Thursday, February 11, 2010

இதுதாண்டா இலக்கியம்


கடந்த பதிவுல ஆ.விகடன் என் ஐடியாவ சுட்ட கதைய படிச்சுட்டு ஒரு ஆ.வி. மட்டும் தான் இந்த வேலைய செய்தது. மத்தவனெல்லாம் ஓக்கியம் ஒருகுளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டுன்னுல்ல.


எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைகதான்.. எத்தனையோ பன்னாடைங்க கைய குறுக்கால வச்சு இந்த ஞான சூரியனை மறைக்க பார்த்துச்சுங்க.(இப்பவும் சில நத்தம் நாடோடிக இந்த சூரியனைப்பார்த்து துப்பவும் செய்யுதுங்கங்கறது வேறு விசயம்) ஆனால் அந்த நாதாரிங்க ஒன்னு நினைக்க தெய்வம் வேற நினைச்சுருச்சு.

தாளி.. இலக்கியம்னா என்னன்னு கேட்டா அதுக்கு ஒரு கொட்டேஷன் இருக்கு ."எதை படிச்ச பிறகு படிக்கிறதுக்கு முன்னாடியிருந்ததை விட பெட்டரா வாசகன் மோல்ட் ஆகறானோ "அதான் இலக்கியம்.

நான் எதை எழுதினாலும் இதை மனசுல வச்சுத்தான் எழுதுவேன். ஏதோ நெட்ல மேயற சனம் கண்டதையும் மேஞ்சு (ப்ரவுஸ் பண்ணி) தலை திம்முனு ஆகிப்போயிருப்பாக .. நம்ம போஸ்டை ரொம்ப அசால்ட்டா தள்ளி விட்டுர போறாங்கனு அப்பப்ப தலைப்புகள்ள விளையாடறதும், உள்ளடக்கத்துல சில கிமிக்ஸ் காட்டறதுமுண்டே தவிர ஒரு பலான ஜோக்கே எழுதினாலும் அதால வாசகனுக்கு என்ன பிரயோசனம் இதை படிச்ச பிறகு அவன் மைண்ட் செட் எந்த அளவுக்கு மெச்சூர் ஆகும்னு பார்த்து நான் சேடிஸ்ஃபை ஆன பின்னாடிதான் எழுதுறேன்.


இன்னம் அந்த காலத்துல ப்ரிண்ட் மீடியாவுக்கு எழுதினப்ப இந்த மொள்ளமாரித்தனம் கூட இல்லாம எத்தனையோ ஒழுங்கா பொறுப்பா எழுதியிருப்பேன்னு நீங்களே கெஸ் பண்ணீக்கங்க.

இப்பயாச்சும் கம்ப்யூட்டர் வந்தாச்சு, யூனிகோட்ல தட்டி வச்சிக்கிட்டு அட்டாச் பண்ணி அனுப்பலாம். துட்டு துக்காணி கிடையாது. மிஞ்சி போனா நெட் சென்டர் காரணுக்கு ஒரு பத்து ரூ கொடுப்போம்.

நாம யாருக்கு அனுப்பினோமோ அந்த நாயி அதை ரிஜெக்ட் பண்ணிருச்சுன்னா உடனே வேற நாய்க்கு அனுப்பலாம். ஆனால் இந்த பாடாவதி பத்திரிக்காசிரியனுகளுக்கு அனுப்பனும்னா பேப்பர் வாங்கி கை நோக எழுதி, மறுபடி காப்பி பண்ணி போஸ்ட் ஆஃபீஸ் போயி ................ மணீயாட்டனும்.

இந்த நாய்க செலக்டட் ஆர் ரிஜெக்டட்னு ரிசல்ட்டே தரமாட்டானுக. (இத்தனைக்கும் செல்ஃப் அட்ரஸ்டு ஸ்டேம்ப்ட் கவர் வச்சிருப்பம்.

They wouldn't select or reject ..But They will copy ..how can ..how can..how can I tolerate..these id eats !

எப்படி எரியும் பாருங்க.

* * *


1987 முதல் அன்புடையீர்! என்று துவங்கி நான் எழுதிய கடிதங்களுக்கு கணக்கே கிடையாது. என் கையால் எழுதப்படாத பெரிய மனிதர்களின் விலாசங்களே கிடையாது. நான் எழுதிய கடிதங்களை மூன்று வகையாக பிரித்து விடலாம்.
1.என் படைப்புகளுடன் வைத்தனுப்பிய கவரிங்க் லெட்டர்ஸ்
2.இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய கடிதங்கள்
3.வெளியூர்களில் இருந்து உள்ளூர் நண்பர்களுக்கும், சித்தூரில் இருந்து வெளியூர் நண்பர்களுக்கும் பண உதவி கேட்டு எழுதிய கடிதங்கள்

எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே குங்குமத்தில் யாரோ முருகேசன் எழுதிய கதையை நான் எழுதியதாக சொல்லிக்கொண்டவன் நான். அப்போ எனக்கு வயசு ஜஸ்ட் 14 தான். வருசம் 1981. எப்படியோ 1987 நவம்பர்ல என் முதல் கதை பிரசுரமாயிருச்சு. 1990 மார்ச்சுக்குள்ள 5 கதை. அங்கே ஷாட் கட் பண்ணா 2000 ஆம் வருடம் ஆன்மீகத்துல இரண்டு அற்பாயுசு தொடர்கள். அங்கே ஷாட் கட் பண்ணா 2007ல ஜோதிட பூமில ஒரு தொடர். ஆனால் நான் எழுதின கடிதங்கள் கின்னஸ் ரிக்கார்டுக்கே போட்டியிடலாம். கு.ப.லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் கியாரண்டி.

ஆனா நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதின பார்ட்டில 99 சதவீதம் அன்பில்லாதவர்கள் தான். அதனால தான் 1987 ல முதல் கதை பிரசுரிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட 2000 ஆம் வருடத்தில் கூட ஜோதிட ஆன்மீக முகமூடி அணிந்து தான் ஒரே நேரத்துல இரண்டு தொடர் ஆரம்பிக்க முடிஞ்சது. அதை கூட அற்பாயுசுல முடிச்சுவச்சாங்க சில அய்யர் மாருங்க. காரணம் ரெண்டு தொடருமே பாப்பாரவுக பொழப்புக்கு ஆப்புக்கு வைக்கிற ஐட்டங்க தான். ஒன்னு நவகிரக தோசங்களுக்கு நவீன பரிகாரம். அடுத்தது அய்யர் மாருங்களை தர்ம சங்கடமான கேள்விங்கெல்லாம் கேட்டு பிராமணர்களோட குல கர்வத்தை தட்டி வச்ச ஸ்ரீ பிரம்மங்காருவின் வாழ்க்கை வரலாறு. பிராமணர்களின் பிடியில் இருக்கும் மீடியாவில் இது அடுக்குமா?. வச்சுட்டாங்க ஆப்பு. ரெண்டு சீரியலும் பாதில நின்னு போச்சு.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா..மனுஷன் கெட்டுப்போறதுக்கு, அவனோட குடும்பம் திவாலாகறதுக்கு உள்ள காரணங்களில் ஏதும் பெரிதான புதுமை இல்லாமலே குடும்பங்கள் திவாலாகிட்டே இருக்கு. அக்காரணங்களில் ஒன்று லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் அல்லது ஆகாய கோட்டைகள்.

இந்த 43 வயசுக்கு என் மூளைல மிச்சமானதெல்லாம் எந்த வித பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப்புமில்லாத நிர்வாண நிஜங்கள்தான்.இந்த கசப்பான உண்மைகளை பட்டவர்த்தனமா எழுதும்போதே நிறைய பேர் பாராட்டறாங்க. ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி என் எழுத்துக்கள்ள என்னா மாதிரி ஃப்ரெஷ்னெஸ், பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப் இருந்திருக்கும் பாருங்க. ஆனால் நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதிய ஆசாமிங்க என் ப்டைப்புகளை செலக்டும் பண்ணல ரிஜெக்டும் பண்ணலை. ( ரிஜக்ட் ஆன படைப்புகளை விரல் விட்டு எண்ணிரலாம்)

சரி கதை,கவிதை எல்லாம் ஒழியட்டும் . ஆப்பரேஷன் இண்டியா 2000 ஐ பத்தி "மறுமலர்ச்சி" "ஜன சக்தி" தவிர ஒரு தே.மகனும் பிட் ந்யூஸ் கூட போட்டதில்லை (அதுக்குனு நான் அனுப்பாம இருந்ததில்லே)

"வார்த்தா " Telugu Daily ல வெளிவந்த ஒரு சென்டர் ஸ்ப்ரெட்டோட ஸ்கானை தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். இதனோட மொழி பெயர்ப்பை இன்னொரு சந்தர்ப்பத்துல வைக்கிறேன்.

ஓகே உடு ஜூட்