Wednesday, February 24, 2010

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை வெளியாக இருப்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன். திரு நவீன் அவர்கள் பத்திரிக்கையுல பிரமுகர்களுக்கே (முக்கியமாய் எடிட்டர்கள்) உரிய  எவ்வித பந்தாவும் இன்றி ஃபேஸ்புக்கில் உங்கள் படைப்புகளை அதிகாலைக்கு அனுப்புங்கள் என்று கேட்டபோதே என் மனதில் இடம் பிடித்துவிட்டார். என்றாலும் அதிகாலைக்கு தொடர்ந்து என் படைப்புகளை அனுப்ப முடியாது போனது. நேற்று யாஹூ சாட்டில் அகஸ்மாத்தாய் "மாட்டி"னார் திரு நவீன். எடிட்டோரியல்லயே சேரலாமே என்று ஆஃபர் செய்தார். ஆனால் வளர்ச்சி என்பது படிப்படியாகவே அமைய வேண்டும் என்பது என் கொள்கை. அல்பாயுசு கேஸுகள் தாம் அலைந்து பறை சாற்றும் என்பது என் அனுபவம்.

எடிட்டோரியல் வாய்ப்புக்கு என் தகுதியின்மையை கூறி நளினமாக மறுத்து  தொடர் கட்டுரை எழுத விருப்பம் தெரிவித்தேன். தலைப்பை சொல்ல சொன்னார்.  நம்ம ப்ளாக் பேர் சொல்ல காரணமே பலான ஜோக்குகளும், பலான சாமாச்சாரங்களும் தானே அந்த நன்றியுணர்வுடன் " நிர்வாண  நிஜங்கள் " என்ற தலைப்பை சொன்னேன். இன்றே முதல் கட்டுரையை அதிகாலை டாட்காமுக்கு அனுப்புகிறேன்.

தொழில் துறையின் புடவை சுற்றில் மோகம் கொண்டு விவசாயத்துறையை அரசுகள் கண்டு கொள்ளாது இருக்கும் முட்டாள் தனத்தை நிர்வாண நிஜத்தை முதல் கட்டுரையில் கிழித்துள்ளேன்.

மேற்படி கட்டுரையின் முதல் பத்தி மட்டும் இங்கே தொடர்ந்து படிக்க சிரமம் பாராது அதிகாலை டாட் காம் செல்ல இங்கு அழுத்தவும்.  ப்ளீஸ் ! (இந்த அழுத்தற சமாச்சாரத்தை அரசு அலுவலகங்களில் மட்டுமில்லாம எங்கயும் தொடர்ர தமிழர் கலாச்சாரம் வாழ்க !)


நிர்வாண நிஜங்கள்
"சத்யமேவஜெயதே"ன்னு  ஸ்லோகன் வச்சிக்கிட்டு  நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற  கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா.  நம்ம சனம் தோல் தடிச்சி போயி கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி  சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு, சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட கார்ப்போரேட் கம்பெனிகள்  நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை நட்டாத்துல விடறது  அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது  இதெல்லாம் நம்ம கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற  செம்பு கம்பிகளை ஒரு கூட்டம் திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில்  விவசாய குடும்பங்களை சேர்ந்த   இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்  வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி  ஓனர்களின் உழைப்பு சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகளை கட்டி  தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம் பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது, கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு இலவச யோசனை தந்திருக்கார்.