Friday, February 19, 2010

கேவலமான படைப்பு மனிதன்

ஆழ்துளை கிணறில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒன்னரை லட்சம் ரூ செலவுல ஹேண்ட் ரோபோ கண்டுபிடிச்சிருக்காங்க.

நல்ல செய்தி தானேப்பு.

மேலோட்டமா பார்த்தா நல்ல செய்திதான். ஆனால் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. ஆழ்துளை கிணறு அமைக்கிற விஞ்ஞானம் அவசியமானதுதான். விஞ்ஞானம் போர் ஃபெயில் ஆயிட்டா அதை மூடாம போட்டுட்டு போங்கடானு சொல்லிச்சா.பூனை மலம் கழிச்சா கூட அதை மண்ணை போட்டு மூடிட்டிதான் போகும்னு எங்கயோ படிச்சேன். ஆனால் மனுசன்?

பூனைய விட கேவலமாய்யா நாம ? பூனை மலத்தை விட கேவலமானதா ஃபெயிலியர் ஆன போர் ?

இந்த படைப்புலயே கேவலமான படைப்பு மனிதன் தான். மோப்ப திறன் கிடையாது. சொந்தமா எறும்பு மாதிரி சுறு சுறுப்பு கிடையாது. எறும்பு மாதிரி சேமிப்பு கிடையாது. ஒரு நாய் குட்டியை கிணத்துல தூக்கிப்போட்டா தானா நீந்தும். ஆனால் மனுசனுக்கு ஸ்விம்மிங்க் பூல் போகனும். லைஃப் ஜாக்கெட் போடனும். கோச் இருக்கனும். தாளி நீச்சல் குளத்தோட ஆழத்தை பார்த்தா பத்தடி கூடஇருக்காது. வேட்டையாடற சக்தி,சாமர்த்தியம் கிடையாது. நரிக்குறவன் அடிச்சு கொண்டுவந்தா காராசாரமா ஆக்கி திங்க தெரியும் அவ்ளதான்.

நம்மாளுங்க எல்லாத்துக்கும் அரசாங்கத்தை குறை சொல்றத ஒரு விரதமாவே பின்பற்றிவராங்க. அரசாங்கம் சொல்லுச்சா போர் ஃபெயில் ஆயிட்டா அதை மூடாம விடுங்கடானு.

சரி இருக்கபபட்ட நாயோ, இல்லாதப்பட்ட பிசாசோ போர் போட்டுச்சு, அதை மூடாம போயிருச்சு.. அந்த வட்டாரத்துல சின்னப்பிள்ளைங்க இருக்கிற குடும்பத்தை சேர்ந்தவங்க நாலு பேர் சேர்ந்து அக்கம்பக்கத்துல இருக்கிற ஒரு பாறாங்கல்லை தூக்கி மூடலாமில்லயா.

அட அத கூட விடுங்க மூடாட்டி போவுது அந்த பகுதிக்கு நம்ம வீட்டு பசங்க போகாமயாச்சும் பார்த்துக்கிடலாமில்லே.