கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.
கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்