Monday, February 22, 2010

இதுதாண்டா ஜோதிடம்: 2

அனுபவ ஜோதிடம்-1
//உங்க லக்னாதிபதி யாரு, அவரு எங்க நின்னாரு,அங்கே அவரோட பலம் என்ன?  யாரோட சேர்ந்தாருங்கறதையெல்லாம் பொருத்து  பலன் மாறிக்கிட்டே போகும்.//னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.   லக்னாதிபதியின் இருப்பை பொருத்து பொதுப்பலனையும் சொல்லியிருந்தேன்.
லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி லக்னத்திலேயே யிருந்தால்:
பொதுப்பலனில் சொன்ன நல்ல பலனோடு  மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி ஏற்படலாம்.,வலது கண், பல்,எலும்பு, முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் வரலாம். தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்யலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்டில் பங்கெடுப்பான். லோ.செ.கவர்ன்மென்ட் காண்ட்ராக்டுகள் செய்யலாம். சுற்றி சுற்றி வந்து செய்யும் வேலைகள், சூப்பர் வைசிங்க், தரக்கட்டுப்பாடு, விளம்பரம், கிராமப்புற நிறுவனங்களில் வேலை, டீம் லீடர் போன்ற பொசிஷனில் இருக்கலாம். இவர் தன்னவர்கள் நல்வாழ்விற்காக அவர்களை உழைக்க தூண்டியபடியே இருப்பார். இதனால் பிறர் இவரை " நச்சு" கிராக்கிப்பா என்று நக்கலடிப்பார்கள்



லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  2லிருந்தால்:
வலது கண் சிவந்திருக்கலாம், சிறந்த விமர்சகராக இருக்கலாம். சொந்த உழைப்பில் பொருளீட்டு வார். மேற்சொன்ன துறைகள் கைகொடுக்கும். குடும்பம் சிறுத்து காணப்படும்.

லக்னம் சிம்மமாகிலக்னாதிபதி  3ல் இருந்தால்:
பொதுப்பலனில் கூறிய கெடுபலனோடு லேசான செவிடு ஏற்படலாம்.இவரே கடைசி வாரிசாக இருக்கலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 4ல் இருந்தால்:
ஜாதகர் பிறந்த வீடு  பாழடைந்து போகலாம். வீட்டின் நடுவே திறந்த வெளி இருக்கலாம். அவ்வீட்டின் வலது ,இடது புறம், எதிரில் வீடுகள் இல்லாதிருத்தல், ஒரு வேளை இருந்தால் அவ்வீடுகள் மூடப்பட்டு இருத்தலும் நடக்கலாம். அரசு வாகனயோகம் அமையலாம். ஆனால் வீட்டில் நிம்மதியிராது. தாய் விதவையாக இருக்கலாம். மேற்சொன்ன துறைகள் தொடர்பான கல்வி பயில்வார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 5ல் இருந்தால்:
முன் கோபமிருக்கும். பொறுமையிருக்காது. சிடு சிடுனு இருப்பாய்ங்க. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஆண் குழந்தை பிறக்கும்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 6ல் இருந்தால்:
லோக்கல் பாலிட்டிக்ஸ்ல முட்டி மோதிக்கிட்டே இருப்பாய்ங்க.  பல்,எலும்பு,முதுகெலும்பு,தலை,வலது கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். பகல்ல பிறந்திருந்தா அப்பாவோட ஒத்து வராது.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  7ல் இருந்தால்:
மனைவி கற்புக்கரசியாக இருப்பார். அரசியல் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்திருப்பார். ஒல்லியாக, சிவப்பாக இருப்பார். பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருக்கலாம்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  8ல் இருந்தால்
பொதுப்பலனில் கூறிய பலன் கள் 100 சதம் நடக்கும். இந்த தீமைகளுக்கு தந்தை தந்தை வழி உறவினர்கள், லோக்கல் பெரிய மனிதர்கள் காரணமாக இருப்பர்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  9ல் இருந்தால்:
தந்தை,தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் ஜாதகர் பெரும்பொருளீட்டி சொத்துக்கள் வாங்குவார் வாரிசு அரசியலில் கிராம சர்பஞ்ச் , வார்டு மெம்பர் பதவிகள் கிட்டலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  10ல் இருந்தால்:
மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களில் ஆர்வம் ஏற்படும்.மேலும் சமூக கொடுமைகள்,ஏற்றத்தாழ்வுகள்  குறித்தும் ஜாதகர் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவார்.  பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் நலம் நாடினாலும் அவர்கள் குறித்த ஏளன ஸ்வபாவம் இருக்கும். விக்கிரகாராதனை சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்காது.ஆத்ம சாட்சியாக செயல்படுவார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 11 ல் இருந்தால்:
தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களினாலும்  ஜாதகர் பெரும்பொருளீட்டுவார்.


லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  12ல் இருந்தால்:
தூக்கமின்மை, அல்லல் அலைச்சல், அளவுக்கு மிஞ்சிய அகந்தை காரணமாக வீண்செலவுகளை இழுத்துவிட்டுக்கொள்வார்கள்.