.டி.யும் காசும் கொடுத்துட்டு ராத்திரி அச்சடிச்சு, விடியல்ல பார்சலை பஸ்ஸுல போட்டுருங்கன்னிட்டு திரும்பிட்டோம்.

திருமலைக்கோடி போயிரலாம் . ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல க்யூ காம்ப்ளெக்ஸ்ல தங்கிட்டு விடியல்ல வந்து நாமே பார்சலை பிக் அப் பண்ணிக்கலாமே"ன்னு கூட வந்த நண்பர் ஐடியா கொடுத்தார்.

த பாருப்பா நீ விடிஞ்சதும் நான் சாமியார் வேட்டிக்குள்ள பூந்துட்டு தான் வருவேன்னா நான் ஒத்துக்கிட மாட்டேன். அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே சொல்லிருன்னேன்.

நண்பர் " தூ தூ அதெல்லாம் ஒன்னுமில்லேன்னிட்டார். திருமலைக்கோடி கிளம்பினோம்.

மெயின் கேட்டை தாண்டினோம். செக்யூரிட்டிக்கு பதில் சொல்லிட்டு க்யூ காம்ப்ளெக்ஸ் உள்ளாற அடி எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ள என்னென்னவோ ஆயிருச்சு.

இங்கே ஒரு சின்ன க்ளேரிஃபிகேஷன் தரனும். நான் 1984 ல இருந்து 1986 வரை வாழ்ந்த வாழ்க்கை வேற. அதுக்கப்புறம் வாழ்ந்த வாழ்க்கை வேற. அப்பப்போ பித்து பிடிச்சு மந்திரம், மாந்திரீகம், யந்த்ரம், கர்ண பிசாசு, குட்டி சைத்தான் அது இதுனு டைவர்ட் ஆனாலும், ஆஞ்சனேயரை, அவருக்கு ரொம்ப பிடிக்குங்கறதுக்காக ராம நாம ஜபத்தை மட்டும் விட்டதே இல்லை.

விவேகானந்தர் ஒரு இடத்துல சொல்றார் . நீ ஒரே விஷயத்தை 14 வருசம் சொன்னா அந்த வார்த்தைக்கு தெய்வீக சக்தி வந்துரும்.

மேலும் நான் பழகின மந்திரவாதிகள் எல்லாருக்குமே ஆஞ்சனேயருன்னா டர்ருதான்.
ஏண்டான்னா இவரோட சக்தி மட்டும் கொஞ்சம் வெரைட்டியான சக்தியாம். இவரோட அருள் இருக்கிற இடத்துல வேற ஏதாவது துஷ்ட சக்தி என்டரானா தன் பக்தனை அந்த இடத்தை விட்டு விலகச்செய்ய முயற்சிக்குமாம்.

அந்த பக்தன் அந்த இடத்தை விட்டு விலகலன்னா இவரோட சக்தி அந்த துஷ்ட சக்தியோட மிங்கில் ஆயி, அந்த சக்தியையும் தன் சக்தியா மாத்திக்கிட்டு ஒரு உதை விட்டா டப்பா டான்ஸாடிருமாம்.

தீவினை செய்யறவங்க போடற முதல் கண்டிஷன் தாங்கள் தீவினை செய்யபோற வீட்ல ஆஞ்சனேயர் படம், ராம நாம ஜபம் எதுவும் இருக்ககூடாதுங்கறதுதான்.

இன்னொரு க்ளேரிஃபிகேஷனும் கொடுக்கனும். சாப்பாட்டை மென்னு சாப்பிடாம மலைப்பாம்பு மாதிரி விழுங்கிர்ரது, கவுண்ட்லெஸ் டீ, சிகரட், ராத்திரியெல்லாம் கண் முழிச்சு வேலை செய்யறது இத்யாதி காரணங்களால் நமக்கு இருக்கிற ஒரே சிக்கல் மலச்சிக்கல் தான். ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் உப்பு தண்ணிய உள்ளே அனுப்பலன்னா மஷ்டு வெளிய வராது. மஷ்டு வெளிய வராம இந்த சாமி7867 வீட்டை விட்டு வெளிய வராது.

இப்போ சீனுக்கு வரேன். க்யூ காம்ப்ளெக்ஸுக்குள்ள அடி வைக்கிறேன். திடீர்னு வேத்து விடுது. அதுவும் எப்படி ஜீன்ஸ் பேண்ட் கூட நனைஞ்சு போகுது. ஒரே நேரத்துல வாமிட்டிங் சென்ஸேஷன். லூஸ் மோஷன் ஆயிர்ராப்ல ஃபீலிங். ஒரு பத்து நிமிஷம் ஆடிப்போயிட்டேன். ஃப்ரெண்டும் டென்ஷனாயிட்டான். இந்த 43 வயசுக்கு மனித பிறவிகளுக்கு சகஜமா வர்ர நோய்ங்கள கூட நெனச்சி பார்க்காத ஜென்மம் இப்படி துடிச்சா அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?

நமக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் காட்டறேன். ராம நாமம் சொல்றேன் பெப்பே. ராமரோட மூல மந்திரம் சொல்றேன் பெப்பே. படக்குனு மாத்தி யோசிச்சு கழுத்துல இருந்த ஆஞ்சனேயர் டாலரை கழட்டி ஃப்ரெண்ட் கிட்டே கொடுத்துட்டு குட்டிச்சாத்தானுக்கு சம்பந்தப்பட்ட பிரயோகத்தை எடுத்து விடறேன். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துல ரிலீஃப். எப்படா விடியும்னு இருந்து துண்டை காணோம் துணிய காணோம்னு பிச்சிக்கிட்டு வேலூர் வந்துட்டம்.

ஆஞ்சனேயரோட சக்தி தன் வேலைய காட்டிருச்சு. அடுத்த ஜூவி இதழ்ல தான் நாராயணி பீடத்தோட வண்டவாளம் தண்டவாளத்துல ஏறிருச்சு.

இந்த குட்டிசைத்தான், கர்ண பிசாசெல்லாம் செகரட் ரியேட்ல அட்டெண்டர் மாதிரி. அம்பது நூறுக்கே நாய் குட்டி மாதிரி பின்னே வரும். இதெல்லாம் டுபுக்கு வேலை. பெட் ரோல் தீர்ந்து போனப்ப வண்டிய சாச்சு கிக்கர் அடிக்கிற மாதிரி.

ஒரு நாள் அட்டெண்டருக்கு அழுத்தலன்னா ஃபைலே காணாம போயிரும். படக்குனு கை விட்டுரும். இதெல்லாம் உள்ளாற இருக்கிற தெய்வத்துக்கு கார்ட்டூன் பார்த்த மாதிரி. இதெல்லாமே தன் மேல அழுத்தத்தை குறைச்சுக்க அந்த தெய்வமே பண்ண ஏற்பாடு.

நெல் மூட்டைய எலிகள் துவம்சம் பண்ணாம இருக்க வெல்ல பொறிய இறைச்சு வப்பாங்களே அந்த மாதிரி.

உலக அழகி பெட் ரூம்ல வெயிட் பண்ணும்போது எவனாச்சும் சுய இன்பம் அனுபவிச்சா அவனை என்னன்னு சொல்றது?

அளப்பரிய கருணையோட கடவுள் காத்திருக்க இந்த டாஃபர் பசங்களை சுத்தி வர்ரவுகளை என்னன்னு சொல்றது.

போலி டாக்டருக்கு உதவிய கலைஞர்
வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதான் பணத்தை அள்ளி வீசி தனியார் சேனல்ஸ்ல யானை மேல ஏறிவந்து தரிசனம் கொடுத்து சுய தம்பட்டம் அடிக்கிறாரே. தேவி மாதிரி வார இதழ்கள்ள இரண்டு பக்கம் ஆப்ளிகேஷன் ஐட்டம் , ஒரு பக்கம் விளம்பரம்னு அசத்தறாரே. அதெப்படி தெரியாத இருக்கும். இவர் தெய்வீக மருத்துவம்ங்கற பேர்ல ஒரு பத்திரிக்கையும் நடத்தறாரு. பத்து வருசத்துக்கு முன்னாடி தேவி வார இதழ்ல உதவி ஆசிரியர்கள் தேவைனு ஒரு விளம்பரம் வந்தது. கல்யாணமாகி 9 வருசம் ஆகி புது (?) பெண்டாட்டி மோகமெல்லாம் தீர்ந்து போய் "பைசா மே பரமாத்மா" இருக்காருங்கற மன நிலைல இருந்த நானும் அப்ளை பண்ணேன். அவரோட மார்க்கெட்டிங்க் டெக்னிக் வெரி சிம்பிள். ரெண்டு கட்டு காசினி கீரைய எடுத்துக்கிட்டு காரை போட்டுக்கிட்டு சென்னை போயிருவாரு. அது சென்னை போ சேர்ரதுக்குள்ள வெயில்+ டீசல் சூட்டுக்கு கலைஞர் ......... மாதிரி தொங்கி போயிரும். இருந்தாலும் அதை கலைஞருக்கு கொடுத்துட்டு ஒரு கலர் படம் எடுத்துக்கிட்டு வந்துருவார். மீடியால கலைஞரோட சிரிப்பார். உபரியா அப்பப்போ மூப்பனார் எட்ஸெட்ரா.

தெய்வீக மருத்துவத்துல 9 மாதம் வரை குப்பை கொட்டினேன். அப்போ தோ தொழிற்சாலைல வேலை பார்த்த கவுசர் எப்படி தெய்வீக மருத்துவரானார். கவுசரோட மூலிகை அறிவென்ன? அவர் வெற்றிக்கு பின்னாடி இருக்கிற சதி என்ன? அவருக்கு கன் மேன் கொடுக்க காரணம் என்ன? ஒரு கன்மேன் எப்படி தன்னை தானே சுட்டுக்கிட்டு செத்தாரு. ஊருக்கெல்லாம் மூலிகை வைத்தியம் பண்ற கவுசர் தனக்கு நோய் வந்தா மட்டும் எங்கே போவார்.


இவரோட படாடோபமான விளம்பரங்களை பார்த்து வந்த நோயாளிகள் எப்படியெல்லாம் ஏமாத்தப்பட்டாங்க. நக்கீரன்ல இவரோட வண்டவாளம் ஏன் தண்டவாளம் ஏறுச்சு. இதுக்கு பின்னாடி இருக்கிற கதைஎன்ன? அப்புறம் நக்கீரன் ஏன் கவுசர் கதைய ஃபாலோ அப் பண்ணல?

கவுசர் ஆஸ்பத்திரில ஏன் எல்லா எம்ப்ளாயிசும் பெண்களாவே இருக்காங்க. இதையெல்லாம் நேர்ல பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இதையெல்லாம் ஒரு தொடர்பதிவா போட்டா எப்படியிருக்கும்? கமெண்ட் ப்ளீஸ்.