Tuesday, February 9, 2010
அஜீத் சாருக்காகவே ஒரு தூள் கதை
ஒரு வயசான உயிரியல் விஞ்ஞானி .(இந்த ரோலை அசல் பண்றார். அசலுக்கு இன்னொரு ரோலும் இருக்கு அதைப்பத்தி அப்புறம் சொல்றேன்) .இவர் ப்ரோட்டீன்களை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்யற இன்டலக்சுவல். குறைஞ்ச விலைல ப்ரோட்டீன் தயாரிக்கனுங்கறது அவரோட லட்சியம். இவர் மனைவி வில்லேஜ் பார்ட்டி . ( இந்த ரோலை யாருக்கு குடுத்தா நல்லாருக்கும்னு அசலோட ரசிகர்களே சொல்லலாம்)
ப்ரொஃபெசர் வயசுல இருக்கிறப்ப படு கிட்டன். அப்பா , அம்மா காலி. மாமன் வீட்ல வளர்ரார். மாமன் மகளையே கட்டிக்கிறார். அவள் சரியான கட்டுப்பெட்டி. இவரோட ஸ்ரீகிருஷ்ண லீலைகளை எல்லாம் பார்த்து பேஸ்தடிச்சிருக்கிற சமயம் கண்ணாலம் கட்டிர்ராங்க. அதனால இவுகளுக்கு ப்ரொஃபசர் மேல பயங்கர சந்தேகம். பொம்பளை கண்டக்டர் இருக்கிர வுல்வா பஸ்ல கூட ஏற விடமாட்டாய்ங்க.
முதல் ஷாட் . சன் ரைஸ். அடி வானம் சிவக்குது . யூனிவர்சிட்டி போர்டை ஜூம் பண்றோம் . அப்படியே கேமரா உள்ள போகுது . படில இருந்து ப்ரொஃபெசர் இறங்கறார். ராத்திரியெல்லாம் லேப்ல ஆராய்ச்சி பண்ணிட்டு வர்ர களைப்பு , வழுக்கை தலை வாய்ல பைப், பவர் க்ளாஸ். தலை குனிஞ்சுக்கிட்டு வர்ர தலை சூரிய உதயத்தை நிமிர்ந்து பார்க்கிறார். பைப்பை ஆழ உறிஞ்சு வானத்தை நோக்கி புகை விடறார். காம்பவுண்ட்ல இருக்கிற தன்னோட காரை நோக்கி போய் அதை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு காம்பவுண்ட்ல இருந்து வெளிய வர்ரார்.
இப்போ க்ரானைட் பதிச்ச காம்பவுண்டுக்குள்ள ஒரு வீடு . ஒரு லேட்டஸ் ஹீரோயின் காதோரம் நரைச்ச முடியோட துளசி மாடத்தை சுத்தறாங்க. சுத்தி முடிச்சு ஆகாயத்தை நோக்கி பார்க்கிறாங்க. யூனிவர்சிட்டி காம்பவுண்ட்ல தலை விட்ட புகை நீலமா வந்து அந்தம்மாவ சூழுது.
ஷாட் கட் பண்றோம். இப்போ கார்ல வீட்டுக்கு வர்ர அசல் அதே கெட்டப்ல இருந்தாலும் இப்போ ரொம்ப ஷார்ப்பா, யூத்தா, க்யூட்டா இருக்காரு . லேசா விசில். அப்போ வழில
அந்த ரோடு பெங்களூர் பணசங்கரி ரோட்டாயிருந்தா நல்லது . ரெண்டுபக்கமும் பச்சை பசேல் மரங்கள்(குல்மோஹரா இருந்தா ஸ்ரேஷ்டம்) புல்வெளி. டபுள் ரோட் . டிவைடர்லயும் மரங்கள். அசல் வர்ர வழில ஒரு லேட்டஸ்ட் மேக் ஜீப் நிக்குது. பேனட்ல ஒரு ஸ்வீட்டியஸ்ட் புதுவரவு. மைனஸ் பேண்ட் தொள தொளசட்டை, பூப்போட்ட பெரிய தொப்பி, தொப்பி மேல ஒரு கோழி இறகு. அசல் வர்ர காரை நிற்க சொல்லி கைக்காட்டறா. தலையும் காரை நிறுத்தி ஸ்டைலா இறங்குது. ஜாடைலயே "என்னா"ன்னு கேட்குது. அவள் ஜீப் நின்னுபோச்சுங்கறா. தலை பேனட்டை கழட்டி எதையோ கலக்குது . இப்போ ஸ்டார்ட் பண்ணுங்குது. ஜீப் ஸ்டார்ட் ஆயிருது .
பேனட் ஸ்வீட்டி அசலோட கன்னத்துல பச்சக்குனு முத்தம் . ஷாட் கட் பண்ணா ஓப்பனிங்க் சாங்க்.
இந்த அளவுக்கு ட்ரீட் மெண்ட் கொடுத்து எழுதினா அஜீத் சாரோட ஃபேன்ஸ் தவிர யாரும் படிக்கமாட்டாங்க. ஸோ கதை சுருக்கத்தை சொல்லிர்ரன். இந்தியாவுலயே மோனோப்பலியா ப்ராண்டட் சிக்கன் விக்கிற கார்ப்போரேட் கம்பெனியோட முதலாளிதான் வில்லன். அவருக்கு அஜீத்தோட ஆராய்ச்சிய பத்தி லேசு பாசா தெரியும். அஜீத் சார் மேல ஒரு கண் வச்சிருக்கான். நம்மாளுக்கு அதைபத்தி எல்லாம் தெரியாது.. தேமேனு யூனிவர்சிட்டில வகுப்பு எடுத்தமா லேப்ல மல்லாடினோமானு இருக்கிறார்.
மனைவிக்கு தல மேல சந்தேகம் ,நீலப்புகை, பேனட் ஸ்வீட்டியோட டூயட் இதெல்லாம் படிச்சப்பவே உங்கள்ள பலபேர் இதெல்லாம் தலயோட சம்சாரம் காண்ற கனவுன்னு ஸ்பார்க் ஆகியிருக்கும்.
இந்த லிங்கை சூப்பரா உபயோகிக்கலாம். உம். அம்மா ஊருக்கு புறப்படறாங்க. வுல்வா பஸ் நகருது. அம்மா கண்ணை மூடிக்கிறாங்க. ஷாட் கட் .
வீட்டுல ப்ரொஃபசர் சார் நைட் கவுன்ல தூங்கிக்கிட்டிருக்காரு. காலிங்க் பெல் ஒலிக்குது தயிர் காரி, கீரைக்காரி, நான் ஸ்டிக் தவ்வா விக்கிறவ கூடல்லாம் பாட்டு ஒன்னு போட்டுக்கலாம்.
இந்த சினேரியால இன்னொரு அஜீத்த அறிமுகம் பண்றோம். இவர் சாப்பாட்டை வீணாக்காதிங்கன்னு பிரசாரம் பண்றவர்.கல்யாண மண்டபம், கல்யாண மண்டபமா விசிட்டடிச்சு வீணா போக போற உணவை சேகரிச்சு சேரி மக்களுக்கு பகிர்ந்து தர்ரவர். வீணாயிட்ட உணவை சேகரிச்சு பயோ கேஸ் தயாரிக்கிறவர். அதுல இருந்து மின்சாரம் தயாரிக்கிறவர்.எல்லாத்துக்கும் மேல வள்ளலார் சீடர்னு வைப்போம்.
இவர் மக்களுக்கு மட்டன், சிக்கன் சாப்பிடாதிங்கனு பண்ற நூதன பிரச்சாரம் வில்லனோட வியாபாரத்தை பாதிக்குது. வில்லன் தூக்கி வந்து வார்ன் பண்றான். லேசா உடம்பு புடிச்சி விட்றாங்க. ஆன அடியெல்லாம் வாங்கிக்கிட்டு ,தலை " உன் வியாபாரத்தை பாதிக்குதுனு என் பிரச்சாரத்தை நிறுத்த சொல்றே.. நீ வியாபாரத்தை நிறுத்திரு பிரச்சாரத்துக்கே தேவையில்லே நீயே உன் வியாபாரத்துக்கு குட்பை சொல்ற மாதிரி பண்றேனு சேலஞ்ச் பண்ணிட்டு வந்துர்ரார்.
இவருக்கு ஜோடி ஜூ. விகடன் மாதிரி ஒரு பத்திரிக்கையோட ஏஜெண்ட் ப்ளஸ் சுமாரான ஸ்வீட் ஸ்டால் கம் புக்ஸ்டாலோட ஓனரோட பொண்ணு. அந்தகாலத்து ராதிகா மாதிரி ஒரு உருப்படிய போட்டுக்கனும். கடைல உட்கார்ந்து வியாபாரத்தையும் கவனிக்குதுனு வைங்க. தலை மேல நடந்த தாக்குதல் மீடியால ஹைலைட் ஆகுது. ஜூவிதனமான பத்திரிக்கைல அஜீத் சாரோட பேட்டியும் வெளிவருது. அப்போ ராதிகா தனமான ஹீரோயின் இன்ஸ்பைர் ஆகி அஜீத்தை துரத்துது. அவரோட பேட்டி வந்த பத்திரிக்கைய மக்களுக்கு இலவசமா வினியோகம் பண்ணுது.
அடுத்த வாரம் வில்லன் எல்லா பத்திரிக்கைலயும் சிக்கன் சாப்பிடலன்னா நீ மன்சனாவே இருக்க முடியாதுன்னு விளம்பரம் தரான். சின்ன தலையோட லவ் எல்லா பத்திரிக்கையையும் போட்டு கொளுத்துது.
வில்லன் ஆளுங்க வந்து கடைய துவம்சம் பண்றாங்க. அஜீத் சார் வந்து அடிச்சு தூள் கிளப்பறார். "என்னப்பா நீ வள்ளலார் பார்ட்டி அன்னைக்கு துவை துவைன்னு துவைச்சோம் திருப்பி அடிக்கலே ..இப்ப மட்டும் இப்படி பின்னி எடுத்துட்டே"ங்கறாங்க. அதுக்கு தலை நேத்துதான் தர்ம சாஸ்திரத்துல படிச்சேன் "தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாமாம். நீ பன்னி தானே"ங்கறார்.
பெரிய தலை பெண்டாட்டியோட லொள்ளை மீறி லேப்லயே குடியிருந்து சீப் அண்ட் பெஸ்டா செயற்கை ப்ரோட்டீன் கண்டுபிடிக்கிறார். அதனோட ஃபார்முலாவ கேட்டு வில்லன் கும்பல் அவரோட சம்சாரத்தை கடத்த பார்க்கறாங்க. அப்போ அகஸ்மாத்தா சின்ன தலை வந்து காப்பாத்தறார்.
அந்தம்மா ஏற்கெனவே சந்தேக பிசாசு. இன்னம் சின்ன வயசு கெட்டப்ல தலைய பார்த்துட்டு கன்ஃபார்மே பண்ணிக்குது. லொள்ளு அதிகரிக்குது.
ஒரு சந்தர்ப்பத்துல சின்ன அஜீத் தன் காதலியோட இருக்கிறப்ப என்ட்ரி கொடுத்து லொள்ளு பண்றாப்லயும் வச்சிக்கலாம். இன்னொரு சந்தர்ப்பத்துல சின்ன அஜீத்தோட காதலிய வில்லன் கோஷ்டி கலாய்க்கிறப்ப ப்ரொஃபசர் தன் வாக்கிங் ஸ்டிக்ல இருக்கிற விதவிதமான ஃபெசிலிட்டீஸை பயன் படுத்து ஃபைட் பண்ற மாதிரி ( பார்ட்டிக்கு ஞா மறதி வேற இருக்கு அதையும் உபயோகிச்சி நூதனமா காமெடி டச்சோட ஒரு ஃபைட் வைக்கலாம். கைல ஒரு லேப் டாப் அதுல தன் ஆராய்ச்சிய தொடர்ந்துக்கிட்டே (வாக்கிங் ஸ்டிக்கே ஸ்டூலாயிரும், எட்ஸெட் ரா எட்ஸெட் ரா ஆயிரும்னு வைங்க) அது மேல ஏறி நின்னு கூட பேலன்ஸ் பண்ணிக்கிட்டே சீரியசா சிந்திச்சுக்கிட்டே ஃபைட் பண்றார்.
க்ளைமேக்ஸ்ல வில்லன் கோஷ்டி ப்ரோட்டீன் ஃபார்முலா கடத்த அதை பெரியவரும்,சின்னவரும் எப்படி மீட்டுர்ராங்க. பெரிய தலையோட மனைவிக்கு சந்தேகம் எப்படி க்ளியர் ஆகுதுங்கற பாயிண்ட் மேல பில்டப் பண்ணிக்கிரனும்.
எப்படி இருக்கு கதை?
ப்ளஸ் பாயிண்ட்ஸ்:
1.எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கதை
2.வள்ளலாரை ஹைலைட் பண்ணிதான் எடுக்கிறோம். ஆனால் எவனோ ஒரு பன்னாடை வள்ளலாரை இன்சல்ட் பண்ணிட்டாய்ங்கனு கேஸ போடும்.படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்
3.முட்டை கோழி வளர்ப்போர் சங்கம் சர்வ நிச்சயமா ஒரு ரிட்டை போடும். சனம் போதுமான எக்ஸர்சைஸ் இல்லாம மட்டனும்,சிக்கனுமா தின்னு ஹார்ட் அட்டாக்ல சாவுற இந்த கால கட்டத்துல ஒரு அபாய சங்கு ஊதின புண்ணியமும் கிடைக்கும்.
4.நாளைக்கு தலை அரசியல் கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நிக்கவேண்டி வந்தா கு.ப பாஜக வாகிலும் சப்போர்ட் பண்ணும்
5.மாஸ் ,க்ளாஸ் ரெண்டும் மிக்ஸ் ஆகும் (யூனிவர்சிட்டி ப்ரொஃபசர் ஒரு பக்கம் , பஸ்ஸ்டாண்ட்ல கடை வச்சிருக்கிற பெண்ணை காதலிக்கிற சின்ன அஜீத் இன்னொரு பக்கம்.