Wednesday, November 28, 2007

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?

நியூஸ் வ்யூஸ் நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?
பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?


ப‌திவ‌ர்க‌ளே த‌ங்க‌ள் க‌ருத்தை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்!