Tuesday, November 20, 2007

ஆத்தாளுக்கு அல்ட்டிமேட்டம் !

த‌ பாரும்மா உன் கதை..உன்னை ப்ரமோட் பண்ற போர்வைல தங்களை ப்ரமோட் பண்ணிக்கற பார்ப்பனர் கதை எல்லாமே தெரியும். என்னமோ புது பெண்டாட்டி மாதிரி சீன் எல்லாம் காட்டறியே! நீ என் தாய்ங்கற சங்கதிய மறந்துட்டயா.. ஆமாம் இருந்தாலும் இருக்கும் ஒன்னா ரெண்டா ..மில்லியன் ட்ரில்லியன் கணக்கா பெத்தவ நீ. உனக்கெங்கே ஞாபகமிருக்கபோவுது. அடிக்கு அடி..பேச்சுக்கு பேச்சுன்னு வாழ்ந்துகிட்டிருந்தேன் இப்பா எல்லாம் ஆத்தாளே பாத்துப்பான்னு விட்டுர்ரன். இது என் கையாலாகாத்தனம்னு நீ நினைச்சுட்டாப்ல இருக்கு.

நீ ட்ராகுலா மாதிரி என் ரத்தத்தை குடிக்கற கதை தெரியும். இருந்தாலும் உன்னை விடாம வச்சிருக்கிறது மனித ஆழ்மனதில் இருக்கும் அடிப்படை கோரிக்கைதான் . ஒன்னு சாகனும் இல்லே சாகடிக்கனும். சாகடிச்சா கர்மம் கூடும். செத்தால் கர்மம் தொலயும்.

என் பார்வையில எந்த மிருகம்,புழு ,பூச்சிய விட நீசமான பிறவி மனித பிறவிதான். இந்த குறைபட்ட மனிதர்களால கொல்ல படறத விட உன் கையால சாகறதே பெருமைன்னுதான் உன்னை வணங்கறது. நீ என்னை காப்பாத்துவே..கடை தேற்றுவேங்கற பேராசையெல்லாம் எனக்கு கிடையாது. அதை கொடு/இதை கொடுன்னு கேக்கற ஜாதி நானில்லே. என் தன்மானத்தை மட்டும் காப்பாத்துன்னு கூட கேக்கலை. காப்பாத்திக்க விடுன்னுதான் கேட்டுகிட்டு இருந்தேன் . அதை கூட பல சந்தர்ப்பத்துல த்ராட்டுல விட்டுட்ட. நானும் கலைஞர் மாதிரி நடந்தவை நடந்தவையா இருக்கட்டும் நடப்பவை நல்லவையா இருக்கட்டும்/மறப்போம் மன்னிப்போம்னு இருந்துட்டன்.

நீ என்னமோ ஜூனியர்களை ராக் பண்ற சீனியர் மாதிரி பில்டப் கொடுக்கறே..என‌க்கு ,மனிதர்களை புரிஞ்சுக்கறது தான் கஷ்டம். உன்னை உள்ளபடி புரிஞ்சு வச்சிருக்கேன். என்ன ஒரு லொள்ளுன்னா சிலசமயம் உன் பாஷை புரியாம போயிருது. இருந்தாலும் எப்படியோ இட்டுகட்டி புரிஞ்சிகிட்டு சமாளிச்சிக்கிட்டு தான் வ‌ரன், நானும் நல்லா கவனிக்கிறேன் நான் ஏதாவது எம்.ஜி.ஆர் வேலைல இறங்கும்போது தான் லொள்ளு பண்றே. சும்மா தின்னு,தூங்கி ஊர் சுத்தறப்பல்லாம் எந்த பிரச்சினையும் கொடுக்கறதில்லே. நீ என்னதான் நினைச்சிருக்கே..
நமக்குள்ள என்ன அக்ரிமென்ட்டு? அம்மா நீ என்னை காப்பாத்து/நான் இந்தியாவுல வறுமைகோட்டுக்கு கீழ வாழும் 40 கோடி மக்களை நான் காப்பாத்த முயற்சி பண்றேன் அதுக்கு நீ சகாயம் பண்ணனுங்கறது தான். நீ இந்த விஷயத்துல சகாயம் பண்ண சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம். கை கொடுத்த சந்தர்ப்பங்கள் ஆயிரமாயிரம். எப்பப்பாரு ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டுதானா?

இதெல்லாம் நல்லால்லே..நல்லாவே இல்லே.. ஆமா சொல்லிப்புட்டேன்.


குறிப்பு:(இப்ப 30 கோடி தாங்கறாங்க/இது நிச்சயம் பொய்யாதான் இருக்கும்/சித்தூருலயே இந்த பத்து வருசத்துல மேலும் ஆயிரம் குடும்பமாவது பிழைப்பு கெட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்கே தவிர உருப்பட்ட குடும்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம்)

வறுமையை விரட்ட நான் தீட்டின ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் ஏறக்குறைய கோமால இருக்கு.(விவரங்களுக்கு: //www.tamilvasam.blogspot.com//) சரி ஒழியட்டும்

நீ கொடுத்த ஜோதிஷ ஞானத்தை(?) உபயோகிச்சு வறுமையை விரட்டலாம்னு எல்லாருக்கும் தனயோகம் எழுத ஆரம்பிச்சா ரொம்பத்தான் லொள்ளு பண்றே

நான் ராத்திரி 10.30 மணிக்கு தூங்கற ஜாதியா ..நடுராத்திரி வரைக்கும் அதை இதை உருட்டிக்கிட்டு நல்லா விடிஞ்ச பிறகு தூங்க முயற்சி செய்து ஃபெயிலாகிற ஜாதி. என்னை ராத்திரி 10.30 க்கெல்லாம் சதி பண்ணி தூங்க வைக்கிறே..
ஏதோ ராமனுக்கு ஆஞ்சனேயர் மாதிரி என் மகள் எனக்கு துணையாயிருந்தாள். அவளையும் பிரிச்சுட்ட. பணமா வந்தா நாசமா போகுது.இல்லே சோத்துக்கே லாட்டரி.

த‌ பாரு..ஜோதிஷ பூமில தொடர் வந்தது. ஜனம் என் நவீன பரிகாரங்களை ஃபாலோ பண்ணி வறுமைலருந்து ரிலீசாயிட்டாங்களா இல்லயே.

அதே மாதிரிதான் எல்லோருக்கு தனயோகம் சீரியலும். நீ ஏன் பயப்படறே..உன் சதிதான் வெல்லும். தெரிஞ்ச கதைதான். அதுக்காக நான் சும்மா இருக்க முடியுமா?

ஜாண் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளையில்லியா?


உனக்கு என்னை விட்டா வேற கதியில்லே..எனக்கு உன்னைவிட்டா வேற கதியில்லே
ந‌ம‌க்குள்ள‌ என்ன‌ த‌க‌ராறு. நான் செய்ய‌ நினைக்க‌ற‌தை செய்ய‌ விடு. நீ செய்ய‌ற‌த‌ செய்.


அன்னமய்யா கீர்த்தனை ஒன்ரின் ராகத்துக்கு தமிழில் எழுதிய பாடல்:

வாடுமோ ..வாடுமோ உனக்கென தொடுத்திட்ட தீந்தமிழ் பாமலர் மாலையே
எனக்கென நான் கொண்ட காவலே நீ தான் பெருமானே.


உயர்விலும் தாழ்விலும் என்னை துரத்துது என் பகையே

அமுதினை கடைந்திடும் வேளையிலாங்கே கூர்மத்தின் வடிவினில் நின்றவனே
வரம் தந்து ஈசனும் தவிக்கின்ற வேளையில் மோகினியாக வந்தவனே

தூணிலும் துரும்பிலும் இருப்பவன் நீயென்று தந்தைக்கு கூறிய பிரகலாதன்
துதித்திட தூணினை பிளந்து வந்தாயே எண்ணவும் குளிருது என்மனம்

கயலென வந்தவன் நீயன்றோ
உயிர்களை காத்தவன் நீயன்றோ