இது ஏதோ கல்யாணமாகாத கன்னிப்பெண்ணும் அவளோட காதலனும் கர்பத்துக்கப்புறம் பேசிக்கிற டைலாக் மாதிரியிருந்தா ஐம் சாரி. நான் ஆந்திர மானிலத்துல நக்ஸல்ஸுக்கும், மத்திய உள் துறை மந்திரி சிதம்பரத்துக்குமிடையில நடக்கிற விவகாரத்தை சொல்ல வந்தேன்.
கண்ணி வெடில சாகற போலீஸ் மேலயோ , என் கவுண்டர்ல சாகற நக்சல்ஸ் மேலயோ நமக்கு ( ஹி ஹி எனக்கு) சிம்பதி கிடையாது. ஏன்னா நக்ஸல் அவனோட லட்சியத்துக்காக ஃபைட் பண்றான், போலீஸ் அவன் வயித்துபாட்டுக்காக ஃபைட் பண்றான். ஆனால் ரெண்டுப் பக்கமும் அடி வாங்கற மத்தளம் கதையா நாசமா போறது மக்கள் தான்.
என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் கூட இவிகளோட பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தாச்சு. அதாவது ஏதோ மந்திரி பேசுவாரு, அவருக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க ப்ளு ப்ரிண்ட் கொடுப்பாங்க. இந்த பேச்சு வார்த்தைங்கறதே ஒரு கலை. இது இந்த ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் பார்ட்டிகளுக்கு ஒரு ம...ரும் தெரியாது. இவிக கான்வென்ட்ல படிச்சுட்டு தன் முன்னே தெரியற புல் கட்ட திங்க தலைய அசைச்சு அசைச்சு முன்னுக்கு ஓடற பட்டை கட்டின குதிரைக மாதிரி . ஏதோ கொஞ்சம் சமுதாயத்தோட இருந்த கம்யூனிகேஷனும் ஏ.சி. ரூம்லவேலைன்னு போன பிறகு உசோ ஆயிருது. அவரு அவரு சேம்பர்ல இருக்கிற வரை பெருமாள் மாதிரி எல்லாரும் அவருக்கு ஆராதனை. மந்திரி வந்துட்டா இவர் அவருக்கு செருப்பு தூக்கனும்
செருப்புன்னா ஞா வருது நீதி மன்றத்துல , கோர்ட் நடக்கிற நேரத்துல கர்னூல் நீதிபதியை அதே கோர்ட்ல வேலை செய்யற பெண் டைப்பிஸ்ட் செருப்பாலடிச்சிருக்காங்க. தங்களுக்கு கீழ வேலை செய்யற அதிகாரிகளை, ஊழியர்களை கொத்தடிமையா நடத்தறதுல போலீஸ் டிப்பார்ட்மென்டை விட கோரமான டிப்பார்ட்மென்ட் நீதித்துறை. போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயாவது "ஐயா" பெரிய ஐயாவுக்கு சேவகம் பண்ண போனப்ப காம்பவுண்டுக்குள்ள சக ட்ரைவர் கிட்டே இதையெல்லாம் பேசி மனச ஆத்திக்கலாம். நீதித்துறைல அந்த இழவு கூட கிடையாது.
யாரோ சொன்னாங்க ஒரு பெண் நீதிபதி. அவிகளை புருசன் காரன் செமை இம்சை கொடுத்து விவாகரத்து வாங்கின கேஸு அந்தம்மா. அவிக கோர்ட்ல ஆம்பளைனு சொல்லிக்கிட்டு ஒரு புழு போய் பெயிலுக்கு அப்ளை பண்ணா கூட பேராதாம். பொய் கேசா இருந்தா கூட அந்த ஆம்பளை ஜெயிலுக்கு போயே ஆகனும். இதே நீதிபதி கிட்ட நான் ஸ்டெனோவா இருந்திருந்தா என்னாயிருக்கும் ? உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
சரி ரொம்பவே டைவர்ட் ஆயிட்டம் விஷயத்துக்கு வந்துர்ரன். ஆங் ! நக்சல் பேச்சு வார்த்தை. தமிழ் நாட்ல எழுத்தாள பெருந்தகைகள் விஷயம் எப்படியோ எனக்கு தெரியாது. ஆந்திராவை பொருத்தவரை எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் ,மனித உரிமைகளுக்கான சுதந்திர அமைப்புகளுக்கெல்லாம் நக்சல்ஸ் மேலே நல்ல சிம்பதி இருக்கு.
அவிக எங்கயோ காட்டுக்குள்ளாற இருந்தாலும் இவிக அவிகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டே இருப்பாக. (தமிழ் நாட்ல ஈன்னு சிரிச்சா கூட ஈழங்கறான்னு தூக்கி உள்ளாற போட்டுர்ராங்களாமே நிஜமா ?
சரி பழைய கதை எதுக்கு ..லேட்டஸ் டெவலப்மென்டை பார்ப்போம்.
ஆயுதங்களை கைவிட்டால் நக்சல்ஸுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்னு - மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம் அறிவிச்சது நினைவிருக்கலாம்.
இதையடுத்து நக்சல் தலைவர் கிஷன் ஜி " 72 நாட்களுக்கு துப்பாக்கி சூடு நிறுத்தம் அறிவிச்சு பேச்சு வார்த்தைக்கு தயார்னு அறிக்கை உட்டார். அப்புறமா தான் அசல் கதையே .. செமை காமெடிபோங்க..
(அஸ்கு புஸ்கு) அறிக்கை எழுத்துப்பூர்வமா இருக்கனும். என் ஃபேக்ஸ் நெம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணுங்க
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்
பண்றோம். இதோ இந்த நெம்பருக்கு கால் பண்ணுங்க
- நக்சல் தலைவர் கிஷன் ஜி
ஃபேக்ஸ் வரவேயில்லை.
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்
நக்சல்ஸ் கொடுத்தது போலீஸ் கான்ஸ்டபிள் நெம்பர் . யாரும் எடுத்து பேசவே இல்லை
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்
இவிக எம்மாத்தம் பொறுப்பா நடந்துகிடறாங்களோ பார்த்தியளா ? இவிகளை எல்லாம் நம்பி நடுக்கூடத்துல பாதி ராத்திரி வரை சீரியல் பாக்குதுங்களே அதுகளை சொல்லனும்.
தெலுங்கானாவில் இரண்டு மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களும் மானில சராசரியை விட அதிக வளர்ச்சி. இதர பகுதிகளில் 4மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
-ஜெயபிரகாஷ் நாராயண், தலைவர், லோக் சத்தா