Sunday, February 14, 2010

மாமனாரின் இன்ப வெறி

தெலுங்கில் "பிட்டொச்சின வேளா ..கொட்டொச்சின வேளா "என்பார்கள். ஒரு கன்றோ,ஒரு மருமகளோ வீட்டுக்கு வந்து சேரும் வேளையை பொருத்து அந்த வீட்டின் தலையெழுத்து மாறும்" என்பது இதன் பொருள். மேலோட்டமாக பார்த்தால் இது பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கை ,மேல் ஷேவனிசம் அது இது என்று தோன்றும்.

ஆனால் மருமகள் என்று ஒருத்தி வீட்டில் அடி எடுத்து வைக்கும் நேரம் மாமனார் ஃபைனான்சியலாக ஓரளவு செட்டில் ஆகியிருப்பார்.( முறைப்படி வாழ்ந்திருந்தால்). இளமையின் ஊற்றில் தேவைப்படாத இரட்டை கட்டில் , ஏர் கூலர், இத்யாதியெல்லாம் வாங்கும் சக்தி வந்திருக்கும். ஆனால் மனைவி மெனோஃபஸ் கேசாக மாறி இருப்பாள்.

மருமகள் என்று ஒரு பாத்திரம் புது முகம் வீட்டில் அடி எடுத்து வைக்கும்போது மகன் இடத்தில் தன்னை கற்பனை செய்து ( படுக்கையறையில் இல்லிங்கோ. இளமைல ஈர கோவணம் இழுத்து கட்டியிருந்தாதான் மாமனாரின் இன்ப வெறி கதையெல்லாம் நடக்கும்) திருமணமான புதிதில் தான் பட்ட அவதி ஏதும் மகன் படக்கூடாது. அவன் வாழ்க்கை ஸ்மூத் கோயிங்காக இருக்க வேண்டும் இத்யாதி எண்ணங்கள் எழும்.

மருமகள் (தாய் வீட்டில் கற்றுத்தந்ததற்கிணங்க விடியல் 4 க்கோ 5 க்கோ எழுந்து தெருப்பெருக்கி தண்ணீர் தெளித்து விட்டால் "அட என்னம்மா நீ .. நீ ..போய் படும்மா.. இதெல்லாம் 7 மணிக்கு கூட செய்யலாம். அப்ப கூட உங்கத்தை பார்த்துப்பா" என்று பாசத்தை பொழிவார்.

இதை பார்க்க மாமியார் காரிக்கு ரேங்கும். ( ஒரு இனிமையான ஊடல் தான்) "ஹும்.. நானு பதினைஞ்சு வருசமா பேய் மாதிரி பாதி ராத்திரி கூட எழுந்து தெருப்பெருக்கி தண்ணீ தெளிச்சிருப்பேன். ஒரு நாளாவது இந்த பேச்சை சொன்னியாய்யா" என்று ஆரம்பிப்பார். இவர் "அடப்போடி விவரங்கெட்டவளே ..ஏதோ சின்னஞ்சிறுசுங்க ..ராத்திரி எப்ப தூங்குச்சுங்களோ என்னவோ அசந்து தூங்கற நேரத்துல எந்திரிச்சு எதுக்கு உடம்பை கெடுத்துக்கனும்" என்று சமாதானம் சொல்ல ஆரம்பிப்பார்.

தனக்கென இருந்த கவுண்டர் பார்ட்டுகள் எல்லாம் ( அதாங்க நாத்தனார் எட்ஸெட்ரா இடத்தை காலி செய்ய அந்த மாமியார் காரியின் உலகமே வெறுமையாகிப்போயிருக்க ஒரு கவுண்டர் பார்ட் வந்ததும் புது ரத்தமே பாஞ்சாப்ல இருக்கும். ஒரு சுவாரஸ்யமான போட்டி எழும்.

இதே அந்த கிழவிக்கு கிடைக்க வேண்டியது ( பலானதுங்க, பலானதுல திருப்தி ) கிடைக்காம ஏங்கி எரிஞ்சு காலத்த கழிச்சிருந்தா இப்போ போட்டி எழாது பொறாமை வரும், குரோதம் வரும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவனை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.

சரி பில்டப் போதும் நேரிடையா ரெண்டு மருமக்கள்மார் கதையை இந்த பதிவில் சொல்லி முடிக்கிறேன். காலம்: அறுபதுகள்

ராஜம்மாள் வீட்டு மருமகள் சுசீலா.இவள் அண்ணன்மார் பெரிய லாரி ஓனர்கள் (?) கணவன் தாமோதரம் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி.( இந்த ஒரு பாயிண்டை வச்சே அவரோட கேரக்டரை கெஸ் பண்ணலாம். பொதுவாவே ஆண் ஃபிசிக்கலா ஸ்ட்ராங்குன்றதால அண்டை வெளி, உலகம், நாடு, மானிலம் பத்தியெல்லாம் ரோசிப்பான், தெரிஞ்சுக்க ஆசைப்படுவான். சில பொட்டை மாரிகள் ( பொட்டை - வேஸ்டு ; மாரி: மழை) இதுக்கு மாறா இருக்கலாம் . அதெல்லாம் விதிவிலக்கு.

பெண் ஃபிசிக்கலா வீக்குங்கறதால இன்செக்யூரிட்டில இருப்பாங்கறதால தன் வீடு, வீட்டு பாத்ரூம் குழாய், புருஷன் தன் மேல வச்சிருக்கிற அன்பு இத்யாதிலயே தேங்கிருவாள். தாமோதரம் சுதந்திர போராட்டத்துல ஷேர் பண்ணிக்கிட்ட பார்ட்டின்னா ஆளு கான்ஃபிடண்ட் பர்சனாதான் இருக்கனும்.

கொக்கோ கோலா ,பெப்சி இத்யாதி பானங்கள் சந்தையில் புகாத பொற்காலம் அது . அவரது ஜெய் ஹிந்த் சோடா ஃபேக்டரி என்றால் டவுனில் அத்தனை பிரபலம்.

இந்த பாயிண்ட வச்சி பார்த்தா பார்ட்டி செல்ஃப் ரெஸ்பெக்ட், செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இத்யாதி உள்ள பார்ட்டினு கெஸ் பண்ணலாம்.

என்னதான் சோடா ஃபேக்டரி ஓனராக இருந்தாலும் தாமோதரம் பீடிதான் பிடிப்பார். சேவல் வளர்ப்பார். அவற்றுக்குள் சண்டை விட்டு ரசிப்பார். இதெல்லாம் காலை வேளையில் வென்னீர் தயாராகும் வரைதான். அவர் பூண்டுகளை உரித்து கையில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு சேவலாய் வந்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அதிகாலை நேரத்தில் வீட்டில் கிரஷ் இத்யாதிக்கு ஷர்பத் காய்ச்சுவார்கள். ஸ்டீல் அடிக் சட்டியில் (ஒரு பாத்திரத்தோட பேருங்க) கொடுத்து அனுப்புவார்கள். சுசீலா தாமோதரம் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. ஏன் எதற்கு என்று தெரியாது சுசீலா தீக்குச்சி அடுக்குவாள். தீப்பெட்டி ஒட்டுவாள். பூ கட்டுவாள். டீ பொட்டலம் போடுவாள்.

ஒரு தினம் யாரோ ஒருத்தி ஏங்கா உனக்கென்ன தலையெழுத்து என்று கேட்டாள். அதற்கு சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுத்தாள்.


பெண்களில் நிறைய பேர் இது போன்ற அற்பத்தனங்களுக்கு இறங்குவதை பார்க்கிறேன். கணவன் எதையோ சாதித்து கை நிறைய புது துணிகளுடன் வந்து பழைய துணிகளை யாருக்காச்சும் குடுத்துருமா என்றால் அதை போட்டு பிளாஸ்டிக் சாமான் வாங்குவது. வீணா போகிறதே கண்டதை கண்ட நேரத்தில் தின்பது. புருசன் கொடுத்த பணத்தை மிச்சம் பிடித்து அதை அக்கம் பக்கம் வட்டிக்கு கொடுத்து திருப்புவது. ஊசிப்போனால் மட்டுமே வேலைக்காரிக்கு குழம்பு ரசம் கொடுப்பது.

ஆண் என்பவன் வெளியுலகத்தை பொருத்தவரை மிஸ்டர் பொதுஜனம். அங்கே இவன் பாச்சா பலிக்காது. வீட்டில் ? இவன் தான் ஹீரோ. இவன் தான் கமாண்டர். இந்த ஒரு விருதுக்காகவே அவன் வெளியுலகில் கண்ட நாய் காலை பிடிக்கிறான்.அவமானங்கள் சகிக்கிறான். நாயாய் அலைந்து திரிந்து பத்து ரூ கொண்டுவருகிறான். கு.ப வீட்டில் தான் நினைத்தது நடக்கவேண்டும் என்று நினைக்கிறான். இது ஜஸ்ட் சிறுபிள்ளைத்தனம்தான். ஆனால் இதுதான் அவனை செலுத்தும் சக்தி. எதிராளியின் ஈகோவை திருப்தி செய்தால் உறவு பலப்படுகிறது. நம் ஈகோவை எக்சிபிட் செய்தால் அந்த உறவு நாறிப்போகிறது.

பெண் என்பவள் தாய் மனதுடன் கணவனின் சிறுபிள்ளைத்தனங்களை சகித்து " உங்களை கேட்காத நான் எதுனாச்சும் செய்திருக்கேனா " என்று இழுத்தால் சந்தோசத்தில் மதர்மதத்து 'சரி சரி.. பார்த்து செய். எதுனா வில்லங்கமிருக்கப்போவுது "என்றுவிடுவான் கணவன்

இந்த சின்ன ரகசியம் தெரியாது பெண்கள் சிறுவயதில் தம் தகப்பன்மார் தாலியை அறுத்தது போல் கணவனை கடுப்பேற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். தம் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்ள கணவன் திவாலானாலும் பரவாயில்லை என்று உள்ளூற விரும்புகிறார்கள்.

சரி மேட்டருக்கு வருவோம் சுசீலாவை யாரோ கேட்கிறார்கள்.".உனக்கெதுக்கு இந்த வேண்டாத வீண் வேலையெல்லாம் "( டீ பொட்டலம் ஒட்டுதல், தீப்பெட்டி ஒட்டுதல் இத்யாதி) அப்போது சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுக்கிறாள். அந்த நேரம் தாமோதரம் மதியம் சாப்பாட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கிக்கொண்டிருந்தார் போலும்.

அன்று ஒரு புதிய ஆளை பார்த்தாற்போலாகிவிட்டது எனக்கு. வெறி பிடித்தாற்போல் உள் ரூமில் இருந்து ஹாலுக்கு வந்த தாமோதரம் ஒரு கட்டு துணியை வீசியடித்தார். ஒரு அரை டஜன் உள்பாவாடைகள் , ஒரு அரை டஜன் ஜாக்கெட் பீஸுகள் . எல்லாம் புதியவை. அதற்கு பிறகு அவர் பேசியவற்றை எழுத்தில் வடிக்க முடியாது. பலான ஜோக் கண்டமெல்லாம் கடந்து ஒரு லட்சம் வருகைகளை தாண்டி நடைபோடும் கவிதை07 தடை செய்யப்பட்டுவிடும்.

அவர்கள் குடியிருந்த வீடென்னவோ வாடகை வீடுதான் . ஆனால் நீண்ட காலமாக சொந்த வீடு மாதிரி குடியிருந்தார்கள். பெண்கள் பெரியவர்களானார்கள். பெரியவள் மஞ்சுளா கருப்பு நிறம். இடது கை பழக்கம் உள்ளவள். சின்னவள் மாலா சிவப்பாகத்தான் இருப்பாள் ஆனால் தூங்கும்போது கூட நடு விரலை சூப்புவாள். ரெண்டு பேருமே அம்மா கோண்டுகள். பிள்ளையும் பெரியவனான்.ஒருவருக்கும் படிப்பு வரவில்லை. எல்லாம் பத்தாம் கிளாசோடு நிறுத்திவிட்டனர். மகன் பெரியவனாக ஆக அவன் பழக்கங்களும் பெரியதாகி வந்தன. வீட்டில்,கடையில்,அப்பா பாக்கெட்டில் தாராளமாக கை வைக்க ஆரம்பித்தான்.

குடும்பம் நொடிக்க ஆரம்பித்தது. தாமோதரம் தன் மனக்கொதிப்புகளை வெளியே கொட்ட ஆரம்பித்தார். " காமராஜ் நாட்டார்...யாரு காமராஜ் நாட்டார்" என்று ஆரம்பித்து அந்த காலத்து சம்பவங்களை தனக்கு தானே உரக்க பேசிக்கொண்டிருப்பார். ஏற்கெனவே என் அண்ணன் மார் லாரி ஓனர்களாக்கும் என்று பீத்திக்கொண்டிருந்த சுசீலாவுக்கு, கைச்செலவுக்காக டீ பொட்டலம், பூக்கட்டுதல், தீக்குச்சி அடுக்குதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற காரியங்களை செய்துகொண்டிருந்த சுசீலாவுக்கு குடும்பம் நொடித்தது மகிழ்ச்சியையே தந்திருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியில் கணவன்/குடும்பம் நொடிந்து போன போது வேறு வழியின்றி பிறந்த வீட்டு உதவியை நாடலாம். ஆனால் லக்சரிக்காகவோ, காஸ்மெடிக்ஸுக்காகவோ அவர்களை நாடுவது அவமானகரமான ஒன்று இதுவும் நிறைய பெண்களுக்கு உறைப்பதில்லை.

என் பெரியப்பா பையன் துபாய்லருந்து வந்திருந்தான்.அவன் கொடுத்தது என்று ஒன்றே காலணா களிம்பை காட்டி பெருமையடிப்பார்கள். இதில் கணவனின் ஈகோ எந்த அளவுக்கு காயப்படும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.


சுசீலா அண்ணன் மாரிடம் உதவி கேட்டு படையெடுக்க ஆரம்பித்தாள். நீங்கள் உதவி என்று படியேறாத வரை உங்களுக்கு உதவ பல்லாயிரம் பேர் தயாராக இருப்பதாக தோன்றும். ஆனால் படியேற ஆரம்பித்தபின் தான் அவர்களின் சுயரூபம் வெளிப்படும்.

இதே அனுபவம் சுசீலாவுக்கும் ஏற்பட்டது. சில மாதங்களிலேயே அண்ணன்மாரிடம் செல்ல முகம் போதாது பெரிய மகளை அனுப்ப ஆரம்பித்தாள்.


சுசீலாவின் சின்னதம்பி தம்பி ஏற்கெனவே திருமணமானவன். மஞ்சுளாவுக்கும் அவனுக்கும் 15 வயசுக்கு மேல் வித்யாசம் இருந்தும் அவளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டான். பல இடங்களில் மேய்பவன் போலும் இவளுக்கு நோய் கண்டது. அதே நேரம் பக்கத்து வீட்டு பையனுடன் காதல் நாடகமும் தொடர்ந்தது. இனி காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது என்ற நிலையில் காட்சிகள் மாறின. பக்கத்து வீட்டு பையனுக்கு சொந்தத்தில் கல்யாணம் நடந்தது. மஞ்சுளா குமைய ஆரம்பித்தாள். கண்டபடி உபயோகித்த மாமனே ப்ரொட்டினக்ஸ் வாங்கிக்கொடுத்து கழட்டிவிட்டுவிட்டான்.

குடியிருந்த வீடு சேல்ஸுக்கு வந்தது. சுசீலா தன் அண்ணன்மாரை முடுக்கி வாங்கச்செய்தாள். காலமெல்லாம் வாடகை இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தாள் போலும். கனவு நனவாக வில்லை. அண்ணன் மாரே நொடித்து போக விற்றுத்தள்ளினர்.மஞ்சுளாவுக்கு எவனோ ஒரு கிராமத்தானை பார்த்து முடித்தனர். இவள் அற்பாயுளில் போய் சேர்ந்தாள். மாப்பிள்ளைக்கே சின்னவளை இரண்டாவதாக கட்டிக்கொடுத்தனர். ஏதோ அந்த மட்டுக்கு அவள் ஒருவகையில் செட்டிலாகிவிட்டாள்.

தாமோதரம் டி.பி கண்டு இறந்தார். சுசீலா விதவையானாள். மகனை மலையாக நம்பினாள். அவனோ தாயின் கண்ணீருக்கும் கலங்காத மலையாக இருந்தான். சுசீலா சொந்தக்காரனான கவுன்சிலர் ஒருவனை பிடித்து அழுது புலம்பி மகனுக்கு முனிசிபாலிட்டி பள்ளியில் அட்டெண்டராக வேலை வாங்கினாள். அவனோ மொடா குடியனானான். எப்படியோ ஒரு ஏழைக்குடும்பத்து பெண் ஒருத்தியை மருமகளாக்கினாள்.

ஒண்டு குடித்தனத்தில் முண்டியடித்து நாட்களை ஓட்டினாள். மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவன் ஆல்கஹாலிக்கே ஆகிவிட்டான். சுசீலாவையும் டி.பி தாக்கியது போதிய பராமரிப்பு இன்றி செத்தாள். பேரன்மார் பள்ளி செல்லும் வயது வரும் முன்பே மகன் இறந்து போனான். நீண்ட போராட்டத்துக்கு பின் மகன் வேலை மருமகளுக்கு தரப்பட்டது. ஏதோ காலம் ஓடுகிறது.

இத்தனை சீரழிவிற்கும் காரணம் என்ன என்று என்னை கேட்டால் "பிட்டொச்சின வேளா கொட்டொச்சின வேளா" என்று பழமொழியை மட்டும் சொல்ல மாட்டேன்.

மகனை பெற்றவர்களுக்கும், மகளை பெற்றவர்களுக்கு தனிதனியே வகுப்பெடுத்தாகவேண்டும். இப்போதைக்கே பதிவு அனுமார் வால் கணக்காய் நீண்டு விட்டது. அடுத்த பதிவில் சந்திப்போம்.