"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்பது நம் கொள்கை. தமிழில் அராஜகம் என்பது நெகட்டிவ் மீனிங்குடன் உபயோகிக்கப் படுகிறது. அராஜகம் என்றால் பஸ்ஸை,பிரஸ்ஸை கொளுத்துவது அல்ல. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா என்று வாழ்வதே அராஜகம். அந்த அர்த்தத்தில் நான் ஒரு அராஜகவாதி.
என்னைப் பொருத்தவரை ஜெயா/கலைஞர்/ரஜினி/விஜயகாந்த் எல்லோரும் ஒன்றுதான். என்ன ஒரு சிக்கல் என்றால் நான் எரிச்சலில் இருக்கும்போது அவர்கள் மக்களுக்கு செய்த துரோகங்கல் எல்லாம் சரமாரியாய் நினைவுக்கு வந்து திட்டி தீர்த்துவிடுவேன். நவதுவாரங்களும் குளிர்ந்திருக்கும்போது அவங்க மட்டும் என்ன செய்வாங்கய்யா சிஸ்டம் மாறனும் என்று சொல்வேன். சரி கமிங்க் டு தி பாயிண்ட்..
கலைஞர் தமிழ் செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது ஜெயலலிதாவின் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதை கேள்வி கேட்காவிட்டால் இந்த பூ(மி)கிரகத்தில் மனிதம் மண் மூடி போகும். தமிழ் செல்வன் யார்? விடுதலை புலிகளின் அரசியல் தலைவர். விடுதலைபுலிகள் யார்? இலங்கை தமிழர்களின் உரிமையை காக்க ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள்.
புலிகள் செய்த பாவம் என்ன? ராஜீவை கொன்றது. ராஜீவின் சாவில் நேரடியாய் பாதிக்கப்பட்ட சோனியாவே கொலையாளிகளில் ஒரு பெண்ணை மன்னிக்கச்சொல்லியாகிவிட்டது. புலிகள் விஷயத்தில் ராஜீவை வழிநடத்திய பிராமணோத்தமர்களின் தயவால் பிரபாகரன் இல்லாமலே இலங்கைபிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி நடந்தது. வரதராஜ பெருமாள் முதல்வரானார். அவருக்கு மயிலாப்பூரை சேர்ந்த பிராமணோத்தமர் பெண் கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணம் நடக்குமோ?
கிழக்கு வங்காளத்தில் மக்கள் பாக் அரசுக்கு எதிராக திரண்டபோது இந்தியா அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது உண்டா இல்லையா? (அதன் விளைவாக மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல் பாக்கிஸ்தானும் கிழக்கு வங்காளமும் இந்தியாவுக்கு விஸ்வாசமாக இல்லாது போனது வேறு விஷயம்).
அட தமிழ்செல்வன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்கும் இலங்கை பிரச்சினைக்கும் என்னங்க சம்பந்தம்? இதுக்கு என்னங்க கண்டனம்.
"காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து குடுத்தது யாருங்க?" பாட்டை ஒரு தடவை கேளுங்க மேடம்!
இல்லான்னா இந்த கவிதைய படிங்க:
செத்து விழுந்தது ஒற்றை காகம்.
முட்டி மோதும் காக்கை கூட்டம்
ரோட்டோரம் அநாதைப் பிணம்