Wednesday, August 29, 2007

புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி






தாயே தாயே கண் பாரு (குடை)


சாய்ந்து கிடக்குது என் தேரு


ஏனோ பிறந்தேன் அறிவில் சிறந்தேன்


ஞானம் பகிர நானும் துடித்தேன்


அனலில் புழுவாய் துடி துடித்தேன்


பாடிப்பாடி மகிழ்ந்தேனே


உயிர்வரை நாளும் நெகிழ்ந்தேனே


மாக்கள் போலே வாழ்கின்ற


உன் மக்கள்தானே வதைக்கின்றார்


உத்தமர் என்றே கதைக்கின்றார்


நியாயம் இதுவோ என் தாயே


என் கை உயர கை தாயேன்


சூக்கும் புத்தி உன் பிச்சை


இதில் ஏதடி எனக்கென்று ஓரிச்சை


உன் இச்சைப்படியே வாழ்கின்றேன்


பிச்சை ஏற்று தாழ்கின்றேன்


காசொடு கருமம் துணை


வந்து பிணைக்குது என்னை


அறுத்தெறிவாய்


மாதவன் சேவை என நம்பி


மக்கள் சேவை ஏற்றவன்


நான் ஏழ்மை ஒழிக்க வந்துற்ற


மகிஷம் அற்ற கூற்றுவன் நான்


என் நாவில் கலைமகள் நீயன்றோ


உன் செல்லப்பிள்ளை நானன்றோ


என் கவிதை கேட்க சிதையேற்ற


தாயே நீயே துடிப்பதுவோ


எழுதி எழுதி என்னாச்சு


அவை அழிந்திட என் மனம் புண்ணாச்சு


பாலையில் பனி மழை பொழிந்திடலாம்


என் மனதில் கவிதை வழிந்திடுமோ


நானும் மனிதன் தானல்லோ


கைப்பிடி இதயம் தானல்லோ


எத்தனை தானது தாங்குமடி


என்று என் கொடி ஓங்குமடி


தருமம் என் தலை காக்குமென்று


தரணியாளும் தலைவனையும்


உன் துணையாலே எதிர்த்திட்டேன்


ஐயம் ஏற்ற நாளுண்டு


கொண்ட கொள்கையில் ஐயம் உண்டோடி


அன்னை உண்டு பின் என்று


முன் பின் யோசனை இல்லதே


களம் புகுந்திட்ட பித்தன் நான்


நீ உளம் புகுந்திட்ட சித்தன் நான்


(ஒப்)பேற்றி என்னை வெளிக் கொணர்ந்தாய் இல்லை என்று மறுப்பேனோ (காப்)பாற்றி என்னை வைத்துள்ளாய் இல்லை என்றுனை வெறுப்பேனோ அசடர் கசடர் முன்பெல்லாம்


அலி போல் என்னை நிறுத்துவதோ


எலி போல் நானும் நடுங்குவதோ


புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி


(வீர) சிவாஜி மட்டும் உன் பிள்ளை


என்றால் நீ ஒரு தாயில்லை


பிஞ்சில் பழுத்து வெம்பி விட்டேன்


உனையே நம்பி வந்து விட்டேன்


இன்னும் என்ன தயக்கமடி


தயங்குதலே உன் வழக்கமோடி


மென் மனம் புண்பட புல்லர்களே


புலி வேடம் கட்டி ஆடுகையில்


ஆடு போலே விழிக்கின்றேன்


ஏடு எடுத்து எழுதியதை முகர்ந்தும் பாரா உலகத்தில்


எழுதிவைத்து என் செய்வேன்


அம்மா நீயே மனம் வைத்தால்


என் எழுத்து உலகை ஆளாதோ


உலுத்தர் உவகை மாளாதோ


நாட்டின் ஏழ்மை நாளை மாறாதோ


என் லட்சிய தாகம் தீராதோ