Sunday, February 28, 2010

சாவின் நிழல்களுடனான யுத்தத்துல

பதிவுலகத்துல அனேக உத்தமருங்க, இனமான வீரனுங்க,ஆத்திக செம்மலுங்க, பகுத்தறிவு புயலுங்க இருக்காங்க. அவிக நம்மை பத்தி அதாவது என்னை பத்தி  "இவனுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கானு தெரியலைப்பா.."ன்னு எழுதியிருக்காங்க பேசியுமிருப்பாங்க. ஆனால் எவனுக்கு இருக்குதோ இல்லியோ எனக்கு இருக்குங்க. என்னடா பிரச்சினைன்னா  என் புத்தி காரியம் முக்கியம், சொக்கத்தங்கத்துல நகை செய்யமுடியாது எதையாச்சும் கலக்கனும்னும்.. மனசாட்சி அக் மார்க் தர்ம சாஸ்திரத்தையெல்லாம் ஞா படுத்தி இம்சை பண்ணிக்கிட்டே இருக்கும். நானும் 2000 ஜூலை 23 ல இருந்து ம.சாட்சிப்படிதான்  வலைப்பூவுல எழுதிக்கிட்டிருந்தேன்.ஆனால் 2009 மே வரைக்கும் ஏதோ கோவி கண்ணன் மாதிரி மஹாத்மாக்கள் தான் படிச்சு கருத்து தெரிவிச்சிக்கிட்டிருந்தாங்களே தவிர..ஒன்னும் பெயரல.

நான் எதையாவது எழுதறேன்னா அது தானா வெளியேற்ற அபான  வாயு மாதிரி வெளியேர்ரதில்லை. தில்லானா மோகனாம்பாள்ள சிவாஜி சார் காட்டுவாரே முக பாவனைகள், பாடி லாங்குவேஜ் அந்த ரேஞ்சுக்கு இல்லாட்டியும் உயிரை கொடுத்துதான் ஊதறேன்.  பந்தி புரதமெச்சுனு பன்னீரு மெச்சுனாங்கற மாதிரி பலான ஜோக்குதான் பத்திக்குது. மத்தது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


சரி மனசாட்சி கூட பேசி ரொம்ப காலமாச்சே அது என்னதான் சொல்லுது பார்க்கலாம்னிட்டு.. இந்த பதிவு.

மனசாட்சி:
என்னப்பா இது நீ சொல்லவந்ததை நேரிடையா சொல்லிட்டு போறத விட்டுட்டு இப்படி  சொதப்பறே. 800 பதிவு முடிஞ்சும் இந்த நிலைமையா?

நான்:
அடபோ மன சாட்சி !  உனக்கென்ன உபதேசமஞ்சரி கணக்கா அள்ளிவிடறே. நீ சொன்ன ஸ்டைல்ல 9 வருசம் மெயிண்டெயின் பண்ணேன்..மொத்த விசிட்டர்ஸே 2006 தான்  நானும் இதென்னடா அடவிலோ காச்சின வெண்னெலா, கடலில் பெய்த மழை கணக்கா போயிருதேனு என்னென்னவோ தகிடு தத்தம்லாம் பண்ணேன். ஹிட்ஸ் கூடட்டும் கிழிச்சுரலாம்னு பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்டை தொட்டா உடனே ஹிட்ஸ் சரிஞ்சுருதே

மனசாட்சி:
அதுக்குதான் சொல்றது நல்ல பாதை எத்தனை குறுகலா இருந்தாலும்,  நல்லதல்லாத பாதை எத்தனை விசாலமா இருந்தாலும்  நல்ல பாதைலயே நடக்கனும்னு. அப்போ 9 வருஷமா நாக்கு தள்ள கிழிச்சதெல்லாம் வீண் தானே

நான்:
என்ன நீ அப்பவே நீ சொன்ன மாதிரி எழுதியிருந்தா மொத்தமா 2006 பேர் படிச்சிருப்பாங்க அவ்ளதான். அதுல என் கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க

மனசாட்சி:
சரி முருகேசா ! இந்த 9மாசமா எத்தனையோ வித்தையெல்லாம் காட்டினேன். ஒரு லட்சம் ஹிட்ஸ் வந்தது. ஒத்துக்கறேன். ஆனால் இதுல உன் கருத்துக்களை கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க.. அதையும் தான் சொல்லேன் பார்ப்போம்.

முருகேசன்:
தா .. மனசாட்சி !  நீ ரொம்ப பேசறே..அதுவும் உண்மைகளை பேசறே.. உண்மைகள்  கசப்பா இருக்கும், நெருப்பா சுடும்.  அதோட கேள்வியெல்லாம் வேற கேட்கிறே.. இதெல்லாம் சரியில்லே..நான் பெரிய்ய எழுத்துல கெட் அவுட்னு கத்த வேண்டி வரும்..

மனசாட்சி:
அட என்னப்பா நீ ஏதோ நம்ம முருகேசன் ..அப்பப்ப நம்ம கூட டிஸ்கஸ் பண்ற ஆளு .. நாம  கொசு கடிச்சு  புரண்டு  படுத்தா கூட என்ன ஏதுன்னு விசாரிக்கிற ஆளாச்சே..பாதி ராத்திரில எழ்ப்பிவிட்டாலும் சலிக்காம சமாதானம் சொல்ற ஆளாச்சேனு பார்த்தா ஓம்கார் சீடர்கள்  மாதிரி கோச்சுக்கறே.. நீ என்ன இன்னைக்கே ஆழி சூழ் உலகமெல்லாம் உன் வழிக்கு வந்துரனும்னா துடிக்கிறே.. இன்டர் நெட்ல தான்  எத வச்சாலும் அது சிரஞ்சீவியாயிருதே.அடிச்சு விட வேண்டியது தானே.. அது பட வேண்டியவன் கண்ல ,பட வேண்டிய நேரத்துலபட்டு தானே தீரனும்

முருகேசன்:
இதுவும் நல்ல யோசனைதான்.. சனத்தை கிச்சு கிச்சு   மூட்டி தாஜா பண்ணி பிட்டு பிட்டா சொன்னதுல என் சித்தாந்தத்தோட சாரத்தையே மறந்துட்டன் போலிருக்கு
" கொஞ்சமா ரோசிச்சு பாருப்பா"
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம  வாழ்ந்து செத்துப்போயிருவான்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"

"சரி சரி .. அடுத்த பதிவுல தொடர்ந்து பேசுவோம்"

"ஓகே பை .."