Thursday, February 25, 2010

நவீன விக்கிரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் புளிய  மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை வெட்டி வீழ்த்தினான். அதை தன் தோளில் சுமந்தபடி நடந்தான்.அதுவரை மவுனமாக இருந்த வேதாளம் கல கலவென்று சிரித்தது. "மன்னனே ! அறிமுக எழுத்தாளன் எத்தனை முறை தன் படைப்புகள் திரும்பி வந்தாலும், எத்தனை ஆண்டுகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தாலும் மீண்டும் மீண்டும் கதை எழுதி அனுப்புவதை போல் நீயும் சளைக்காமல் என்னை சுமந்து செல்லவே பார்க்கிறாய். சரி அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை லேண்ட் மைன் மீது தலை வைத்து படுத்தாற்போல் சிதறிவிடும் ஓகேவா " என்றது.

 விக்கிரமாதித்தனும் " என்னடா இது லொள்ளா போச்சு நானும் என்.டி.ஆர், எஸ்.வி,ரங்கா ராவ் காலத்துல இருந்து இதையே செய்துட்டிருக்கேன். இந்த வேதாளம் கேள்வி கேட்குது பதில் க்ளிக் ஆகுது பதில் தெரிஞ்சும் சொல்லலன்னா தலை வெடிச்சுருமேனு சொல்லித்தொலைக்கிறேன்.வேதாளம் மவுனம் கலைஞ்சு மறுபடி பு.மரத்துக்கே போயிருது. மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிருது." என்று சிந்தித்தபடி "அப்படியே ஆகட்டும் வேதாளமே" என்றான். வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.

இந்தியாவுல .. ஒரு மானிலம். அங்கே ஒரு சுமார் டவுன். அங்கே ஒரு  விளம்பர ஏஜென்சி. வில்லேஜ்ல இருந்து வந்து வயித்துபாட்டுக்காக  டவுனுக்கு வந்த இளைஞன்  அதுல வந்து சேர்ந்துட்டான். அங்கே ஒரு குடிகார ஆர்ட்டிஸ்ட். வேலைல புலினு வை. ஆனால் மொடா குடியன். புதுப்பையன் வந்தானா அந்த குடிகார ஆர்ட்டிஸ்டுக்கு எங்கில்லாத வேகம் வந்துருச்சு. பையனை தன் சிஷ்யனா ஸ்வீகரிச்சிக்கிட்டான். காலப்போக்குல புதுப்பையன் நல்ல கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டா தயாராயிட்டான்.

தனியா போய் கடை போட்டான். தொழில் நல்லாவே சூடு பிடிச்சது கல்யாணமுமாச்சு. இரண்டு குழந்தைகளையும் பெத்துட்டான்.  மாசத்துல எப்பவோ ஒருதரம்னு இருந்த குடி வாரம் ஒரு தடவையாச்சு. அப்புறம் தினமும்னு ஆச்சு. அப்புறம் மதியம் ஒரு குவார்ட்டர், ராத்திரி  ஒரு குவார்ட்டர்னு ஆச்சு. வசதி ஜாஸ்தியானபிறகு பெண்டாட்டிய பார்த்தா வேலைக்காரி மாதிரி இருக்காளேனு தோணுச்சு. பார்ட்டிங்களை என்னதான் சத்தாய்ச்சாலும் வாரக்கணக்குல திரிஞ்சு வேலை செய்துகிட்டு போனாங்க.

அந்த நேரம் பார்த்து மாலா அறிமுகமானாள். இவனா ருசி கண்ட பூனை. அவளா பருவத்தின் வாசல்ல இருந்தா.பெட்ரோல் இல்லாமயே பத்திக்கிச்சு.அவள் கர்பமானாள். விஷயம் தெரிஞ்சு பொண்ணு வீட்டுக்காரங்க ரெண்டாமரம் தெரியாம சுத்தம் பண்ணி வீட்ல வச்சுக்கிட்டாங்க. இவனா சாதாரணமாவே அலைபாயற புத்தி. குடி வேற ஓவரா போயிட்டே இருக்கு. மறுபடி இவன் புத்தி அந்த பக்கம் திரும்புச்சு. அந்த பொண்ணு மறுபடி கர்பமானாள். இந்த முறை அவள் வீட்டுக்காரங்க ரோட்ல இறங்கிட்டாங்க. இவன் வீட்டுக்கும், கடைக்கும் பெரிய பூட்டா போட வச்சாங்க. இவனுக்கும் செமை மாத்து. ஊரை விட்டு ஓடினாதான் சாவின்னுட்டாங்க.  ஒருவாரம் அல்லாடினான். அவிக கால்ல விழுந்து ஏரியாவ விட்டு போயிர்ரதா சத்தியம் பண்ணி சாவி வாங்கினான்.

இதுக்கிடைல பெண்டாட்டி பிரச்சினை வேற. அவள் மனசு உடைஞ்சு போயி பிள்ளைகளோட பூச்சி மருந்து கடைக்கு போய் பூச்சி மருந்து கேட்க அந்த கடைகாரன் நல்லவன் போல. இந்த பொம்பள அவதாரத்தை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி கடைக்கு வந்த கான்ஸ்டபிள் கிட்டே ஒப்படைச்சுட்டான்.  எஸ்.ஐ ஜாதில செட்டியாராம். இதுவரை ஒரு கெட்ட வார்த்தையால கூட எவனையும் திட்டினதில்லையாம். ஆனால் நம்மாளை பின்னி பெடலெடுத்துட்டார்.

இதெல்லாம் நடந்து 2 வருஷம் கூட ஆகலை. ஏதோ பத்து மணிக்கு கடைக்கு போனோமா, வந்ததை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு வைன்ஸ் ஷாப் போனோமா மூக்கு பிடிக்க குடிச்சமா வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு படுத்தமானு காலத்தை ஓட்டினான். பார்ட்டிங்களுக்கு போர்டு இத்யாதி சொன்ன நேரத்துல டெலிவரி தர்ரதில்லை. உதவியாளுகளுக்கு கூலி தர்ரதில்லை, போர்ட் அடிச்ச கார்பெண்டருக்கு கூலி தர்ரதில்லை. கூட மாட எழுதற பெயிண்டர்களுக்கு கூலி நை. இப்படி பேரை சுத்தமா கெடுத்துக்கிட்டான். அந்த நேரம் பார்த்து  டிஜிட்டல் யுகம் ஆரம்பமாச்சு. கதியில்லாத குறைக்கு இவனை பிடிச்சி தொங்கினவனெல்லாம் டிஜிட்டலுக்கு மாறிட்டான். வெறுமனே சுவத்துல "இவ்விடம் மூத்திரம் பெய்யாதீர் "னு எழுதர மாதிரியான வேலைகள் மட்டும் வர ஆரம்பிச்சது.கடைய காலி பண்ணிட்டான். வீட்டோட முடங்கிட்டான். ஏதோ மச்சான் காரன் தங்கச்சிக்கு வீட்டுசெலவுக்கு பணம் கொடுத்தா அதை கூட திருடி குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் ரொம்ப நாளைக்கப்புறம்  ஜில்லுனு பீர் சாப்பிட்டான். மூத்திரம் வெள்ளமா போக ஆரம்பிச்சது. சரி பீர் சாப்டமில்ல அதான்னு நினைச்சிக்கிட்டான். இது வாரக்கணக்குல தொடரவே டாக்டர் கிட்டே போனான். ஷுகர்னிட்டாங்க. சப்த நாடியும் ஒடுங்கிபோச்சு. நாள்பட நாள்பட ஏற்கெனவே மினுக் மினுக்குன்னிருந்த பலான கெப்பாசிட்டியும் அதல பாதாளத்துக்கு போயிருச்சு. ஊரான் வீட்டு பொண்ணை காக்கா கடி கடிச்சே ரெண்டு தடவை கர்பம் பண்ண ஆண்மை சூடு ஆறிப்போச்சு. ஏற்கெனவே லாலா பழக்கத்தால இருந்த லேசான கையுதறல் இப்போ அதிகமாயிருச்சு. வீக்னெஸ். பேக் கிரவுண்ட் பெயிண்ட் அடிச்சாலே கையெல்லாம் விட்டுப்போவுது. புருவம் வரையப்போனா கை நடுங்கி ப்ரஷ் உதட்டுமேல வந்து நிற்குது.

லாலாவையா நிறுத்த முடியலை. ஷுகரா முத்தி முத்தி ப்ளட் ஷுகரா மாறிருச்சு. இந்த இழவுல ஆளில்லாத நேரம் ஒரு போர்டை நகர்த்த போக கால் விரல் நசுங்கி புண்னாகி அது புரையோடி ரெண்டு கால் விரலை எடுத்துட்டாங்க."

வேதாளம் மேலும் ஏதோ சொல்லப்போக விக்கிரமாதித்தன் " ஷிட் என்ன வேதாளம் என்னா கதை இது இழவு. சீக்கிரம் உன் கேள்விய கேளு"என்றான்.

வேதாளம் " விக்கிரமாதித்தா ! சைக்காலஜிஸ்டுங்க குடிப்பழக்கத்துக்கு        நிப்பிள் காம்ப்ளெக்ஸ், என்விரான்மென்டல் ஃபேக்டர், சப்ரெஸ்ட் செக்ஸுவல் அர்ஜ் அது இதுனு என்னென்னவோ சொல்றாங்கல்லியா. நம்மாளு கிராமத்துல பிறந்து வளர்ந்த பையன். சின்ன வயசுலயே தொழில் கத்துக்கிட்டு தொழில்ல  இறங்கிட்டான். காலாகாலத்துல கல்யாணமுமாச்சு. அப்புறம் எதுக்கு அவனுக்கு குடிப்பழக்கம் வந்தது? ஒரு கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டுக்கு கை உதற ஆரம்பிச்சா அப்புறம் அவன் பேக் கிரவுண்டு அடிக்கதானே லாயக்கு. வீட்ல பெண்டாட்டி இருக்கிறச்ச இன்னொரு கன்னிப்பொண்ணை அவன் ஏன் கெடுக்கனும்?, அவனுக்கு ஷுகர் வந்து ஏன் பிஸ்டன் வேலை செய்யாம போகனும். ஏன் கால் விரலை கட் பண்ணி எடுக்கனும் ?
இதுக்கெல்லாம் விடை தெரிஞ்சும் சரியான பதிலை சொல்லலன்னா உன் தலை க்ளைமோர் பாம் போட்ட மாதிரி சிதறிடும்" என்றது.

விக்கிரமாதித்தன் பதில் சொல்ல ஆரம்பித்தான். இந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்றத விட சித்தூர் முருகேசன் பதில் சொன்னா பக்காவா இருக்கும். ஓவர் டு முருகேசன்.

"ஹலோ ! மிஸ்டர் வேதாளம் அண்ட் விக்கிரமாதித்தன் அவர்களே, கதைய கேட்டவரை  நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற ஆளுக்கு ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்கனும். அதனால தான் சோத்துக்கு கதியில்லாம வீடு வாசலை விட்டு டவுனுக்கு வந்தான். அவன் ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருந்தாலும் சுக்கிரன் காரகத்வம் வகிக்கிற கமர்ஷியல் ஆர்ட்ஸ்ல இறங்கினது முதல் தப்பு.

சோத்துக்கில்லாதப்ப சுக்கிர தோஷம் பரிகாரமாகி கலைல தேர்ந்தான். ஆனால் அதே தொழில்ல காசு புரள ஆரம்பிச்சதும் சுக்கிரன் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டார். அதனாலதான் மனைவியிருக்க இன்னொரு பெண்ணை நாடற புத்தி வந்தது. ஜாதக பலன்கிறது  கரண்ட் அக்கவுண்ட் மாதிரி. கரண்ட் அக்கவுண்ட்ல  பணமில்லாத நேரம்   பந்தாவா ரப்பர் செக் விட்டாலும் அது ஹானர் ஆயிரும். ஆனால் அதுக்கு நாம வட்டி கட்ட வேண்டி வந்துரும். ஏதோ ஜொள் விடறதோட விட்டுருந்தாலும் பரவாயில்லே இன்னொரு கன்னிப்பெண்ணை வேற அனுபவிக்க ஆரம்பிச்சான். அதனால வெறியேறிப்போன சுக்கிரன் ஷுகரை கொடுத்து பிஸ்டன் வேலை செய்யாம பண்ணிட்டாரு.

சுக்கிரன் வீக்கா இருந்து சோத்துக்கு லாட்டரியடிக்கிற நேரத்துல ஆர்ட்ஸ் கத்துக்க வந்ததை கூட மன்னிக்கலாம். ஆனால் அதை குடிகாரனான குருகிட்டே கத்துக்கிட்டது பெரிய  தப்பாயிருச்சு. குருகிட்டே வித்தை கத்துக்கிடறோம். வெறும் வித்தை மட்டுமா வரும். அவரோட கர்மமும் சேர்ந்துவரும்.  அது வந்து சேராம இருக்கத்தான் குரு சேவை பண்ணி கருமத்தை தொலைக்கிறதும், குரு தட்சிணை வழங்கறதும் பண்றோம். இவனெங்கே குரு தட்சிணை கொடுத்தான். அதான் குருவோட கருமம் அதான் குடிப்பழக்கம் இவனுக்கு தொத்திக்கிச்சு."

சித்தூர் முருகேசனின் சரியான பதிலால் திருப்தியுற்ற வேதாளம் கிளம்பி மீண்டும் புளியமரத்திலேறிவிட்டது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேற துவங்கினான்.