நாம் எல்லோருமே பைத்தியங்களாகத்தானிருக்கிறோம், பெர்ஸன்டேஜில் தான் வித்யாசம். இதற்கு காரணம் செக்ஸ். மனித வாழ்விலான சிறு பாகமாக இருக்கவேண்டிய செக்ஸ் அது மனிதனுக்கு நியாயமாக கிடைக்காத காரணத்தால் மனித வாழ்வையே ஆக்கிரமித்து விடுகிறது.
உண்மையான உலகம் வேறு. மனிதன் தன்னைச் சுற்றி ஊகித்துக்கொள்ளும் உலகம் வேறு. அவனை தன் உலகத்திலிருந்து பார்வையை திருப்பி,உண்மையான உலகத்தை பார்க்காதிருக்கச் செய்வது அவன் மனதின் காம விகாரங்களே. இயற்கையின வரபிரசாதமான பத நீர் புளித்து கள்ளாவதை போல இயற்கையான உடலுறவு ஆர்வம் காம விகாரமாக மாறி மனிதனின் அந்தரங்க,குடும்ப,சமூக வாழ்வை பாதிக்கிறது.
இதற்கு தீர்வு செக்ஸ் கல்வியா? இல்லவே இல்லை . தற்போதைய அரசு இயந்திரத்தை கொண்டு செக்ஸ் கல்வி வழங்குவது ஆபத்தில் தான் முடியும். இதைவிட உலக செக்ஸ் மேதைகள், மனோதத்துவ மேதைகளை கலந்தாலோசித்து செக்ஸ் கல்வியை வடிவமைத்து நம் கலாச்சாரம்,பண்பாட்டுக்கு உடன்பாடான வகையில் கதைகள், காவியங்கள், அல்லது கார்ட்டூன் படங்கள் மூலம் அவரவ்ர் வீட்டு ஹாலில் தொலைக்காட்சி மூலம் செக்ஸ் கல்வியை பெறும்படி செய்வதே புத்திசாலித் தனம்.
மனிதர்களின்,அந்தரங்க ,குடும்ப, சமூக வாழ்வில் பிரச்சினைகள் பின்னிப் பிணைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இவற்றிற்கான தீர்வுகளை யோசிக்கும்போது தான் எனக்கும் இந்த சமுதாயத்துக்கும் தகராறு ஏற்படுகிறது. சமுதாயம் தொழுநோய்க்கு அவில் மாத்திரையை பரிந்துரைக்கிறது. முதற்கண் நோய் இருப்பதை கண் கொண்டு பார்க்க மறுக்கிறது. என் செய்வேன் ?
மனிதர்களை மனிதர்களாக கருத்தில் கொண்டு இயற்றியதால் தான் சட்டங்கள் தோற்றுவிடுகின்றன. என்னதான் ஆடை அணிய கற்றுக் கொண்டாலும் மனிதன் மிருகம் தான். மிருகத்திற்கு தேவை பசிக்கு உணவு, தினவுக்கு தேவை உடலுறவு, உயிர் பாதுகாப்பு. ஒரு அரசாங்கத்தின் முழு முதல் கடமை மக்களுக்கு உணவளித்தல்,அடுத்து அவர்களிலான மிருகத்தை வெளிக்கொணரும் சக்தி படைத்த காமம்,உயிர் பயத்திலிருந்து பாதுகாப்பளித்தல்.
விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தாலே என் போன்ற தினத் தந்தி நிருபர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். கள்ளக்காதல்,கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி இத்யாதிக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விடும். செக்ஸ் எண்ணங்கள் அழுத்தப்பட்டு அவை வன்முறையாக கிளர்ந்தெழும் நிலை மாறும். உடலுறவுக்கு மாற்றாக பணம்,பதவி,அதிகாரம் இவற்றைக் கொண்டு மக்களை கொன்று, இறுதியில் மக்களால் கொல்லப்படும் (பதவி தானே உயிராய் இருக்கிறது/மக்கள் ஓட்டை மாற்றிப்போட்டால் பதவி கோவிந்தா../பதவி போன அரசியல் வாதி பிணம் தானே) நிலை மாறும்.