Wednesday, February 3, 2010

பஸ்ஸ்டாண்ட் பதிவிரதை ஒருத்தி

இயந்திரனுக்கு அப்புறம்
இயந்திரனுக்கு அப்புறம் ஷங்கர் படம் எடுக்க ஒரு அற்புதமான சப்ஜெக்ட் வீட்டு உரிமையாளர்களின் கொடுமை.

இப்போ குடியிருக்கிற வீட்டை ஓனர் வித்துட்டாரு. புது ஓனர் பழைய ஓனர் மூலமா ஜன.5 க்குள்ள காலி பண்ணனும்னு சொல்லிவிட்டுட்டாரு. சரி ஓஞ்சு போட்டம் வித்தானே நாயி .. அவன் என்ன பண்ணனும் ? வாங்கிறவன் கிட்டே தபாருப்பா அவிகளுக்கு ஒரு 3 மாசம் டைம் குடுங்கலாம். ஒரு ல.....ம் இல்லே ஜன் 5க்குள்ள காலி பண்ணிரு. வாங்கினவன் , வித்தவன் எல்லாம் சாம்பார் பார்ட்டிங்க தான் ஸ்டேஷன் போனாலும் , ஊர் பஞ்சாயத்தானாலும் நம்மால சமாளிக்க முடியும். (இதுக்குண்டான பின்னணிய விவரிக்கனும்னா நீங்க ப்ரஜா நாயகுலு சி.கே ங்கற த்லைப்புல நான் போட்ட 32 பக்க புக்லெட்டை படிக்கனும். ஆனால் அது சுந்த்ர தெலுங்குல இருக்கு .அவுட்லைன் தெரிஞ்சிக்கிட்டா போதும்னா chittoortigerckbabu.blogspot.com ங்கற என் ப்ளாகை படிக்கனும்)

ஓனர் வீட்டை விக்கிறதாயிருந்தா குடியிருக்கிறவனுக்கு தான் முதல் ஆஃபர் கொடுக்கனும். அவன் எனக்கு வேணாம்யா நீங்க யாருக்கு வேணம்னா வித்துக்கோங்கனு எழுதி கொடுக்கனும் ( என்.ஓ.சி) அதுக்கப்புறம் தான் மார்க்கெட்டிங்கே பண்ணனும்.இதான் சட்டம். இதை அமுல் படுத்தனும்னா லாயர்கிட்டே போகனும் ஆனால் லாயருன்னு மட்டும் போறதா இல்லே. . ஏண்டான்னா நான் பார்த்த லாயர்களை பத்தி தனி பதிவே போட்டுரலாம்.அவ்ளோ வயித்தெறிச்சல் இருக்கு.

ஊரெல்லாம் சண்டை போட்டாலும் வீடுங்கறது லொள்ளில்லாம இருக்கணும்ங்கறது நம்ம பாலிசி. இப்ப இருக்கிற வீடு ஒன்னும் தாஜ்மஹால் கிடையாதுதான். இருந்தாலும் சில விசயங்கள்ள வசதி. நொந்து கிட்டே வீடு பார்க்க புறப்பட்டேன்.

வீட்டு ஓனருகள பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரே ஒரு லாயரை பத்தி சொல்லிட்டு அப்புறம் வீட்டு ஓனர்களோட கொடுமைய பார்ப்போம். (கடைசில குடியிருப்போர் கொடுமையையும் சொல்லித்தான் இந்த பதிவை முடிக்க உத்தேசம்)

அவன் பெயர்... வேணாங்க எதுக்கு வம்பு. கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி இருப்பான். பசுவின் யோனியத்தனமா பெரிய உதடு. பல(ங்)கரை பல். சோழியா சோழியா இருக்கும். முட்டைக்கண். அதுக்கு சோடாபுட்டி கண்ணாடி. பான் பராக் பார்ட்டி,செயின் ஸ்மோக்கர். நான் அந்த ஊர்ல செட்டில் ஆகப்போறேனு தெரிஞ்சு ஜஸ்ட் லைக் தட் இவன் பேரை ஃப்ரெண்ட் ஒருத்தன் சஜஸ்ட் பண்ணான். (ஃப்ரெண்ட்ஸ் சஜஸ்ட் பண்ணின பார்ட்டிகளால நான் பட்ட பாட்டையெல்லாம் வர்ணிக்கனும்னா ஒரு தொடர்பதிவே போடனும். சரி இப்ப ஃப்ரெண்ட் சஜஸ்ட் பண்ண லாயர் வச்ச ஆப்பை பாருங்க.

நமக்கு ப்ரதர்ஸோட சொத்து தகராறு வந்தப்ப ஒரு நோட்டீஸ் கொடுத்தான் . தட்ஸால்.பாகப்பிரிவினைல முதல்ல வந்த 16 ஆயிரம் ரூ மதிப்புள்ள நகைகளை விற்றுக்கொடுத்தான். பாதி பணத்தை அப்புறம் தரேன்னாங்கனு பித்தலாட்டம் செய்தான். செகண்ட் இன்ஸ்டால் மென்ட்ல வந்த பணத்துல ரூ5ஆயிரம் கடன் வாங்கிக்கிட்டான்.

அப்போ நமக்கு இருந்த ஒரே ஒரு வீக்னெஸ் பாடாவதி பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை அனுப்பறது. அவனுக எந்த அளவுக்கு நோகடிக்கனுமோ அந்த அளவுக்கு நோகடிச்சிட்டிருந்தானுக.

தாளி.. நீ பிரசுரிக்காட்டி போவுது கன்டென்டை (எழுத்துக்களை) திருப்பி அனுப்புய்யானு ஒரு நோட்டீஸ் அனுப்பனும். ஒரு அஞ்சு பேருக்குனு ஞா. ஒரு நோட்டீஸ் தயாரிச்சு டு அட்ரஸ் மட்டும் மாத்தனும். போஸ்டல் செலவு கூட என்னுதுதான். கொஞ்சமா ஏதோ பணம் திருப்பி கொடுத்தாப்ல ஞா. ஒரு கட்டத்துல நிஜமாவே பணமுடை ஏற்பட்டு பணம் கேட்டா நீ கொடுத்த காசுக்கு வேலை செய்தாச்சுன்னிட்டான்.

இவனுக்கு பொழுது போகலன்னா ..து முடிச்ச நிரோத்தை பெண்டாட்டி ,குழந்தைங்க என் போன்ற விசிட்டர்ஸ் முன்னாடி ஊதி பறக்க விடுவான்.

அய்யய்யோ நினைச்சாலே வாழ்க்கையே வெறுத்து போவுது. இந்த மாதிரி இன்னம் நாலைந்து அனுபவங்கள் இருக்கு. அது வேறுகதை. இதை நினைச்சதும் இது மாதிரி டுபாகோர் லாயர்களை வச்சி நியாயத்தை நிலை நாட்றதை விட "ஆத்தாளே பார்த்துப்ப்பானு " வீட்டை காலி பண்ணிட்டு ஓடியே பூட்ரது மேல்ரா சாமினு தோணிப்போச்சு.

அதனால வீட்டை பார்க்க புறப்பட்டேன்.

வயசு 43 ஆகுதா ஏதேதோ யோசனை . ஒவ்வொருத்தன் வாடகை வீடாவே இருந்தாலும் அதே வீட்ல வாழ்ந்து முடிச்சு செத்து கூட போயிர்ரான். அதென்ன இழவோ நமக்கு மாத்திரம் இந்த கருமம்.1991ல கல்யாணமாச்சு. அங்கே இருந்து சராசரியா வருசா வருசம் இதே கல்லெடுப்புதான்.

நான் குடியிருந்த வீடுகளோட ஓனர்ஸ் பத்தி எழுதினா ஒவ்வொரு நாய பத்தி ஒவ்வொரு போஸ்ட் போட்டாகனும். குடிபோன முதல் வீடு வேப்பமரத்தெரு. வீட்டு உள்ள ஏறினா லெஃப்ட்ல ஒரு ரூம். அதான் ஹாலு,பெட் ரூம் எல்லாம். வீட்டு உள்ளாஆஆஆஆஆஆற போனா ரைட்ல கிச்சன். இந்த இழவுல இருந்தது சரிய்யா 30 நாள் தான். மறு நாள் சித்திய நம்பி சத்தியவேடு புறப்பட்டேன். அங்கிருந்து கும்மிடி பூண்டி. ஓனர் முஸ்லீம். நான் பிறந்த தேதில 786 வர்ரதாலயா என்னனு தெரியலை முஸ்லீம்களோட மட்டும் பெரிசா பிரச்சினை வந்தது கிடையாது. கு.பூ வீட்டு ஓனராலயும் நமக்கு பிரச்சினையில்லை. நியூ கும்மிடிபூண்டில அம்பது ரூபா வாடகைல இருந்ததுதான் லீஸ்ட் வாடகை. கின்னஸ் ரிக்கார்ட். வருசம் 1992.

அப்புறம் சித்தூர் வந்துட்டன். தமயந்தி தெருவுல முஸ்லீம்ங்க வீடு. தெருப்பக்கமே வாசல். ஒரே அறைதான். இங்கன இருக்கும்போது ஒரு கங்கை ஜாத்திரை சமயம் ஒரு வாரம் வரை பட்டினி கிடந்ததும் (எக்செப்ட் டீ) படக்குனு கலப்பு திருமணம் காரணமா வெட்டி விட்டிருந்த அப்பா வந்து ஒட்டிக்கிட்டதும் அதுக்கு நான் செய்த முதல் ரத்த தானம் காரணமா இருந்ததும் ஞா வருது.

இப்பவும் நமக்கு நத்தம் நாடோடி பொறம்போக்குகள் சகவாசம் உண்டு. 1992 ல எந்த அளவுக்கு இருந்திருக்கும் பாருங்க. அதென்னமோ தெரியல திடீர்னு வீட்டுக்காரம்மா கல்யாணமாகிப்போன என் மகள் இங்கயே வந்துரப்போறா (வாழாவெட்டியாவா அ கணவன் திவாலாகிப்போனதால தெரியலை) காலி பண்ணுன்னா. நானும் வேட்டி வரிஞ்சிகட்டி வீடு பார்க்க ஆரம்பிச்சிட்டேன் அதுக்குள்ளார ஓனரம்மா பத்துவட்டி காரங்கிட்டே பார்ட்டைம் குமாஸ்தாவா இருக்கிற கலாய் பார்ட்டி ஒன்னை அனுப்பி வார்னிங்கும் ஆயிருச்சு.

பாவம் அப்போ அவனுக்கு நாம யாருனு தெரியாது. இப்ப தெரிஞ்சிக்கிட்டு சலாம் போடாம போறதில்லை. ஓஞ்சு போட்டம். அப்புறம் அங்கிருந்து பழைய மார்க்கெட் தெரு. அங்கே ஊதல் ரூம் மாதிரி போர்ஷனுக்கு போய் பயந்து போய் மாடில கதவில்லாத போர்ஷனுக்கு ஷிஃப்ட் ஆயிட்டன்.

திவாலா பார்ட்டிகளோட பிஹேவியரை அப்சர்வ் பண்ண அந்த வீட்டம்மா ரொம்பவே சகாயம் பண்ணாள். என் அப்பா வந்து ஒட்டிக்கிட்டாருனு சொன்னேனில்லயா.ஒரு மாசம் இந்த ஓனரம்மா நேர என் அப்பாக்கிட்டே போய் வாடகை வாங்கிட்டா. நமக்கு நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

அன்னைய தேதிக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் (ஷண்முகமணி ஃபிலிம்ஸ், ஆண்டாள் பிக்சர்ஸ்) ஷண்முகம் செட்டியார் பஸ் கம்பெனில செக்கிங். ஓனரம்மாவ "ஏம்மா இன்னைக்கி என் அப்பாக்கிட்டே போய் வாங்கிட்டே நாளைக்கு செட்டியார்கிட்டே போய் கேட்டாலும் கேட்ப ஆளவிடு"னு சொல்லிட்டு காலி பண்ணிட்டேன்.

என்னங்க பட்டியல் பெரிசா இருக்குனு நினைக்கிறிங்களா இப்பத்தான் 2 வருசம் கதை முடிஞ்சது. (1991 நவம்பர் டு 1992 நவம்பர்) இன்னம் 18 வருசம் கதை இருக்கே. சரி அந்த கதைகளை இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

லேட்டஸ்டா ஒரு வீடு பார்த்தேன். தண்ணி மோட்டர் கனெக்சன் மட்டும் வாடகை போர்ஷன் மீட்டருக்கு லிங்க் பண்ணியிருக்காம். நகராட்சி டேங்க் வந்தா வீட்டு ஓனர் சம்புல (அண்டர் கிரவுண்ட் தொட்டி) நிரப்பிருவானாம். மோட்டர் மூலம் பொதுவா உள்ள ஓவர் ஹெட் டேங்குக்கு அனுப்பிருவானாம்.கரண்ட் பில் நம்ம தலைல விழுமாம். இதுவாவது பரவாயில்லை. மியூச்சுவல்னு வச்சிக்கலாம். நகராட்சி தண்ணி டேங்க் எப்பவரும்னு தெரியாதாம். வரலன்னா ப்ரைவேட் டேங்க் வரவச்சுருவானாம். ஆஃப் டேங்க் ரூ200 ஆம். பாதி நாம குடுத்துரனுமாம். மோட்டர் வச்சி மேல அனுப்பிருவானாம். அதுக்குண்டான கரண்ட் செலவும் நம்முதேவாம். என்னங்கடா இது கணக்கு? வாடகை எவ்ளனு கேட்கலையே. ஜஸ்ட் ! ரூ.1,500 தான். ( என் சம்பளமே ரூ4,500 தான்) கொள்ளையில்லயா இது ? ரெண்ட் கண்ட்ரோலர் எங்க ஆட்டறான் தெரியல.

பதிவுல பலான விசயமே இல்லேனு நொந்துபோன பார்ட்டிகளுக்கு இந்த பிட்டு. வீடு பார்க்க போனப்ப ஓனர் நமக்கு ஆஃபர் பண்ண போர்ஷன்ல இருந்தான். காலிங் பெல் அடிக்கிறன்........ அடிக்கிறன் ........ நோ ரெஸ்பான்ஸ் .பத்து நிமிசம் கழிச்சு பஸ்ஸ்டாண்ட் பதிவிரதை ஒருத்தி ஹேண்ட் பேகோட பின்னாடி நிற்க ஓனர் கதவு திறந்தான். உச்சி வெய்யில்ல தாளி வேலை யெடுத்திருக்கான். மூச்சு வாங்குது. பதிவிரதைக்கு நம்ம மூஞ்சி தெரியும். ( ஒரு ரிப்போர்ட்டரா, பத்திரிக்கை ஏஜெண்டா , நமக்கு பஸ்ஸ்டாண்ட்ல தான் வேலை . ந்யூஸ் கவர் அனுப்ப, பத்திரிக்கை பார்சல் பிக்கப் பண்ண ) கோணலா சிரிச்சிக்கிட்டே படியிறங்கி போவுது. அதுக்கப்புறம்தான் தண்ணி பஞ்சாயத்து . போடாங்கோத்தா ! என்று அபவு டர்ன் அடித்து திரும்பி விட்டேன்.

குடித்தனக்காரன் கொடுமை:
பிட்டா படிங்க! ஸ்ரீராமுலு(55) உடல் ஊனமுற்ற எஸ்.சி.முதியவர். இவருக்கு ஹவுசிங் காலனில வீடு சேங்க்ஷனாச்சு லோன் வாங்கி கட்ட ஆரம்பிச்சார். ஃப்ளோரிங் போடற சமயம் மழை ஸ்டார்ட் ஆயிருச்சு. பக்கத்து பொத்தல் குடிசைல ஒரு முதலியார் இருந்தார். அவர் ப்ரைவேட் எலக்ட்ரிக் வைர் மேன். குஞ்சு குளுவானா ரெண்டு குழந்தங்க வேற. ஸ்ரீராமுலு அய்யோ பாவம்னு.. "தம்பி ! பாவம் குழந்தைகள வச்சிக்கிட்டு அவஸ்தை படறே. நம்ம வீட்ல இருந்துக்க மழை நிக்கட்டும் பார்க்கலாம்னு போனார்.

ஒன்னில்லே ரெண்டில்லே 14 வருசம் ஆச்சு. வைர்மேன் ஸ்ரீராமுலுக்கு ஷாக் கொடுத்து. ஒன்னுமில்லே "வீடு உன்னதுன்னு நிரூபி காலி பண்ணிர்ரன்" என்றுவிட்டான். இந்த கேஸுக்கு நம்ம கோர்ட்ல என்ன தீர்ப்பு கொடுத்தோம் அதை எப்படி அமல் படுத்தினோம்னு இன்னொரு பதிவுல பார்ப்போம்.

உடு ஜூட்.