Saturday, February 20, 2010

தாயை பெண்டாள எண்ணும்

தாயை பெண்டாள எண்ணும் மன நிலையை "ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்" என்பார்கள். மகனை முயலும் தாயின் மன நிலையை என்ன சொல்வார்கள் ? தெரியவில்லை. இந்த முடிச்சோடு நான் எழுதிய கதை இது ..

ஒரு பணக்கார வாலிபன் ஏழைப்பெண்ணை காதலிக்கிறான்.அவள் ஒரு மாடல். சந்தர்ப்பம் காரணமாக சவுண்ட் பார்ட்டியான மாமன் மகளையே மணந்து கொள்கிறான். அவன் காதலியான ஏழைப்பெண் அப்போது கர்பிணியும் கூட. இந்த துரோகத்தால் மனம் துவண்டு அவள் தற்கொலைக்கே முயற்சி செய்கிறாள். பின் மனம் தேறி குழந்தை பேறுக்கு தயாராகிறாள். அதே நேரம் காதலன் மணந்து கொண்ட மாமன் மகளும் கர்பம் . பிரசவத்துக்கு அட்மிட் ஆகிறாள்.

மாமன் மகளுக்கு குழந்தை செத்து பிறக்கிறது. காதலிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. வழக்கமாய் தமிழ் சினிமாவில் நடக்கும் குழந்தை மாற்றம் நடக்கிறது.

காதலி வாழ்வில் முன்னேறுகிறாள். தனக்கு துரோகம் செய்த காதலனுக்கு போட்டியாக வளர்ந்து அவனை துடிதுடிக்க செய்கிறாள்.

இவன் மனைவியோ அவனை விலைக்கு வாங்கிய பொம்மையாக பார்க்கிறாள் இவனை பல வகையிலும் கொடுமைப்படுத்துகிறாள். ஒரு புறம் மாஜி காதலியின் பகை , இவனை செல்லா காசாக்க அவள் செய்யும் சதிகள், மறு புறம் கட்டிய மனைவியின் கொடுமைகள் என்று தவிக்கிறான். மகனையாவது தன் விருப்பப்படி வளர்க்க முயல்கிறான்.மனைவி அவனை வெளி நாட்டுக்கு அனுப்பிவிடுகிறாள். இவன் வாழ்க்கை நரகமாகிறது.

ஒரு வழியாக மனைவி ஒரு விபத்தில் செத்துப்போகிறாள். மாஜி காதலியின் போட்டியை,சதிகளை இவனால் தனியே சமாளிக்க முடியாமல் வெளி நாட்டில் வளர்ந்து வரும் தன் மகனை இந்தியா வரவழைக்கிறான்.

படத்தின் முதல் ஷாட்டில் ரம்யா கிருஷ்ணா தனமான அ அண்ணி சங்கீதா தனமான ஹீரோயின் இளைய தலைமுறை ஹீரோவை ஏதோ ட்ரிக் செய்து ஏர் ஹெலிபேடில் காத்திருக்கும் அவன் தந்தைக்கு முன்னதாக சந்திக்கிறாள். (உதாரணம் : ஏர் போர்ட்டிலிருந்து ஹெலிகாப்டரில் வரும் அவனை ஆகாய வெளியிலேயே கடத்தில் தன் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு செல்வது.)

அவனை மயக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறாள்.அவன் தன் சொந்த மகன் என்ற உண்மை தெரியாது தன் காதலனின் ஜாடை இருப்பதால் இவள் கவரப்படுகிறாள். இதை கண்டு காதலன் பதை பதைக்க இவள் மேலும் மேலும் முன்னேறுகிறாள்.

பெற்றவர்களுக்கு தூரமாய் வளர்ந்ததாலும், இவள் பெற்ற தாய் என்பதாலும் இயல்பாகவே இவர்களிடையில் கவர்ச்சி தோய்ந்த நட்பு ஏற்படுகிறது. இதை பிரிக்க பணக்கார காதலன் முனைய , இவள் அவன் முயற்சிகளை முறியடித்து நெருங்க சந்தர்ப்பங்கள் வேறு வகையான திருப்பங்களை தருகிறது. உதாரணமாக இவள் அவன் உதட்டில் முத்தமிட முயல அந்த முத்தம் நெற்றியில் முடிகிறது. இவள் அவனுக்கு ப்ரசன்ட் செய்ய ராதா கிருஷ்ணன் பொம்மை வாங்கி பேக் செய்யச்சொல்ல அவன் கிஃப்ட் பேக்கை பிரிக்க யசோதா கிருஷ்ணன் பொம்மை வரும்.

இந்த டென்ஷனில் காதலனுக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துவிடுகிறது. இன்டெசிவ் கேர் யூனிட்டில் போட்டு உடைக்க உண்மை தெரிக்கிறது. அப்போது ராதா கிருஷ்ணர் பொம்மை ,யசோதா கிருஷ்ணராக மாறுவது, உதட்டில் முயன்ற முத்தம் நெற்றியில் முடிவது இத்யாதி காட்சிகள் கட் ஷாட்ஸில் மீண்டு மீண்டும் வரவேண்டும்.

இடையில் காதலன் - காதலியிடையில் பகை வளர்த்து மாடலாக இவள் உழைப்பை சுரண்டி இவள் வென்று முடித்த பின் அவளிடமே மேனேஜராக இருக்கு வில்லன் ஏதோ சிமிஷம் செய்ய காதலன்,காதலி, மகன் எல்லோரும் சேர்ந்து அதை முறியடிக்கிறார்கள். சுபம்.