Sunday, February 21, 2010

இது தாண்டா ஜோதிடம்: 1

என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற தரப்படும் கட்டணம் கவிதை07 வலைப்பூவில் இன்னும் ஆழமான பதிவுகள் போடவும், ஜோதிடம் குறித்த என் ஆய்வு முடிவுகளை அனுபவஜோதிடம் வலைப்பூவில் வெளியிடவும் பயன் படுத்தப்படும் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் பிரச்சாரம் மற்றும் அமலுக்கு பயன் படுத்தப்படும் என்றும் கூறியிருந்தேன்.

முதலில் அனைவருக்கும் முக்கியமாக என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு உபயோகப்பட கூடிய டிப்ஸை இந்த தொடர்பதிவில் தர முடிவு செய்துள்ளேன்.

ஜோதிடத்தின் பிரிலிமினரி விஷயங்கள் ( நட்சத்திரம், நட்சத்திர பாதம்,ராசி இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவையே.) தெரியாதவர்கள் ஒரு பாக்கெட் டைரி வாங்கினாலும் தெரிந்துவிட்டு போகும். எனவே சற்று கனமான விஷயத்திலேயே இந்த தொடர்பதிவை ஆரம்பிக்கிறேன்.

ஜாதகம் என்றால் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு ராசி. ஆக 12 ராசிகள். ஒவ்வொரு ராசிக்கும் 9 நட்சத்திர பாதங்கள் . டிகிரியில் சொன்னால் 30 டிகிரி.

மேற்படி கட்டத்தில் இடது மூலையில் உள்ளது மீன ராசி. அதையடுத்து கடிகார வரிசையில் ( க்ளாக் வைஸ் / இடமிருந்து வலம்) பார்த்தால் மேஷம்,ரிஷபம்,மிதுனம் கடகம், சிம்மம் ,கன்னி,துலா,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்.

இவற்றிற்கு அதிபதிகள் உண்டு. அதிபதிகள் விவரம் வருமாறு:
மேஷம்- செவ்வாய்
ரிஷபம்- சுக்கிரன்
மிதுனம்-புதன்
கடகம்- சந்திரன்
சிம்மம்- சூரியன்
கன்னி-புதன்
துலா-சுக்கிரன்
விருச்சிகம்-செவ்வாய்
தனுசு-குரு
மகரம்-சனி
கும்பம்-சனி
மீனம்- குரு

இப்படி அறிந்துகொள்வதும், ஞா வைத்துகொள்வதும் சற்று சிரமம். எனவே சிரமம் பார்க்காது போன்ற வெப்சைட்களில் தங்கள் பிறப்பு விவரங்களை கொடுத்து ஜாதகம் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அதனை கண் முன்னே வைத்துக்கொண்டு ஜாதக கட்டங்களில் பென்சிலில் அந்தந்த ராசிகளின் பெயரையும், ராசி அதிபதிகளின் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளார் என்று பாருங்கள். சந்திரன் நின்ற ராசியே ஜன்ம ராசி.

லக்னம் என்றால் என்ன?
சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதமும் ராசி மாறுவார். சித்திரையில் மேஷம், வைகாசியில் ரிஷபம் என்ற வரிசையில் பங்குனியில் மீனத்தில் இருப்பார். நீங்கள் காலை 6 மணியிலிருந்து சுமார் 2 மணி நேரத்துக்குள் பிறந்திருந்தால் சூரியன் நின்ற ராசியே தங்கள் ஜன்ம லக்னம் ஆகும். சுமார் இரண்டிரண்டு மணி நேரங்கள் தாமதமாக தாமதமாக லக்னம் அடுத்த ராசிக்கு மாறும்.

உ.ம்: சித்திரை மாதம் முதல் தேதி காலை 6 முதல் 8 க்குள் பிறந்தால் மேஷ லக்னம். 8 முதல் 10 க்குள் பிறந்தால் ரிஷப லக்னம்.

குறிப்பு: நீங்கள் பயந்துவிடக்கூடாது என்பதால் ஆழமாக செல்லவில்லை. ஒரு லக்னம் இரண்டு மணி நேரமே என்பது ச்சும்மா சொன்னது. இதற்கெல்லாம் ஆக்யுரேட் கணக்கிருக்கிறது. பஞ்சாங்கம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்தபிறகு பஞ்சாங்கத்தில் பார்த்தால் விவரம் புரியும். சூரியோதயமும் மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள் மாறும். லக்ன சமயமும் அப்படியே. மேலும் மாவட்டத்துக்கு மாவட்டம் சொல்ப மாற்றமிருக்கலாம். இதெல்லாம் அப்புறமா நீங்களே தெரிஞ்சுப்பிங்க. ஓகேவா.

இப்ப பாயிண்டுக்கு வரேன். லக்னம்னா என்னனு பார்த்தோம். கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் மறைவதற்குள் ராசிச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளையும் இரண்டிரண்டு மணி நேரம் ஒளிரச்செய்கிறார். நீங்க பிறந்த நேரத்துல சூரியனால் ஒளிரச்செய்யப்பட்ட ராசியே உங்கள் லக்னமாகிறது.

சூரியன் என்றால் படம் வரைந்து பாகங்கள் குறிக்க தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.சோலார் பவர் எடுக்கலாம். சூரிய ஒளியிலிருந்து தாவரங்கள் உணவு தயாரிக்குது.(பச்சையம்? ஸ்டார்ச்?) அதை தின்னுதான் நாம வாழறோம். அதை தின்னு வாழற ஆடு ,மாடை அடிச்சு திங்கறோம்.

குறை மாசத்துல பிறந்த குழந்தைக்கு தோல்ல ஏதாச்சும் மாற்றமிருந்தா சூரிய ஒளியில காட்டறாங்க. சூரிய தரிசனம்னு நாள் குறிச்சு குழந்தைய சூரிய ஒளில காட்டுவாங்க. சூரிய வெளிச்சத்துல விட்டமின் டி, விட்டமின் இ இருக்குதாம்.

பறவைகள் கூட்டை விட்டு கிளம்பவும், மீண்டும் கூடு சேரவும் சூரியனோட உதயாஸ்தமங்கள்தான் டெட்லைன். நாம வாழற பூமியே சூரியனைத்தான் சுத்தி வருது.

நதிகள்,குளம்,குட்டைகளில் உள்ள நீர் சூரிய வெப்பத்துல ஆவியானாதான் நமக்கு மழை. ஊறுகாயை வெயில்ல வைக்கலன்னா நாறிபோயிரும். துவைச்ச துணிகளை ரூமுக்குள்ள ஃபேன் காத்துல காயப்போட்டா ஊச நாத்தம் வந்துரும். இதெல்லாம் நமக்கு தெரியும்.

சரி ....சரி விஷயத்துக்கு வரேன். உங்க லக்னம் எந்த ராசில அமைஞ்சிருக்குனு பார்த்துக்கங்க. (லக்னத்துக்கு சூரியனுக்கும் சம்பந்தமிருக்குனு புரிஞ்சுக்கங்க) இப்ப அந்த ராசிக்கு அதிபதி யாருனு பார்த்துக்கங்க. அவர் யாருங்கற பொருத்தும், அவர் லக்னம் முதல் எத்தனையாவது ராசில இருக்காருங்கறத பொருத்தும் பொதுப்பலனை இப்போ பார்ப்போம். ( ஏற்கெனவே சொன்னபடி இதெல்லாம் ப்ரிலிமினரிதான். கொலை பண்ணா செக்ஷன் 302. போதைல செய்திருந்தா செக்ஷன் 85, பலான ஆளை போட்டுத்தள்ளவே குடிச்சிருந்தா அது கான்ஸ்பிரசியோட செக்ஷன் 302கீழே வரும்லியா. அப்படி உங்க லக்னாதிபதி யாரு, அவரு எங்க நின்னாரு,அங்கே அவரோட பலம் என்ன? யாரோட சேர்ந்தாருங்கறதையெல்லாம் பொருத்து பலன் மாறிக்கிட்டே போகும். . அப்புறம் என்னடா முருகேசன் முன்னுக்கு பின் முரணா பலன் சொல்லியிருக்காருனு என்னை திட்டிக்காதிங்க ஓகே.

( எல்லா அம்சங்களையும் படிப்படியா விவரமா பார்ப்போம். குரு தட்சிணை ? ஒன்னுமில்லே உங்களை சேர்ந்தவங்க யாருக்காச்சும் ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டா நம்ம மெயில் அட்ரஸ் கொடுங்க. இல்லாட்டி நம்ம வலைப்பூவுல ஆன்லை ஜோதிடம்னு ஒரு படம் இருக்கில்லயா , அது மேல க்ளிக் பண்ணி விவரத்தை சொல்லுங்க)

கீழே 1-1 என்று கொடுத்திருக்கேன். இதில 1 என்றால் லக்னாதிபதினு அர்த்தம். 1-1 என்றால் லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தால்னு அர்த்தம். 1-2 என்றால் லக்னாதிபதி இரண்டில் இருந்தால், 1-3 என்றால் லக்னாதிபதி 3ல் இருந்தால் இப்படி அர்த்தப்படுத்திக்கிட்டு படிச்சுபாருங்க.

1-1
உடல், மன நலம், மன பலம், ஞாபக சக்தி, உறுதியான எண்ணம்
1-2
பேச்சு,எழுத்து திறமை, குடும்பத்துடன் நெருக்கம்,ரசனையுடன் உணவு, நல்ல கண் பார்வை,சுய முயற்சியால் பணமீட்டல்
1-3
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம்
1-4
தாய்,தாய் வழி உறவு, வீடு,வாகனம், கல்வி வகையறாவில் நன்மை
1-5
புத்தி கூர்மை,அதிர்ஷ்டம்,வாரிசுகளால் நன்மை, அவர்களுக்கு நல்ல முன்னேற்றம்.
1-6
வாழ் நாள் முழுக்க கடன், நோய்,வழக்கு, விவாதங்கள்,எதிரிகளால தொல்லை
1-7
ஃப்ரண்ட் ,லவர்,பார்ட்னர் வைஃப் வகையறாக்களோட இம்பேக்ட் அதிகம்
1-8
தற்கொலை, கொலை எண்ணம். ஐ.சி (தாழ்வுமனப்பான்மை) ,தொடரும் துரதிர்ஷ்டம், தன்னை தனிமையா ஃபீல்பண்றது, தீராத கடன், கண்டங்கள் ( ஆசியா ,ஐரோப்பா இல்லிங்கோவ்) , சிறைப்படுதல், பெண்ணானால் வைதவ்யம் (சில லக்னங்களுக்கு மட்டும்), ஐபி போடறது
1-9
அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும்.
1-10
தொழில்,உத்யோகம், வேலை,கைத்தொழிலில் ஆர்வமிருக்கும்.
1-11
பிசினஸ் மைண்ட் இருக்கும். மூத்த சகோதரவர்கத்தோட உதவி கிடைக்கும். டபுள் மைண்டடா இருப்பிங்க
1-12
வாழ் நாள் எல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கே சரியா போயிரும். வீண் செலவு அதிகம். தூக்கம் அதிகம். செக்ஸுக்கு, லக்சரிக்கு அதிக முக்கியத்துவம் தருவிக.