ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா.. என்றார் கண்ணதாசன் .வர்ஜியா வ்ர்ஜியமின்றி(சுஜாதா), கச்சா முச்சானு (ரஜினி) படிச்சதுல என் மனது எண்பதாவும் அதில் ஒளிந்து கிடப்பது எண்ணூறாகவும் மாறிவிட்டது. ஆனால் குழப்பம் என்பது என்னில் எள்ளளவும் கிடையாது. முடிந்தவரை லீகலா இல்லீகலா பார்ப்பேன். லீகலை தேர்வு செய்வேன். பின் அது ஹ்யூமனா இல்லையா பார்ப்பேன். ஹ்யூமனை மட்டும் தேர்வு செய்வேன். இதனால் தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஸ்ரீராமனையும் ஒரே நேரத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
இதையே இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு குறு நாவல் கூட எழுதியதாய் ஞா. ஒரே நபர் ஒரு பெண்ணை காதலித்து,கர்பமாக்கி கைவிட்டு,மற்றொரு சவுண்ட் பார்ட்டியை மணந்து, மற்றொரு பெண்ணை (தனக்கு எம்மாத்திரமும் தொடர்பற்ற பெண்ணை) இழி நிலயிலிருந்து காப்பாற்றி கலெக்டராகவே ஆக்குகிறான். அந்த நபரை பழிவாங்க வந்த பெண், அதே நபரின் ஸ்பான்ஸர்ஷிப்பில் கலெக்டரான பெண்ணிடம் வந்து சரணடைகிறாள்.
இந்த குறு நாவல் மூலம் சொல்ல வந்த சேதி என்னவெனில் " எவனும் 24 மணி நேரம் நல்லவனும் கிடையாது. 24 மணி நேரம் கெட்டவனும் கிடையாது " என்பதே.
இந்த தத்துவத்தை எல்லா தலைவர்கள் விஷயத்திலும் அப்ளை செய்து பார்க்கலாம். உ.ம்: கலைஞர்
எமர்ஜென்ஸியை எதிர்த்து ஆட்சியை இழந்து, தொண்டர்களை பலி கொடுத்த கலைஞர் எங்கே !
நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக என்ற கலைஞர் எங்கே !
பி.ஜு.பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்புக்கு பேச்சு நடத்த வந்த போது எம்.ஜி.ஆரே முதல்வராக தொடரட்டும், அண்ணா வைத்த பெயர் திமுக, அண்ணாவின் சின்னம் உதயசூரியன் அவை தொடரவேண்டும் என்ற கலைஞர் எங்கே !