Sunday, February 14, 2010

அண்ணா ஒரு அரசியல் வேசி

முதலில் எனக்கு பிடித்த தெலுங்கு கவிதை வரியை கோட்செய்து விட்டு முத்து குமார் ஒரு மன நோயாளி:
என்ற எனது கடந்த‌ பதிவு குறித்த தமிழ் பெருங்குடி மக்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறேன்.

( தற்போது மறுமொழிகளை மட்டறுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் போடப்பட்ட மறுமொழிகளின் எண்ணிக்கை , தரம் ஆகியவற்றை தாங்கள் அறிய இயலவில்லை )

கவிதைவரி:
"எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..?
நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்"
பொருள்:
"ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?
தடை செய்ய தகுதியற்ற கவிதை"

ஆம் இன்றைய ஹிப்பாக்ரட் (தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளுதல்) உலகம் தடை செய்யாவிட்டால் அது ஒரு நல்ல படைப்பென்றே சொல்லமுடியாது.

உலகமே ஹிப்பாக்ரட் என்றால் , இந்தியர்கள் , தமிழர்களை மட்டும் சொல்லி என்ன பயன்?

மகாராஷ்டிரம் மஹா ராஷ்டிரர்களுக்கே என்று கோஷமிடும் தீரர்கள் கூட இந்தியா இந்தியாவுக்கே என்று சொல்ல அஞ்சுகிறார்கள்.

ஒரு இத்தாலி பெண்ணின் பாதங்களில் பணிந்து தெலுங்கானா வாதிகளும், ஒன்றுபட்ட ஆந்திர வாதிகளும் பாத பூஜை செய்து வருகின்றனர். இதை ஹிப்பாக்ரசி என்று சொல்லாது வேறு எந்த வார்த்தையால் குறிப்பிடுவது.

சோனியா இத்தாலிப்பெண் என்பது பெரும் தகுதிக்குறைவு அல்ல. ஆனால் ராஜீவ் மரணத்துக்கு பின் அவர் அரண்டு போய் அரசியலிலிருந்தே கழண்டு கொண்டு 4 வருட காலம் அஞ்ஞாத வாசம் செய்தார்.

காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் நரசிம்மராவை பிடிக்காதவர்கள் கொம்பு சீவிய பிறகே சோனியா ஜி அரசியல் பக்கம் தம் பார்வையை திருப்பினார் என்பதையே நான் தகுதிக்குறைவாக பார்க்கிறேன்.

இந்த விசயத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த கமிட்மென்ட் கூட சோனியாஜிக்கு கிடையாது.

நிற்க , நாடு தழுவிய ஹிப்பாக்ரசி குறித்து பார்ப்போம்.

ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல செக்ஸையும்,( ஆணா பெண்ணா என்பதை) குண நலனையும் நிர்ணயிப்பது ஒரே ஜீனாம்.


இதை வைத்து ஆணுக்கு ஒரு குணம் பெண்ணுக்கு ஒரு குணம் இருக்கும் என்று கூறுவதோடு ஆணில் ஆண்மை,அவனது செக்ஸ் திறன், செக்ஸுவல் அவுட்லெட்டை பொருத்து அவன் குண நலன் மாறும் அ அவனது குண நலனை பொருத்து செக்ஸுவல் அவுட்லெட் மாறும் என்றும் ஊகிக்க முடியும்.

இதுவே பெண் விசயத்திலும் ஒர்க் அவுட் ஆகும் . அவள் பெண்மை,மாதவிலக்கு சக்கரம், செக்ஸுவல் டிசைர்ஸ், செக்ஸுவல் அவுட்லெட் ஆகியவற்றை பொருத்து அவள் குண நலன் அமையலாம். அல்லது அவள் குண நலனை பொருத்து அவள் பெண்மை,மாதவிலக்கு சக்கரம், செக்ஸுவல் டிசைர்ஸ், செக்ஸுவல் அவுட்லெட் ஆகியன மாறலாம்.


செக்ஸ் குறித்த விசயங்களில் ஹிப்பாக்ரட்டாக இருக்கும் மனிதன்/இனம் குண நலன்களை பொருத்த அளவிலும் ஹிப்பாக்ரட்டாகவே இருப்பான், இருக்கும்.

தமிழினத்தின் விடுதலைக்காக, தமிழினத்தின் சுயமரியாதைக்காக, பகுத்தறிவு பகலவனாய் ஜொலித்த ஈ.வெ.ரா பெரியாரின் திருமணத்தையே ஏற்றுக்கொள்ளாத இனம் தமிழினம்.

காலப்போக்கில் "பானுமதி படி தாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல " என்ற அண்ணாவின் வாதத்தை ஏற்கும் நிலைக்கு தமிழகம்.
உயர்ந்தது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

பெரியாரின் சமரசமற்ற போர்குணத்துடன் ஒப்பிட்டால் அண்ணா துரை ஒரு அரசியல் வேசி. அரசியல் வெற்றிக்காக கை கொண்ட கொள்கைக்கே காயடித்தவர்.
பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தை மட்டுமே எதிர்க்கிறோம்/ஒன்றே குலம் ஒருவனே தேவன் / திராவிட நாடு கோரிக்கையை கை விட்டது எட்ஸெட்ரா
ஆனால் தமிழினம் பெரியாரை மறுத்து அண்ணாவை ஏற்றது.

அண்ணாவை அரசியல் வேசி என்று குறிப்பிட்டாலும் அது பெரியாருடன் ஒப்பிடும்போதுதான் என்பதை அழுத்தி சொல்கிறேன். அவருக்கு முன்,பின்னான அரசியல் தலைவர்களை அண்ணாவுடன் ஒப்பிட்டால் அண்ணா ஒரு அரசியல் துறவி.

எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் கலைஞர் சிறந்த நிர்வாகி . ஆனால் ஹிப்பாக்ரட்டுகளான தமிழர்கள் எம்.ஜி.ஆரை ஏற்று கலைஞரை 13 வருட காலம் வனவாசம் செய்வித்தனர். இதுவானாலும் பரவாயில்லை நடனமணி ஜெயாவை ஏற்று கலைஞரை தோற்கடித்தது தமிழினம்.

காலப்போக்கில் திருமணம், செக்ஸ் இத்யாதி விசயங்களில் தமிழினத்தின் பார்வை அகலப்பட்டு வந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எம்.ஜி.ஆரின் மூன்று திருமணங்கள், கலைஞரின் இரண்டு திருமணங்கள். தமிழினம் எந்தளவுக்கு முதிர்ந்திருக்கிறது என்றால் ஜெயா சசிகலாவின் வரையறுக்கப்பட இயலாத உறவையும் ஏற்று இருக்கிறது.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் என் பதிவுக்கான மறுமொழிகளில் பழம்பெருமை, அக நானூறு,புற நானூறு, சங்ககாலம் இருக்கிறதே தவிர நேற்று முந்தா நேற்று கிழித்தது என்ன என்பது இல்லை.( அல்லது ஜன்ய பாகங்கள் பிரமுகமாக பிரஸ்தாபிக்கப்படும் நாலாந்தர மறுமொழிகள்)

உலகில் புனிதமென்று கொண்டாடப்படும் எதைக்காட்டிலும் புனிதமானது (குறைந்த பட்சம் மனித )உயிரும் ,மனிதமுமே. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புள்ள நளினி ஒரு ஆயுட்காலம் சிறையில் இருந்தாலும் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மந்தர்களின் கல் நெஞ்சம் கரையவில்லை.இத்தனைக்கும் ராஜீவ் கொலை குறித்து அந்த சம்பவம் நடந்து முடியும் வரை நளினிக்கு தெரியவே தெரியாது.


இனமானம், தமிழ் வீரம், தியாகம் என்று ஜல்லியடித்து இளைஞர்களின் மூளைகளை தற்கொலைக்கு தூண்டிய இயக்கங்கள் எத்தனை எத்தனை ? சமீப காலத்தில் ஒரு தலைவனாவது கொண்ட கொள்கைக்காகவோ ...இனமானம் காக்கவோ இதுவரை உயிர் தியாகம் செய்திருக்கிறானா? இல்லையே. எந்த தொழிலதிபனாவது இனம் காக்க பிணமானதுண்டா? இல்லையே.


தெலுங்கானா கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கிய கே சி ஆர் கூட டோட்டல் பேரண்டல் ந்யூட்ரிஷன் எனப்படும் திரவ உணவை ஊசி வழியே ஏற்றியபடிதான் உ.வி (?) செய்தார். ஆனால் தெலுங்கானாவுக்காக எத்தனை எத்தனை பேர் செத்தார்கள்

நாளை தெலுங்கானாவே அமைந்தாலும் போன உயிர்கள் திரும்புமா?

என் வாயை சாத்த பல்லாயிரம் ஹிப்பாக்ரட்டுகள் முயன்றாலும் என் வாய் மூடாது. ஆயிரம் தான் கொள்கை, கோன் ஐஸ்க்ரீம் என்று ஜல்லியடித்தாலும் ஒரு உயிரின் முதல் கடமை உயிர் வாழ்தல். அதை மாய்த்துக்கொள்வதை என்னால் ஏற்கவே முடியாது.

வாழ்க மனிதம் ! ஒழிக தற்கொலைகளை தியாகங்களாக்கும் போலி அரசியல் !